கூகிள்ராஜாவுக்கு புள்ளிவிவரம் வருதா


ஸ்டாட்கவுண்டர் போன்ற எண்ணற்ற சிறு நிறுவனங்கள் புள்ளிவிவரங்களைக் கொடுத்து வந்தது.

யார் வந்தார்கள், எதற்காக இந்த வலையகம் தேடலில் கிடைத்தது, எப்படி வரவழைக்கப்பட்டார்கள், எந்த ஊர், என்ன ஐ.பி. முகவரி, எப்பொழுது என்றெல்லாவற்றையும் கொடுத்தார்கள்.

அவர்களின் நிலை::

ஐய்யா கூகிள் அனலிடிக்ஸ் வந்தாச்சு::

12 மணி நேரம் காத்திரு என்கிறார்கள். ஹ்ம்ம்ம்ம்…. பார்ப்போம்::

  • Google Analytics கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரசேவையுடன் இணைந்து பயன்படும்.
  • எல்லா வலையகங்களிலும் பயன்படுத்தலாம். ஆட்சென்ஸ் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
  • நம்மிடம் கூகிள் விளம்பரசேவை இல்லாவிட்டாலும், ‘அனாலிடிக்ஸை‘ நிறுவுவதன் மூலம், நம்முடைய வலையகத்தின் பழக்கவழக்கங்களை, கூகிளுக்கு வழங்கி விடுவோம்.
  • மாதந்தோறும் உங்கள் வலையகத்துக்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டினால் ‘அனாலிடிக்ஸ்’ உபயோகிக்கக் கூடாது.
  • ஒரு மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்டும் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 17 சதவீதம் மட்டுமே ஏதாவதொரு ‘புள்ளிவிவர’ நிரலியை பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள இரண்டு லட்சத்து சொச்ச ஸ்தாபனங்களை குறிவைத்து அனாலிடிக்ஸ் களமிறங்கியுள்ளது.
  • $460 மில்லியன் வருமானம் புரளும் தொழிலில் WebSideStory, WebTrends, Omniture போன்றவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.
  • இலவசமாக தருவதற்காக ‘அர்ச்சின்’ (Urchin) நிறுவனத்தை முப்பது மில்லியனுக்கு கூகிள் வாங்கியது.

    தகவல்: Google Blogoscoped | Google to offer its clients free trail of clicked-on ads – Technology – International Herald Tribune


    | |

  • 8 responses to “கூகிள்ராஜாவுக்கு புள்ளிவிவரம் வருதா

    1. Unknown's avatar மோகன்தாஸ்

      நான் முந்திகிட்டேன் பாலா,

      http://imohandoss.blogspot.com/2005/11/blog-post_113202867103671256.html

      ஆனா விலாவரியா போட்டுரிக்கீங்க, பார்க்கலாம் எதா இருந்தாலும் 12 மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.

      PS: ஒரு விளம்பரம்

    2. Unknown's avatar சுதர்சன்

      //# மாதந்தோறும் உங்கள் வலையகத்துக்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டினால் ‘அனாலிடிக்ஸ்’ உபயோகிக்கக் கூடாது.//

      அதாவது ‘ஆட்சென்ஸ்’ பயன்படுத்தாவிட்டால் மட்டும். உங்கள் தளத்தில் ‘ஆட்சென்ஸ்’ இருந்தால் இந்த தடுப்பு பொருந்தாது.

    3. படமும் நன்றாக இருக்கிறது, அதைப் பார்த்து சொன்ன கதையும் நன்றாக இருக்கிறது

    4. Unknown's avatar இராமநாதன்

      வெப்-பேஸ்ட் சர்வீஸ்களில் ஒரு மைக்ரோஸாஃப்ட் ஆகிவிட்டது கூகிள். இருந்தாலும், கூகிளுக்கு எம்.எஸ்-ஸுக்கு இருக்கும் எதிர்ப்பு இல்லையே..

      மோகன் தாஸ் பதிவபாத்து நானும் சேர்ந்திருக்கேன். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு. பார்ப்போம்.

    5. Unknown's avatar வெளிகண்ட நாதர்

      அழகா படம் போட்டு விளக்கறீங்களே!

    6. குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி 🙂

      –12 மணிநேரம் கழிச்சுதான் —

      ப்ளாகராக இருந்தபோது ஸ்டாட்ஸ்.ப்ளாகர்.காம் என்பதை கொடுத்திருந்தார்கள். இப்போது மேம்படுத்தின சேவை?!

      —‘ஆட்சென்ஸ்’ பயன்படுத்தாவிட்டால் மட்டும்—

      கவனிக்க மறந்தேன். நன்றி.

      —கூகிளுக்கு எம்.எஸ்-ஸுக்கு இருக்கும் எதிர்ப்பு —

      எல்லாம் பி.ஆர். செய்யும் மாயம்.

      ப்ரைவசி போச்சு…
      உலகத்தையே ஒரு குடைக்குள் ஆள்கிறார்…

      என்று ஸ்லாஷ்டாட் மக்கள் புலம்பல் எல்லாம் மைக்ரோசாஃப்டை மட்டுமே குறி வைப்பது ஏனோ!

    7. >> Google Analytics கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரசேவையுடன் இணைந்து பயன்படும்.
      >> எல்லா வலையகங்களிலும் பயன்படுத்தலாம். ஆட்சென்ஸ் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

      Google Analytics has nothing todo with Adsense. The limit of 5 million hits for Google Analytics is waived for AdWords customers. Adsense and Adwords are different products. for more details http://google.blognewschannel.com/index.php/archives/2005/11/14/for-the-last-time-the-difference-between-adsense-and-adwords/

      intha blog postla irukkara ella padamume soooper. figure yaarunu sonningana konjam nalla irukkum

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.