Two Penis Condition – Adults Only Please


Necessary Surgery? – Offbeat :ஒன்றை வைத்துக் கொண்டே இந்திர லோக அரசன் முதல் கமல்ஹாசன் வரை கலக்கலாக பயன்படுத்தும் இந்தக் காலத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவருக்கு இரண்டு வழங்கியிருக்கிறார் பிரம்மன். கடையில் கொசுறு கேட்பது போல் மகப்பேறு வரிசையில் நிற்கும்போது ‘கொஞ்சம் ஜாஸ்தி போட்டு விடுங்க’ என்று கேட்டிருப்பார். இப்போது மறந்து விட்டார்.

பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ வைப்பதற்கு ‘நான் ஒருவர்; எனக்கெதற்கு இரண்டு’ என்று தாராள மந்துடன் வந்திருக்கும் இன்னொன்றை அறுவை சிகிச்சை மூலம் அறுத்தெறிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஒன்றை நீக்கும்போது மற்றொன்றும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்று இரண்டுமே மரத்துப்போகும் வாய்ப்பு இருப்பதால், மருத்துவர்கள் சர்வ ஜாக்கிறதையாக செய்ய வேண்டிய பணி.

Diphallus என்று விளிக்கப்படும் நிலையில் ஒருவருக்கு இரண்டு ஆணுறுப்புகள் இருக்கும். ஐந்தரை மில்லியனில் ஒருவருக்கு இந்த நிலை வரலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 1609 தொட்டு நூறு பேர் மட்டுமே அரிதான இந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜே லீனோ, டேவிட் லெட்டர்மேன், ஜான் ஸ்டூவர்ட் ஆகியோர்களுக்கு நகைச்சுவை வழங்க உதவுவார். என்னுடைய பங்குக்கு:

  • ‘நந்தா படக் காட்சியமைப்பில் ‘ஒரு கல்லில் இரண்டு மாங்கா’ என்று வசனம் வைக்கலாம்.
  • பாடலில் வாலி ‘வில்ல’ அர்த்தமும், சுக்ரீவ இரட்டை அர்த்தமும் தொனிக்க எழுத வைப்போருக்கு ‘குஷி’ பிறக்கலாம்.
  • ‘சண்டேன்னா ரெண்டு’ போன்ற விளம்பரங்களில் இவரை பயன்படுத்தாலாம்.
  • ‘ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உன் மேல் ஆசை உண்டு’, ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ போன்ற அனைத்தும் அர்த்தங்கள் மாறலாம்.

    இன்னொருவர் வேதனை
    இவ்ர்களுக்கு வேடிக்கை
    இரக்கமற்ற மனிதருக்கு
    இதுவெல்லாம் வாடிக்கை

    சில சந்தேகங்களும் எழுகிறது:

  • சிறுநீர் கழிக்கும்போது எப்படி சமாளிக்கிறார்?
  • பத்து சிசி வெளிவரும் அந்த நேரம் இரண்டிலும் இருந்து ஐந்து ஐந்தாக வெளிப்படுமா?
  • ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று சண்டை இடுவது, அவரின் இந்த அறுவை சிகிச்சை எண்ணத்திற்கு அடிகோலாக இருந்திருக்குமோ?
  • காதும் காதும் வைத்த மாதிரி ஆபரேஷன் செய்ய சொன்னால், இப்படி பரவலாக செய்தி பரவுவது வருத்தத்தை வரவைக்குமா? அல்லது நேர்மறையாக ஜாலியாக எடுத்துக் கொண்டு விளம்பரப் பிரியர் ஆக்குமா?

    ஆதாரம்: Man With Two Sex Organs & Sanjay never visited doc till 2 months ago


    | |

  • 22 responses to “Two Penis Condition – Adults Only Please

    1. bala, srry this is in bad taste. அங்கஹீனத்தை வெச்சு எல்லாரும் கிண்டல் செய்யறாங்கன்னா, நீங்களுமா?

    2. One for the front…No the other one also!!! after some time. The lucky(or unlucky) woman who marries him – there should be a contest …

    3. Unknown's avatar கோவி.கண்ணன் [GK]

      பாலா !
      அந்த ஒன்னு இரண்டு என்றால்
      அந்த இரண்டு நாலா ?
      வெயிட்டுப் பார்டியாக இருப்பார் போல !

      மேட்டர் இன்ட்ரஸ்டாக இருப்பதால் அடிக்’கடி’ பின்னூட்டம் போடுவேன்
      🙂

    4. Unknown's avatar ஆசிப் மீரான்

      அன்பின் பாபா,

      முதலில் நான் இதுகுறித்து எழுத்லாமென்று எண்ணியிருந்தேன். நான் எழுதினால், ‘எசக்கேடா’ எழுதி மாட்டிக்குவேன்னு நெனச்சு விட்டுட்டேன்.
      நல்லவேளை, நீங்க மாட்டிக்கிட்டீங்க – பிரகாசரு கிட்ட 🙂

      சாத்தான்குளத்தான்

    5. Unknown's avatar நக்கீரன்

      இந்தப் பதிவின் சில பகுதிகளும் சில பின்னூட்டங்களும் மோசமான ரசனையோடு எழுதப் பட்டிருக்கிறது.

      some part of this post and some comments are written in very bad taste.

    6. ஐயோ! அப்பாடியோவ்…இது நெசந்தானா! மீனாச்சியம்மனுக்கு மூனு தனங்கள் இருந்ததாச் சொல்றதும் இப்படித்தான் போல. இது பொறந்தப்பவே தெரியலையா? அவங்கப்பாம்மா ஒன்னும் செய்யலையா?

    7. ஐகாரஸ்,
      —–அங்கஹீனத்தை வெச்சு எல்லாரும் கிண்டல் செய்யறாங்கன்னா—-

      வெளிப்படையான எண்னத்திற்கு நன்றி. வருத்தங்கள்.

      இந்தப் பதிவில் எனக்கு அவரை நக்கல் அடிப்பதாக (எழுதும்போது) தோன்றவில்லை. ஒரு வாரம் விட்டு படித்தால், தரமற்றதாக தெரியலாம். அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா என்று வலையில் அலசப்படும் சில பதிவுகளை கவனித்தபோது, ‘சில சந்தேகங்களை’ எழுப்பி விவாதத்திற்கு உள்ளாக்குவதே நோக்கம். கூடிய சீக்கிரமே இந்த நிகழ்வை வைத்து தமிழ் சினிமாவில் காட்சிகள் வரலாம் என்பதையும் சுட்ட நினைத்தேன்.

      நக்கீரன்,
      —-இந்தப் பதிவின் சில பகுதிகள் மோசமான ரசனையோடு —-

      எந்த எந்தப் பகுதிகள் மோசமான ரசனை என்று தெளிவு படுத்தினால், தன்யனாவேன். இதே போன்ற எண்ணங்கள், உரையாடலாக புனைவில் வந்தால், கதாபாத்திரங்கள் மேல் கோபமும், பரிவும், அக்கறையும், வெறுப்பும் தோன்றும். ஆனால், பதிவாக யோசிக்கும்போது ‘பேட் டேஸ்ட்’ என்றாகி விடுகிறது.

      இந்த ‘some’ என்பது யாது என்பனவற்றையும், ஏன் தங்களுக்கு அவை இழிசுவையைத் தருகின்றன என்பதையும் பதிந்தால், வரும் பதிவுகளில் கவனத்தோடு திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

      முன்கூட்டிய நன்றி.

      ஜிரா,
      —-மீனாச்சியம்மனுக்கு மூனு தனங்கள் இருந்ததாச் சொல்றதும் இப்படித்தான் போல.—-

      சொக்கநாதன் அந்தக் காலத்திலேயே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார் 🙂

      —-அவங்கப்பாம்மா ஒன்னும் செய்யலையா—-
      இந்தியாவில் வால் உள்ள குழந்தை அனுமனாக கும்பிட வைத்து போல் காசு பார்ப்பதை போல் செய்யாமல், வயதுக்கு வந்த பின் அவருடைய முடிவுக்கே விட்டிருப்பது உசிதம்.

      ஆசிப்,
      —–முதலில் நான் இதுகுறித்து எழுதலாமென்று எண்ணியிருந்தேன். —-

      உங்க நடையில் எழுதினால் ரசாபாசமான விஷயங்கள் கூட தெளிவைத் தரும் விதத்தில் வெளியாகுமே… அவசியம் எழுதுங்க.

      போலி டோண்டுவின் ஜாலி பின்னூட்டமும், ‘நக்கீரன்’ கண்டிக்கும் ஸ்டைலில் மற்றொரு மறுமொழியும் வெளியிட முடியாமல் தடுக்கும் வசதி கொடுத்த மறுமொழி மட்டுறுத்தலுக்கும் நன்றிகள் 🙂

    8. Unknown's avatar நக்கீரன்

      தவறாக எண்ண வேண்டாம் எனக்கு தோன்றியதைக் கூறினேன். அது ஜஸ்ட் என்னுடைய கருத்து அவ்வளவே இருந்தாலும் நீங்கள் கேட்டுக் கொண்டதால் எனக்கு சரியில்லாதது என்று தோன்றிய பகுதிகளாக கீழே கொடுக்கிறேன்.

      One for the front…No the other one also!!!

      பத்து சிசி வெளிவரும் அந்த நேரம் இரண்டிலும் இருந்து ஐந்து ஐந்தாக வெளிப்படுமா?

      ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று சண்டை இடுவது, அவரின் இந்த அறுவை சிகிச்சை எண்ணத்திற்கு அடிகோலாக இருந்திருக்குமோ?

      பாலா !
      அந்த ஒன்னு இரண்டு என்றால்
      அந்த இரண்டு நாலா ?
      வெயிட்டுப் பார்டியாக இருப்பார் போல !

      மறுபடியும் சொல்கிறேன் இது எல்லாம் என் பார்வையில் நான் கொடுப்பது நீங்கள் கேட்பதால்.

    9. Unknown's avatar லக்கிலுக்

      சாரே!

      நான் பாக்யராஜ் ஸ்டைலில் தானே கமெண்டு கொடுத்திருந்தேன்…. அதை கூட வெளியிடவில்லையே?

    10. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

      இழிவாய் கிண்டலடிப்பதற்கும் சுவாரஸ்யமாய் அலசிப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்…?

      நம்ம பார்வைதான், என நினைக்கிறேன்.

      ஒரு ஆளை மிதிப்பதும் சட்டி வாயா என அழைப்பதும், முட்டாளாய் காண்பிப்பதும் ஆரோக்கியமான காமெடியாய் ரசிக்கிறோமே அதுக்கு இது மோசமாய் தெரியவில்லை.

      on the lighterside..

      ‘கண்ண மூடிட்டு ரெண்டுல ஒண்ணத் தொடு’ மாதிரியான விளையாட்டுக்கள் சாத்தியம்.

      ‘அந்த’ நேரத்துல ரெண்ட்ல ஒண்ணப் பாத்துருவாரு

    11. ஏன் ஏ ஜோக்குகளை யாரும் ஆபாசம் என்று சொல்லக் காணோம்? ஒரு வேளை இந்தச் செய்தி SMS வழியே வந்திருந்தால் ரசித்திருப்போமோ?

      அந்த இரட்டை உறுப்புக்காரருக்கும் அது வாழ்வா சாவா பிரச்சினை போல் போல் தெரியவில்லை. அவரது தற்போதைய நிலவரம் தெரிந்தால் கொஞ்சம் துணிந்து நகைச்சுவை பண்ணலாம்.

    12. சொல்ல மறந்துவிட்டேனே – படங்கள் நல்ல தேர்வு.

    13. Unknown's avatar கோவி.கண்ணன் [GK]

      ரசனை சரியில்லை ! ஒப்புக் கொள்கிறேன்
      அந்த ரசனை இல்லாவிட்டால் மனைவியுடன் உறவுகொள்ள முடியுமா என்று தெரியவில்லை !

      ஆண்குறி பற்றி எதுவும் தெரிந்து கொள்வது மோசமான ரசனை, அதைப்பற்றி நகைச்சுவையாக எழுதினால் அது மிகவும் மோசமான ரசனை ! என்ன செய்வது என்னை வளர்த்தது சரியில்லை என்று நினைக்கிறேன்.

      பாலா,
      நான் போட்ட பின்னூட்டத்தை நீங்கிவிடுங்கள். ஆபாச பின்னூட்டம் என்று பதிவை தூக்க தமிழ்மணத்தில் யாராவது கோரிக்கை வைக்கும் முன்.

      யார்மீதும் வருத்தமில்லை.

    14. லக்கிலுக்,
      —-நான் பாக்யராஜ் ஸ்டைலில் தானே கமெண்டு கொடுத்திருந்தேன்…. —-

      சேச்சே… அது எஸ்ஜே சூர்யா அளவுக்கு இருந்ததே 😉

      சிறில்,
      —-ஒரு ஆளை மிதிப்பதும் சட்டி வாயா என அழைப்பதும், முட்டாளாய் காண்பிப்பதும் ஆரோக்கியமான காமெடியாய் ரசிக்கிறோமே அதுக்கு இது மோசமாய் தெரியவில்லை.—-

      சாக்கிரதையா மறுமொழியவும் 🙂 அதையும் கண்டிக்கிறோம். இதையும் கண்டிக்கிறோம் என்பது (மாற்றுப்) பார்வையாக இருக்கும்.

      சாத்தான்,
      —-படங்கள் நல்ல தேர்வு.—

      சிவ சிவா! 😉

      கோவி… ஜிகிர்தண்டா பருகி கூல் டவுன் 🙂

    15. உமது கமல்ஹாசன் வெறுப்பை அப்பப்போ வாந்தி பண்ணவில்லையென்றால் உமக்கு தூக்கம் வராது போல.

    16. ஜோ,
      தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் பிம்பம் கமலுக்கு இருப்பதை சொன்னேன். புராணத்தில் மட்டுமே சொல்லப்படும் இந்திரனுடன் ஒப்பிடுவது கமல் மீது சொல்லப்படும் சம்பவங்களும் கதையாகவே இருக்கலாம் என்பதையும் உங்களுக்கு உணர்த்தலாம்.

    17. எனக்கு டாபிக்கைவிட தேர்ந்தெடுத்த படங்கள் மோசமாகப் படுகிறது. தமிழ்படங்களின் மெல்ல்ல்லிய திரைமறைவு ஆபாசம் போல…

    18. Unknown's avatar அன்புடன்...ச.சங்கர்

      பாலா சார்,

      யாரோ ஒருவருடைய கஷ்டமான ஒரு நிலையை நகைச்சுவையாக சொல்ல முனைந்திருப்பது பாராட்டுக்குறியது..

      யோசித்துப்பார்த்தால் நகைச்சுவை என்பதே…காட்சியில்…சொற்ரொடரில்…நிகழ்வில்..அமைப்பில் ஏற்படும் முரணே என்று தோன்றுகிறது…

      சபையில் திடீரென்று ஒருவரது பாண்ட் அவிழ்ந்து விட்டால் முதலில் இயற்கையாக தோன்றுவது கொல்லென்ற சிரிப்பு…இதே அவரும் சிரித்தால் அந்தக் காட்சி நகைசுவையாக தொடர்கிறது…அவரே கூனிக்குறுகி விட்டால் …சிரித்தது தவறு என்பதாக ஒரு நிலை…கனமான மெளனம்..ச்சொ..ச்சொ…எல்லாம் உருவாகி விடுகிறது….அனால் நகைசுவை உருவாவதே இது போல் முரண்களால்தான் என்பது என் எண்ணம்…எனவே வாழ்வில் முரண் இல்லையேல்…அது அடுத்தவரை பாதிக்கும் என்று நினைத்து பேசாமலிருந்தால் எதிலுமே நகைச்சுவை இல்லை..அதனால் நான் இகாரஸ் சொன்னதை மறுக்கிறேன்….
      யாராவது அடுத்தவரை பாதிக்காத முரணில்லாத ஒரு நகைச்ச்சுவை சொல்லமுடியுமா :)))
      என் கருத்து சரியா ??

    19. பண்ருட்டி,
      —-டாபிக்கைவிட தேர்ந்தெடுத்த படங்கள் மோசமாகப் படுகிறது. —-

      அந்தக்கால சிவாஜி, மகோரா காதல் பாடல்களை கேட்டது இல்லீங்களா…

      உடனடியாக நினைவுக்கு வந்த எனக்கும் பிடித்த சில:
      * எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் (சோகம்)

      * ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்; தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்

      * தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

      நிறைய சொல்லலாம். குழந்தையாக இருந்தபோது மெட்டும், முதல் வரியும் மனதில் நின்றிருக்கும். இப்பொழுது வேறெதோ சிந்தனையில் பார்த்தால், பொதிந்த மற்றொரு அர்த்தம் வெளியாகிறது.

    20. இந்தப் பின்னூட்டம் வயது வந்தவர்களுக்கு மட்டுமல்ல: சிலருக்கு ஆறு விரல்கள் இருக்கும்..சிலருக்க விரல்களேயிருக்காது. சில பெண்கள் பத்து வயதில் பருவமெய்துவார்கள் சிலர் 18 ல் கூட பருவமெய்துவார்கள். இது உடலியல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள். அதே போல் தான் இரண்டு ஆண்குறிகளும் .. இந்தப் பதிவுக்கு ஏன் இப்படியோரு தலைப்பு? ஏன் இதை வயது வந்தவர்கள் மட்டும் தான் படிக்க வேண்டும்? இது வெறும் பயாலஜி பற்றிய தகவல்தானே? முதுகிலிருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்!

    21. இந்தப் பின்னூட்டம் வயது வந்தவர்களுக்கு மட்டுமல்ல: சிலருக்கு ஆறு விரல்கள் இருக்கும்..சிலருக்க விரல்களேயிருக்காது. சில பெண்கள் பத்து வயதில் பருவமெய்துவார்கள் சிலர் 18 ல் கூட பருவமெய்துவார்கள். இது உடலியல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள். அதே போல் தான் இரண்டு ஆண்குறிகளும் .. இந்தப் பதிவுக்கு ஏன் இப்படியோரு தலைப்பு? ஏன் இதை வயது வந்தவர்கள் மட்டும் தான் படிக்க வேண்டும்? இது வெறும் பயாலஜி பற்றிய தகவல்தானே? முதுகிலிருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்!

    22. —–முதுகிலிருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள—-

      ஆளவந்தான் பாடலில் வருமே (சிரி சிரி சிரி… – Aalavandhan (2001) – Music India OnLine)

      அந்த மாதிரி யாராவது எக்குத்தப்பா புரிந்துகொண்டு நீட்டி முழக்கி விளக்கம் கொடுத்தால் என்னாவது என்று தலைப்பில் ஒரு பாதுகாப்பு உறை வைத்தேன். இந்த மாதிரி தலைப்பு வந்தால் வாசகர்கள் அலைகடலென ஓடி வந்து வாசிப்பார்கள் என்பது தாங்கள் அறியாத ரகசியமா?

      (அமெரிக்காவில் பன்னிரெண்டாவது வயதில் பாலியல் கல்வி ஆரம்பம்; பதின்மூன்று வயது வந்தோருக்கு மட்டும் என்று அடுத்த முறை தலைப்பில் இட்டால் ஒகேவா?)

    ஆசிப் மீரான் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.