தலீவர் சொன்னாருங்க….


கேள்வி: தற்போதைய ஆளுங்கட்சியை நீங்கள் கடுமையாக விமர்சிப்பதில்லையே? ஏன்?

பதில்: நான் அவர்களை விமர்சித்தால் அது மற்றவர்களுக்கு வாய்ப்பாகி விடாதா? அவர்கள் நன்றாகவே ஆட்சி நடத்தினாலும் நான் பாராட்டிவிட முடியாது.அவர்களை பாராட்டிவிட்டு நான் எப்படி எனக்கு ஓட்டு கேட்டு செல்லமுடியும்?

“புரட்சிகலைஞர்” விஜயகாந்த் பேட்டி (குமுதம்)

நாம்:
1.என்ன சொல்ல வர்றார்? இவரே விமர்சித்தால் யாருக்கு வாய்ப்பாகிவிடும்? இவர் என்ன 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறாரா?

2.அப்புறம் எதிர்கட்சியை ஏன் விமர்சிக்கிறார்?அவர்கள் ஆட்டோ அனுப்ப மாட்டார்கள் என்றா?

3.அப்புறம் எதுக்கு தனிக்கட்சி?அம்மா கட்சியில் சேரவேண்டியது தானே?

4.ஓகோ..அழைப்பு வரவில்லையோ? நாம் ஏற்கனவெ சொன்ன நாலு சீட்டை நினைத்துக்கொள்ளவும்.இவருக்கு, மனைவிக்கு, மச்சினனுக்கு மற்றும் ரசிகர் மன்ற தலைவருக்கு…

2 responses to “தலீவர் சொன்னாருங்க….

  1. Unknown's avatar நாமக்கல் சிபி

    //என்ன சொல்ல வர்றார்? இவரே விமர்சித்தால் யாருக்கு வாய்ப்பாகிவிடும்?//

    தேர்தல் நேரமல்லவா! ஒரு தேர்ந்த அரசியல்வாதியே இப்படித்தான் குழம்பிக்கொண்டிருப்பார்.

  2. Unknown's avatar சந்திப்பு

    முத்து! சினிமாவில் மட்டும் காமடியை எதிர்பாக்குறீங்கள்… அரசியல்ல கூடாதா… அதான் செந்தில் ரோல அரசியல்ல இப்ப பண்றார்…

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.