தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?விற்கு, பிரகாஷின் பின்னூட்டத்தைப் பின் தொடர்ந்து…
1. —தமிழிலே மட்டும் தான், இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.—
ப்ளாகரில் இல்லாவிட்டால் என்ன? Commentful அல்லது co.mments என்று பல்வேறு இடங்களில் (ப்ளாகர் போலவே ஆங்கில இடைமுகம் கொண்டு) பின்னூட்ட திரட்டி இருக்கிறதே. புழங்குகிற இடத்தில் (தமிழிலே கதைப்பதால்)தானே கேள்வி கேட்கத் தோன்றும்?
இங்கே ஒரு காட்டு காட்டிக்கறேன் 🙂 (அதாவது எடுத்துக்காட்டு). செனகலில் வாழ்ந்தால் Wolof-இல் இருக்கும் திரட்டி குறித்து கவலைப்படுவார்கள். தமிழில் எழுதுவதால் தமிழ் திரட்டி குறித்த சந்தேகங்கள்.
தலைவர் ஸ்டைலில் ஒரு பாடல்: ம்யூசிக்
2. —தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.—
தமிழ்மணம்/தேன்கூடு இருப்பதால் மட்டுமே வலைப்பதிவில் பின்னூட்டங்கள் கரை புரண்டோடுகிறது என்பது ஜாதி மட்டுமே இட ஒதுக்கீடைத் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல (அப்பாடா… க்ரீமி லேயரையும் உள்ளே இட்டாந்தாச்சு 😉 (ஜி.ரா.வின் ‘நீ கிரீமி லேயர். புரிஞ்சதா?’ ஒத்து ஊதிக்கறேன் )
பத்ரி, துளசி போன்ற பதிவர்களில் பின்னூட்டம் இட்டுத் தொடங்குவார்கள். இன்னும் விவகாரமானத் தலைப்புகளில் எழுது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த வேண்டும். தமிழ் திரட்டிகளின் இலவச சேவை இந்த தகிடுதத்தங்களைப் பெருமளவில் தடுத்து, ஆக்கபூர்வமாக புதியவரை வழிநடத்துகிறது.
—உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும்—
—வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..—
தமிழ்மணம்/தேன்கூடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்கு ஒரே டெக்னிக்தானோ…?
3. —பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும்—
அப்ப சைடில் ‘அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்’-இல் மணிக்கொன்றாகப் போட்டு இடம் பிடிச்சுடலாம் 😉 நாற்பது எல்லை இல்லாவிட்டால், கீழே இறங்கும் போதெல்லாம், இன்னொன்று, ‘லிஃப்ட் கராதோ’தான்.
இதற்காகத்தான் QOTD : Scobleized – “semantic” Web பரிந்துரைக்கிறார்கள்: எழுதியதை அப்படியே புரிந்து கொள்வதற்கு பதிலாக, காலத்துக்குத் தக்கவாறு, வினாவிற்கேற்ற விடையாக, ஜெஜெ x கேகே அரசுக்கு ஏற்றவாறு பொருத்தமாக மாற்றுவது எப்படி? இணையத்தின் அடுத்த கட்டம்.
இவ்வளவு உயர்ந்த நுட்பம் இல்லாவிட்டாலும், மறுமொழிகளுக்கும் செய்தியோடை இருக்கும் இந்தக் காலத்தில், அதை உபயோகித்து, முன்னோட்டங்கள் + பின்னூட்டியவர் பெயர் கொண்ட திரட்டி என்று மேம்படுத்தலாமே. மூன்றாண்டுக்கு முந்தைய நுட்பம், இன்றும் பொருத்தமா?
4. —feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், —
இது எந்த காலகட்டம் ;)) Kinja, ப்ளாக்லைன்ஸ் போன்ற பல சேவைகள் அன்றும் இருந்துச்சே!
தமிழ்மணம் is a trendsetter. டக்கென்று பலரின் பதிவுகளையும் வகையாகத் தொகுத்து எளிதாகப் படிக்க வைத்தது.
—தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.—
ஆமாம்.
அட்வைஸ் (தமிழ் திரட்டிகளுக்கு) செய்யாமல் என் பதிவு நிறைவுறாது என்பதால் 😉
௧) ‘நோ ஸ்மோகிங்’ முத்திரை மாதிரி, இடுகை பூங்காவுக்கு சமர்ப்பிக்க பட்டதா/இல்லையா என்று குறிப்பால் உணர்த்த icon போடலாம்.
௨) ‘நட்சத்திரமா இருக்க விருப்பமா’ என்று பொட்டி கொடுத்து, சுய/வெளி பரிந்துரை கொடுக்க வைக்கலாம். (முன்பு எப்பொழுதோ எழுதியிருந்தவாறு, தமிழ்மணத்தின் பயனராக பதிந்திருப்பது அவசியம்.)
௩) வோர்ட்ப்ரெஸ்.காம் இரண்டு முறை எனக்கு மக்கர் செய்திருக்கிறது. ஒரு தடவை ‘நன்றியறிவித்தல்’ விடுமுறை சமயம். இரண்டு தடவையும் ‘என்னாச்சு?’ என்று மின்மடல் தட்டியவுடன், இரண்டு மணி நேரத்துக்குள் பதில் கொடுத்தார்கள். அவர்களும் தானம் கொடுக்கிறார்கள். மாட்டுக்கு பல் பிடித்து பார்க்கவும் சங்கோஜமின்றி அழைக்கிறார்கள்.
௪) Poonga – Web Design & Feedback ஆகியவற்றை பூங்காவில் வெளியிடுவதை விட, செயல்படுத்தலாம்.
௫) பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – Contact-இல் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கலாம்.
௬) பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – வறட்டி தட்டுவது எப்படி?? போன்ற இடுகைகளை நகைச்சுவை என்று வகைப்படுத்தாமல் சரியாக பொருத்தலாம்.
௭) ‘தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு’ (பூங்கா அறிவிப்புகள் » Blog Archive » பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு) போன்ற பொலிடிகலி இன்கரெக்ட் அறிவிப்புகளால்தான் பாதி சலசலப்பு உருவாகிறது.
கொசுறு: OpenYou: The Limits of Privacy on the Social Web: இத்தனையும் இருந்தும் ஆய பயன் என்ன என்பதை சுருங்க சொல்லும் டக்கர் மேட்டர். இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?











ஆஹா..அடுத்தக்கட்ட தமிழ்மண சீர்திருத்த ஆலோசனைச் சுற்று ஆரம்பிச்சாச்சா 🙂 வெட்டிப்பயல், பிரகாஷ், நீங்க.. !!
நீங்க சொன்னதுல 1, 2 தவிர மிச்ச அனைத்துக் கருத்துக்களுடனும் உடன்பாடு.
1ஆல் ஒரு பயனும் இல்லை. தொடர்ந்து தமிழ்மணப் பதிவர்களை நிர்வாகம் கவனிக்கும் என்பதால் அவர்களால் எளிதாகவே நட்சத்திரத் தகுதிக்கு உரியவர்களைக் கண்டு கொள்ள முடியும். அதனால் 2க்கு பெரிய தேவை இல்லை.
நன்றி ரவி!
பிங்குபாக்: Poongaa, Thamizmanam - Blogger feedbacks, Woes, Misinterpretations, Explanations « Snap Judgment