1. திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதே அதிமுகவின் பலம். – காளிமுத்து
2. தேர்தல் வெற்றிக்காக ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி வைத்துக்கொண்டது போல, வரும் பேரவைத் தேர்தலில் மதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும். – மதிமுக கொபசெ நாஞ்சில் சம்பத்
3. காளிமுத்து உங்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கிறாரே, நீங்கள் ஏன் மவுனமாக இருக்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலாக: “இப்போது மவுனமாக இருப்பதே நல்லது” – வைகோ
4. தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 200 இடங்களில் போட்டியிடும். குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். – மாநிலத் தலைவர் இரா. ஆழ்வார்சாமி
5. பேயும் பூசாரியும்: கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை உணர்ந்து மக்கள் முடிவெடுத்தால்தான் பேய் பிடித்த நிலை மாறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். பேயை ஓட்ட வரும் பூசாரி வெற்றிபெற வேண்டுமானால் பேயின் பிடியில் சிக்கியுள்ளவர்கள், அந்தக் குணத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும். இப்போது தமிழ்நாட்டு மக்கள் பேய் குணத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பேய் பிடியில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளக் கூடிய துணிச்சலும் அறிவுத் திறனும் மக்களுக்கு இருந்தாக வேண்டும். அந்தத் தெளிவும் திறனும் இல்லாவிட்டால் என்னதான் அசகாய பூசாரி வந்தாலும் அவர்களால் அந்தப் பேயை விரட்ட முடியாது, பேய் நீங்காது என்றார் கருணாநிதி.











இதையும் சேத்துக்குங்க:
இந்த தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு ஓட்டு போடுங்கள்.
தமிழகத்தில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வீட்டுக்கே வருவார்கள். எனது கட்சியினர் தப்பு செய்தால் அடித்து திருத்துவேன். என் பாலிசியை ஏற்றுக்கொண்டு என் கட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
– விஜயகாந்த்
(இப்படிதான் எங்க கட்சி உறுப்பினர்களை சாட்டையால அடிப்பேன்னு யாரோ சொன்னது நியாபகத்துக்கு வந்து தொலைக்குதா?!)
எனக்கு “திரு.M.G.R” மீது எப்போதும் மரியாதை உண்டு, ‘திராவிட’ என்ற பெயர் கொண்டு ஆயிரம் ஆயிரம் கட்சிகள் வந்தாலும் திரு.M.G.R கொண்டு வந்த சீர்திருத்தங்கள் போல எவரும் செய்யவில்லை செய்யவும் முடியாது என் நான் நம்புகிறேன்.