Six Word Stories


ஆறு வரிகளில் கதை சொல்ல அழைக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே. அவர் எழுதியது:

‘For sale: baby shoes, never used.’

சுஜாதா 55 வார்த்தைகளில் சிறுகதை எழுத சொன்னது அந்தக் காலம். ஆறு வரி கதைகள் நிகழ்காலம்.

என்னுடைய முயற்சிகள் சில:

  • வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.
  • தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.
  • “என்ன வேண்டும்?” ‘புகழ்’ “ஏன்?” ‘அதுதான் தெரியவில்லை.’
  • கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.
  • சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.
  • ரயிலில் குளிரூட்டு சுணங்கல். வாயிற்கதவைத் திறந்தவனுக்கு மோட்சம்.
  • குண்டுவெடிப்பு – 250 இறப்பு: தலைப்புச்செய்தி. பட்டினி சாவு?

    Shamash Says… : “The Hemingway Challenge வலைப்பதிவில் இருந்து சில ஆங்கில ஆறு வரிக் கதைகள்:

  • “Forgive me!” “What for?” “Never mind.” – John Updike
  • Eyeballed me, killed him. Slight exaggeration.– Irvine Welsh
  • Satan- Jehovah- fifteen rounds. A draw. – Norman Mailer
  • I saw. I conquered. Couldn’t come. – David Lodge
  • Oh, that? It’s nothing. Not contagious.- Augusten Burroughs
  • She gave. He took. He forgot – Tobias Wolff.

    வந்தியத்தேவன் முன்னர் எழுதிய 55 வார்த்தை கதைகள்: தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன் :: வீட்டுக்கு வீடு | நிதர்சனம் | எங்கள் அண்ணா | தனயன்


    | |

  • 29 responses to “Six Word Stories

    1. Unknown's avatar நாகை சிவா

      ஆறு வார்த்தை கதைங்க. ஆறு வரி கதைனு தப்பா சொல்லிட்டீங்களே!
      ஆனைக்கு அடி சறுக்கும் 😉

      //தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.//
      பக்காவாக இருக்கு

      //கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.//
      சும்மா நச்சுனு இருக்கு

    2. Unknown's avatar இலவசக்கொத்தனார்

      தமிழில் வலைப்பூக்கள்.
      இங்கேயும் அடிதடஇ.
      தேடுகிறேன் நிம்மதி.

    3. பா.பா,

      ச்சும்மா நானும் எழுதலாம்னு நினைச்சப்ப உடனே தோன்றியது.

      1. திரையரங்கில் குண்டுவெடிப்பு. நல்லவேளை எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை

      2. இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தது. நான் பரிட்சையில் தோற்றேன்.

    4. —-ஆறு வார்த்தை கதைங்க. ஆறு வரி கதைனு—-

      ஓ! 😦 முதலாளி வந்துடுவாரோ என்னும் அவசரத்தில் எழுதினால், எது உருப்படுகிறது! நன்றி நாகை சிவா

      —-ஆனைக்கு அடி சறுக்கும் —-

      நான் அவ்வளவு குண்டு இன்னும் ஆகலியே 😉

    5. விக்னேஷ், இரண்டுமே மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்

    6. குறும்பா(haiku) கொத்தனார் 🙂

      உங்களுடைய ஆறு வார்த்தையை பார்த்து உதித்தது…
      பதவி உயர்வு பூங்கொத்து. குல்கந்து கேக்-கில் வண்டு.

    7. Unknown's avatar இலவசக்கொத்தனார்

      தியேட்டரில் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம். பிள்ளையோ அழுது பசியால்.

      விக்னேஷ், நல்லா வந்திருக்கு உங்க கதைகள். மேலே எழுதியது அதன் தாக்கமே.

    8. Isn’t we call them ‘kavithai’? If you write one word per line it becomes “puthu Kavithai”. If you write in one sentence it becomes “six word story”.

      in Tamil blog world:
      “kulam. kulam ariya Aval” – story.

      Kulam.
      Kulam
      ariya
      Aval. – Kavithai.

      *cheers*
      Nambi

    9. நன்றி பா.பா & இ.கொ,

      நீங்கள் கொடுத்த தைரியத்தில் மனதில் தோன்றிய இன்னும் நாலு கதைகளை தனிப்பதிவாக ( ரொம்ப காலமாய் ஆறு பதிவுக்கு என்ன செய்வது எனத்தெரியாமல் முழித்துகொண்டிருந்தேன் ;)- ) செய்திருக்கிறேன். ஏண்டா பாரட்டினோம்கிற ரேஞ்சுக்கு இருக்கிறதானு படிச்சிட்டு சொல்லுங்க.

      http://vicky.in/dhandora/?p=168

    10. நன்றி நம்பி. ஒரு வரையறைக்குள் (வெண்பா அளவுக்கு படுத்தாமல்) எழுத சொல்கிறார்கள்.

      —Isn’t we call them ‘kavithai’—

      Ernest Hemingway நாவலாசிரியர். ஆறு வார்த்தைகளில் கதை சொல்வது கஷ்டமான விஷயம் தான். நான் எழுதியது சில முயற்சிகள் 😀

      பழமொழியை உல்டா செய்வது : யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே ==> “சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.”

      செய்திகளைப் பகிடி செய்வது : “வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.”

      வெகுசனப் பத்திரிகைகளில் வரும் நீதியைப் புகட்டும் ஒரு பக்க கதைகள் : “தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.”

      – அறிக்கை விடுவது; கவர்ச்சியான தலைப்பு; உளவியல் சிந்தனை என்று நீங்களும் அடர்த்தியான ஆறு வார்த்தை கதை எழுத முயற்சிக்கலாம் 😉

      உங்களின் முயற்சியை இப்படி மாற்றி வைத்துப் பார்க்கத் தோன்றியது…

      ஹைக்கூ:
      1. ஊர், பெயர் என்ன
      என்று கேட்டவன்
      அனானிமஸ்

      2. ‘அமெரிக்கா சுதந்திர நாடல்ல’ எழுதினான்
      தமிழகத்து இந்தியன்

      (இன்றைய ‘குறும்பா’க்கள் தன்னிலை அனுபவம் என்பதை விட பொருளின் குணாதிசயங்களையும் சமூக விமர்சனங்களையும் சொல்லுகிறது.)

      ஆறு வார்த்தைக் கதை:
      மீட்டிங் அறுக்கிறது. ‘அரசு ஊழியர்கள் பொறுப்பற்றவர்கள்’ – வலைப்பதிந்தேன்.

    11. Unknown's avatar மதுமிதா

      ஊர்கூடி தேரிழுக்க நிலைக்குவந்தது தேர்
      ஊர்சேரி மக்கள்???

    12. Unknown's avatar இலவசக்கொத்தனார்

      குறும்பாக் கொத்தனார்?!
      கவிதை அலர்ஜி.
      குறும்பா பாபா?

      அப்பப்பா எத்தனை பா?
      பாவம்ப்பா பா விட்டுடப்பா .

      விக்னேஷ் பதிவிலிட்டது

      பாபா போட்டது பதிவு. நட்சத்திரம் செய்தார் ஹைஜாக். 🙂

      விக்னேஷ், இதுவும் தமாஷ்தான். இன்னும் கோபம் வேண்டாம்.

    13. Unknown's avatar கோவி.கண்ணன்

      இந்திய பட்டம் பறக்கிறது அமெரிக்க வானில் :))

    14. டாவின்ஸி கோடு போல இதோ என்னுடைய பங்களிப்பு:

      ஈழததமிழர் படும்பாடு; வயிறு எரிகின்றது பிரேஜில் தோற்றது.

      அல்லது

      ஈழததமிழர் படும்பாடு; வயிறு எரிகின்றது ஜிடேன் தீவிரவாதி.

      சரக்குமார் விஜய’சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.

      தீட்ஷிதர் போட்டுத்தாக்கு. கண்டதேவி கூனிக் குறுகி உள்ளேன்.

      நம்பிக்கையின்பாற்பட்டு அமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி!

      சங்கரமடம் சந்தி சிரிக்கின்றது. முழுப் பூசணிக்காயாய் ஆதீனங்கள்.

      கண்ட(தேவி)நாள் முதலாய் காதல் பெருகுதடி… கையினில் திருப்பாச்சேத்தி

      படிக்கப்போனேன். துரத்தி அடித்தது. பாபா பதிவின் லின்ங்குகள்.

      குலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்

      மூனா கானா லேனா சூனா செந்தமிழில் முகலேசு

      போகப் போக உங்களுக்கே தெரியும் போய் வருகின்றேன்.

      (கடேசி ச்சும்மா) வர்ட்டா…

    15. பாபா,

      என் 2 சென்ட்டுகள்.

      காலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.

      ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் – நியூட்ரல் ஜல்லி.

      Play the opponent, not the board – Tamil Blogdom
      (Note: Play the board, not the opponent is a saying in Chess)

      – பி.கே. சிவகுமார்

    16. //நம்பிக்கையின்பாற்பட்டு அமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி!//

      ஏழாகிப்போச்சே… எழவு…

      இப்பிடி வைச்சுக்கலாம்…

      அமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி!

    17. இன்னும் சில: (கதையா கவிதையா உடைத்துப் போட்ட உரைநடையா என்று தெரியாது. வெள்ளி பிற்பகல் தூக்கத்தைக் கெடுக்கும்விதமாக முயன்றது.)

      வலைப்பதிவெழுதிச் செத்துப் பிழைக்கிறான் அனுதினமும்

      ஸ்ரீரங்கநாதருக்கும் தில்லையம்பலத்தாருக்கும்
      பீரங்கி வேண்டாம்
      பிரபந்த-திருவாசகம் போதும்
      (குறிப்பு: சரியான வரிகள் நினைவில் இல்லை. ஆனால், ஸ்ரீரங்கநாதரையும் தில்லையம்பலத்தாரையும் பீரங்கியில் பிளக்கும் நாள் எந்நாளோ என்ற பொருளில் பாரதிதாசன் எழுதிய கவிதையொன்று இருக்கிறது.)

      உள்குத்து வெளிக்குத்து
      காணாமல் போனது
      பொதுக்கருத்து

      அரசியல் பேசமாட்டார்
      அரசியல் செய்வார்
      வலைப்பதிவு நிபுணர்

      கருத்து கந்தசாமிகளுக்கு இரண்டு பக்கமும் இடி.

      கருத்துள்ள பதிவைவிட
      கமெண்ட்டுள்ள பதிவே மேல்.

      கொஞ்சம் சினிமா
      கொஞ்சம் அரசியல்
      தமிழ்வலைப்பதிவு வளர்கிறது

      ஆறு வார்த்தைகளை அடுக்கினால் கதை கவிதை இன்னபிற ரெடி.

      பத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர்.

      இரண்டாயிரமாண்டு செத்துக்கிடந்த தமிழை இன்டர்நெட்டில் வேகமாக வளர்க்கிறார்.

    18. Unknown's avatar இலவசக்கொத்தனார்

      முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!

      இப்போதான் தினமலர் திறந்தேன். முதல் படமே நடிகர் திலக சிலை திறப்பு விழா பற்றித்தான். அதனால் வந்தது….:)

    19. —-முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்! —-

      தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்னும் தைரியத்தில் சொல்கிறேன். முன்னதை விட பன்முனைப்போடு வெளிவந்திருக்கிறது.

      படித்தவுடன் எனக்குத் தோன்றியது:
      புத்தன் யேசு காந்தி பிறந்தது எதற்காக? பெற்றோருக்காக!

    20. —-காலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.—

      இதற்கு பொருத்தமாக வெளிவர முடியாமல் பொட்டிக்குள் இருக்கும் படத்தின் பாடல்: Black Friday – Music India OnLine :: Badshah In Jail

      —-ஸ்ரீரங்கநாதரையும் தில்லையம்பலத்தாரையும் பீரங்கியில் பிளக்கும் நாள் எந்நாளோ என்ற பொருளில் பாரதிதாசன—-

      ஆம் : ஹரிமொழி – கவிதைத் தொகுப்பும் இலக்கிய (இளகிய?) விமரிசனங்களும்

      —-அரசியல் பேசமாட்டார்; அரசியல் செய்வார்; வலைப்பதிவு நிபுணர்—- என்பதற்கு ஒப்ப :

      MAANIDAL – மானிடள்: April 2006: “Ordnance என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி”

      அறிக்கைகளாக பிடித்தவை:
      பத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர்.

      —–இரண்டாயிரமாண்டு செத்துக்கிடந்த தமிழை இன்டர்நெட்டில் வேகமாக வளர்க்கிறார்.—–

      இணையம் உளவாக இண்டெர்னெட் கூறல்
      கமர்கட் இருக்க கஷாயம் கவர்ந்தற்று 🙂

    21. குசும்பா,

      ‘கருத்துள்ள பதிவைவிட கமெண்ட்டுள்ள பதிவே மேல்.’ என்னும் பிகேயெஸ் கருத்தொப்ப, உள்குத்தியதற்கு நன்றி.

      ‘கதை கேட்கப் போனேன்; குசும்பு வாங்கி வந்தேன்?!’

      —-சரக்குமார் விஜய’சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.—-

      ‘ரஜினியை எப்படி விட்டு விட்டீர்கள்; ஓ! சிவாஜி?’

      —-சங்கரமடம் சந்தி சிரிக்கின்றது. முழுப் பூசணிக்காயாய் ஆதீனங்கள்.—-

      ‘அனுராதாவுக்கும் ரமணனுக்கும் ஒரு வார்த்தைதான் வித்தியாசம். பின்னெழுத்துக்கள்’

      —-குலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்—-

      ‘தனிமனிதத் தாக்குதல். பின்னூட்ட அங்கீகரிப்பு. அரிப்பு வாதம்’

    22. //காலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.//

      🙂

    23. திருத்திய வடிவம்:

      கல்லூரியில் பாப்பாத்தியை டாவடித்தான். இன்டர்நெட்டில் பார்ப்பனியத்தை எதிர்க்கிறான்.

      (இப்போது இது கதையாகிறது. முன்னர் எழுதியது பல கருக்களாகவும் அறிக்கைபோலவும் தோன்றுவது உண்மைதான். அவற்றையும் இப்படி மாற்ற முடியும்.)

      உதாரணமாக பத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர் என்பதைப் பின்வருமாறு மாற்றலாம்.

      பத்துப் பதிவு எழுதினார். எழுத்தாளரானார்.

      அதேபோல,

      ஊர் இரண்டுபட்டது. கூத்தாடி கொண்டாடினார். நியூட்ரல் ஜல்லியடித்து.

      கருத்தையல்ல எதிராளியை ஆடினார். வலைப்பதிவு கூட்டம் கைதட்டியது.

      ஸ்ரீரங்கநாதருக்கும் தில்லைநடராசருக்கும் பீரங்கி வேண்டாமென்று பிரபந்த-திருவாசகம் பாடினார்.

      அவர் அரசியல் பேசமாட்டார். செய்வார். வலைப்பதிவு நிபுணர்.

      கருத்து கந்தசாமியானார். இரண்டு பக்கமும் இடி வாங்கினார்.

      ஆறு வார்த்தைகளை அடுக்கினார். கதை கவிதை ரெடி.

      திருத்திய வடிவங்களைக் கணக்கில் கொண்டு விமர்சிக்குமாறு நண்பர்களை வேண்டுகிறேன்.

      அன்புடன், பி.கே. சிவகுமார்

    24. இன்னும் கொஞ்சம்: (எல்லாரின் ஆறுவரி கதை/கவிதைகளையும் தொகுத்து ஒரு பதிவாக இடுவது குறித்து யோசிக்கலாமே.)

      எக்ஸ்ஸைப் பரிசோதித்த டாக்டர் “வலைப்பதிவு சின்ட்ரோம்” என்றார்.
      (விளக்கம்: எக்ஸ் கதாபாத்திரத்தின் பெயர்)

      அவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். பயந்து பின்வாங்கினான்.

      பிள்ளைகள் முன்னே சண்டையிட்டார்கள். படுக்கையில் கொஞ்சிக் கொண்டார்கள்.

      கைகுலுக்கியபின் அமைதியாக ஆடினர் சதுரங்கத்தை. அரசியல்வாதி ஆச்சரியப்பட்டார்.

      பீர்பாட்டிலைக் கவிழ்த்து வைத்தான். பேப்பர் நிரம்பியது எழுத்துகளால்.

      சிரித்தழுதோடியாடி திரை நிரைத்தான். தேறாதென்றார் இருக்கையிலிருந்த படி.

      – PK Sivakumar

    25. பிள்ளைகள் முன்னே கொஞ்சிக் கொண்டார்கள். படுக்கையில் சண்டையிட்டார்கள் (அமெரிக்க முறை!)

    26. “ஸ்ரீரங்கநாதருக்கும் தில்லைநடராசருக்கும் பீரங்கி” முழங்கினார். இப்போதைக்கு பிரபந்த-திருவாசகம் பாடினார்.

    27. //—-சரக்குமார் விஜய’சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.—-

      ‘ரஜினியை எப்படி விட்டு விட்டீர்கள்; ஓ! சிவாஜி?’//

      //—-குலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்—-

      ‘தனிமனிதத் தாக்குதல். பின்னூட்ட அங்கீகரிப்பு. அரிப்பு வாதம்’//

      தவறான தகவல்களைத் தந்தற்காக “பொது மன்னிப்பு” பாபா கேட்க வேண்டும். ஏன் கேட்க வைப்பேன் என்று “அன்புடன்” கேட்டுக் கொள்கிறேன்.

    PKS -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.