TV Serials should be Censored – Ramadoss


Webulagam : TV Serials also forward the Sencor Board-Ramadoss

டிவி தொடர்களையும் தணிக்கை செய்ய வேண்டும்-ராமதாஸ்!

  • ஆரம்பக் கல்வி தரமாக இருக்க பள்ளி கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
  • ஆரம்ப கல்விக்கு என்று தனி அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும்.
  • அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த மாணவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
  • விழுப்புரம், சேலம், கோவை, வேலீர் ஆகிய மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும். தற்போதுள்ள 31 மாவட்டங்களை 39 மாவட்டங்களாக உயர்த்த வேண்டும்.
  • பொது இடங்களில் அரசியல் உள்ளிட்ட சுவர் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
  • சினிமாவில் பெயர் மட்டும் தமிழில் இருந்தால் போதாது. படம் முழுவதும் ஆங்கில கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். தமிழ் பெயருக்கு மட்டும் மக்கள் வரிப்பணத்தை பரிசாக கொடுப்பதை ஏற்க முடியாது.
  • அண்ணி உறவை கொச்சைப்படுத்தல் போன்ற பண்பாட்டு சீரழிவு காட்சிகள் சினிமாவில் இடம்பெறுகிறது. டிவி தொடர்களிலும் கலாச்சார சீரழிவுகளே அதிகமாக உள்ளன. எனவே டிவி தொடர்களையும் தணிக்கை செய்ய வேண்டும்.
  • 8 responses to “TV Serials should be Censored – Ramadoss

    1. Unknown's avatar எழுத்துப் பிழை

      வேலீர் : வேலூர்

    2. //அண்ணி உறவை கொச்சைப்படுத்தல் போன்ற பண்பாட்டு சீரழிவு காட்சிகள் சினிமாவில் இடம்பெறுகிறது. //
      நானும் ‘உயிர்’ படத்தை தவிர்த்துவிட்டேன். ஆனால், அண்ணி கொழுந்தன் மேல் ஆசைப்படுவதைப் போலவும், கொழுந்தியா அக்காள் கணவன் மேல் காதல் கொண்டதைப் போலவும் எடுக்கப்பட்ட படத்தை எதிர்ப்பவர்கள், கொழுந்தியா மேல் ஆசைப்படும் படங்களை (ஆசை) பற்றி எதுவும் சொல்லவில்லையே, ஏன்?

    3. //அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த மாணவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது//

      இது எதுக்கப்பா? அதான் அரசு பள்ளிகள் இருக்கில்ல.. ஆக் எவனும் சந்தோஷமா இருக்க கூடாது…

      மிச்ச அனைத்து பாயிண்ட்களும் சூப்பர்

    4. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

      பண்பாட்டுக் காவலர் பேசிவிட்டார். சுய சிந்தனையுடைய மக்கள் யாரும் தமிழ் நாட்டில் குடியிருக்க முடியாதுபோலிருக்கிரது. யார்யார் என்ன யோசிக்க வேண்டும், என்ன பார்க்க வேண்டும், செய்ய வேண்டும் என்பதை இரமதாஸ் மற்றும் நண்பர்கள்தான் முடிவு செய்வார்கள் போலிருக்கிறது.

      தமிழை வளர்க்கிறோம் பேர்வளி என தமிழ் பெயரில் வரும் சினிமாக்களுக்கு வரி விலக்கு அளிப்பது என்பது எத்தனை சிந்தனையில்லாத செயல் என எனக்குத் தெரிகிறது முதல்வருக்குத் தெரியவில்லையா?

      சீனு, உயிர் படம் பாருங்கள் படத்தில் அசிங்கமாக எதையும் சொல்லிவிடவில்லை. சாத்தியமான பிரச்சனை ஒன்றையே அலசியிருக்கிறார்கள். இதில் எந்தவிதமான பெருமைப்படுத்தும், நியாயப்படுத்துதலுமில்லாமல் யதார்த்தத்தையே படம் சொல்லுகிறது.

    5. பாலா,
      ரொம்ப நாள் சந்தேகம், அதான் தேர்தல் முடிஞ்சி போச்சே.. இன்னும் ஏன் இந்த வலைப்பூவை வைத்து அப்டேட்டும் பண்ணிகிட்டிருக்கீங்க? (நீங்க மட்டும்?!)

    6. —-தேர்தல் முடிஞ்சி போச்சே..—-

      சேச்சே… அடுத்து உள்ளாட்சி, அப்புறம் இடைத் தேர்தல், அதன் பிறகு ஜனாதிபதி தேர்தல் (எப்போ?), நடுவே காங்கிரஸ் தலைவர் தேர்தல்; அப்படி எல்லாமும் முடிந்து விட்டால், நவம்பரில் வரும் அமெரிக்க தேர்தல் என்று தொடர்ந்து Category:2007 elections படுத்துவதாய் உத்தேசம்.

      உலகெங்கும் தேர்தல் நடத்துவதை நிறுத்த சொல்லுங்க… நாங்க (அதாவது இப்போதைக்கு நான் மட்டும் 😉 நிறுத்தறோம்.

      [மறுமொழியே சொல்லாமல், செய்தியை சுரதாவில் உருமாற்றி இட்டுக் கொண்டிருந்தவனை நாலெழுத்து எழுத வச்சிட்டீங்களே… நன்றி பொன்ஸ். தமாசாக ஒரு லாஜிக் ஜோக் தோணிச்சு… எஸ் வி சேகர் நாடகங்களில் தத்துவம் வருவது போல் சேரிய செய்திகள் நடுவில் நகைச்சுவை:

      எழுத்தறிவித்தவன் இறைவன். இறைவனை நம்புபவன் காட்டுமிராண்டி. எழுத்தறிவித்தவன் == காட்டுமிராண்டி 😉 ]

    7. //உலகெங்கும் தேர்தல் நடத்துவதை நிறுத்த சொல்லுங்க… நாங்க நிறுத்தறோம்.//
      ஓகே!! ம்ம்ம் 🙂 (அ) 😦

      எது போடுறதுன்னு தெரியலை.. ஏதோ ஒண்ணு.. 🙂

    8. சிறில் அலெக்ஸ்,

      //சீனு, உயிர் படம் பாருங்கள் படத்தில் அசிங்கமாக எதையும் சொல்லிவிடவில்லை.//
      அசிங்கத்துக்காகவெல்லாம் அதைத் தவிர்க்கவில்லை. ஆனால், இந்த பிரச்சினைகளையெல்லாம் வைத்தும் (வித்தியாசமாய் செய்யவேண்டும் என்று நினைத்து) காசு பார்ப்பதில் மட்டுமே குறியாய் இருக்கிறார்களே என்ற ஆதங்கம். அதனால், என்னால் இயன்ற ஒரு எதிர்ப்பு. அவ்வளவே. ஆசை படத்திலும் ஆபாசமோ, அசிங்கமோ இல்லை. ஏன்? ‘வாலி’…அருமையான திரைக்கதை. ஆனால், கதை கருவிற்கு எந்த ஒரு சலசலப்பும் இல்லையே!

    பொன்ஸ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.