விஜயகாந்த் கட்சி (ஏதோ மு.க) தொடங்கியதிலிருந்தே பெரிய கட்சிகளுடன் தகராறு ஆரம்பித்து விட்டது. விஜயகாந்த் தான் தனித்து நின்றே போராடுவேன் என்கிறார். திமுக, அஇஅதிமுக இரண்டுக்கும் மாற்று என்கிறார். ஏதோ கல்யாண மண்டப இடிப்பு என்று பிரச்னை வந்தது. அதன்பின் கருணாநிதியின் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தவேண்டும் என்று விஜயகாந்த் கேட்டிருக்கிறார் போலும். (ப.சிதம்பரம், பழனிமாணிக்கத்தையெல்லாம் தாண்டி அது நடக்குமா என்ன?) அதற்கு பதிலாக நேற்று ஆற்காடு வீராசாமி விஜயகாந்தைத் தாக்கிப் பேசியுள்ளார்.
இப்பொழுது விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வீராசாமியாரின் சில துளிகள் இங்கே (தினமணி வழியாக):
* கருணாநிதி சிறையில் இருந்த நாள்களைவிட, இவருடைய (விஜயகாந்துடைய) கட்சியின் வயது குறைவு.
* சுனாமிக்கு கருணாநிதி நிதி வழங்கவில்லை என்கிறார். ஆனால் சோனியாவிடம் 1 கோடி, ஸ்டாலின் வழியாக ஜெயலலிதாவிடம் 21 லட்சம் சுனாமிக்காகக் கொடுத்தார். இப்பொழுது சன் குழுமப் பங்குகளை விற்றதன் வாயிலாக மனைவி வழியாகக் கிடைத்த பணத்தில் ரூ. 5 கோடியில் அறக்கட்டளை.
* விஜயகாந்த் நடித்த படங்களில் எவ்வளவு சம்பளம் வாங்கினார், அதன் செலவு விவரங்கள் என்ன ஆகியவற்றைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
அடுத்து பழனிமாணிக்கம் தன் அதிகாரிகளை கேப்டனைப் பார்க்க அனுப்புவார் என்று நம்புகிறோம்.
விஜயகாந்த் தான் அதிமுக, திமுக அணிகளை விமரிசித்துப் பேசுவதால் தன் உயிருக்கு ஆபத்து என்று நேற்று கோவையில் பேசியிருக்கிறார்!
இதெல்லாம் பூச்சாண்டி. தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொல்லும் அளவுக்கு கேவலமான நிலைமை வந்துவிடவில்லை. அட, பீஹாரிலேயே இப்பொழுது இதெல்லாம் நடப்பதில்லை ஐயா!











avarukkaa dialog theriyaathu?
உட்கட்சிப் பூசல்களிலேயே தா.கி. போன்றவர்களைப் போட்டுத் தள்ளுகிறார்களே, என்னும் தேர்தல் சுரமாக இருக்கும். யாராவது தாக்கிவிட்டு, அனுதாப அலை ஓட்டி விடப் போகிறார்.
//கருணாநிதி சிறையில் இருந்த நாள்களைவிட, இவருடைய (விஜயகாந்துடைய) கட்சியின் வயது குறைவு.//
என்னக்கு தெரிந்து வி.கா கட்சி ஆரம்பித்து என்ன ஒரு 5 மாதம் இருக்கும். அப்ப ?
மக்கள் பணி என்று…..வந்தவர்கள்
அவர்களுக்குள்ளெ சேற்றை வாரி இறைத்துக்கொள்கிறார்கள்….
இவர்கள் கூத்து மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு….
இதுதான் மக்கள் பணியோ….