உதவி தேவை
மகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்ததன் நூறாவது நாள் நெருங்குகிறது. ஆசிரியர் ‘நூறை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்து வா!‘ என்று கேட்டிருக்கிறார்.
‘நீதான் பார்த்திபன் மாதிரி யோசிப்பியே… அதை விட்டுட்டு உருப்படியா நூறு என்பதை எண்ணிக்கையிலும் வடிவத்திலும் கொண்டு வா’ – இது மனைவி.
‘நூறு சாக்லேட் கொண்டு போகலாம்ப்பா. எல்லாருக்கும் பிடிக்கும். நமக்கும் ஈஸி’ – இது மகள்.
சாதாரணமாக ‘நீ இதுவரை கற்றுக் கொண்ட நூறு விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்குப் போதிய குறிச்சொற்களை கொடுத்து, ஆங்கிலத் தலைப்பிட்டு கொடுத்துவிடு’ என்பது என்னுடைய ஆலோசனையாக இருக்கும்.
1 முதல் 100 வரை எழுதிக் கையில் கொடுத்து விடுவாள்.
ஃபெப்ரவரி 14 ‘அன்பர் தினம்’ வருகிறது. இந்த வாரத்திலேயே க்ரௌண்ட் ஹாக் (Groundhog Day) தினம் உண்டு. இந்தியப் பின்னணியில் யோசிக்க குடியரசு தினம் சென்றிருக்கிறது.
யோசனை சொல்ல வாங்க…
கீழ்க்கண்ட நெருக்கடிகளை மனதில் வைத்துக் கொள்ளலாம்:
- குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்கணும்.
- அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டிருக்கணும்.
- ஆறு வயதினரே முழுவதுமாக (பெரும்பாலும் பெரியோரின் உதவியின்றி) செய்து முடிக்கணும்.
- காசை ரொம்பக் கரியாக்கக் கூடாது.
- என் மகளுக்கு ஓவியம், வரைதல், ஒட்டுதல், வெட்டுதல், வண்ணம் தீட்டல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.
ஏதாவது தோன்றுகிறதா?










