Daily Archives: ஒக்ரோபர் 4, 2006

Ambattur – Basic Amenities not satisfied

Dinamani.com – Chennai Page

அம்பத்தூர் நகராட்சித் தேர்தலில் வெள்ள நிவாரணம் அதிமுகவுக்கு கைகொடுக்குமா? ஓராண்டுக்குள் சாலை, மழைநீர் வடிகால் வசதிகள்: திமுக

சென்னை, அக். 5: உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் அம்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சூடு பிடித்துள்ளது. அம்பத்தூர் நகராட்சித் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அடிப்படை வசதிகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனப் போக்குவரத்து, குண்டும் குழியுமான சாலைகள், மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் புகும் வெள்ள நீர், கொசுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அம்பத்தூர் நகராட்சிப் பகுதியைச் சார்ந்த மக்கள் தவிக்கின்றனர்.

  • முகப்பேர்,
  • ஜெஜெ நகர் (மேற்கு),
  • கொரட்டூர்,
  • பாடி,
  • மண்ணூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் அம்பத்தூர் நகராட்சியில் அடங்கும். இப்பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர்.

    வளர்ச்சித் திட்டங்களை முறையாக செயல்படுத்தியுள்ளதாகக் கூறி அதிமுக கூட்டணியினரும், செயல்படுத்துவோம் என்று கூறி திமுகக் கூட்டணியினரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பெருநகர குடிநீர் வாரியத்தின் இணைப்பு வழங்கப்படும் என்று அதிமுகவினர் கூறினர். ஆனால், அத்திட்டம் நிறைவேற்றவே இல்லை.

    திமுக வெற்றிப் பெற்றால் இத்திட்டம் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று அம்பத்தூர் நகர திமுக செயலாளர் ஜோசப் சாமுவேல் கூறினார்.

    அம்பத்தூர் நகராட்சியில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் 380 பேர் போட்டியிடுகின்றனர்.

  • திமுக கூட்டணியில் திமுக 26 இடங்களிலும்,
  • காங்கிரஸ் 10 இடங்களிலும்,
  • பாமக 9 இடங்களிலும்,
  • இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர் தலா 3 இடங்களிலும்
  • புரட்சி பாரதம் 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.

    அதிமுக கூட்டணியில்

  • அதிமுக 44 இடங்களிலும்
  • மதிமுக 8 இடங்களிலும் போட்டியிடுகின்றன. திமுக, அதிமுக 22 வார்டுகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றன.

    தேமுதிக 47 இடங்களில் போட்டி: தேமுதிக 47 வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளது.

    கடந்த தேர்தலில் அதிமுகவினர் மழைநீர் வடிகால் வசதி, சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அளித்தனர். ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட 430 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எங்கள் அணியினர் ஏறத்தாழ 45 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று அம்பத்தூர் நகர திமுக செயலாளர் ஜோசப் சாமுவேல் கூறினார். இவர் திமுக சார்பில் 18-வது வார்டில் போட்டியிடுகிறார்.

    எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் ஓராண்டுக்குள் சாலை, மழைநீர் வடிகால் வசதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    வெள்ள நிவாரணம்: அதிமுக ஆட்சியில் அம்பத்தூர் நகராட்சியில் ரூ. 140 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் 40 கோடி பாதாள சாக்கடை திட்டத்துக்கும் ரூ. 100 கோடி சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்கப்பட்டு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்றார் அம்பத்தூர் அதிமுக நகரச் செயலாளர் வேதாசலம்.

    மழைக்காலங்களில் சாலைகள் எங்கும் வெள்ளநீர் தேங்கும் நிலை தொடர்கிறது. சிக்குன் குனியா காய்ச்சலால் அம்பத்தூர் பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கொசுக்களை ஒழிக்க நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கொசு ஒழிப்புத் திட்டங்களை பிரசாரத்தில் கூட முன்வைக்கவில்லை என்று குறை கூறினார் அம்பத்தூரைச் சேர்ந்த விஜயவரதன். இவர் இப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரைப் போன்றே இப்பகுதி மக்கள் பலரும் மழைநீர் வடிகால் வசதிகள் சரியில்லை என்று புகார் தெரிவித்தனர்.

    ஆனால், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மழை வெள்ள நிவாரணம் தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் கைகொடுக்கும் என்றார் வேதாசலம். இவர் அதிமுக சார்பில் 22-வது வார்டில் போட்டியிடுகிறார்.

  • MDMK’s Nanjil Sampath arrested

    Dinamani.com – TamilNadu Page

    மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது

    சென்னை, அக். 5: அவதூறு வழக்கில் ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த விஜயா தாயன்பன், கொடுத்த அவதூறு வழக்கு காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.

    எம்.ஜி.ஆர். நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயா தாயன்பனை அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்து, போலீஸில் விஜயா தாயன்பன் புகார் தெரிவித்தார். இந்நிலையில், வில்லிவாக்கத்தில் புதன்கிழமை மாலை ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாஞ்சில் சம்பத் பேசினார்.

    கூட்டத்துக்குப் பின் இரவு 10 மணியளவில் நாஞ்சில் சம்பத்தை போலீஸôர் கைது செய்தனர். இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அண்மையில் நடந்த பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியை எதிர்த்து ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார் விஜயா தாயன்பன்.

    தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதற்குப் பின்பு, தி.மு.க.வில் சேர்ந்தார்.

    Poonga – Web Design & Feedback

    பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் என்னும் அடைமொழியோடு வெளிவருகிறது. இந்தப் பதிவில் என்னால் முடிந்தவரை ‘முதல் வலைப்பதிவு இதழா?’, ‘பொருளடக்கத் தேர்வு எப்படி?’, ‘ஆசிரியர் குழுவில் எவர் இருக்கிறார் என்னும் ஆருடங்கள்’, ‘Joomla! பயன்படுத்துகிறார்கள் போல?’ போன்றவற்றை தவிர்த்து விட்டு, பயனீட்டாளனாக சில யோசனைகள்:

    (என் புரிதல்களின் பிழை இருப்பின் திருத்தவும்.)

    1. ஒன்றின் மேல் ஒன்று இடித்துக் கொள்ளும் எழுத்துக்கள்
      • இடப்பக்கம் இருக்கும் தலைப்புகள் உரசிக் கொள்கிறது (காட்டாக விமர்சனம் & பொருளாதாரம்). சில சமயம் விமர்சனம் போன்ற தலைப்புகள் காணாமலும் போகிறது.
      • உப தலைப்புகளும் முக்கிய பகுதிகளின் மேலேயே வரவைப்பது சுளுவாக பல இடங்களுக்கு செல்ல வகை செய்தாலும், சில உப தலைப்புகளை படிக்க இயலாதபடி வைத்திருக்கிறது.
      • வலப்பக்கம் உள்ள இடுகைகளின் சற்றே நீண்ட தலைப்புகளும் பின்னிப் பிணைகின்றன.
    2. வலப்பக்கம் உள்ள இடுகைத் தலைப்புகளில் சிவப்பு பின்னணியில் சிவப்பு எழுத்துக்கள்.
    3. ஒரே தலைப்பில் பல இடுகைகள் இருந்தால், அவை அனைத்தும் சிதறலாகத் தெரிகிறது. கீழ்க்காணும் படத்தில் ‘நிகழ்வுகள்/பொது’ மற்றும் ‘கவிதை’
    4. மேலே உள்ள படத்தில் ‘மரணத்தின் வாசனை’ பதிவுக்கு அருகே உள்ள ஸ்வஸ்திக் ‘ங்’ புகைப்படத்திற்கும் உள்ளே இருக்கும் விஷயத்திற்கும் என்னால் தொடுப்பு கொடுத்து சம்பந்தப்படுத்த இயலவில்லை.
    5. தொடர்புக்கு பகுதியில் ‘பூங்கா’வின் மின்னஞ்சல் தருவது போன்றவை தனி மடல்/மின் மடல் அனுப்ப உதவும். பயனர் ஒப்பந்தம் (User Agreement and Privacy Policy) சேர்ப்பது, பொதுவான வலையக அமைப்பை ஒத்திருக்கும்.
    6. நீரும் நீட்சியும் – 768×1024
      வண்ண‌மிலாத் தென்ற‌லும் வ‌ண்ணத் தீண்டுகையும். – 1024×768அனைத்து நிழற்படங்களுக்கு பொதுவான, ஒரே மாதிரியான அமைப்புக்குள் இடுவது, பார்வையாளருக்கு உதவும்.
    7. மாதத்தை மாற்றினாலும், இடப்பக்க பட்டியல் தற்போதைய அக்டோபர் வார இடுகைகளுக்கு அழைத்து செல்கிறது. காட்டாக, 18 செப் 2006 சென்றாலும், வாசிப்பு அனுபவம் என்று தேர்ந்தெடுத்தால் டோட்டோ-சான் ஆகியவை கிடைப்பதில்லை.
    8. ஓவ்வொரு இடுகையின் கீழும் Prev மற்றும் Next இருந்தால் அங்குமிங்கும் வலைபாய்வதற்கு கை கொடுக்கும். அனைத்து இடுகையிலும், பின்னூட்டங்கள அறிந்து கொள்ள வசதியாக, அசல் பதிவின் சுட்டி தரப்பட்டிருக்கிறது. பல இடத்தில் க்ளிக் செய்தாலே, செல்லுமாறு தந்திருந்தாலும், சில இடங்களில், முகவரி மட்டுமே இடப்பட்டிருக்கிறது.

      விழைப்பட்டியல் சில:

    9. அனைத்து வார ‘நட்சத்திர தேர்வு’களையும் ஒரு சேர படிக்க வசதி செய்து தந்தால் வாசகருக்குப் பயனுள்ளதாக அமையும்.
    10. மலர் 1 & மணம் 1 – ஆக ஆரம்பித்தது ஆண்டு 1 & இதழ் 2, 3 என்று மாறியுள்ளது நன்றாக இருக்கிறது. எனினும், அடிக்கடி வேறு பெயர் மாறாமல் இருக்கலாம்.
    11. Bloglines | Subscribe: செய்தியோடைகளைத் தானியங்கியாக கண்டிபிடிக்கும் வசதி.
    12. தமிழ்மணத்தில் பிடிஎஃப் கோப்புக்கள் தர வசதி செய்வது போல் பூங்காவையும் பத்திரிகை போல் மின்னஞ்சலில் அனுப்ப pdf வடிவமைத்தல்.ரசித்த அம்சங்கள்:
    13. மூன்று வாரங்கள்தான் ஆகியிருந்தாலும், ஒவ்வொரு வாரமும் நுட்பத்தில் மேம்பாடுகளைப் புகுத்தி வடிவ நேர்த்தியைக் கொண்டு வந்தது.
    14. ஆரம்பத்தில் நவதிருப்பதி போல் பல யாஹூ குழுமங்கள்; ஒவ்வொன்றாக சென்று தரிசனம் ஆகும். தொடர்ந்து வலைப்பதிவுகள். அதை ஒருங்கிணைக்க தமிழ்மணம் திரட்டி. அங்கும் எதை படிப்பது, எதை விடுப்பது என்னும் குழப்பம். அதன் தொடர்ச்சியாக, பூங்கா போன்ற இடுகைப் பரிந்துரைகள் தோன்றுவது சிரமமில்லாமல் வாசகரை மகிழ்விக்கிறது.
    15. திங்கள் அன்று தவறாமல் வெளியாகும் கச்சிதம்.

    | |