Monthly Archives: ஏப்ரல் 2006

Uyirmai – Sundara Ramasamy Ninaivu Arangu – Na Mut…

Uyirmai – Sundara Ramasamy Ninaivu Arangu – Na Muthusamy Talk Posted by Picasa

Suba Veerapaandiyan in Dinakaran Interview on Elec…

Suba Veerapaandiyan in Dinakaran Interview on Election 2006 – Tamil Nadu Posted by Picasa

Ten Songs

பத்துப் பாடல்

ம்யூஸிக் இந்தியா ஆன்லைன் தயவில் சேமித்து வைத்த பாடல்களில் சில. அடுத்த பத்து சேர்ந்தவுடன் அடுத்த க்வார்ட்டருக்கு தலை பத்து தொகுக்கலாம்.

  1. வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்சித்திரம் பேசுதடி
    குரல்: கானா உலகநாதன்
    இசை: பாபு

  2. நம்ம காட்டுல மழ பெய்யுதுபட்டியல்
    குரல்: இளையராஜா, ரோஷினி
    இசை: யுவன் ஷங்கர் ராஜா

  3. வெண்ணிலவே… மஞ்சள் வெயில் மாலையிலேவேட்டையாடு விளையாடு
    குரல்: ஹரிஹரன், நகுல், விஜய்
    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

  4. காகிநாடா சரக்குடாசண்டே 9 டு 10:30
    குரல்: ப்ரேம்ஜி, சாம் பி கீதம்
    இசை: ஜான் பீட்டர்ஸ்

  5. புது வீடு கட்டலாமாதிருப்பதி
    குரல்: அனுராதா ஸ்ரீராம்
    இசை: பரத்வாஜ்

  6. லேலாக்கு லேலாக்கு லேலாஆதி
    இசை: வித்யாசாகர்

  7. பொய் சொல்லப்போறேன்திருட்டுப் பயலே
    குரல்: கண்மணி & கே.கே.
    இசை: பரத்வாஜ்

  8. என்னம்மா தேனி ஜக்கம்மாதம்பி
    குரல்: கார்த்திக், மாணிக்க விநாயகம், பாலேஷ்
    இசை: வித்யாசாகர்

  9. இங்கே இங்கே ஒரு பாட்டிருக்குபொய்
    குரல்: ஷங்கர் மஹாதேவன்
    பாடலாசிரியர்: பா. விஜய்
    இசை: வித்யாசாகர்

  10. இன்னிசை அளபெடையேகாட்ஃபாதர்
    குரல்: மஹதி, நரேஷ்
    இசை: ஏ.ஆர். ரெஹ்மான்


| |

Indian Express – Vijai & Rajni fans, TV ads et al.

Old Mandaveli, Madras 1964 - Traffic : The Hindu Images :: Copyright © 2004 by Kasturi and Sons Ltd. All rights reserved.
1. குமரி மாவட்டம்: உடல் ஊனமுற்றோருக்கு வாக்குசாவடிகளில் வசதி செய்யப்படுகிறது.

2. தொலைக்காட்சி விளம்பரங்கள்: டிவியில் கட்சியை விளம்பரம் செய்வதற்கு மூன்று நாள் முன்பாகவே ஒப்புதல் வாங்க குழு அமைக்கப்பட்டது.

3. சென்னை வாக்குறுதிகள்: முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சென்னை குறித்த திட்டங்கள்.

4. தளவாய் சுந்தரம்: குமரி மாவட்ட ரஜினி ரசிகர்/நற்பணி மன்றத்தினர் அதிமுகவிற்கு ஆதரவு

5. இளைய தளபதி விஜய்: மேற்கு கோவையில் விஜய் ரசிகர் மன்றத்தின் இளைஞரணி தலைவர் போட்டி.

Elfriede Jelinek

எல்·ப்ரீத் யெலினெக் (Elfriede Jelinek) ஆஸ்திரியாவில் பிறந்திருந்தாலும் ஜெர்மனியிலும் கொண்டாடப்படுபவர். பத்து நாவல்களையும் பதினைந்து நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இசை நாடகமான ஓபெரா (Opera)வையும் விட்டுவைக்கவில்லை. ஆணாதிக்கத்தை சாடியும், பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தியும் படைப்புகளை எழுதுபவர்.

2004ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் விருது பெறுவதற்கான காரணமாக ‘அசாத்தியமான மொழியாளுமையுடன் எதிரும் புதிருமான குரல்களை தன்னுடைய நாவல்களிலும் நாடகங்களிலும் இசைக்கவிடுபவர். சமூகத்தில் ஊறிப்போன அவலங்களையும், அதிகார சக்திகளையும், பேரார்வத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்’ என்று நோபல் கமிட்டி அறிவித்தது.

இலக்கியத்துக்கான நோபலைக் கடைசியாக 1996-இல் பெண்ணுக்கு வழங்கியிருந்தார்கள். இந்த விருதைப் பெறும் பத்தாவது பெண்மணியாக எல்·ப்ரீட் இருந்தார். விருதை நேரில் வாங்கிக் கொள்ள எல்·ப்ரீதால் செல்லமுடியவில்லை. தன்னுடைய கலை தொடர்பான மேற்படிப்பைக் கூட ஆளுமைக் குறைவினால் பாதியிலேயே கைவிட்டிருந்தார். அவருக்கு பெருந்திரளான மக்கள் முன் பேசுவது குறித்து பயமாக இருப்பதால் பதிவு செய்யப்பட்ட பேச்சை ஒளிபரப்பினார்கள். இந்தப் பிரச்சினையை பின்னணியாக அமைத்து மற்றொரு நோபல் பரிசு எழுத்தாளரான கோட்ஸீ, ‘எலிசபெத் காஸ்டெல்லோ’ என்னும் நாவலை எழுதியுள்ளார்.

தன்னடக்கமா, சுய பச்சாதாபமா, எள்ளலா, என்று அறியமுடியாத பேச்சாக அவரின் நோபல் பரிசு ஒலிபரப்பு இருந்தது. ‘பெண் என்பதால்தான் தனக்கு பரிசு கிடைக்கிறதோ’ என்று வெளிப்படையாக கேள்வி எழுப்பி, ஜெர்மனில் எழுதும் வேறு சில நட்சத்திர எழுத்தாளர்கள் தன்னை விட தகுதி வாய்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இதன் எதிரொலியாக அடுத்த ஆண்டுக்கான, 2005 நோபல் பரிசு அறிவிப்பதற்கு சில நாள்களுக்கு முன், கமிட்டி அங்கத்தினர் ஒருவர் தன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கூட்டம் சேர்ப்பதை விரும்பாவிட்டாலும், அவரின் படைப்புகள் ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் பெருவாரியானவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பொது வாழ்விலும் ஓரளவு பிரபலமானவரே எல்·ப்ரீத். ஆஸ்திரியாவின் வடது சாரி கட்சியை மிகக் கடுமையாக தனது படைப்புகளில் விமரிசித்து வந்தவர், அந்தக் கட்சி 2000-த்தில் ஆட்சியைப் பிடித்தவுடன் தன்னுடைய நாடகங்களை ஆஸ்திரியாவில் போடுவதை முற்றிலுமாக விலக்கி தடுத்துவிட்டார்.

எதிர்மறையான சிந்தனைகளால் வாழ்க்கையை துயரம் மிக்கதாகவும், மனிதர்களின் கவலைகளை மட்டுமே முன்னிறுத்தி தன்னுடையப் படைப்புகளை எழுதிவந்தார் எல்·ப்ரீத். பெண்ணியத்தை முன்னிறுத்துபவர்களில் முக்கியமானவராக எல்·ப்ரீத் கருதப்படுகிறார். தானே ஒரு நாடகாசிரியராகவும், கவிஞராகவும் இருப்பதால் நாவல் வடிவில் பல மாறுதல்களை முயற்சித்துப் பார்த்து வந்தார். உதாரணமாக, அரங்க நாடகங்களில் வழமையான உரையாடல்களுக்கு பதிலாக, இசையால் வித்தியாசம் காட்டி ஒருவரின் பல்வேறு குணாதிசயங்களின் கூறுகளை முன்வைப்பதை சொல்லலாம்.

கவிதை நடையில் இருந்து உரைநடைக்குத் தாவுவது, நாடகத்தன்மை உடைய காட்சியமைப்பில் இருந்து எதார்த்தத்தின் உச்சங்களைத் தொடுவது, சுலோகம் போன்ற பாடல்களில் இருந்து கதாபத்திரங்களின் உள்முரண்களை வெளிப்படுத்துவது என்று ஸ்டீரியோடைப்களில் துளிக்கூட சிக்காத நடையை எழுத்தில் கொண்டு வருபவர் எல்·ப்ரீத்.

ஆஸ்திரிய அன்னைக்கும் செக் நாட்டை சேர்ந்த யூத அப்பாவிற்கும் பிறந்தவர் எல்·ப்ரீத். அக்டோபர் 20, 1946-இல் எல்·ப்ரீத் ஆஸ்திரியாவின் முர்ஸ¤ச்லாக் (Murzzuschlag)-இல் பிறந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பு குறித்த மேற்படிப்புப் படிக்கும்போதே, அரங்க நாடகம் மற்றும் கலையின் சரித்திரம் குறித்து பயின்றார்.

எல்·ப்ரீதின் தந்தை வேதியியல் நிபுணராக வேலை பார்த்தார். இரண்டாம் உலகப்போரின் போது ஆஸ்திரியாவின் ஆயுதத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தார். இதனால் அவர் தப்பித்துவிட்டாலும், எல்·ப்ரீதின் குடும்பத்தை சேர்ந்த பலரும் நாஜி கொடுமைக்கு பலியானார்கள். அம்மாவின் பிடியில் வாடும்போதே கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளும் சேர்ந்து கொண்டது. மிகச் சிறிய வயதிலேயே பியானோ, கிடார், வயலின் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

1967-இல் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை வெளிக்கொணர்ந்தார். ஆஸ்திரியாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 1974-இல் இணைந்தவர், 1991-ஆம் ஆண்டு வரை இடது சாரி உறுப்பினராகத் தொடர்ந்தார்.

காதலர்களாக பெண்கள் (Women as Lovers) என்னும் நாவலின் மூலம் பரவலான கவனிப்பை அடைந்தார். தொடர்ந்து நாஜி அடக்குமுறையை ஒத்துக் கொள்ளாமல் புறங்கையால் ஒதுக்கி, மூடி மறைத்துக் கொள்ளும் ஆஸ்திரிய வலது சாரிகளின் போக்கை தனது எழுத்துக்களின் மூலம் வெளிக்கொணர்ந்து வந்தார்.

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சுய விடுதலை, கொஞ்சம் பிரச்சார தொனி, என்று கலந்து கா·ப்காத்தனமான நகைச்சுவையுடன் கொடுத்து வந்தது, ஆஸ்திரிய நாட்டுப் பற்றை கண்மூடித்தனமாக பின்பற்றியவர்களுக்கு கோபத்தை வரவழைத்தது.

வெளிப்படையான விமர்சனங்களினாலேயே தன்னுடைய தந்தையின் நாடான ஜெர்மனியில் பல பரிசுகளை வென்று வந்தாலும் தாய்நாடான ஆஸ்திரியாவுக்கு விமர்சனங்களை மட்டும் கொடுத்து வருவதாக எண்ணப்படுகிறார். ஆஸ்திரிய தேசியவாதத்திற்கு எதிரி என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்பட்டு வருகிறார்.

2004 நேர்காணலொன்றில் அவரே சொன்னது போல் ‘கருத்தியல் ரீதியாக சமூகத்தின் அவலங்களை பன்முனைப் பார்வையில் அலசுவது மட்டுமே, எனக்குப் போதும். நிஜ வாழ்வின் கோரங்களை உங்களுக்கு நான் தருவேன். பாவ மன்னிப்பு தந்து மீட்சிப்பது மற்றவர்களின் வேலை’.


முக்கியமான ஆக்கங்கள்:
1. பெண்களாகக் காதலர்கள் (Die Liebhaberinnen): கோடை வாசஸ்தலத்திற்கு இரு பெண்கள் பயணிப்பதுதான் கதை. 1975-இல் வெளிவந்தது.

2. இறந்தவர்களின் குழந்தைகள் (Die Kinder der Toten): 1975-இல் வெளிவந்தது.

3. அதிசய அற்புத தருணங்கள் (Die Ausgesperrten): 1980-இல் வெளிவந்தது.

4. பியானோ டீச்சர் (Die Klavierspielerin): அம்மாவின் கட்டுப்பாடிற்குள் அடங்கிக் கிடக்கும் இசை ஆசிரியையின் கதை. ஓடுக்கங்களில் இருந்து பாலியல் ரீதியில் விடுதலை காண முயல்கிறாள். பாலியல் வன்முறை அளவுக்கதிமாக விரவிக் கிடப்பதாக விமரிசனத்துக்கு உள்ளானது. எல்·ப்ரீதின் சுயசரிதையாகக் கருதப்படுகிறது. 1983-இல் வெளிவந்தது.

5. காமம் (Lust): 1989-இல் வெளிவந்தது. ஆளுமையும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்துவதுமே உறவுகளை தீர்மானிக்கிறது என்கிறார். பெண்களின் மேல் ஏவப்படும் பாலியல் வன்முறையை நமது சமுதாயத்தின் அடிப்படைக் கூறாக காண்கிறார்.


முக்கியமான பிற பரிசுகள்:
ஜார்ஜ் புக்னர் பரிசு (Georg Buchner) – 1998
முல்ஹெம் (Mullheim) நாடகப் பரிசு – இருமுறை : 2002 மற்றும் 2004)
·ப்ரான்ஸ் கா·ப்கா (Franz Kafka) பரிசு – 2004


தமிழோவியத்துக்கு நன்றி.

| |

Susindram Visit by MK Stalin’s Spouse

கருணாநிதிக்காக அர்ச்சனை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவருடைய மனைவி துர்கா, சகோதரி செல்வி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, “மாவட்ட தி.மு.க. செயலாளரும் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் மனைவியுடன் துர்காவும் செல்வியும் சுசீந்திரம் தாணுமாலயப்பெருமாள் கோயிலுக்கு சென்று கருணாநிதி பெயரில் விசேஷ அர்ச்சனை நடத்தி, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற சிறப்பு பூஜையும் செய்தார்கள்” என்று மாவட்டம் முழுக்கவே பரபரப்பாகியுள்ளது.

“இதுவே வேற யாராவது கட்சிக்காரன் செஞ்சிருந்தா, தலைவர் கடிதம் எழுதக் கத்தியை எடுத்திருப்பார். ஆனா, இதைச் செய்தது சொந்தங்கள் ஆச்சே!” என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

செய்தி: ஜூ.வி.

Free Full Meals! – Dinamani

இரண்டு வேளை சமைத்து போடலாமே?ஆர். சோமசுந்தரம்

சில ஆண்டுகளுக்கு முன் “ரீடர்ஸ் டைஜஸ்ட்” பத்திரிகையில் “லைப் ஈஸ் லைக் தட்” என்ற பகுதியில் இடம் பெற்ற துணுக்கு இது:

ஒரு உர வியாபாரி ஒரு கிராமத்தில் தனது கம்பெனியின் உரத்தை விவசாயிகளிடம் விற்பதற்காக ஒரு கூட்டம் நடத்துகிறார். தனது பொருளை வாங்குவதால் விவசாயிக்கு கிடைக்கும் லாபம் குறித்து விளக்குகிறார்.

-எங்கள் உரத்தை நீங்கள் 10 மூட்டை வாங்கினால் 2 மூட்டை இலவசம்.

விவசாயிகளிடம் சலசலப்பு. ஆர்வம். ஆனால் வியாபாரம் நடக்கவில்லை.

-நீங்கள் 20 மூட்டை வாங்கினால் 6 மூட்டை இலவசம்

மீண்டும் சலசலப்பு. ஆனால் விவசாயிகள் மெüனம் சாதித்தனர்.

-நீங்கள் 100 மூட்டை வாங்கினால் 50 மூட்டை இலவசம் இப்போதும் யாரும் வாங்க முன்வரவில்லை.

இதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் வியாபாரி வருத்ததுடன் நின்றுகொண்டிருந்தபோது, ஒரு வயோதிகர் எழுந்து நின்றார். இவர் 100 மூட்டை வாங்கப் போகிறார் என்று நம்பிக்கை பிறந்தது.

அவர் கேட்டார்.

“”எவ்வளவு மூட்டைகள் வாங்கினா மொத்தமும் இலவசமா கொடுப்பீங்க”

இந்த அப்பாவி விவசாயியைப் போல, இன்று அரசியல் தலைவர்களைக் கேள்வி கேட்க அப்பாவி வாக்காளர்கள் இல்லை. அல்லது அப்படி இருந்தாலும் அவர்கள் குரல்கள் ஒலிக்க ஊடகங்களில் இடமில்லை என்பதுதான் இன்றைய “இலவச’ துன்பத்துக்குக் காரணம்.

இலவச டிவி சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கை பொதுவாக பரவியதும் அதைத் தொடர்ந்து “இலவச டிவி கிடைக்கலன்னாலும், ரூ.2-க்கு அரிசி கிடைத்தால் அது போதும்‘.

இப்படியாக எல்லா ஊர்களிலும் எல்லா டீக்கடை, ஓட்டல் வாசல்களிலும் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியான வசனம் பரவிக் கொண்டிருப்பதை உளவுத் துறை முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்ல, இத்தனை நாட்களாய் அதை விமர்சனம் செய்தவர் வேறு வழியின்றி 10 கிலோ இலவசம் என்று அறிவிப்பு செய்தார்.

உடனே திமுக தலைவர் கருணாநிதியும், அரிசி விஷயத்தில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று “அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்று ஆழ்வார்கள் பாணியில் இறங்கிவிட்டார். மானியம் என்பதற்கும் இலவசம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

மானியம் ஒருவருடைய சுமைக்கு கொஞ்சம் தோள் கொடுப்பது. இலவசம் என்பது இன்னொருவர் பாரத்தை நாமே சுமப்பது.

தரமான அரிசி வெளிச்சந்தையில் கிலோ ரூ.20 க்கு விற்கப்படுகிறது. இதை வாங்குவதற்கு வசதி இல்லாத ஏழைகளுக்காகத்தான் ரேஷன் அரசி மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையைக்கூட கொடுக்க முடியாத ஏழைகள் இருக்கிறார்கள் என்பதால் தமிழக அரசு தன் சொந்தப் பொறுப்பில் குறிப்பிட்ட தொகையை மானியமாக ஈடுசெய்து கிலோ ரூ.3.50 க்கு விற்பனை செய்கிறது.

இப்போதைய அறிவிப்புகளின்படி 20 கிலோ அரிசியை ரூ.40க்கு திமுக கொடுப்பதாக வாக்குறுதி சொல்கிறது.

அதிமுகவோ ரூ.35-க்கு 20 கிலோ அரிசி கொடுப்பதாகச் சொல்கிறது. (அதாவது 10 கிலோ இலவசம்).

அடுத்து திமுக தலைவர் இன்னும் சலுகை அறிவிக்கப்படும் என்று பொடி வைத்துள்ளார்.

நண்பர் கேலியாக சொன்னார்:

“அரிசியை மட்டும் குறைந்த விலையில் தருவதோ அல்லது 10 கிலோ இலவசமாகத் தருவதோ பயன்தராது. இதை வாங்கி சமைக்க விறகு அல்லது மண்ணெண்ணெய் தேவை. ஏழை அதற்கு எங்கு போவான். தமிழ்நாட்டு வரலாற்றில் அன்னதானம், அன்னதான சத்திரம் புதிய விஷயமல்ல. காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை, எம்ஜிஆர் மேலும் விரிவாக சத்துணவுத் திட்டமாக மாற்றினார். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை குடும்ப உணவுத் திட்டமாக மாற்றி, ஒரு குடும்பத்துக்கு இரண்டு வேளை சோறு அரசாங்கமே சமைத்து போடலாம்…”

வெளியே இதையெல்லாம் பேசாதீங்க என்று அவர் வாயைப் பொத்தி இழுத்து வரவேண்டியதாயிற்று.

Alliance Victory == Alliance Ministry – Dinamani

கூட்டணி ஆட்சி கூடாதா?உதயை மு. வீரையன்

13-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கிவிட்டது.

எப்படியாவது வெற்றியை அடைந்து விட வேண்டும்; வழிகளைப் பற்றிக் கவலையில்லை, வெற்றிக் கொண்டாட்டத்தின் பேரோசையில் எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் அடங்கிவிடும். குறுக்கு வழிகள் எல்லாம் இராஜதந்திரமாகி விடும்.

“”ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு; அது மெய்யாகி விடும்” என்ற கோயபல்சின் கூற்றே இன்றைய அரசியல்வாதிகளின் வேதவாக்கு; வாக்குறுதிகளே மக்கள் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது. இதனால்தான் அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் கால வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்க வேண்டுமா? எப்படியாவது ஏழைப் பாமர மக்களைக் கவர வேண்டும்; எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். ஆட்சியைப் பிடித்துவிட்டால் 5 ஆண்டுகள் அவகாசம் கிடைக்கிறது. அதிகாரமும் கிடைக்கிறது. யார் எதிர்த்துக் கேட்க முடியும்?

  • மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள்;
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு;
  • தமிழக நதிகளை இணைப்பது பற்றி ஆய்வு;
  • கிராமங்களில் கூட்டுப்பண்ணை;
  • பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புக் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்;
  • ரேஷனில் 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம்
    – இவை ஆளும் கட்சியின் வாக்குறுதி.

    எதிர்க்கட்சிகள் விட்டு விடுமா?

  • நிலமற்றவர்களுக்கு நிலம்,
  • ரூ. 2-க்கு ஒரு கிலோ தரமான அரிசி,
  • ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,
  • பெண்களுக்கு இலவசமாக சமையல் கேஸ் அடுப்பு,
  • விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

    – இவ்வாறு ஏராளமான அறிவிப்புகள்.

    “ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” என்பதை வைத்து இடதுசாரிகள் எழுப்பும் அரசியல் முழக்கம்.

    அரசியல் கட்சிகளின் அறிவிப்புகளில் இலவசங்களே பெரிதும் இடம்பெற்றுள்ளன. நிரந்தரமான நீண்டகாலத் திட்டங்கள் இடம்பெறவில்லை.

    “ஒருவருக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கும் தொழிலைக் கற்றுக் கொடுப்பதே மேல்” என்பது அயல்நாட்டுப் பழமொழி. தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் தலைவர்களுக்குத்தான் இது பொருந்துமே தவிர, அடுத்த தேர்தலைப் பற்றியே கவலைப்படும் அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தாது.

    ……

    நாடு விடுதலையடைந்த பிறகு தேசிய கட்சிகளே கோலோச்சின. மாநிலக் கட்சிகள் முளைத்த பிறகு தேசிய கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. அதுவரை தனித்துப் போட்டியிட்ட கட்சிகள் “கூட்டணி” காணத் தலைப்பட்டன. தற்போது கூட்டணியில்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலை.

    எனவே கூட்டணி தவிர்க்க முடியாத தேவை. இந்நிலையில் கூட்டணி ஆட்சியும் காலத்தின் கட்டாயமாகி விட்டது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயக்கமென்ன? கூட்டணியை விரும்பும் கட்சிகள் “கூட்டணி ஆட்சி” என்றால் முகம் சுளிப்பானேன்?

    இதுவரை தமிழகம் காணாதது கூட்டணி ஆட்சியே! அதையும் பார்த்து விட்டுப் போகட்டுமே! “கூட்டுயர்வே நாட்டுயர்வு’ என்று கூறுகிறோம். கூட்டணி ஆட்சி மட்டும் கூடாதா?

  • Chennai Election Observer Contact Numbers – Dinamalar

    நன்றி: தினமலர்

    Free Color TV for Rs.1000 – Dinamalar

    நன்றி: தினமலர்