சிக்குன் குனியா பரவுவதற்கு அதிமுக அரசுதான் காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
சென்னை, அக். 6: சிக்குன் குனியா நோய் தமிழகத்தில் பரவுவதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்து அவர் பேசியது:
தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை தமிழக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2003-ம் ஆண்டு கொசுவை ஒழிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. மாநகராட்சி பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் கொசுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கமிட்டி ஒரு நாள் கூட கூட்டப்படவில்லை. ஜெயலலிதா அரசின் குளறுபடியால்தான் கொசு பரவி சிக்குன் கனியா நோய் வந்துவிட்டது.
இன்றைக்கு திமுக அரசு அதைக் கட்டுப்படுத்தி வருகிறது. கருணாநிதியை யாரும் எளிதில் பார்க்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் பார்க்க முடியாததால்தான் நம் கூட்டணிக்கு வந்துள்ளார்.
மாநில அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடியும். அந்த வகையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.











மாநில அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடியும். அந்த வகையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
Nobody understands this better than mosquitoes.That is why
they are so powerful in Delhi
as well as Chennai.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2003-ம் ஆண்டு கொசுவை ஒழிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. மாநகராட்சி பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது
Money for committee or money for eradication of mosquitos :).Mosquitoes have a shorter life cycle, certainly not three years.Perhaps they were living for three years,waiting to be killed by DMK govt.Congress can start Mosquito Hato campaign and a 20 point program for it.
//இன்றைக்கு திமுக அரசு அதைக் கட்டுப்படுத்தி வருகிறது. கருணாநிதியை யாரும் எளிதில் பார்க்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் பார்க்க முடியாததால்தான் நம் கூட்டணிக்கு வந்துள்ளார்//
கலைஞரை சந்தித்தால் சிக்குன் குனியா குறைந்துவிடுமா? 🙂
‘கொசு’று செய்தி: 10000 கொசுக்கள் அதிமுக விலிருந்து விலகி திமுக வில் இணைந்துள்ளன. இனிமேல் சிக்குன் குனியாவை பரப்புவதில்லை என கலைஞர் முன்னிலையில் சபதம் எடுத்துள்ளன.
🙂
//
சிக்குன் குனியா பரவுவதற்கு அதிமுக அரசுதான் காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
//
காலையில் கடிக்கும் Aedis aegypti கொசுக்கள் சங்கள் சார்பாக கிருஷ்ணசாமிக்கு இந்த சிக்கன் (பிரியாணி) குனியாவை பரிசளித்து கவுரவிக்கிறோம். –
” தினக்கடி ” செய்திகளில் அனைத்து இந்திய கொசுக்கள் சங்கத்தில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டதாக செய்தி வந்துள்ளது.
அதே செய்தித் தாளில் வந்த மற்ற செய்தி.
கொசுக்களை அனியாயத்திற்கு கொல்லும் போக்கையும், கொசுக்களுக்கு கொடுக்கப் படும் “மருந்தடித்து மரண தண்டனை” யையும் ரத்து செய்யக் கோரி அரசு நீர் நிலையில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுக் கொண்ட செல்வி அருங்”கடி” ராய் போராட்டம் நடத்தினார்.
தமிழ் வலைப்பூக்கள் பற்றி வந்த சுவாரஸ்யமான செய்தி,
தமிழ் வலைப்பூக்களில் கொசுக்கள் பரிணாமவளர்ச்சியின்றி இரண்டாம் நாள் திடீர் என்று படைக்கப் பட்டது என்றும். அதில் ஆதாம் கொசுவின் மூக்கை லேசாக உடைத்து ஏவாள் கொசுவை ஆண்டவர் படைத்தார் எனவும் நம்பும் கூட்டம் இருப்பது பற்றி பலர் வியப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆக்யாலே சில பலகலைக்கழக மற்றும் பள்ளிகளில் கடிக்கும் கொசுக்கள் இன்னும் ஆண் கொசுக்களுக்கு மூக்கு சற்றே சிறிது என்று நம்பிக் கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவனுங்க காங்கிரஸ் தலைவர் ஆனப்புறமா இப்படி மென்டலா ஆவறானுங்களா, இல்ல மென்டலா இருந்தாத்தான் காங்கிரஸ் தலைவராவே ஆகமுடியுமா?
பாபா,
இதைப் படிச்சுட்டீங்களா ?
http://balaji_ammu.blogspot.com/2006/10/1.html
பாலா எல்லோருமே ஒரே மாதிரியான விஷயத்தை ஒரே சமயத்துல யோசிப்பீங்களா?:))