Monthly Archives: ஒக்ரோபர் 2005

நுட்பச்சிதறல்

நுட்பமான பதிவு எழுதுவது எப்படி என்று முகமூடியும் என்னைப் போன்றோரும் கோனார் உரைத்திருந்தோம். இந்தப் பதிவு தொழில் நுட்பங்கள் குறித்த சில பகிர்தல்கள் கொண்டது.

1. செய்தியோடை உகப்பம்

உங்கள் செய்தியோடையை (RSS) ஒரு சொடுக்கில் ‘என்னுடைய யாஹூ’, ‘ரோஜோ’, ‘ப்ளாக்லைன்ஸ்’ போன்ற பல இடங்களில் சேர்த்து விடும் உகப்பைக் கொடுக்கலாம். வழிமுறைகள் க்ரிஸ் செர்ரியின் வலையகத்தில் கிடைக்கிறது.

2. தமிழ்ப்பதிவுகளைத் தேடுவதற்கு technorati மற்றும் கூகிள் என்று இரண்டு வழிகள் சொல்கிறார்கள். பலரும் பயன்படுத்துவதற்கு kinjaவும் நேர்த்தியாக இருக்கிறது.

3. ஆங்கிலப் பதிவுகளை அலசி ஆராய்வதற்கு குறியீடு தவிர ஏற்கனவே எழுதியது போல் பல நுட்பங்கள் புகழ் பெற்றிருக்கிறது.

எனக்குப் பிடித்த ஒரு சில…

  • டெக்னாலஜி சம்பந்தமான அனைத்து ஓடைகளையும் அலசி ஆராய்ந்து எளிதாக வழங்கும் Memeorandum
  • கிஞ்சாவைப் போலவே சில காலமாக மிகவும் பயன்படும் del.icio.us
  • புத்தகக்குறிகள், வலைப்பதிவுகள், செய்தியோடைகள், வாசகரின் விருப்பங்கள் என்று தொகுத்துப் பார்க்க உதவும் digg
  • வலைப்பயனர்களிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்து ஜனநாயக முறையை முன்னிறுத்தும் reddit
  • பங்குச்சந்தையோடு உறவாடுபவர்களுக்கு சி.என்.பி.சி தொலைக்காட்சியின் வண்ணமயமான ஜிகினா பின்னணி செய்திகள் பரிச்சயமாக இருக்கும். அதே போன்று வலைப்பதிவில் அடிபடும் செய்திகளை newsmap காட்டுகிறது.
  • ARS என்று நடிகர் அப்பா வேடங்களிலும், வர்த்தக மனிதராகவும், பணக்காரராகவும் திரைப்படங்களில் நடிப்பார். Article Ranking System என்னும் தரப்படுத்தலைக் கொண்டு Blogniscient செயல்படுகிறது. புதிய, படிக்க வேண்டிய பதிவுகளைத் தெரிந்து கொள்ள உதவும்.

4. வலை நுட்பங்களைக் கண்டு போரடித்தவர்களுக்காக: தேஸி வீடியோ

5. வலை நுட்பங்களைக் கண்டு போரடிக்காதவர்களுக்காக: இந்த வார பிசி சஞ்சிகை Clipmarks மற்றும் Jeteye போன்ற இணையக்குறி சேமிப்பு நிரலிகளை அலசுகிறது.


| |

பத்து பாட்டு

Stick it Out

சமய சந்தர்ப்பம் தெரியாமல் வாய் பாடல் எதையாவது திடீரென்று முணுமுணுக்கும். இன்று பாட நினைப்பவை:

1. விழியே கதை எழுது – உரிமைக் குரல்

2. ரங்கோலா – கஜினி

3. ராஜா என்பார் மந்திரி என்பார் – புவனா ஒரு கேள்விக்குறி

4. ஐ ஆர் எட்டு – மஜா

5. அலைகளில் மிதக்குது– அந்த ஒரு நிமிடம்

6. காட்டுக்குயிலு மனசுக்குள்ள – தளபதி

7. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

8. காத்திருப்பான் கமலக்கண்ணன் – அம்பிகாபதி

9. குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் – தூக்கு தூக்கி

10. கல்யாணம் ஆஹா கல்யாணம் – பெண்


| |

சிறந்த அட்டைப்படங்கள்

நான் அட்டைப்படத்தை பார்த்து புத்தகங்களை வாங்கும் ரகம்.

எண்பதுகளில் சிகரெட் துணுக்குகளுக்கு நடுவே எலும்புக் கூட்டின் கை தெரியும் விகடன் அட்டைப்படம் இன்றும் பயமுறுத்தும். நடிகைகளைத் தாங்கி வரும் தேவி, ராணி. சினிமா தலைப்புச் செய்திகளையும் பேட்டியையும் முகப்பாக வைத்து வரும் குமுதம். ‘கவர் ஸ்டோரி’யை முன்னிறுத்தும் இந்தியா டுடே.

கடந்த நாற்பதாண்டுகளில் வெளியான ஆங்கில இதழ்களின் அட்டைப்படங்களில் தலைசிறந்த நாற்பதை magazine.org வரிசைப்படுத்தியுள்ளது.

தலை பத்தில் இரண்டு இடங்களை ‘நியு யார்க்கர்‘ பிடித்துள்ளது. தலை நாற்பதில் ‘எஸ்க்வெயிர்’, ‘டைம்’, ‘லைஃப்’ ஆகியவை தலா நான்கு முகப்புகளை வைத்துள்ளது.

வெற்றிபெற்றவையில் 32 புகைப்படங்கள்;
7 ஓவியங்கள்;
2 வார்த்தைகள் மட்டுமே கொண்டவை.

1960களில் வெளிவந்தவையில் 11 முகப்புகள் வென்றிருக்கிறது.
1970களில் இருந்து 8;
1980களில் இருந்து 3;
1990களில் இருந்து 10;
2000களில் இருந்து 9;

தொடர்புள்ள பக்கங்கள்: ASME Unveils Top 40 Magazine Covers | தலை 40 முகப்புகள்


| |

இரு கவிதைகள்

எரிந்த ஊர்களின் அழகி – சந்துஷ்

எரிந்த ஊர்களின் அழகி
நேற்று இங்கு வந்திருந்தாள்
எரிந்த ஊர்களைப் பற்றித்
தனக்கு எதுவுமே தெரியாதென்றாள்

வியப்புடன் கோணிய
என் முகத்தில் தொங்கிக் கொண்டு
நெடுநேரம் சிரித்தாள்

வழியும் அவள் குழற்கற்றைகளில்
தொலைந்துபோன தெருக்களை இணைக்கும்
கிளைப்பாதைகள் நீண்டு விரிகின்றன

அவள் பேசி நிறுத்தும் இடைவெளிகளில்
போரின் இரைச்சல் காதைப் பிளக்கிறது

கத்திக் கத்தி அவள் பேசுகையில்
எனதூரின் மௌனம் முகத்திலறைகிறது

நேற்றவள் சிரிக்கையில்
ஊர் எரிந்த வாசம் வந்தது

எரிந்த ஊர்களின் மீதமோ நீயென்றேன்
காதுகள் இருப்பதாக
அவள் காட்டிக் கொள்ளவில்லை

அவள் சொன்ன கதைகளில்
தனித்து ஓயும் பறவையின் ஓசையும்
மெல்லத் தணியும் ரயிலின் கூவலும்
நிலவில் நனையும் ஓசை கேட்டது

இறுகப் பற்றும் அவள் கைகளின் பிணைப்பில்
ஊரின் வேரொன்று தட்டுப்பட்டது

எனினும் எரிந்த ஊர்களைப் பற்றி
தனக்கு எதுவுமே தெரியாதென்றாள்
எரிந்த ஊர்களின் அழகி


இளங்கோ கிருஷ்ண்ன்

எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய
குழந்தையது
தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்
அதனை நிற்கச் செய்திருக்கிறது.
நிராதரவும் இரங்கலுமற்ற கடைக்காரனின்
முகத்தை
கண்திரள பார்க்கிறது
தன் கனவு மிட்டாயின் உருவம் ஏக்கமாய்
இறுக போதாத நாணயம் கொண்ட
தன்னை நிந்திக்கவும் அறியாத அதன்
பிரச்சனை
திரும்பிச் செல்வதல்ல
வெறுங்கைகளுடன் திரும்பிச் செல்வதே.
எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய
குழந்தையது
தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்
அதனை நிற்கச் செய்திருக்கிறது.


நன்றி: உயிர்மை – செப். 2005

காலச்சுவடு

பெண் படைப்பாளிகளுக்கான இலக்கியப் போட்டி:: 2006 புதுமைப்பித்தன் நூற்றாண்டு. இதை முன்னிட்டுப் புதுமைப்பித்தன் நூற்றாண்டு இலக்கியப் போட்டி ஒன்றைக் காலச்சுவடு அறக்கட்டளை அறிவிக்கிறது. இளைய தலைமுறைப் பெண் படைப்பாளிகளுக்கான கவிதை மற்றும் சிறுகதைப் போட்டி இது. ஒருவரே இரண்டு பிரிவுகளிலும் கலந்துகொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம்.

போட்டியில் பங்கேற்பவர்கள் 1970ஆம் ஆண்டிலோ அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். படைப்புகளை மின்னஞ்சல் வழி kalachuvadu@sancharnet.in, kalachuvadu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

படைப்புகளை அக். 31, 2005க்குள் கிடைக்கும்படி காலச்சுவடு அறக்கட்டளைக்கு அனுப்புக.


பெருமாள்முருகன் :: எல்லாத் தரப்பு விமர்சகர்களாலும் வாசகர்களாலும் பரவலாகப் பேசப்பட்ட ஆர். சண்முகசுந்தரமின் நாவல் ‘நாகம்மாள்’, இரண்டாம் பதிப்பைக் காண ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆயிற்று.

சண்முகசுந்தரம், இருபத்தொரு நாவல்களை எழுதியுள்ளார். சிறுகதை நூல் ஒன்றும் நாடகம் ஒன்றும் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட நூற்றிருபது நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டால் சில நூல்கள் அமையும். மொத்தமாக நூற்றைம்பது நூல்கள் அவருடையவை என்று கணக்கிடலாம். நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கியவர் அவர்.

அவர் மொழிபெயர்த்த நாவல்களுள் ‘பதேர் பாஞ்சாலி‘ முக்கியமானது. 2001இல் சந்தியா பதிப்பகம் மூலம் ‘பதேர் பாஞ்சாலி’ வெளிவந்தது.

அதேபோல, சண்முகசுந்தரத்தின் படைப்புகளுள் நாகம்மாள், அறுவடை, சட்டி சுட்டது, தனிவழி ஆகிய நான்கு நாவல்கள் மிக முக்கியமானவை என்பது என் கருத்து. அவை இன்றைய வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்னும் அவா, மருதா பதிப்பக உரிமையாளர் நண்பர் பாலகுருசாமி மூலம் நிறை வேறியது. நாகம்மாள், அறுவடை ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டிசுட்டது, தனிவழி இரண்டும் தயாரிப்பில் உள்ளன.

வங்காள நாவல்களை வங்க மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்த பெருமை உடையவர்கள் த.நா. குமாரசாமி, த.நா.ஸேனாபதி ஆகியோர்.


காங்கிரஸில் ஒரு தலித் :: ரவிக்குமார்
அஞ்சலி: எல். இளையபெருமாள் (1924-2005)


காலமும் கவிஞர்களும் :: உல. பாலசுப்பிரமணியன்
பதிவுகள்: கூடல் – கவிஞர்கள் சங்கமம்

கடந்த செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மதுரை கடவு இலக்கிய அமைப்பும் புதிய காற்று மாத இதழும் இணைந்து ‘கூடல் – கவிஞர்கள் சங்கமம்’ என்ற பெயரில், மதுரை அழகர் கோவில் ஒயாசிஸ் உணவகத்தின் அரங்கு மற்றும் திறந்தவெளிகளில் நவீனக் கவிஞர்கள் பங்கேற்ற இருநாள் அமர்வை நடத்தின.

துவக்க விழாவிற்குக் கவிஞர் பா. தேவேந்திர பூபதி தலைமை தாங்க, புதிய காற்று ஆசிரியர் ஏ.இ.எஸ். ராஜா ஹஸனபர் அலி முன்னிலை வகிக்க, திருமதி கீதா தேவேந்திர பூபதி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் கோணங்கி, முருகேச பாண்டியன், ரமேஷ்-பிரேம், கலாப்ரியா, தேவதேவன், தி.சு. நடராசன், டாக்டர் சிவக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

’60களுக்குப் பிறகான நவீன கவிதை’ அமர்வினைக் கவிஞர் ராஜமார்த்தாண்டன் நெறிப்படுத்த, உரையாடலில் பா. வெங்கடேசன், மோகன ரங்கன், லஷ்மி மணிவண்ணன், நட. சிவக்குமார், கெüதம சித்தார்த்தன், முத்து மகரந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். சி. மணி, பசுவய்யா தொட்டு, சி.சு. செல்லப்பா, க.நா.சு., ஞானக்கூத்தன் என நீண்ட விவாதம், புதுக்கவிதை தனி வலிமை பெற்றது, மேற்கத்திய தாக்கம், ஜே.கே. மற்றும் இந்திய ஆன்மீக வெளிகள் இடம்பெற்றது வரை விரிந்து, 90களுக்குப் பிறகுதான் நவீன கவிதை தொடங்குகிறது என்ற முருகேச பாண்டியனின் முத்தாய்ப்புடன் அமர்வு முடிவுற்றது.

மதிய உணவிற்குப்பின், கவிதை வாசிப்பும் விவாதமும் நடைபெற்றன. மாலதி மைத்ரி, உமா மகேஸ்வரி, மு. சத்யா, மஞ்சுளா ஆகியோருடன் புதியவர்களும் கவிதை வாசித்தார்கள். பிரமிளின் ஆளுமை பற்றி மோகனரங்கனும் நகுலன் பற்றித் தபசியும் பிரம்மராஜன் பற்றிக் கரிகாலனும் கட்டுரை வாசித்தார்கள்.

இரவு விருந்துடன் முதல் நாள் அமர்வு முடிய, மறுநாள் காலை 8.30 மணியளவில் நவீனம் தாண்டிய கவிதைப் போக்குகள் பற்றிய அமர்வை நெறியாளர் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் தொடங்கிவைக்க, உரையாடலில் மாலதி மைத்ரி, உமா மகேஸ்வரி, சிவக்குமார், வெங்கடேசன், பழனிவேள், ராணிதிலக், லஷ்மி மணிவண்ணன், ரமேஷ், யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்சன் மற்றும் பல படைப்பாளிகளும் பங்கேற்றனர்.

தேவதச்சன் பற்றி ராணிதிலக், கலாப்ரியா பற்றி யவனிகா ஸ்ரீராம், ஆத்மாநாம் பற்றி குவளைக் கண்ணன், தேவதேவன் பற்றி நட. சிவக்குமார், இன்குலாப் பற்றி முஜிபுர் ரஹ்மான், அபி பற்றி ஆறுமுகப்பிள்ளை கட்டுரை வாசித்தார்கள்.


Miers & Bush interpolated 

Miers & Bush interpolated Posted by Picasa

ஜாக் டேனியல்ஸை திற… குறள் வரும்

ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் சென்ற வாரம் விழியங்களை ஒளிபரப்பும் ஐ-பாட்-ஐ வெளியிட்டார். பங்குச்சந்தையின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். வெளியாவதற்கு பல நாள் முன்பே வலைப்பதிவுகளில் இந்த பரம ரகசியம் கசிய ஆரம்பித்தது. ஊடக அழைப்பிதழின் பின்னட்டையில் வெள்ளித் திரையை போட்டு சூசகமாக வீடியோ காண்பிக்கப் போவதை உணர்த்தியிருந்தார்கள்.

ஆப்பிள் குறித்த தொழில் ரகசியங்களை வெளியிடுவதற்காக, பல வலையகங்கள் மேல் ஸ்டீவ் ஜாப்ஸ் வழக்கு தொடுத்திருந்தார். அவையே, இன்று அவரின் முதலீட்டை பெருக்கி, பங்கின் வர்த்தகத்தை அதிகரிக்க அரும்பாடுபட்டுள்ளது. இப்பொழுதாவது ஆப்பிள் குறித்த தகவல்களை சுடச்சுட தருபவர்களை கருணையோடு பார்த்து, மிரட்டலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸன் மைக்ரோசிஸ்டம்ஸின் ஜோனதன் ஷ்வார்ட்ஸ் தன்னுடைய வழக்கமாக, கேள்வியொன்றை எப்போதும் தொடுப்பார். திரளாக வந்திருக்கும் தொழில் நுட்ப மாநாட்டில் பங்குபெறுபவர்களை நோக்கி கேட்பார்:

‘உங்களில் எத்தனை பேர் இணையத்தைத் தேடுவதற்கு கூகிளை உப்யோகிக்கறீர்கள்?’

எல்லாருடைய கைகளும் தூக்கப்படும்.

‘நிரலி எழுதினால் NUnitஇல் சோதனை செய்யவேண்டும்; கோப்பு வரைந்தால் மைக்ரோசாஃப்ட் வோர்ட்-இல் இருக்கவேண்டும் என்று விதிமுறைகள் இருக்குமே… அது போல் எத்தனை நிறுவனங்களில் தேடலுக்கு கூகிள்தான் பயன்படுத்த வேண்டும் என்று நெறிமுறை வகுத்திருக்கிறார்கள்?’

தூக்கிய கைகள் அனைத்தும் கவிழ்ந்து விடும். சிறப்பான முறையில் பயனரைச் சென்றடைந்தால், புதிய நுட்பங்கள் மக்களை அவசியம் சென்றடைந்தே தீரும்.

எளிதாக செயல்படும் நுட்பங்கள் என்றால் கூகிள் தேடுபொறி தோன்றுகிறது. ஆர்தர் கோஸ்லரின் ஆங்கில பலுக்கம் விளங்காமல் arthar koslar என்று தேடினால் arthur koesler-தானே உனக்கு வேண்டும் என்று பணிவன்புடன் கூகிள் பரிந்துரைக்கும். வலையில் மேயும் பல பில்லியன் தேடல்களை வேலைக்காரர்களை கொண்டு திருத்துவது, மிகவும் பணவிரயமாகும் பணி.

அதற்கு பதிலாக, தேடித் தெளிபவர்களைக் கொண்டே தன்னை புத்திசாலியாக்கிக் கொள்கிறது. கூகிலின் ஆடம் பாஸ்வர்த் (IT Conversations: Adam Bosworth – MySQL Users Conference) சொல்வது போல் பல கடினமான காரியங்களுக்கு சுளுவான விடைகள் இருக்கிறது.

தவறான பதங்களுக்கு அகரமுதலியின் உதவியை நாடலாம். அறிவு பெட்டகங்களைத் துழாவலாம். விடை கொண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் சரியான பாதையில் பதிலைக் கொண்டு வரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால், இதற்கு முன் arthar koslar என்று தேடியவர்களில் பலர் அதைத் தொடர்ந்து arthur koesler என்று தேடினார்கள் என்பதை அறிந்து வைத்துக் கொண்டால், இணையத்திற்கு தேவையான தொடுப்பை ஏற்படுத்தலாம்.

தகவல் பரிமாற்றத்தை திரட்டுவதன் மூலமும், வலைப்பதிவுகளுக்கு ஊடாக பாய்வதையும் சேமித்து வைத்தால் பல பயனுள்ள விஷயங்கள் மாட்டும். எந்த பதிவுகள் எவ்வளவு முறை தட்டப்படுகிறது, அங்கிருந்து செல்லும் அடுத்த பதிவுகள் என்ன என்று ஜமாபந்தியாக அலசுவதன் மூலம் கருத்தொற்றுமைமிக்க பதிவுகளை வகை செய்யலாம். ஒத்த சொற்கள் அடிக்கடி வரும் பதிவுகள், அதிக பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக காணும் பதிவுகள் என்றெல்லாம் சேகரிக்கவும் திரட்டிகளில், தகவல் பொதிந்திருக்கும்.

கால் தேயாமல் நிரலியிறக்கம் (Zero-footprint deployment), கை நோகாமல் வளர் மேம்படுத்தல்கள் (seamless incremental upgrades) போன்றவை நிரலியின் விஸ்தாரமான தகவல் சேமிப்பின் (intelligence amplification) கையில் இருக்கிறது.

தலைப்பில் சொன்னபடி குறள்:
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

| |

TOP 40 MAGAZINE COVERS 1. Rolling Stone � Jan. 22,…

TOP 40 MAGAZINE COVERS
1. Rolling Stone � Jan. 22, 1981 � John Lennon and Yoko Ono lying in bed
2. Vanity Fair � Aug. 1991 � Nude pregnant Demi Moore
3. Esquire � April 1968 � �The Passion of Muhammad Ali�: Ali with arrows in his body
4. The New Yorker � March 29, 1976 � Drawing of New York from Hudson River and rest of the country to Pacific Ocean
5. Esquire � May 1969 � Andy Warhol drowning in Campbell�s soup can � �The decline and collapse of American avant-garde�
6. The New Yorker � Sept. 24, 2001 � 9/11 � Twin towers drawing in all black against a gray skyline
7. National Lampoon � January 1973 � �If you don�t buy this magazine, we�ll kill this dog� � Man pointing gun at terrified dog
8. Esquire � October 1966 � �Oh my God � we hit a little girl.�
9. Harper�s Bazaar � Sept. 1992 � Linda Evangelista holding up the letter �A� in magazine�s title: �Enter the Era of Elegance�
10. National Geographic � June 1985 � Afghan girl � �Haunted eyes of an Afghan refugee�s fears�
11. Life � April 30, 1965 � �Drama of life before birth� � fetus in womb drawing
12. Time � April 8, 1966 � �Is God Dead?�
13. Life � 1969 � Man on the moon: �To the moon & back�
14. The New Yorker � December 10, 2001 � �New Yorkistan� map: New York divided into Middle Eastern names
15. Harper�s Bazaar � April 1965 � Model�s face peering through pink cutout
 Posted by Picasa

16. The Economist � Sept. 10-16, 1994 � Two camels…

16. The Economist � Sept. 10-16, 1994 � Two camels portraying: �The Trouble with Mergers�
17. Time � June 21, 1968 � Lichtenstein drawing: �The gun in America�
18. ESPN � June 29, 1998 � Michael Jordan jumping against all-white background
19. Esquire � December 2000 � smiling Bill Clinton photo
20. Blue � October 1997 � Man diving
21. Life � November 26, 1965 � Vietcong prisoner with eyes and mouth taped shut: �The blunt reality of war in Vietnam�
22. George � Oct/Nov 1995 � Cindy Crawford dressed as George Washington
23. The Nation � November 13, 2000 � George Bush: What me, worry?
24. Interview � December 1972 � Andy Warhol photographing model for the Christmas issue
25. Time � September 14, 2001 � 9/11: Photo of twin towers terrorist bombing
26. People � March 4, 1974 � Young Mia Farrow biting a strand of pearls, set to star in Gatsby
27. Entertainment Weekly � May 2, 2003 � Nude Dixie Chicks � �Country�s controversial superstars take on their critics�
28. Life � April 16, 1965 � Black and white photo: �Vietcong zero in on vulnerable U.S. copters�
29. (tie) Playboy � October 1971 � African American woman posing on Playboy bunny chair
29. (tie) Fortune � Oct. 1, 2001 � �Up from the ashes�: Man covered in ashes after 9/11 terrorist attacks
31. Newsweek � November 20, 2000 � Half Bush, half Gore photo: �And the winner is��
32. Vogue � May 2004 � Nicole Kidman�s back profile � dress in an elegant gown
33. (tie) Newsweek � July 30, 1973 � �The Nixon Tapes�: Aerial view of the White House turned into a tape recorder
33. (tie) Wired � June 1997 � Apple symbol covered in barbed wire: �Pray�
 Posted by Picasa

35. New York � June 8, 1970 � �Free Leonard Bernst…

35. New York � June 8, 1970 � �Free Leonard Bernstein�
36. People � September 15, 1997 � Black and white Princess Diana photo
37. Details � February 1989 � Cyndi Lauper photo
37. (tie) Fast Company � Aug/Sept 1997 � �The brand called You� � against a Tide background
37. (tie) Glamour � August 1968 � �Best Dressed College Girls� with a black woman as the cover model (first time a black woman appeared on the cover of a national women�s magazine)
37. (tie) National Geographic � October 1978 � Gorilla taking photograph: �Conversations with a gorilla�
37. (tie) Time � April 14, 1997 � Ellen DeGeneres: �Yep, I�m Gay�
 Posted by Picasa