நிலைமை உரை


லெக்சர் கேட்க வந்தவர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் வழங்கப்பட்ட விதிமுறைகள்:

  1. பேச்சின் நடுவே புஷ் ஆங்காங்கே மூச்சு வாங்கிக் கொள்வார்; அப்பொழுது கை தட்டுங்கள்.
  2. எப்பொழுதெல்லாம் டிக் சேனி எழுந்திருக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் நீங்களும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவும். இருக்கையின் மேல் நின்றால், ஈராக்கிற்கு அனுப்பப்படுவீர்கள்.
  3. State of the Union குறித்து வலைப்பதிவாளர் உரை கொடுக்கக் கூடாது. மீறி நோட்ஸ் போட்டால், தங்களின் தொலைபேசி, நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகள், குளியல் சோப், யாஹூ மின்னஞ்சல்கள், அனைத்தும் நோட்டமிடப்படுவீர்கள்.
  4. நீதிபதிகள் ஸ்டீவன்ஸ் அல்லது ஜின்ஸ்பெர்க் உங்கள் அருகே அமர்ந்திருந்தால், முடிந்தவரை அவர்களின் உச்சநீதிமன்ற இடத்தை காலியாக்கும் முயற்சிகளை எடுக்கப் பணிக்கப்படுகிறீர்கள்.
  5. தங்கள் சட்டைகளில் ‘எக்ஸான் நாமம் வாழ்க; மொபில் நாமம் போடுக‘ என்றோ ‘ஒன்றே காண்ட்ராக்ட்; ஒருவனே ஹாலிபர்ட்டன்‘ என்னும் வாசகங்களையோ மட்டுமே அணிந்து வாருங்கள்.

| |

4 responses to “நிலைமை உரை

  1. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

    🙂

  2. ;)))))

    // ‘ஒன்றே காண்ட்ராக்ட்; ஒருவனே ஹாலிபர்ட்டன்’ //

    லாக் ஈடு மார்ட்டின் உள்பனியன் போட்டிருக்க வேண்டுமா?

  3. :-))

    டமாசு.. டமாசு..

  4. உங்கள் அனைவரையும் புஷ் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டதாக இரண்டு வருடம் கழித்து நியு யார்க் டைம்ஸில் ரிப்போர்ட் வந்துடப் போகுது… பார்த்து நடந்துக்குங்க 😛

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.