தீபாவளிக்கு ஸ்வீட்கள் நிறைய கிடைக்கும். சன் டிவியில் தீபாவளி நிகழ்ச்சிகளில் சினிமா நிறைய கிடைக்கும். லேகியம் உடலுக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டே, மணக்க மணக்க நெய்யில் செய்வார்கள். தமிழ் பேசுகிறோம் என்று பட்டிமன்றம் பழைய மருந்தாக இருந்தது.
அசின் நடித்த படங்கள் தவிரவும் வேறு சில வந்திருப்பதை தெரிந்து கொள்ள நேரிட்டது.
எஸ்.பி.பி. தெலுங்கில் ‘ஸ்ரீவேங்கடேசா… ஸ்ரீனிவாசா‘ என்பது போல், ‘அது ஒரு கனாக்காலம்’ தனுஷ்ஷின் ‘கண்டக்டர் பொண்ணை யார் வெட்றா மாமே… யார் வெட்றா மாமே‘, தமிழ் கலாசாரத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்று அ.ராமசாமி நடையில் விமர்சனம் எழுத தட்டச்சுப் பலகையை ரா…ரா… என்றது.
ஹரிணியின் ச்சிச்சீச்சிச்சீ பிரயோகத்தைக் கண்டவர்கள் எல்லாரும் சிங்காரவேல ‘ககாகிகீக்குகக்கேக்குக்கூகொக்கோகேக்கே’ போல் இன்ஸ்டண்டா பிடித்துக் கொண்டு ‘என்ன பழக்கம் இது… சின்ன புள்ள போல‘ என்று மஜாவாக்கினார்கள்.
ஜெயமோகன் வசனம் எப்படியிருக்கிறதாம்?
ஆறாம்திணை.காம் :: Cini News – Deepavali Padangal – கே.டி.ஸ்ரீ
சிவகாசி
‘திருப்பாச்சி’க்கு பிறகு விஜய் – பேரரசு கூட்டணியில் உருவாகியுள்ளது ‘சிவகாசி’. சிவகாசியில் விஜய்யுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் அசின். அசின் மட்டுமல்லாது இப்படத்தில் நயன்தாரா ஒரே ஒரு நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்.
தங்கை சென்டிமெண்டை அடிப்படையாக கொண்டு தன்னுடைய முந்தைய படத்தை இயக்கிய இயக்குநர், இப்படத்தில் அம்மா – மகன் சென்டிமெண்டை வைத்து கதையை நகர்த்துகிறார். படத்தில் கீதா அம்மாவாக நடித்திருக்கிறார்.
விஜய், அசின், நயன்தாரா, கீதாவுடன் ராஜேஷ், அருண்குமார், எம்.எஸ். பாஸ்கர், முரளி மற்றும் சிட்டிபாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தில் வில்லனாக வருகிறார்.
இப்படத்திற்காக சென்னையில் புகழ்பெற்ற தி.நகர் ரங்கநாதன் தெரு போன்ற ஒரு செட்டை வாகினி ஸ்டூடியோவில் அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். சூர்ய மூவிஸ் நிறுவனத்தினருக்காக ஏ.எம். ரத்தினம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிவகாசி’க்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். ‘சந்திரமுகி’ புகழ் சேகர் ஜோசப் படத்திற்கான ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
தீபாவளியின் இந்த ‘சிவகாசி’ வெடி தூள் கிளப்புமா?
சென்னையில் சிவகாசி திரையிடப்பட்ட அரங்குகள்: தேவி, தேவிபாலா, சங்கம், உதயம், மினி உதயம், அகஸ்தியா, மாயாஜல், வெற்றி, கங்கா, ராக்கி, தேவிகுமாரி, தியாகராஜா, சுந்தர், எம்எஸ்எம்.
மஜா
‘அந்நியன்’ வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியாகிருக்கிறது ‘மஜா’. மலையாளத்தில் மம்முட்டி, பிஜுமேனன் நடித்த ‘தொம்மனும் மக்களும்’ என்கிற வெற்றிப்படமே ‘மஜா’.
நாயகியாக நடித்திருக்கிறார் அஸின். பிதாமகனுக்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை கவனிக்கிறார். வித்தியாசாகர் இசையை உருவான ‘மஜா’ அந்நியன் போலவே ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பாகும்.
பசுபதி, மணிவண்ணன், மலையாள படஉலகின் புகழ்பெற்ற நடிகர் பிஜுமேனன் வித்தியாசமான வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
மஜா திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகள்: சத்யம், ஆல்பர்ட், அபிராமி, பாரத், ஸ்ரீபிருந்தா, காசி, பிரார்த்தனா டிரைவ்இன், ஆராதனா, மாயாஜால், சாலிகிராமம், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம், வித்யா, வேலன், லட்சுமி
கஸ்தூரிமான்
புகழ்பெற்ற மலையாளபட இயக்குநர் லோகிதாஸ் முதன்முதலாக ‘கஸ்தூரிமான்’ மூலம் தமிழ்திரைப்பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார். இவரின் மலையாள படமான ‘கஸ்தூரிமானை’ அதே பெயரில் தமிழில் தயாரித்திருக்கிறார்.
மீராஜாஸ்மீன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் கதை அவரைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. படத்தில் பிரசன்னா நாயகனாக நடிக்க, மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கிறார்கள். வழக்கம் போல் காதல், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை செல்கிறது.
படத்தைப் பற்றிய முக்கிய செய்தி என்னவென்றால் −ப்படத்திற்கான வசனத்தை எழுதுகிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.! ‘கஸ்தூரிமான்’ மூலம் தமிழ்த்திரைப்பட உலகில் முதன்முதலாக காலடி எடுத்து வைக்கிறார் ஜெயமோகன்.
அது ஒரு கனா காலம்
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவருகிறது ‘அது ஒரு கனா காலம்’. தனுஷ், பிரியாமணி நடிக்கின்றனர். தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் தனுஷிற்கு மீண்டும் தமிழ் திரைப்பட உலகில் நல்ல இடத்தை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு தடைகளையும் தாண்டி ‘அது ஒரு கனா காலம்’ தீபாவளிக்கு தமிழக திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
சென்னையில் திரையிடப்பட்ட திரையரங்குகள்: உட்லாண்ட்ஸ், சிம்பொனி, அபிராமி காம்ப்ளக்ஸ், பேபி ஆல்பர்ட், கமலா, எம்.எம். தியேட்டர்.
tamilcinema.com:: பம்பரக்கண்ணாலே
ஸ்ரீகாந்த் படமாச்சே, மெல்லிய காதலாக இருக்கும் என்று உள்ளே போனால், ஆயிரம் வாலா பட்டாசை அசராமல் கொளுத்தி போடுகிறார்கள். ஜில்லாலக்கடி ஜில்லாக்கோ, திருப்பி போடு மல்லாக்கோ என்று குஷியாட்டம் போடுகிறது கோஷ்டி மொத்தமும். அட…ஸ்ரீகாந்த் படங்களில் இது வேற ரகமுங்கோ…
குடியிருப்பு பெண்களுக்கு சைக்கிள் கற்று கொடுப்பதும், அதை தொடர்ந்து வருகிற டயலாக்குகளும் முனியாண்டி விலாசின் அசைவ மெனு! க்ளைமாக்சில் நடனம்-சண்டை-பாடல் என்று புதுமையான கலவையை தந்திருக்கிறார் இயக்குனர் பார்த்தி பாஸ்கர்.











