பொழிவுக்கும் கழிவுக்கும் ஓரெழுத்துதான் வித்தியாசம்!
எழுதறதெல்லாம் பதிஞ்சா கழிவு!!
எழுதறத சிந்திச்சா பொழிவு!!!
வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடலாம்!
வாழ்க்கையே கண்ணாமூச்சியா ஆகிடக்கூடாது!!
.NET செர்டிஃபேகேசன் வைத்திருந்தாலும் வேலை செய்தால்தான் வாய்க்கரிசி.
நீ எழுதறது உனக்குப் புரியலேன்னா அது பரவாயில்ல;
நீ எழுதினத, மத்தவங்களுக்கு விளக்கலேன்னா – அதுக்குப் பேரு குப்பை.
நீ எழுதறது பலருக்குப் புரியலேன்னா அதுக்குப் பேரு கவிதை;
நீ எழுதின கவிதை, விமர்சகனுக்கு விளங்கலேன்னா – அதுக்குப் பேரு இலக்கியம்.
கொல்லங்குடியில் ஊசி விற்க முடியுமா?
வலைப்பதிவில் மாற்றுக்கருத்து வாதிட முடியுமா?
கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் கால் போடலாம்;
கிறிஸ்துமசுக்கு சாண்டா வரலாம்;
லீவு விட்டாத்தான் நான் வீட்டுக்குப் போகலாம்.
எதை வேணா கிறுக்கிட்டு, ‘இது கிறுக்கல்’னு டிஸ்கெளெய்மர் போட்டுக்கிட்டா, தமிழ்மணத்தில் இருக்கற jobless கூட சீந்த மாட்டாங்க;
அதுக்காக, யோசிச்சு அனைத்து கோணமும் பார்த்து எழுத வலைப்பதிவு, ஆயிரம் காலத்துப் பயிரா என்ன?
நல்ல இயக்குநருக்கு அழகு சரியான நேரத்தில் ‘வணக்கம்’ போட்டு, டைட்டில் கார்டு ஓட்டறது.
நல்ல மேனஜருக்கு அழகு, வேலை முடிக்காத நேரத்தில் மீட்டிங் கூப்பிட்டு, ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்காமல் இருப்பது!
நல்ல பதிவனுக்கு அழகு, ‘பதிவு எப்படா சாமீ முடியும்?’ என்று நினைக்க வைக்காமல், சுந்தரி படம் போடுவது.
Fun | Dialogue | Tamil Blog












பாபா,
உண்மைய சொல்லனும்னா நம்ம விஜய், அஜித படத்துல வர மாதிரி நச்சுன்னு இருக்கு…
இந்த பதிவுல எதுவும் உள்குத்து இல்லைனு நான் கண்டிப்பா நம்பறேன்…
இன்னும் இந்த மாதிரி நிறைய எழுதுங்க…
//.NET செர்டிஃபேகேசன் வைத்திருந்தாலும் வேலை செய்தால்தான் வாய்க்கரிசி.//
//நீ எழுதறது பலருக்குப் புரியலேன்னா அதுக்குப் பேரு கவிதை;
நீ எழுதின கவிதை, விமர்சகனுக்கு விளங்கலேன்னா – அதுக்குப் பேரு இலக்கியம்.//
ரசித்தேன். நன்றி
அருமையான காமடி:-))
//பொழிவுக்கும் கழிவுக்கும் ஓரெழுத்துதான் வித்தியாசம்!
எழுதறதெல்லாம் பதிஞ்சா கழிவு!!
எழுதறத சிந்திச்சா பொழிவு!!!//
பாலா !
அதாவது அசை போட்டால் பொழிவு,
செறித்தால் கழிவு என்கிறீர்கள் !
சரிதானே !
வயதை கலக்குது ! எதாவுது ஒரு பதிவு உடனே எழுதனும் !
:))
ரசித்தேன்!
தீபாவளி விருந்தின் effect இன்னும் குறையலையோ?
‘light’ஆ இதைப்போல் மேலும் எழுதுங்கள்.
”எழுதறதெல்லாம் பதிஞ்சா கழிவு!!
எழுதறத சிந்திச்சா பொழிவு!!!”””
“””நீ எழுதின கவிதை, விமர்சகனுக்கு விளங்கலேன்னா – அதுக்குப் பேரு இலக்கியம்.””
:)))
போட்டு தாக்குங்க
பெட்ரோல் இல்லாத டீவிஎஸ் 50யை பெடல் பண்ணீட்டுக் கூட போகலாம்.
ஆனா டாடா-சுமோவில பெட்ரோல் இல்லைன்னா தள்ளக் கூடமுடியாதே…
தொட்டி நிறையத் தண்ணீர் இருந்தாலும்,குழாய் இல்லாட்டிக் குடிக்க முடியாது…
அய்யோ…அய்யோ…எனது ஞானக்கண்ணைத் திறந்துவிட்ட பாபாஜீக்கு ஜே!!!
கலக்கல்.விட்டா புதுசா ஒரு “இஸம்” ஆரம்பிச்சிடுவீங்க போலிருக்கே!
:)))))))
//எதை வேணா கிறுக்கிட்டு, ‘இது கிறுக்கல்’னு டிஸ்கெளெய்மர் போட்டுக்கிட்டா, தமிழ்மணத்தில் இருக்கற jobless கூட சீந்த மாட்டாங்க;//
பாதிக்கப்பட்டவனின் நூறு சதவீத ஒப்புதல் வாக்குமூலம்;-)
பினாத்தல்!
எத்தன கோணம் பாத்து எழுதினாலும் ‘கருத்து கந்தசாமி’ யாராவது இருப்பாங்க, மாற்று கருத்து சொல்ல.ஆயிரம் காலத்து பயரான்னு எல்லாம் கவலப்படாம, நீங்க எழுதறத எழுதுங்க ! இந்த பதிவு வரைக்கும் அருமையா இருக்கு..!
படத்தைப் பத்தி மட்டும் ஒரு சின்ன குறிப்பு
சாக்லெட் adடு ஒரிஜினாலிட்டி goodடு!!
நார்மன் ராக்வெல்லுக்கு மட்டும்
ஃபோட்டோகிராபர் ஊட்டு லட்டு 😉
http://www.tribal-celtic-tattoo.com/images/labels/rockwell.jpg
பாரீசுக்குப் போனாரு ராக்வெல்லு
க்யூபிசத்தை ஒரு இடி இடிச்சாரு
அமெரிக்கா திரும்பி வந்தாரு
தன் பேரோவியமா
தட்டுல வான்கோழியை வரைஞ்சாரு 😉
http://www.artchive.com/artchive/R/rockwell/rockwell_want.jpg.html
இருந்தாலும், நார்மன் ராக்வெல் குறித்து ஒரு பதிவு எழுதவேண்டும்! கடைசியில் நீங்கள் போட்டிருந்த படம், நார்மன் ராக்வெல்லின் ஓவியங்கள் உட்பட நிறைய நினைவுகளைக் கிளப்பி விட்டுவிட்டது 😉
//.NET செர்டிஃபேகேசன் வைத்திருந்தாலும் வேலை செய்தால்தான் வாய்க்கரிசி//
இது அல்டிமேட்டுங்க. எல்லா சல்பேட்டாத்துவமும் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு.
கோவி..
—அதாவது … என்கிறீர்கள் ! சரிதானே !—
ஓரெழுத்து வித்தியாசத்தில் வார்த்தைகளைக் கொடுத்தால் அருமை : )
பத்து பக்கத்தில் பாரா பிரிக்காமல் செய்தித்தாளை ஒப்பித்தால் அறுவை ; )
செல்வன்
—அருமையான காமடி—
மடியா உடுத்திண்டா வெறுப்பு
மடிப்பு அம்சாவ விரும்பு
துறும்பா தள்ளாம கரும்புன்னு சொன்னா சரிப்பு : )
வி.பி.
—இந்த பதிவுல எதுவும் உள்குத்து இல்லைனு—
பொடியைத் தேடினால் மலை கிடைக்கும்.
பொடி வைக்காமல் பேசினால் பின்னூட்டம் கிடைக்கும் ; )
செய்திக்காரரே
—தீபாவளி விருந்தின் effect இன்னும் குறையலையோ—
விருந்தில் மருந்து உண்டு.
மருந்தே விருந்தாகுமோ?
—‘light’ஆ இதைப்போல் மேலும் எழுதுங்கள்.—
Fatfree என்பது போல் கொழுப்பு நீக்கி லைட்டாக எழுத சொல்றீங்க…
ஆழ்ந்த தத்துவம் : P
வேந்தன்
—விட்டா புதுசா ஒரு “இஸம்” ஆரம்பிச்சிடுவீங்க —
“நீ விரும்பும் ‘இஸத்தை’ விட, உன்னை நேசிக்கற ‘இஸத்தை’ பிடிச்சுக்கோ” என்று அன்றே ‘வள்ளி’யில் சொல்லிட்டாரே ; )
சுதர்சன்
—பெட்ரோல் இல்லாத டீவிஎஸ் 50யை பெடல் பண்ணீட்டுக் கூட போகலாம்.
ஆனா டாடா-சுமோவில பெட்ரோல் இல்லைன்னா தள்ளக் கூடமுடியாதே…—
வாழ்க்க்கை + வாலிபம் + உடற்பயிற்சி என்று பல கூறுகளை இரண்டே அடியில் சொல்லிட்டீங்க!
—தொட்டி நிறையத் தண்ணீர் இருந்தாலும்,குழாய் இல்லாட்டிக் குடிக்க முடியாது…—
சுவரில்லா சித்திரங்கள் ; )
ரசித்தேன்.
சுரேஷ் (பெனாத்தல்)
—நூறு சதவீத ஒப்புதல் வாக்குமூலம்—
அனானியா பதில் போட்டா அஃபிஷியல் டிஸ்க்ளெய்மர்
அவசரத்தில் எழுதுகிறேன் என்றால் அன்அஃபிஷியல் டிஸ்க்ளெய்மர்
ஆஸ்க்.காம் பார்த்துக்கொள்ளவும் என்றால் மிரட்டல் க்ளெய்மர்
‘டோண்ட் ஆஸ்க் மீ’ என்றால் டிஸ்க்ளெய்மர்
அருணா
—நீங்க எழுதறத எழுதுங்க ! இந்த பதிவு வரைக்கும் அருமையா இருக்கு—
ஹார்லிக்ஸிலே காஃபி கலந்த சுவை கொடுக்கும் பானப் பின்னூட்டம் : )
சன்னாசி
—படத்தைப் பத்தி மட்டும் ஒரு சின்ன குறிப்பு—
rockwell.jpg (JPEG Image, 390×493 pixels)
அட்றா… எல்லாருமே அனு மாலிக் வம்சாவழிதானா!?
(இன்னும் சில விளம்பரப்படங்கள் வந்தன. அவற்றையும் இட்டு, தங்களின் சிந்தனையைக் கிளறமுடியுமான்னு பார்க்கணும்)
கைப்புள்ள
—எல்லா சல்பேட்டாத்துவமும் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு—
சுவத்தில செர்டிஃபேகேசன் ஓட்டிக்கறான்
மீட்டிங் கூவத்தில வார்த்தைஃபிகேசன் ஒட்டிக்கறான்
மாற்ற சொன்ன பாவத்தில் பங்கு கேட்டா ஒதுங்கிக்கறான்