Guru – Digest & My Views


முக்கிய விமர்சனங்கள்:
1. Prakash’s Chronicle: Mani Ratnam’s Guru – Review

2. கில்லி – Gilli » Guru – Reviews

3. Prabhu n Ferrari » Blog Archive » Guru – Hindi Movie Review

4. Lightning Strikes Everyday: Guru: Review

இணைய சஞ்சிகைகள்:
1. Rediff.com Review3/5 stars

2. IndiaFM.com – Taran Adarsh Review – 4/5 stars

3. DNA Review – 3/5 stars

4. CNN IBN – Rajeev Masand Review – 4/5 stars

5. Deccan Herald: Movie Review – Guru : No Rating.

6. Andhra Cafe: Guru – Hindi Movie Review : 3.5 stars

7. Times Of India – Nikhat Kazmi Review

8. Indiatimes.com Review – 3 stars

மேலும் சில:
1. A Lover’s Journal: Guru – Movie Review (Paisa Waste!

2. Archana’s A rupee for my thoughts!

3. Wreck Tangle: Guru, Gandhi and Guns

கொஞ்சம் அசல்:
1. Remembering the Prince of Polyester — Monday, Jul. 15, 2002 — Page 1 — TIME

2. அம்பானி ஒரு வெற்றிக் கதை :: என்.சொக்கன்

பதிவு செய்ய விரும்புபவை:

  • கொடுத்த காசுக்கு வஞ்சனை வைக்காமல், இசை, ஒளிப்பதிவு என்று ‘பேஷ்’ போட வைத்தாலும், செண்டி போட்டு, “எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம்” வரிசையில் மணியின் மற்றொரு ரத்னம்.
  • ‘ரெண்டு’ போன்ற படங்களில் தோன்றுவதால் மாதவன் சொதப்பினாரா? இல்லாவிட்டாலும் குளறியிருப்பாரா! ஏனோ தானோ முரண்டு செய்யும் முக்கிய கதாபாத்திரம்.
  • ஐஷ்வர்யா ராய் நடித்து நான் பார்த்த படங்களில் இன்னும் ‘ரெயின்கோட்’ மட்டுமே பட்டியலின் முடிவாகவும் தொடக்கமாகவும் இருக்கிறது. புருஷனை (மாமனார், மாமியாரும்தான்) பார்த்தாலாவது என்னிக்காவது நட்சத்திரம் ஆகும் வரை நட்சத்திர கேலரி மாடலிங் மட்டும் செய்யலாமே.
  • ஃப்ரென்ச் முத்தம் கொடுப்பது பேசுபவரின் வாயை மூட அல்ல. கிஸ் அடித்தால் காதல் வரணும் அல்லது கிக் வரணும். மாதவனும் வித்யா பாலனும் காமிரா கான்சியஸாக சவைக்கிறார்கள்.
  • உணர்ச்சிபூர்வமாக ‘comfort zone’ஐ விட்டு வெளியே வந்து ஆடுடா ராசா என்று ஒவ்வொரு பார்வையாளனையும் உசிப்பேற்றி, முறுக்கிவிட்டு, கொம்பு சீவி, CV தயாரிக்க அனுப்புகிறார்கள்.
  • அம்பானி… குரு கடைசியில் பேசி முடித்தவுடன் அமெரிக்காவில் கைத்தட்டல் தியேட்டரை பிளந்தது. முதலாளித்துவ நாடல்லவா 😉
  • ஞாயிறு இரவு இரண்டாம் ஆட்டத்தில் கூட அமெரிக்க திரையரங்கை நிறைத்த கூட்டம். வெளிநாடு, உள்நாடு இரண்டிலும் நகரங்களில் சூப்பர் ஹிட்?
  • Thank You for Smoking படம் முடிந்தவுடன் தொழில் தர்மத்திற்காக வேலை செய்பவனின் நியாய அதர்மங்களின் குழப்பம் மேலிட்ட, நம்பிக்கை கலந்த புன்முறுவல் வெளிப்படும். மேற்கண்ட அடைமொழி கலவையுடன் நிறைவைத் தரும் முக்கியமான திரைப்படம்.
  • சொல்ல விட்டுப் போச்சே… ‘நாயகன்’ கமலை விட, அபிஷேக் அடக்கி வாசித்து நடிக்காமல், வாழ்ந்திருக்கிறார். (அல்லது இயக்குநரின் கதாநாயகனாக சமர்த்தாக சொன்னதை செய்திருக்கிறார் என்றும் நினைக்கலாம்).

    | | | | | | |

  • 15 responses to “Guru – Digest & My Views

    1. Unknown's avatar பத்மா அர்விந்த்

      பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறோம். அபிஷேக்கின் உடல் மொழி பல கதைகள் சொல்லாமல் சொல்கின்றன. அதேபோல சில கோஷங்கள் பழைய நாட்களை நினைவுபடுத்துவதாய் உணர்ச்சிப்படுத்துகின்றன(குருபாய் குருபாய் ஆவேச்சே)

    2. பரத்வாஜ் ரங்கனோட unedited version ?

      இது வரை படிச்சதிலேயே , மிகச் சிறந்த விமர்சனம்னு நினைக்கிறேன்,

    3. //சொல்ல விட்டுப் போச்சே… ‘நாயகன்’ கமலை விட, அபிஷேக் அடக்கி வாசித்து நடிக்காமல், வாழ்ந்திருக்கிறார். (அல்லது இயக்குநரின் கதாநாயகனாக சமர்த்தாக சொன்னதை செய்திருக்கிறார் என்றும் நினைக்கலாம்).//

      சொல்லாம விடுவீராக்கும் ! நாயகன் கமலை விட – அபிஷேக் ..ஹா..ஹா..ஹா

    4. பிரகாஷ்…

      ரங்கன் விட்டுப்போச்சு; இப்பத்தான் படிக்கிறேன்.

      Blogical Conclusion

      Review: Guru

      SHOW ME THE MANI
      The New Sunday Express – January 14, 2007

      An unabashed ode to capitalism is wickedly entertaining for the most part – until it gets all righteous on us.

    5. ஜோ,

      உவகை வெளிப்படுவது, வில்லத்தனம் காண்பிப்பது, என்று எல்லாமே கச்சிதமாக இருந்தாலும்;

      * தந்தையைப் போல் மதிப்பவரின் மேல் கோபம்,
      * வித்யா பாலன் மரணப்படுக்கையில் வருத்தமான கண்ணீர்,

      ஆகியவற்றை பார்க்கும்போது

      * ஆம்புலன்ஸ் இல்லாத ஆத்திரம்,
      * நிழல்கள் ரவி இறப்பு சோகம் (நாயகன்)

      போன்றவை நினைவுக்கு வந்தாலும், இந்தப் படத்தில் படுத்தாமல் வந்திருக்கிறது.

      (இயக்குநரும் தன்னுடைய கதாமாந்தர்களை – பெட்டராக நடிக்க வைக்க, நாளடைவில் தெரிந்து கொண்டிருக்கலாம்.)

      நாயகன் பார்த்த மாதிரியே, இந்தப் படத்தையும் பெரிய திரையில் பார்த்தீங்கன்னா, நீங்களே சொல்வீங்க ஜோ.

    6. பத்மா,
      விறுவிறுப்பான படம். அந்தக்கால நினைவுகளை மீட்டுவது, காமெடித் திணிப்பு, ஹீரோயிஸம், சண்டை அடிதடி என்று படுத்தாத சித்தரிப்பு.

      பார்த்துட்டு சொல்லுங்க. அபிஷேக் கலக்கியிருக்கிறார்.

    7. You will get different views depending on which version of the movie you watch (Hindi/Tamil/Telugu).

      நான் பார்த்தது ஹிந்தி. நச்சுனு இருந்தது படம்.

      மை வ்யூஸ் இங்கே – க்ளிக் ஹியர்

    8. —நான் பார்த்தது ஹிந்தி. நச்சுனு இருந்தது படம்.—

      அதே!

      ibn/cnn-ன் மணிரத்னம் நேர்காணல் சுட்டியும் போட்டிருக்கீங்க… இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

      நன்றி சர்வேசன்

    9. பாலா,
      எதிர்பார்த்தது என் தவறோ என்னவோ எதிர்பார்ப்பை மணி இந்தமுறை ஏமாற்றிவிட்டார் என்றே கருதுகிறேன்.
      மணியின் யானைப்பசிக்கு இந்தக்களம் சோளப்பொறிதான். இப்போது என்ன தேவை இந்தக் களத்துக்கு என்பதுதான் என் ஆதங்கம்!
      நம் தமிழ் பத்திரிகைகளில் யாருமே உருப்படியாக மணியைப் பேட்டி காணவில்லை என்பதும் என் இரண்டாவது ஆதங்கம்!!

    10. It’s so obvious that you dislike Kamal Haasan, though he is arguably one of the best talents that India had produced! Guru is good — it just falls short only few noteches being EXCELLENT (when all that forced “Ideology” stuff pops up and lack of daring to be true to its material). But as a Mani fan – I am thrilled! One more to my movie collection!!

      Watched it in hindi and woule defintely try the tamil version to compare (and also see how good Surya has dubbed fpr Abhishek!!)

      Abhishek is really excelled in his role (but Mr.Bala, do you thin he is better than Kamal — heheheheh!!! Joke of the Year buddy!!!!).

    11. —நம் தமிழ் பத்திரிகைகளில் யாருமே உருப்படியாக மணியைப் பேட்டி காணவில்லை —

      ஆமா…

      இங்கே Bravo கன்னலில், Inside the Actors Studio (BRAVOtv.com : Inside the Actors Studio) என்னும் நிகழ்ச்சியில் தோன்ற வைத்தால்தான் அவரிடம் இருக்கும் பரிமாணங்களில் சிலவற்றையாவது தொட முடியும்.

      மணியின் பேட்டி தொடர்பான அலசல் பதிவு… kirukkal.com: மணியும் ரத்தினங்களும்

    12. —so obvious that you dislike Kamal Haasan—

      அடப்பாவிங்களா :)))

      * ‘ஜார்ஜ் புஷ் முட்டாள்’ என்றால் அமெரிக்காவின் முதல் எதிரி என்றோ,

      * ‘இந்தப் பாழாப் போன காரைக் கொண்டு போய் காயலான் கடையில் போட வேண்டும்’ என்று நொந்து கொண்டால், அடுத்த நொடியே, கார் பிடிக்கவில்லை என்றோ

      * ‘கடவுளுக்குக் கண்ணே கிடையாதா’ என்று பூச்சி காட்டும் bug-ஐ வேலையில் துரத்தும் போது அங்கலாய்த்தால், உடனடியாக வீட்டுக்கு வந்து கணபதி சிலையை உடைப்பேன் என்பது போல் இருக்கிறது உங்க கணிப்பு 😉

      —But as a Mani fan – I am thrilled! One more to my movie collection—

      Exactly… My thoughts!

      —Joke of the Year buddy!—

      படம் பார்த்து முடித்து வெளியே வரும்போது, அப்படித்தாங்க தோணிச்சு. இதுவரை, அபிஷேக் பரிமளித்த படம் என்று எதுவும் பார்க்காதது இந்தக் கருத்தை மேலும் வலியுறுத்தியது.

      வாழ்க்கை நாயகன் சாயல் எட்டிப் பார்த்த இடங்களில், கமல் தோற்றம் எண்ணத்தில் எழுந்ததே அவரின் ஆளுமைக்கு சான்று.

    13. தமிழ் இந்தி படங்களில் (குரு தமிழிலும் டப் செய்யப்பட்டு வந்துள்ளது) இது போன்ற படங்கள் வருவது, முன்னொரு காலத்தில் கொடி பிடித்து கோஷம் போட்டு ஏழைகளுக்காக “பா(ட்)டுப(பா)டும்” ஹீரோ எல்லாம் போய் “முதலாளி”த்துவ ஹீரோ வருவது நல்ல முன்னேற்றம் என்றே நினைக்கிறேன்.

      கூடவே ஒரு கம்யூனிஸ்ட் “வில்லனும்” வந்தால் சூப்பரோ சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன், உங்கள் எண்ணம் என்ன ?

    14. —கோஷம் போட்டு ஏழைகளுக்காக “பா(ட்)டுப(பா)டும்” ஹீரோ எல்லாம் போய் “முதலாளி”த்துவ ஹீரோ—

      ஓ… அந்த ரூட்டில் யோசிக்கலை :))

      எப்படியோ! இந்தக் காதல் தொல்லைப் படங்களில் இருந்து கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டாலே நிம்மதிதான்.

      —கம்யூனிஸ்ட் “வில்லனும்” வந்தால்—

      இங்கேயும் ஏழைகளுக்காகத்தான் குரு பாடுபடுகிறார்.

      * கோல்ஃப் விளையாடும் பணமுதலையிடம், உள்ளே கால்பதிக்க கெஞ்சோ கெஞ்சல்

      * Optionsஐயும் futuresஐயும், சூதாட்டம் என்று அரசு அநியாயமாக வயிற்றில் அடிக்க, அதிகாரவர்க்கத்தை எதிர்கொள்கிறார்

      * துஷ்பிரயோகமாக, சிறு வியாபாரியை விலை கொடுத்து வாங்க வந்தவனிடம் ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா?’ பாடுகிறார்

      கட்டாங்கடைசியில் வர்த்தக நிறுவனத்தின் நெளிவு சுளிவுகளை சொல்வதற்கே, குற்றவுணர்வுடன் துளியூண்டு பேச வைத்திருக்கிறார்.

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.