Monthly Archives: ஜனவரி 2007

Kavi Chakravarthy Ottakoothar – Audio Blog (Final Part)

முந்தைய பகுதி – ஒட்டக்கூத்தர் :: ஆர் பொன்னம்மாள்

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் இறுதிப் பகுதி:

செங்குந்தர் வரலாறு பாடிய கதை:

ஈட்டி எழுபது, தாட்சாயணியுடன் மூலஸ்தானத்தில் பாடிய கதை:

Subscribe Free for future posts  Add this player to my Page


| | |

Calcutta Military – DMK Power Abuse – Dhanush Lecture – Entrance Exams

கேள்விகள் பட்டுவாடா

இன்று கண்ணில் பட்ட செய்திகளைப் பகிரும் விதமாக சில துக்கடா சிந்தனை:

1. ‘சிம்பு என் மச்சான்’ – தனுஷ்:

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொறி’ படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், “இங்கே மேடையில் உள்ள அனைவருமே இளைஞர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பன் சிம்புவும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர் இந்த மேடையில் இல்லாதது குறையாக உள்ளது.

படத்தின் தலைப்பு ‘பொறி’ என்பதால், பொடி வைத்துப் பேசி பொறியில் சிக்க வைக்கிறாரா! சன் டிவியில் ஒளிபரப்பப் போகும், பாலச்சந்தரின் ‘பொய்’ படத்தின் பத்தாவது நாள் வெற்றி விழாவுக்கு சென்றிருந்தால் என்ன பேசியிருப்பார்?

வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி ‘இசை அமைத்தாயா? பிஜியெம் இட்டாயா? என் மாமனார் வயதொத்த நாயகர்களுக்கு முகப்பூச்சுதான் போட்டு விட்டாயா? என்று முழங்காதவரைக்கும் சந்தோசம்.

2. ‘தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?’ – அ.கி. வேங்கடசுப்ரமணியன்:

தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் ‘கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

ஏதோ கிரிக்கெட் ஆடுதளத்தை நினைத்துப் பார்க்க சொல்கிறார் என்று எண்ணாமல் சேரியமாய் அலசியிருக்கிறார்.

3. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரை ஆதரவாளர்களுடன் விடுவித்த திமுக எம்எல்ஏ:

சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்த திமுக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவும், அவரது ஆதரவாளர்களும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபரை விடுவித்து சென்றனர்.

எண்ணூர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை, திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர்கள் விடுவித்துச் சென்றனர்.

சினிமா பார்த்துதான் தாங்கள் கெட்டுப் போனதாக சொல்கிறார்கள்.

கத்தியின்றி, ரத்தமின்றி கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கைத் திரித்து வெளியிடும் வெகுஜன ஊடகங்களின் துஷ்பிரயோகத்தை நினைத்து ஆற்றாமையாக இருக்கிறது.

4. பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர் – கொல்கத்தாவில் சம்பவம்:

புத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் செல்வாக்கு இல்லாவிட்டால் ஆயுதம் ஏந்த வேண்டும்.


| | | | | |

2006 – E-Tamil Person of the Year

2006-இன் நாயகர் யார்?

டைம் போன்ற வெகுஜன ஊடகங்கள் ‘நீங்கதான்‘ (படிக்க: பொன்ஸ் பக்கங்கள்: டைம் இந்த வருட மனிதர் 2006) என்று வலைப்பதிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. மற்றொரு பக்கத்தில் கட்டுப்பெட்டியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ‘அவங்க தண்டம்‘ (படிக்க: OpinionJournal – Extra: “Written by fools to be read by imbeciles”) என்று நற்சான்றிதழ் வழங்குகிறது.

காலை எழுந்தவுடன் கண்ணை மூடிக் கொண்டே உள்ளங்கை மஹாலஷ்மி தரிசிப்பது போல், கண்மூடித்தனமாக வலைப்பதிவு படிப்பதால், என்னுடைய நாயகர் பட்டியலில் blogகளுக்கு இடம் கிடையாது.

தண்டோரா – இது கண்டதை சொல்லும் – » Bye Bye 2006: TamilNadu Top Keywords முல்லைப்பெரியாறு, கேப்டன், சிக்குன்குனியா, நுழைவுத்தேர்வு, சிலைகள், தேர்தல் என்று முக்கியமானவற்றை தொட்டு செல்கிறது. நான் மார்ச் (படிக்க: March: patterns, trends and news) மாதத்திற்கு மட்டும் இட்டிருக்கிறேன்.

விஜய்காந்த்தாலோ சிலைகளாலோ சாதாரண பொதுஜனத்திற்கு எவ்வித உபகாரமோ உபத்திரவமோ இல்லை.

அடுத்த கோடையில் இன்னொரு இடைத்தேர்தல் போல், மற்றொரு டெங்கு வந்தால் விபரீதத்தை உணரலாம்.

தேர்தல் முடிந்தவுடன் ஸ்டாலின் முதலமைச்சராகவோ, கூட்டணி ஆட்சியோ வந்திருந்தால் ஆச்சரிய அல்லது முதல் நிகழ்வாக வித்தியாசமாகி இருக்கும். மற்றொரு அமைச்சரவை. இன்னும் நிறைய carrotகள். உள்ளாட்சித் தேர்தலில் stickகள்.

வலைப்பதிவுகளுக்கு எதிர்மறை செய்திதான் தீனி. தப்பு செய்தது, கால் சறுக்கியது, விமர்சனத்தில் விளாசுவது கைவந்த கலை. அதற்கு ஏற்ப திறம் சிறிதுமின்றி கையாலாகத்தனம் மிளிர்ந்த தருணங்கள் என்று பார்த்தால் பூச்சிகளும் பயங்கரவாதமும் விசுவரூப தரிசனம் தருகிறது.

1. 2006 Malegaon blasts

2. Reactions to Varanasi Blasts

3. Pakistan ‘role in Mumbai attacks’

4. Train Stories

5. Attacks continue in India: இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள் (கால அட்டவணை)

தீவிரவாதத்தை ஒன்றும் செய்ய முடியாது.

குழப்பத்தை காசு செலவில்லாமல் உருவாக்கலாம். தடுப்பது மிகவும் கஷ்டம். எங்கோ ஒரு பாலத்தை வெடி வைத்து தகர்த்தால் போதும். அனைத்து பாலங்களுக்கும் காவலாளிகளின் தேவை தோன்றும். ஒரு தியேட்டருக்குள் குண்டு வீசினால் போதும். எல்லா பொது இடத்திலும் நுழைவதற்கு முன் சோதனை போடும் அவசியம் உருவாகும்.
– Counterinsurgency Warfare: Theory & Practice by David Galula, 1964
(படிக்க: Problems in Iraq / பிரச்சினை 2005 – ஈராக்)

ஆனால், கடலில் விழும் மழைத்துளியெல்லாம் உப்புநீராவது போல் கடித்த இடமெல்லாம் நோய் பரப்பும் கொசு?

என் குடும்பத்திலேயே நான்கு பேருக்கு சிக்குன்குனியா வந்ததாலும், நண்பர்கள் இருவரின் குடும்பத்தில் சிக்குன்குனியாவினால் இறப்புகள் நேர்ந்ததாலும் அதற்கு முக்கியமான இடம் உண்டு. மத்திய சுகாதார மந்திரியாக தமிழர் அன்புமணி ராமதாஸ் இருந்தாலும், தமிழ்நாட்டு கொசுக்களை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது மேலும் துயரம்.

இந்த மாதிரி தொற்று நோய் பரவல் சூரத்தில் ப்ளேக் வந்த மாதிரி, ஆங்காங்கே நுழைந்த சார்ஸ், மீண்டும் எட்டிப் பார்த்த கோழிக் காய்ச்சல் என்று வந்த பின் காப்போன் strategy கூட எதுவும் இல்லாத இந்தியாவின் ஜனத்தொகையை கணிசமாகக் குறைக்கிறது.

அமெரிக்காவில் கத்ரீனா சூறாவளியாய் தாக்கியது. செய்வதறியாது ஸ்தம்பித்தார்கள். அதற்குப் பிறகாவது ஊடக கவனிப்போ, அரசியல் நிர்ப்பந்தமோ? ஏனோதானோவென்று செயல்திட்டங்களும் வியூகங்களும் வகுத்து dry-run ஆக நடக்கப்போகும் ourbreakகளுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முறைப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த் ஓட்டைகளை சரிபார்த்து செப்பனிடுகிறார்கள்.

இந்த வருடத்து நாயகன்: கொசு.


| |

Tamil Cinema – 2006 Top Movies List

சென்ற வருடத்துப் பட்டியல்:

இந்த வருடத் திரைப்படங்கள் குறித்த பட்டியல்…

எதிர்பார்ப்பை மிகவும் உடைத்தெறிந்த திரைப்படம் (அதாவது மிக மோசமான படம்)

5. பச்சக் குதிர (இயக்குநர் பார்த்திபன் (அல்லது) நமீதா)

4. கள்வனின் காதலி (எஸ்.ஜே. சூர்யா)

3. திமிரு (விஷால்)

2. சில்லுன்னு ஒரு காதல் (இயக்குநர்)

1. வல்லவன் (சிம்பு)


போன மச்சான் திரும்பி வந்ததில் சிறந்த படம்:

1. ஆச்சார்யா (விக்னேஷ்)

2. பாரிஜாதம் (இயக்குநர் பாக்யராஜ்)

3. கை வந்த கலை (பாண்டியராஜன்)

4. உனக்கும் எனக்கும் (‘ஜெயம்’ ரவி)

5. நாளை (ரிச்சர்ட்)


ஹீரோ:

5.5. மாதவன் (தம்பி)

5. பரத் (எம் மகன்)

4. ஜீவன் (திருட்டுப் பயலே)

3. ஜீவா ()

2. கரண் (கொக்கி)

1. தனுஷ் (புதுப்பேட்டை)


ஹீரோயின்:

5. அசின் – வரலாறு

4. த்ரிஷா – உனக்கும் எனக்கும்

3. நயந்தாரா – வல்லவன்,

2. பாவ்னா – சித்திரம் பேசுதடி

1. சந்தியா – டிஷ்யூம்


சிறந்த நகைச்சுவை படம்:

5. ஜெர்ரி

4. சுயேச்சை எம்.எல்.ஏ.

3. தர்மபுரி

2. வரலாறு

1. வேட்டையாடு விளையாடு


சிறந்த படம்:

  • சாசனம்
  • ஆணிவேர்
  • பட்டியல்
  • சித்திரம் பேசுதடி
  • அமிர்தம்

| | | | | | |

வாழ்த்துக்கள்

Iniya 2007 Puthaandu Vaazthukkalஇது ஒரு ‘ஐய… இன்னும் உள்ளேன் ஹைய்யா!‘ ரக பதிவு.

ஏழெட்டு நாளாக ஃப்ளோரிடா டிஸ்னி விஜயம். தித்திப்பாக வரவேற்கும் நான்கைந்து இளவரசிகள். இந்தியாவிற்கே அழைத்து செல்லும் ‘அனிமல் கிங்டம்‘. ‘எம்மாடீ… ஆத்தாடி… அம்மம்மோய்… மாயாஜாலமா’ என்று பட்டிக்காட்டானாய் மாற்றிய ‘எப்காட்‘. ஷாரூக்கான் நடித்தும், அசுரத்தனமான பொக்கீடுகளுக்கு இடையிலும், ‘டான்‘களில் சொதப்பலாய் அரங்கேறும் மகிழுந்து துரத்தல்களை நோக்கி காறு உமிழ்ந்து கலக்கி அசத்தும் கார் சேஸ்களுடன் ‘டிஸ்னியின் எம்.ஜி.எம். ஸ்டூடியோஸ்‘.

மெய்யாலுமே மேஜிக் காட்டும் கிங்டம்.

  • ‘இங்கே வேலை பார்ப்பவர்கள் எல்லோரையும் மினிமம் வேஜில் டிஸ்னி செக்காட்ட வைக்கிறது’ என்று குற்றவுணர்வை தட்டியெழுப்பும் மாற்று ஊடகவியலாளர் மிஸ்ஸிங்.
  • ‘சிண்ட்ரெல்லா கதையை சொல்லி பெண் இப்படித்தான் அரசனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும்’ என்று நடிகைகளுடன் போஸ் கொடுக்கும்போது பின்னூட்டும் பெண்ணிஸவாதி பெருங்கூட்டத்தில் தொலைந்திருந்தார்.
  • ‘மிக்கி மௌஸ், டொனால்ட் டக் ஆடை தரித்து, வேர்வையில் உழன்று, முகமூடிக்குள் கூனிக் குறுகும் மனிதனை மிதித்து, அவரின் அலங்காரத்தில் புறத்தோற்றத்தில் நொடி நேர சந்தோஷத்தில் கரையும் அமில உலகம்’ என்று நினைவூட்டுபவர்களையும் புறந்தள்ளியாயிற்று.

Iniya 2007 Puthaandu Vaazthukkalவிரைவில் விரிவான புராணபயணக் குறிப்புகள்…

அதற்கு முன் சில வாழ்த்துகள்!

  1. Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: 2006ன் சிறந்த பதிவர் முடிவுகள். வெற்றி பெற்றவர்… :: பாலாஜி மனோகரன் வெட்டிப்பயல்
  2. த‌மிழ்ம‌ண‌ விவாத‌க்க‌ள‌ம் » Blog Archive » விவாதம் ஆரம்பிக்கிறது :: நடிகர்கள் அரசியலில் பிரவேசிப்பது ஆரோக்கியமானதா? – த‌மிழ்ம‌ண‌ விவாத‌க்க‌ள‌ம்
  3. தண்டோரா – இது கண்டதை சொல்லும் – » கில்லி – 365 :: ஆண்டு நிறைவை முன்னிட்டு விருந்தினர் பதிவுகள்
  4. தேன்கூடு – வலைப்பூ » டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள் :: டிசம்பர் வலைப்பதிவுப் போட்டி
  5. Tamiloviam completes 5 years :: தமிழோவியத்திற்கு வயது 5
  6. எனக்குத் தனிமடலிட்டு, ‘எரிதம்’ என்று யாஹூ/ஜிமெயிலில் அடிபட்டு, மறுமொழிய இயலாதவர்களுக்கு ‘புத்தாண்டு வாழ்த்துக்கள்’
  7. சென்ற பதிவில் வாழ்த்திய அனைவருக்கும்…

வாழ்த்துகள்


| |