Monthly Archives: ஏப்ரல் 2006

Imiayam Tamil TV Channel

இளமையில் வறுமை என்பது கொடுமை. அதனினும், உடையில் வறுமையைப் பார்க்க முடியாதது இன்னும் கொடுமை.

முதல் கொடுமை தீர்க்க திமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும். இரண்டாம் கொடுமை தீர சன் டிவி தொடுப்பு கொடுக்க வேண்டும்.

வறுமையை பொழுதுபோக்காக ஆக்க;
பொழுதுபோக்காக வறுமையைக் கழிக்க…

DMK Free Offer on Colour TVs in Election Maifesto - Nakeeran via Dinakaran

சொல்லாம ஃப்ரீயாக் கொடுக்கறது ஜெஜெ பாலிசி!
சொன்னதை ஃப்ரீயாக் கொடுக்கறது திமுக பாலிசி?

நன்றி: தினகரன்


புதிதாக ‘இமையம் தொலைக்காட்சி‘ ஆரம்பிக்கிறார்களா? யாரு பின்னாடி இருக்கிறார்கள்… இணையத்தளம், அறிவிப்பு எங்கே கிடைக்கிறது… (பதிலுக்கு முன்கூட்டிய நன்றிகள்.)
Imiayam Tamil TV Channel


| |

(Un)Scientific Results

தேசாந்திரி – ஒரு கூகுள் தேடல் : யாத்ரீகனைத் தொடர்ந்து…

வலைப்பதிவுகளிலும் இணையத்தமிழிலும் எந்த பெயர் அதிகம் அடிபடுகிறது? எந்தக் கட்சி பெயர் பெரிதும் எழுதப்படுகிறது? கவனத்தைக் கோருகிற அரசியல்வாதிகளைத் தேடினால் கிடைக்கும் வலைப்பதிவு எது? (கூகிளின் தேடல் முடிவுகள் அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கும் என்றாலும்…) கூகிளின் தேடல் பட்டியல் முடிவுகளில் கண்ணில் படுகின்ற முதல் வலைப்பதிவு எது?

கருணாநிதி – 14,500 : ரவி ஸ்ரீனிவாஸ்

திமுக – 9,700 : இட்லி வடை

காங்கிரஸ் – 18,100 : மணிக்கூண்டு சிவா

ஜெயலலிதா – 11,200 : Lumbergh-in-training

அதிமுக – 945 : இட்லி வடை

அஇஅதிமுக – 127 : பத்ரி

வைகோ – 10,300 : இட்லி வடை

மதிமுக – 428 : குழலி

ராமதாஸ் – 613 : குழலி

இராமதாஸ் – 111 : முத்து (தமிழினி)

பாமக – 297 : தேர்தல் 2006

பாட்டாளி மக்கள் கட்சி – 281 : தமிழ் முஸ்லீம்

திருமாவளவன் – 506 : கனடாக் கவிஞர் திருமாவளவன்

தொல் திருமாவளவன் – 123 : கரிகாலன்

திருமா – 450 : அழகப்பன்

விடுதலை சிறுத்தைகள் – 179 : ரவி ஸ்ரீனிவாஸ்

ரஜினிகாந்த் – 554 : சிவாஜித் திரைப்படம்

விஜய்காந்த் – 133 : முத்து

தேமுதிக – 14 : இட்லி வடை


| |

Head to Head Contests (Congress Contestants)

நன்றி: தமிழ் முரசு

Tamil Nadu Election – Women Candidate Profiles (2)

நன்றி: தமிழ் முரசு

Constituency – Mylapore (South Madras)

இந்த வருடம்:
திமுக – நடிகர் நெப்போலியன் (இந்த வாரம் ஞாயிற்றுகிழமை சன் டிவியில் ‘வீட்டோட மாப்பிளை’ திரைப்படம்)
அதிமுக – நாடக நடிகர் எஸ்.வி. சேகர்
பா.ஜ.க. கூட்டணி – சந்திரலேகா?

நன்றி: தமிழக சட்டசபைத் தொகுதிகள் – தினமலர் சிறப்புத் தேர்தல் தொகுப்பு

Staying Ignorant

வாங்க… கட்சி ஆரம்பிக்கலாம்; மாறலாம்!

Non Sequitur by Wiley Miller

Non Sequitur by Wiley Miller


|

அ.தி.மு.க. 167 – தி.மு.க 67: கருத்து கணிப்பு

தி.மு.க. கூட்டணிக்கு 67 தொகுதி; அ.தி.மு.க. கூட்டணிக்கு 167 இடம் கிடைக்கும்: புதிய கருத்து கணிப்பில் தகவல்

தமிழக தேர்தல் நிலவரம் குறித்து மார்க்கெட்டிங் அண்ட் டெவலப்மென்ட் ரிசர்ச் அசோசியேட்ஸ் (எம்.டி.ஆர்.எ.) என்ற அமைப்பு கடந்த மாதம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அ.தி.மு.க.வுடன், ம.தி.மு.க. சேர்ந்த பிறகு இந்த சர்வே நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யாரை விரும்பு கிறீர்கள் என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வர் பதவிக்கு விரும்புவதாக தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 39 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் அ.தி.மு.க. கூட்ட ணிக்கு 162 இடங்கள் முதல் 167 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு 62 முதல் 67 இடங்கள் வரை கிடைக்கும் என்று சர்வே முடிவு தெரிவிக்கிறது. இதர கட்சிகளுக்கு 7 முதல் 9 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப் பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியை விட அ.தி.மு.க. கூட்டணிக்கு கூடுதலாக 100 இடங்கள் கிடைப்பது சர்வே மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி. மு.க., விடுதலை சிறுத்தைகள், ஐ.என்.டி.ï.சி. ஆகியவை சேர்ந்து இருப்பதால், அந்த கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்து இருப்பதாக சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்ததால் கூடுதலாக 16 தொகுதிகளில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சதவீத கணக்கில் பார்க்கும் போது அ.தி.மு.க. கூட்டணிக்கு 44.9 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணிக்கு 42.1 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இருந்த போது அந்த கூட்டணிக்கு 43.7 சதவீத ஓட்டுக்கள் கிடைப்பதாக இருந்தது. ம.தி.மு.க. விலகியதால் தி.மு.க. பலம் குறைந்து அ.தி.மு.க. கூட்டணி பலம் உயர்ந்துள்ளது.

ம.தி.மு.க. வின் 4.65 சத வீத வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் அந்த கூட்டணி மேலும் அமோக வெற்றியை பெறும். வைகோவின் தீவிர பிரசாரம் காரணமாக அ.தி.மு.க. கூட்டணிக்கு கூடுதல் இடங் கள் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் கிராமங்களில் அந்த கூட்டணிக்கு 50 சதவீத வாய்ப்பு அதிகரித்துள்ளது. வாக்காளர்களிடம் 45 சதவீதம் பேர் கூட்டணியை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜயகாந்த் தொடங்கி உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆதரவு ஓட்டுக்களாக மாற வாய்ப்பு இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.

மதுரை, சேலம், ஈரோடு, தர்மபுரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் விஜயகாந்துக்கு சுமார் 10 சதவீத வாக்காளர்கள் ஆதரவு உள்ளது. விஜயகாந்த் கட்சி வேட்பாளர்கள் பிரிக்கும் ஓட்டு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் பாதிக்கும் என்று ஆய்வு சொல்கிறது.

விஜயகாந்த் கட்சிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை என்று 60 சதவீத வாக்காளர்கள் கூறி உள்ளனர். இதன் அடிப்படையில் கணிக்கும்போது விஜயகாந்த் கட்சிக்கு தமிழகம் முழுவதும் 3 சதவீத ஓட்டே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

courtesy: Maalaimalar

திமுகவின் தனி ஆட்சிக்கு வாய்ப்பில்லை

தமிழ் சசி என்னுடைய பதிவிலிட்ட பின்னூட்டத்திலும், அவரது பதிவிலும், திமுக கூட்டணி வெற்றி பெறும் என அவர் கருதுவதின் அடிப்படையாக சில கணக்குகளையும், வாதங்களையும் தந்துள்ளார்.

அவற்றில் ஒன்று:

“ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இடம்மாறின. இது தான் தமிழகமெங்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது….. திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய வேண்டுமானால் தன்னுடைய கூட்டணி ஓட்டுக்களில் திமுக 23% முதல் 24% இழக்க வேண்டும்.”

இது குறித்து யோசிக்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன.

அ. 22.56% வாக்குகள் இடம் மாறின என்பதன் அடிப்படை என்ன?
2001ல் அதிமுக பெற்ற வாக்குகள், 2004ல் அதிமுக பெற்ற வாக்குகள் இவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தைத்தான் ‘இடம் மாறின’ என்று சசி குறிப்பிடுகிறார் என்றால் அவர் கீழ்க்காணும் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.2004ல் அதிமுகவிற்கு எதிரான அலை இருந்தது. இன்று இல்லை.
2.2004ல் திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் 2001ல் அதிமுக கூட்டணியில் இருந்தன. எனவே 2001ல் அதிமுக பெற்ற வாக்குகளில் கூட்டணிக் கட்சியினர் பெற்ற வாக்குகளும் அடங்கும்.

எனவே இடம் மாறிய வாக்குகளை துல்லியமாகக் கணக்கிட முடியாது.

ஆ.2001ல் அதிமுகவுடன் இருந்த கட்சிகள் இன்று திமுகவுடன் இருக்கின்றன.அதனால் அநதக் கட்சிகளின் பலம் திமுகவிற்கு சேரும்தானே? என்று கேட்டால், ஆம், சேரும், ஆனால் எவ்வளவு சேரும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ம.க. அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்குகள் 25.89%. அதே 2001 தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்தான் பாமக இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்குகள் 31.44 சதவீதம். இதைக் கொண்டு அதிமுகவிற்குக் கூட்டணியால் கிடைத்த பலன், கூடுதலாக ஆறு சத்வீத வாக்குகள் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட போது, அதற்கு எதிரான அலை வீசிய காலகட்டத்தில் கூட அது பெற்ற வாக்குகள் 29.77 சதவீதம். அதாவது கூட்டணி இல்லாத போதும், எதிராக அலை வீசிய போதும் அதிமுக 2004ல், இழந்தது சுமார் 1.5 சதவீத வாக்குகளைத்தான்.

இ. உண்மையில் தமிழ் நாட்டில் swingஐ சரியாகக் கணக்கிட முடியாது. ஏனென்றால் அலைகள் இல்லாத தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் swingகள்தான் ஓரளவிற்கு சரியான கணிப்பைக் கொடுக்கும். ஆனால் த்மிழ்நாட்டில்,1998, 2001 தேர்தலைத் தவிர அண்மைக்காலங்களில் அலை இல்லாத தேர்தலே இல்லை.
1991 ராஜீவ் படுகொலை அலை, 1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலை,1999 வாஜ்பாய் அனுதாப அலை, 2004 ஜெயலலிதா எதிர்ப்பு அலை.
ஈ. கட்சிகளின் பலத்தைக் கொண்டு கணக்கிடும் IOU (index of opposition unity) முறையும் பலன் தராது. ஏனெனில் கட்சிகள் அணிமாறிக் கொண்டே இருக்கின்றன.

எனவே swing, IOU ஆகியவற்றைக் கொண்ட கணக்குகள் சரியாக வராது.

உ:” ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தன்னுடைய 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை விலக்கி கொண்டார். இதனால் அரசு ஊழியர்கள் மனம் மகிழ்ந்து இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஞாபகமிருக்கும் அளவுக்கு அவர் திரும்பி வழங்கிய சலுகைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு அவரது மதமாற்றச் சட்டம் தான் ஞாபகத்தில் இருக்கும்”
இது சசியின் ஊகம். ஆனால் திமுக பேச்சாளர்கள் கூட்டத்தில், அவர்கள் வியூகம் எப்படி இருக்க வேண்டும் என கருணாநிதி பேசியது இது: “2004 தேர்தலின் போது நாம் எடுத்துச் சொல்லாமலே மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் பற்றி ஒரு கருத்து இருந்தது. ஆனால் இப்போது நாம் அவர்களுக்கு அரசின் தவறுகளை ஞாபகப்படுத்த வேண்டும். அதன் கொடுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்”

இதுதான் இன்றுள்ள யதார்த்தம்.

2004 தேர்தலுக்குப் பின் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன:

1. தயாநிதி, அன்புமணி, வாசன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது. இது இந்தக் கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்ற எண்ணத்தைப் பரவலாகவும், கட்சிக்காரர்களிடத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது.

2.வைகோவின் விலகல்- பிரசாரம்.

3.விஜயகாந்தின் பிரவேசம்

4.அதிமுகவிற்குக் கிடைத்திருக்கும் ஊடக ஆதரவு
6.கருணாநிதியின் உடல்நிலை, வயது. அடுத்த முதல்வர் கருணாநிதியா, ஸ்டாலினா என்ற கேள்வி முன் வைக்கப்படுமானால் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக இராது.

7.திமுகவின் Strategyயில் உள்ள குறைபாடு. அது 130 இடங்களில் போட்டியிடுகிறது. தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.அதாவது அது போட்டியிடும் இடங்களில் 90 சதவீத இடங்களை வெல்ல வேண்டும். அலை இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த 130 இடங்களில் 25 சதவீதம் தென்மாவட்டங்களில் இருக்கின்றன என்பதயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதுவும் தவிர இந்த 130ல், 106 இடங்களில் அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது திமுக தனித்து ஆட்சி அமைப்பது என்பது எளிதல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.
*

Notable TN Women Candidates

 Notable TN Women Candidates

நன்றி: தமிழ் முரசு

Karunanidhi Interview Snippets

 Karunanidhi Interview Snippets

நன்றி… நன்றி… தினகரன் மின்னிதழ்