Advice


மகளுடன் புத்தகம் படிப்பது தினசரி விரும்பி நடக்கும் விஷயம். Charlotte’s Web கதையில் அன்றைய அத்தியாயம் முடிந்தவுடன், இளைப்பாற, அவளின் அகரமுதலியை கையில் எடுக்கிறோம்.

ஏதோவொரு பக்கத்தில் கண்ட வார்த்தையை சொல்லி, அவளுக்குத் தெரிந்த அர்த்தத்தை சொல்வாள். தெரியாவிட்டால், எடுத்துக்காட்டைக் கோருவாள்.

முதலில் அம்புட்டது அட்வான்டேஜ். அவளுக்கு பொருள் தெரியாது என்கிறாள். உயரமானவன், மாடியை சென்றடைவதில் இரண்டு படிகள் அதிகம் கொடுத்து ரேஸ் வைத்தல் என்றெல்லாம் விளக்குகிறேன். ஏதோ புரிந்தது, போதும் விட்டுவிடு என்று அடுத்த வார்த்தைக்கு தாவுகிறாள்.

அட்வைஸ். இது எனக்கே புரிந்தது என்று பொழிப்புரை கொடுத்து விடுகிறாள்.

‘அப்பா பேசுவது’

உட்பொருளோ, அபிப்பிராயமோ… நானறியேன் பராபரமே!

3 responses to “Advice

  1. பாபா,
    நான் பார்த்த வரை உங்க மகள் ரொம்ப சுவாரஸ்யமான காரக்டரா இருக்காங்க.. அவங்களுக்கும் ஒரு பதிவு தொடங்கி எழுத சொல்லுங்களேன்… 😉

  2. நானே பிச்சையெடுத்தானாம் பெருமாள் கேஸு… அத்தையும் புடுங்கிடுவீங்க போல 😛

  3. BBC NEWS | UK | Education | Philosophy for seven-year-olds: “The seven-year-olds sit cross-legged on the carpet scratching their chins philosophically.”

bsubra -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.