Monthly Archives: திசெம்பர் 2005

அவரவர்

சுகுமாரன் எழுதிய ‘இந்தியா டுடே’ விமர்சனத்தில் இருந்து:

தேவதச்சனின் ‘அவரவர் கைமணல்’ (கவிதை தொகுப்பின் தலைப்பு) பிரயோகம் மிக வசீகரமானது. பலரையும் தூண்டிய சொற்சேர்க்கை அது.

‘அவரவர் வானம்’ (மெய்ப்பொருள் – வண்ணநிலவன்)
‘அவரவர் வீடு’ (பயணியின் சங்கீதங்கள் – சுகுமாரன்)
‘அவரவர் உலகம்’ (கணையாழி ஏப்ரல் 1994 – பொன்னாண்டான்)
‘அவரவர் ஏமாற்றம்’ (கவனம் இதழ் 4 1981 – ஷங்கரராமன்)

எனப் பலரும் தேவதச்சனை அடியொற்றி அவரவர் வரிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

கடைசி டினோசார்
தேவதச்சன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 166
விலை: ரூ. 85/-


அணைந்த ஜோதி

காலையில் பனிபொழிவைப் பார்த்தவுடன் இந்தப் பாடல் முணுமுணுக்கத் தோன்றியது. சென்னையில் எப்பொழுது பனி பெய்ந்திருக்கிறது என்னும் முரண்நகை தோன்றினாலும், சென்ற வாரம் சென்னைக்கு ரிலையன்ஸிய போது ‘சென்னை இப்போ ரொம்ப குளிரா இருக்குத் தெரியுமோ… காலையில் ஸ்வெட்டர் இல்லாமல் கால் வைக்க முடியல!’ என்பது மேலும் சிரிப்பை வரவழைத்தது. கொஞ்ச நாளாச்சே உல்டா செய்து என்று பாடலை மாற்றிப் போட்டாச்சு!

Devikaa - Telugucinema.comபனி இல்லாத பாஸ்டனா
படை எடுக்காத அமெரிக்காவா
இனிப்பில்லாத ஸ்வீட்டனரா
இசை இல்லாத ஓசையா

அழகில்லாத மாடலா
ஆசை இல்லாத வலைப்பதிவரா
மழை இல்லாத ஷ்ரேயாவா
மலர் இல்லாத பொக்கேவா

தலைவன் இல்லாத ஆட்சியா
தலைவி இல்லாத கட்சியா
கலை இல்லாத கலைஞரா
காதல் இல்லாத திரைப்படமா

கொலை செய்யாது ஓடுவதும்
கனிவில்லாமல் போடுவதும்
பகைவர் போலே ஏடுவதும்
பதிவர் செய்யும் அரசியல் அல்லவா

அசல் பாடல்: பனி இல்லாத மார்கழியா :: ஆனந்த ஜோதி – டி.எம்.எஸ் & பி சுசிலா : கண்ணதாசன் – விஸ்வநாதன் & ராமமூர்த்தி (1963) – Music India OnLine


| |

சூறையாடல்

Exxon - Greenpeaceசுற்றுப்புறத்துக்கு மதிப்பு கொடுப்பதில் அமெரிக்கா ஓரளவு விதிகளைப் பின்பற்றியே வருகிறது. தன்னார்வ நிறுவனங்களின் லாபிகளுக்கு பயந்தோ, சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கொள்கைகளுக்காகவோ, உலகத்திலேயே மிக அதிகமாக குப்பைகளையும் கழிவுகளையும் போடுகிறோம் என்பதாலோ, ‘எரின் ப்ராகொவிச்’ போன்ற ப்ரெட்டி வுமன் திரைப்படங்களாலோ…

கத்ரீனா வந்து நியு ஆர்லியன்ஸை சின்னாபின்னம் ஆக்குவதற்கு முன்பு வரை சிரமம் பாராமல், பங்குச்சந்தை நலன் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், பணத்தை விரயமாக எண்ணாமல், சட்டத்துக்கு பயந்து, கழிவுகளை சுத்தம் செய்தே வெளியேற்றினார்கள்.

லூஸியானா சுத்தம் செய்வதற்காகவும் புயல் கடந்த அவசரநிலை காலகட்டத்திலும் சுற்றுப்புற சூழல் விதிகளை தள்ளுபடி செய்துவிட்டார்கள். போன்சர்ட்ரன் ஏரியில் (Lake Pontchartrain) அதிகப்படியான அசுத்தமான வெள்ள நீரை கலந்து விடுவதற்காகவும், இறந்து போன கால்நடைகளையும் செல்லப்பிராணிகளை எரிக்கவும், மட்டுமே பெரும்பாலும் உபயோகப்படும் என்று காரணம் காட்டி துயரநிலை நிவாரணமாக விதி விலக்கு கொடுக்கப்பட்டது.

கூடவே எரிவாயு நிறுவனங்களின் மாசுக்கட்டுப்பாட்டுக்கும் தாற்காலிக விலக்கு கிடைத்தது. (இதன் தொடர்ச்சியாக லூஸியானா செனேட்டர்கள் நிரந்தர விலக்குகளை முன்வைத்திருக்கிறார்கள்.)

கேன் பர்தூ-வின் (Cain Burdeau) சமீபத்திய கட்டுரையில் எக்ஸானின் வரலாறு காணாத பத்து பில்லியன் டாலருக்கான லாபம், இந்த தளர்த்தல்களால்தான் கிடைத்திருக்கிறது என்கிறார்.

அயல்நாட்டு நிறுவனங்களின் வருகையால் மென்பொருள் எழுத்தாளரின் சம்பளம் நாளொரு ஆயிரமும் பொழுதொரு லகரமுமாக கூடி வருவது போல், அமெரிக்காவில் பெட்ரோல் விலை எகிறிக் கொண்டிருந்த காலத்தில்தான் கத்ரீனா புயல் வீசியது. எரி பொருள் உற்பத்தியைக் கூட்ட வேண்டுமானால், நச்சுகளைக் கண்டு கொள்ளக்கூடாது என்று பல எண்ணெய் நிறுவனங்களும் U.S. Environmental Protection Agency-ஐ மிரட்டி தங்கள் லாபத்தை பெருக்கிக் கொண்டது.

எக்ஸான், ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், செவ்ரான், கொனொகோ-பிலிப்ஸ், மாரதான் ஆகியோர் ஜூலை ஆரம்பித்து செப்டம்பர் முடிய மூன்று மாதத்தில் முப்பத்தி மூன்றரை பில்லியன் டாலர் லாபம் கண்டிருக்கிறார்கள்.

நிறுவனம் – லாபம் – கடந்த மூன்று மாதகால லாபத்தில் அதிகரித்த சதவிகிதம்

எக்ஸான் – 9.9 பில்லியன் டாலர் – 75 % அதிகரிப்பு
ராயல் டட்ச் ஷெல் – 9 பில்லியன் டாலர் – 68 % அதிகரிப்பு
பிரிட்டிஷ் பெட்ரோலியம் – 6.5 பில்லியன் டால்ர் – 34 % அதிகரிப்பு
செவ்ரான் – 3.6 பில்லியன் டால்ர் – 12 % அதிகரிப்பு
கொனொகோ-பிலிப்ஸ் – 3.8 பில்லியன் டால்ர் – 90 % அதிகரிப்பு
மாரதான் – 770 மில்லியன் டால்ர் – 247 % அதிகரிப்பு

‘எண்ணெய் கிடங்குகளில் வெளியாகும் நச்சுப்புகைகள் குறித்த தகவல்களை தாமதமாக தருவதன் மூலம்தான் உற்பத்தியை பெருக்க முடியும்’ என்று மிரட்டியே எக்ஸான் போன்றவர்கள் காரியத்தை சாதித்துக் கொண்டு விட்டதாக, EPA-வின் ஹ்யூக் கௌஃப்மன்-னும்(Hugh Kaufman) ஒத்துக் கொண்டிருக்கிறார்.

எல்லாம் சிரியானா மயம்.


Lee Raymond & Exxon – Greenpeace 

Lee Raymond & Exxon – Greenpeace Posted by Picasa

MGR University

ரொம்ப நாள் கழித்து (மூன்று மாதமாவது இருக்கும்) சன் செய்திகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. DVR வந்தபிறகு சன் செய்திகளும் சீரியல்களும் பார்க்க முடிவதில்லை.

புதிய நீதிக் கட்சியின் ஏசி சண்முகம் நடத்தும் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியை இடித்துத் தள்ளினார்கள். நூலகம், மாணவர் விடுதி, மருத்துவக் கல்லூரி வளாகங்கள் புல்டோசப்பட்டது. அறுபது கோடிக்கு மதிப்பிடப்படும் கட்டிடங்கள், ‘அண்ணாமலை‘ ரஜினியின் வீட்டை இடிப்பது போல் சர்வமும் நாசமாக்கப்பட்டது.

போன வாரம் பெய்த மழையில் கூவம் நதி பிரவாகமெடுத்து ஓடியதற்கு காரணமாக பலவற்றை முன்வைக்கிறார்கள்:

  • ஆற்றுப் படுகைகளில் மணல் திருட்டு
  • நதிக்கரைகளில் அத்துமீறி கட்டப்பட்ட நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு
  • ஆற்று நீர் ஓடுவதை குறுக்கிய குடிசைகள், கடைகள்
  • போதிய அளவு அணைக்கட்டுகள் இல்லாதது
  • இன்னும் இருக்கலாம்.

    கூவம் நதிக்கரையில் அமைந்த ம.கோ.ரா. பல்கலையின் மூன்று கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தை வளைத்து வளர்ந்திருப்பதாக குற்றம் சாட்டி இடித்தும் முடிந்துவிட்டது.

    கல்லூரி ஆரம்பிக்கையில் வகுப்புகள் மட்டுமே கொண்ட கட்டிடங்கள்தான் முதலில் எழுந்திருக்கும். பொறியியல் வருமானம் பெருக ஆரம்பித்தவுடன் நூலகம் தொடங்கப்பட்டிருக்கும். மேலும் வருவாயை ஈட்ட உபரியாக மருத்துவம் பயில்விக்கத் தொடங்குவார்கள். தொடர்ச்சியாக வரும் வெளியூர் மாணவர்களுக்காக விடுதி அமைக்கப்பட்டிருக்கும்.

    இடப்பற்றாக்குறையால் நீர் வரத்தில்லாத கூவத்தின் தலையில் எம்ஜியார் பல்கலை விரிந்துவிட்டது. தொலநோக்கு இல்லாததை மட்டும் குற்றம் கூறாமல், ஆரம்ப நிலையில் அதிக விலை கொடுத்து பெரிய அளவில் நிலத்தை வாங்க முடியாததும் இவ்வித ‘வளர்ச்சி’க்கு காரணமாக இருந்திருக்கலாம்.

    ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்ட நூலகம்; ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தங்கக்கூடிய விடுதி ஆகியவற்றை காலி செய்ய 24 மணி நேரம் கெடு கொடுக்கப்பட்டது.

    இந்த அகற்றலின் மூலம் நான்கு கிராமங்களின் சேதம் கட்டுக்குள் அடங்கும் என்கிறார்கள்.

    இரு வருடங்களுக்கு முன்பே நேற்று இடிக்கப்பட்ட இடங்களை அகற்றிவிடுமாறு அரசாணை சென்றிருக்கிறது. 2003-இல் இருந்து ஒன்றுமே செய்யாமல் இருந்ததன் பலன் நேற்று இடிந்து விழுந்திருக்கிறது.

    மிகவும் வருத்தமான நிகழ்வு.

    ஆனால், இரும்புக் கரம் கொண்டு காருண்யம் பார்க்காமல், முதலியார் வாக்கு வங்கி கணக்குப் போடாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு விட்டு விடாமல் — நதியின் பாதையை சீரமைக்கும் ஜெயலலிதாவைப் பாராட்டலாம்.


    | |

  • நட்சத்திரங்களின் நடுவில் நிலா

    சும்மா ‘நச்’னு இருக்கு: சுக்கலோ சந்துருடு குறித்த தமிழ் முரசு செய்தி

    Thamizh Murasu

    ‘சுக்கலோ சந்துருடு’/சிவகுமார் குறித்த முந்தைய பதிவு :: (மீண்டும்) இயக்குநராகும் தோழன்


    | |

    குடிக்காதே

    Palm Pilot1. குடிக்காதே தம்பி குடிக்காதே: எனக்கு 107.93 கோப்பை குடித்தால் சங்கு என்கிறார்கள். (அப்படியானால் என்னுடைய எடை எவ்வளவு!?)

    2. சிறார்களின் கைவண்ணம்: ப்ளாகினிது இலக்கியமினிது என்பர் குழந்தைகளின்
    பொன்மொழி படிக்காதவர்.


    | |

    Spoof Story by Vikadan on Kushboo with Vijayganth’…

    Spoof Story by Vikadan on Kushboo with Vijayganth’s Kid with Suhassini as Wife Posted by Picasa

    வலைத்தடம்

    1. கோட்டை விட்ட ஜெயலலிதா: பதினைந்தாயிரம் கோடி (எத்தனை சைபர்?) ரூபாய் செலவில் புதிய பேட்டை அமைப்பதில் களத்தில் இருந்த நொய்தா, கொல்கத்தா, பெங்கலூரு, ஹைதராபாத், சென்னை நகரங்களில், முதல்வரும் மத்திய அமைச்சருக்குமான சண்டையில் சென்னை வாய்ப்பை தவறவிட்டது. (வழி)

    2. இராணுவத்தில் பாலியல் புகார்: கடந்த வருடத்தில் ஆறேழு முறை பணி மாற்றப்பட்ட அஞ்சலி குப்தா பாலியல் புகார் கொடுத்ததால், கைது செய்யப்பட்டு, கண்காணிப்பில் அடைக்கப்பட்டார். மிக விரைவாக எந்த விதமான இராணுவ நலன்களும் மரியாதகளும் கிடைக்காதவகையில் பணிநீக்கம் Spoof Story by Vikadan on Kushboo with Vijayganth's Kid with Suhassini as Wifeசெய்யப்பட்டார். (வழி)

    3. சொல்லாமல் விட்டது – உதா பார்த்திபன்: ட்ரேஸ் எடுக்கத் தெரிந்த ஓவியரும் கிளுகிளுப்பான ஆசிரியரும், சாதாரண கதைக்கு, அர்த்தபுஷ்டி நிறைந்த படத்தால், கொழுப்பை காட்டியிருக்கிறார்கள்.

    4. இந்திரா பார்த்தசாரதி தொலைகாணல்: பேசவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவுடன் ஒப்புக்கொண்டு, பொறுமையாக பேட்டி கொடுத்தவருக்கு நன்றிகள்.

    5. Opinmind: எது சொன்னாலும் எதிரும் புதிருமான கருத்துக்கள் வருவது இயற்கை. கூகிள் எதிர்மறையான வலையகங்களை முதன்மையாக தேடலில் கொடுப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. ‘ஓபின்மைண்ட்’ இரு பக்கங்களையும் ஒருங்கே காட்டுகிறது.

    6. இணையத்தில் எழுதி புலிட்சர் வாங்கலாம்: வலையில் எழுதுபவர்களுக்கும் புலிட்சர் பரிசு கிடைக்குமாறு வகை செய்திருக்கிறார்கள். ஆனால், வாரமொருமுறையாவது வெளிவரும் அச்சு பத்திரிகையில் எப்பொழுதாவது எழுதியிருக்க வேண்டும் என்று பொடி வைத்திருக்கிறார்கள். (வழி)

    7. gada.be: பல வலையகங்களில் இருந்தும் தேடல் வசதி; வந்த முடிவுகளை ஓ.பி.எம்.எல். ஆக மாற்றலாம்; எளிமையாகத் தேட இன்னொரு நிரலி.

    8. InBubbleWrap: அமெரிக்காவில் இருப்போருக்கு இலவசமாக புத்தகங்களும் இன்ன பிறவும் அனுப்புகிறார்கள். ஆம்… முற்றிலும் இலவசம்! (எனக்கு ஏற்கனவே இரு புத்தகங்கள் வந்து சேர்ந்தாச்சு.)

    9. உறை விற்க தடை விதிக்க கோருகிறார்கள்: தானியங்கி ஆணுறை விற்பனை மையங்களை நிறுவுவதற்கு முஸ்லீம் முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்துகிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

    10. rsstroom reader – toilet paper printer!: பயோமெட்ரிக்ஸ் முறையில் யார் ‘ஆய்’ போகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களின் செய்தியோடைகளை கழிவறைக்கோப்பாக அச்சடித்துத் தரும் சாதனைத்தை இணையத்தில் விற்கிறார்.

    தமிழ்ப்பதிவுகளை நக்கலடிக்கவில்லை என்று மன்னிப்பு கோரிவிட்டார்.


    | |

    துரியோதனாதிகள்

    Operation Duryodhana, a COBRAPOST-AAJTAK investigation unearths 11 MPs accepting cash to table questions:: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக பதினொன்று எம்.பி.க்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் எம்.பி. ஒருவரும், ஐந்து பிஜேபி எம்.பி.க்களும், இரு பிஎஸ்பி எம்பி.க்களும் தாற்காலிகமாக தங்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

    பங்காரு லஷ்மண், ஜார்ஜ் பெர்னாண்டஸ், லஞ்சம் வாங்கியதை டெஹல்கா வெளிச்சத்திற்கு கொண்டு வந்தபிறகு பரப்பாக சில மாதம் முன்பு ஷக்தி கபூர் போன்ற திரைப்படத்துறை சார்ந்தவர்களின் பெண்ணாசையை ஒளிபரப்பினார்கள்.

    போன மாதம்தான் அமெரிக்காவில் ‘ஆஜ் தக்’ ஒளிபரப்பைத் தொடங்கியது. தற்போது இந்த ‘கோப்ரா ஸ்டார்‘ விவகாரம், அதன் புகழை பரப்ப உதவும். அமெரிக்க ஊடகங்களிடையே பெயர் வாங்கவும் வைக்கலாம்.

    கேள்வி கேட்க ஊக்கத்தொகை வாங்கியவர்கள்:

    நரேந்திரா குஷ்வாலா (பிஎஸ்பி) ரூ. 55,000
    எம் கே பட்டீல் (பிஜேபி) ரூ. 45,000
    சத்ரபால் சிங் லோதா (பிஜேபி) ரூ. 15,000
    மஹாஜன் (பிஜேபி) ரூ. 35,000
    மனோஜ் குமார் (ரா.ஜ.த.) ரூ. 110,000
    சுரேஹ்ச் சந்தல் (பிஜேபி) ரூ. 30,000
    ராஜாராம் பால் (பிஎஸ்பி) ரூ. 35,000
    லால் சந்திர கொல் (பிஜேபி) ரூ. 35,000
    பிரதீப் காந்தி (பிஜேபி) ரூ. 55,000
    சந்திர பிரதாப் சிங் (பிஜேபி) ரூ. 35,000
    ராம்சேவக் சிங் (காங்.) ரூ. 50,000

    பாராளுமன்ற உறுப்பினர் நிதிக்காக கிடைக்கும் லஞ்சங்களை நரேந்திரா குஷ்வாலா பகிர்ந்துள்ளார். எம்.பி.க்கான கையூட்டாக பத்து சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐஐடி கான்பூரில் படித்த எம் கே பட்டீல் லஞ்சத்துக்கு எதிரியாக தன்னை சித்தரித்து வந்துள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட்ட விளையாட்டான கேள்விகள் கூட, ஆதார உண்மைகள் ஆராயப்படாமல் எழுப்பப்பட்டு, கடிதம் மூலம் உரிய அமைச்சரவையிடம் சேர்ப்பிக்க வகை செய்திருக்கிறார்கள்.

    இந்த ஆய்வை செய்ததன் முடிவாக ‘உங்களுக்கு யாரைத் தெரியும் என்பதை வைத்துதான் காரியத்தை சாதிக்க முடியும்‘ என்பதை உணர்வதாக அனிருத்தா பஹல் கூறுகிறார்.

    வேறு சில இடைத் தரகர்களை அணுகியிருந்தால், தமிழக எம்.பிக்கள் கூட வெளிப்பட்டிருக்கலாம்.

    தொடர்புள்ள சுட்டிகள்: India Uncut | DesiPundit » Operation Duryodhana: Why Was Desipundit Denied Permission To Invest In SSIs?


    | |