குருஜியின் அரசியல் வம்பு தும்பு…
From Dinamani
“அதிருதில்ல…?”
“எங்கே சிஷ்யா அதிருது, பட்டணத்தில் அதுவும் பெரிய மல்ட்டிப்பிளக்சில்தான் அதிருதே தவிர மற்ற இடங்களிலெல்லாம் காற்றல்லவா அடிக்குது…?”
“அதைத்தான் சொல்ல வருகிறேன் குருவே..போட்ட முதல் கிடைக்காது என்று புலம்பித் தீர்க்கிறார்கள் நூற்றுக்கணக்கான திரையரங்க உரிமையாளர்கள். பத்தாவது நாளே முக்கால்வாசி தியேட்டர்கள் காற்றடிக்கத் தொடங்கி விட்டதாம். இவர்களது கூக்குரலால் திரையரங்க வட்டாரமே அதிருதுன்னுதான் சொல்ல வந்தேன்..’
“எப்படியும் ஓட்டுவார்கள் என்று சொல்லு..”
“அவரவர் திரையரங்குகளில் ஓட்டிக் கொள்ளலாம். மற்றவர்கள் பாவம் ஓடத்தான் வேண்டும் போலிருக்கிறது. சூப்பர் என்றார்கள். ஒரு முறை பார்க்கலாம் என்றார்கள். இப்போது ஓசையே அடங்கிவிட்டது போலிருக்கிறது.”
“அது போகட்டும், “கனி’ப் பேச்சு, மன்னிக்கவும் கன்னிப் பேச்சு தமிழிலா ஆங்கிலத்திலா?”
“குருவே, நீங்கள் எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே. அந்த விஷயத்தில் இரண்டு கருத்து நிலவுகிறது. தமிழில் பேசினால் தான் நாளைய அரசியலுக்கு உதவும் என்று ஒரு கருத்து. ஜெயலலிதாவைப் போல ஆங்கிலத்தில் பேசி தேசியத் தலைவர்களை ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்று இன்னொரு அபிப்பிராயம். முதலாவது அப்பா வழி, இரண்டாவது அம்மா வழி”










