Monthly Archives: ஜூலை 2005

பாக்தாத் திருடன்

tamiloviam ::

இப்பொழுது ராஜா-ராணி கதைகள் திரைப்படமாக கிடைப்பதில்லை. என்றாலும், அதே மாதிரி கதைகளுடன் ஹீரோக்கள் நாடு கடத்தப்பட்டு, கிட்டத்தட்ட அந்தக்கால பன்ச் டயலாக் பேசி மீள்வது – படமாக்கப்பட்டுத்தான் வருகிறது.

1960-இல் வெளிவந்த படம் பாக்தாத் திருடன். ஆடல் அழகி வைஜெயந்தி மாலா ஜரீனாவாகவும் புரட்சிக் கலைஞர் ம.கோ.ரா. அபுவாகவும் இணைந்து நடித்த படம்.

இன்றைய கதாநயகர்களுடன் வலம்வரும் விவேக் போல் அந்தக்கால டி. ஆர். ராமச்சந்திரன்; வஞ்சகத் தளபதி ‘கய்யூம்‘-ஆக அசோகன்; போலி இளவரசர் ‘ஹைதர்‘-ஆக எம். என். நம்பியார்; சத்யராஜ் ஸ்டைலில் நக்கலடிக்கும் பிரதான வில்லனாக டி. எஸ். பாலையா; பிரதான வில்லியாக முதல்வர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா; இளவரசி சுபேரா-வாக எம். என். ராஜம்; நட்சத்திரப் பட்டியல் கொண்ட பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

துணைத் தளபதி அசோகனின் துணையுடன் ராஜ்யத்திற்காக பாலையா அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துகிறார். அரசனும் அரசியும் கொல்லப்படுகிறார்கள். உண்மை இளவரசன் பச்சிளங் குழந்தை ‘அபு’ பசுவோடுக் கட்டப்பட்டு தப்பிக்க வைக்கப்படுகிறார். திருடர் கூட்டத்தினரால் கண்டெடுக்கப்பட்டு வளர்கிறார். ராபின் ஹ¤ட் போல் இருப்பவர்களிடம் இருந்து திருடி, இல்லாதவர்களிடம் கொடுக்கிறார்.

அத்துமீறி அடிமைப்படுத்தி அதிகாரத்தை அளவுக்கு மீறிப் பாய்ச்சும் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தும் வரை தனக்கோ, தன்னுடைய கூட்டத்துக்கோ எந்தவிதமான மகிழ்ச்சியும் கிடையாது என்று சூளுரைக்கிறார் அபு. அனைத்து ஆதரவாளர்களிடமும் ‘திருமணமோ காதலோ செய்யமாட்டேன்’ என்று சத்தியமும் பெற்றுக் கொள்கிறார் ம.கோ.ரா.

அடிமைப் பெண் வைஜெயந்தி மாலாவை அபு மீட்டெடுக்கிறார். போராளிக் கூட்டத்தில் செய்த சத்தியத்தை முதல் ஆளாக மீறி, மணமும் முடிக்கிறார். சகாக்களை சமாதானம் செய்து, நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டி, நிறைய கத்திச் சண்டைகள், சமயோசிதமான திட்டங்களின் மூலம் அசோகன் – நம்பியார் – பாலையா கொண்ட மூவர் கூட்டணியை வீழ்த்தி உரிமையை நிலைநாட்டுகிறார்.

இன்று பார்த்தால் கூட சமீப கால நிகழ்வுகளுடனும் புதுப்படங்களுடனும் ஒப்பிடக் கூடிய திரைக்கதை வசனத்தை எழுதியவர் ஏ.எஸ். முத்து. இளவரசி சுபேரா பல்லக்கில் வெளியே வருவதற்கு முன் நகரவீதிகளில் இருக்கும் டிராஃபிக்கை நிறுத்தி வைக்கும் காட்சி இதற்கு எடுத்துக்காட்டு. செய்த குற்றம் என்னவென்று கேட்பதற்குக் கூட உரிமையில்லாமல்’ தடா போன்ற அடக்குமுறைகளைக் கொண்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள் பொதுமக்கள்.

மருதகாசி நிறையப் பாடல் எழுதியிருக்கிறார். கோவிந்தராஜுலுவின் இசை காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.

தற்சமயத்தில் மட்டும் ரஜினி கீழ்க்காணும் வசனங்களைப் பேசியிருந்தால், முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி குறியீடாகப் பேசியதாக அர்த்தப்பட்டிருக்கும்:
‘அநீதியைச் செய்வது மிருகத்தனம்;
அதைக் கண்டு ஒதுங்குவது கோழைத்தனம்;
எதிர்த்து ஒழிப்பதுதான் மனிதத்தனம்’

என்று தங்கள் சித்தாந்தத்தை முன் வைத்து அறிமுகமாகிறார் புரட்சித் தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன்.

“அதிகார போதையிலே அத்துமீறி நடக்கும் இறுமாப்புக்காரி… மக்களை மாக்களாக மதிக்கும் உன் மமதைகொரு முடிவு கொடுக்கத்தான் வந்திருக்கிறேன்!”
என்று அபு முழங்கும்போது வீட்டில் அடக்கியாளப்படும் கணவன்களுக்கு தாற்காலிகமான அகமகிழ்வும் மனைவியை நோக்கி உதட்டோர புன்முறுவலும் வந்திருக்கும்.

‘சகலகலாவல்லவ’னில் வரும் ‘கட்ட வண்டி… கட்ட வண்டி… காப்பாத்த வந்த வண்டி’ என்பது போன்ற ஹீரோயினை நக்கலடிக்கும் பாடல் இருக்கிறது. மொட்டை பாஸ¤ம், (ஆட்டோவுக்கு பதிலாக) குதிரைக் கும்பலும் அனுப்பப் படுகிறார்கள். பத்து நிமிடத்துக்கொரு தடவை பாடலோ சண்டைக் காட்சியோ இடம் பெறுகிறது. நல்ல மசாலா படத்துக்குரிய இலக்கணம் என்றும் மாறாது.

அரசாங்கமே தண்ணீர் தட்டுப்பாட்டை உண்டாக்குகிறது. ஏமாளி பொதுமக்களிடம் அநியாய விலைக்கு தண்ணீரை விற்கிறது. குடிநீர் வசதி செய்து தர வேண்டிய அரசே பயிரை மேயும் சித்தரிப்புகள் படம் நெடுக சாடப்படுகிறது. தங்கள் கூட்டத்தின் திடீர் கொள்கை பரப்பு செயலாளராக காதலி செரீனாவை அபு அறிமுகம் செய்கிறார். நெடுநாள் விசுவாசிகளிடம் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், காலப்போக்கிலே தலைவியாக ஏற்றுக் கொள்கின்றனர்.

‘தூள்’ விக்ரமைப் போல அபுவும் சுற்றுப்புறச்சூழல் கேட்டினை எதிர்க்கிறார். நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கு பஞ்சதந்திர குள்ளநரியாக வில்லி எம். என். ராஜத்தை மயக்கி மாற்று மருந்தினைப் பெற்று மக்களைக் காப்பாற்றுகிறார்.

புது அமெரிக்க மனைவிகளுக்கு கார் ஓட்டக் கற்றுத் தருவது இந்தியர்களின் வாரயிறுதி பொழுதுபோக்கு. அப்பொழுது ‘என்ன வண்டி ஓட்டுறே…’, ‘உனக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்று சதாய்த்து மகிழ்வது வழக்கம். அதே போல் ஆடலழகி வைஜெயந்தி மாலாவுக்கு கத்திச் சண்டைக் கற்றுத் தந்து சலித்துக் கொள்கிறார் அபு.

பன்ச் வசனங்களை விட்டுவிட்டு பார்த்தாலும் பல இடங்கள் ரசிக்க வைக்கிறது.

  • ‘உன்னைத் திட்டித் திட்டியே என்னுடைய நாக்கில் பாதியைக் காணோம்’
  • அசோகன்: ஒரே கல்லில் இரண்டு பறவை.
    பாலையா: திட்டம் நிறைவேறாவிட்டால் நீதான் மூன்றாவது பறவையாவாய்.
  • ‘திருடனுக்கும் தொண்டனுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுகிறாய்’.
  • ‘நீரில் விளைந்த உப்பு நீராலேயே கரைகிறது’.
  • ‘காலத்தைக் கொண்டு நட்பை எடைபோடுவது கருத்துக்குப் பொருந்தாது’.

    அசல் ராஜா சதாம் ஹுசேனா அல்லது கவர்ந்த அரசன் ஜார்ஜ் புஷ்தானா அல்லது நடுவில் குளிர்காயும் ஒஸாமாவா என்று இன்றைய நிலைமையில் யார் உண்மையான பாக்தாத் திருடன் என்று யோசிக்கும் தருவாயில் மறுமுறை பார்க்க வேண்டிய படம்.

    பாஸ்டன் பாலாஜி

  • மயிலை முண்டகக்கண்ணியம்மன்

    சென்னை: சாலையோர சாமிகளும் குடியேற்ற உளவியலும் :: பெ. நிர்மலா (முனைவர் பட்ட ஆய்வாளர்)

    தென் சென்னையில் வங்கக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மயிலை, இலக்கியங்களில் இடம் பெற்று, பழமை வாய்ந்த ஊராகக் காணப்படுகின்றது. இது கபாலி நகரம், சுக்கிரபுரி, வேதபுரி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு சமயக் கோயில்கள் அமைந்துள்ளன. மயிலை, கயிலைக்கு இணையாகத் தொன்று தொட்டு பேசப்பட்டு வந்துள்ளது. இந்த ஊரின் கிராம தேவதையாக, எல்லையம்மனாக வழிபடப்பட்டு வருவதுதான் முண்டகக்கண்ணி அம்மன் ஆகும்.

    வன்னிய சாதியைச் சார்ந்த பூசாரி, அம்மனுக்கு நீராட்டி, அலங்கரித்து 108 போற்றிகளைக் கூற ஒலிப்பதிவு நாடா இசைக்கருவியில் இருந்து ஓம் என்பது பின்னணியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது முதலியார் சாதியைச் சார்ந்த கபாலி ஓதுவார் என்பவர் தேவாரப் பாடலைப் பாடுகிறார். ஒரே குடும்ப வழியில் இருந்து வந்த ஏழாவது தலைமுறையினர் இப்போது பூசாரிகளாக உள்ளனர். இந்த ஒரே வம்சாவழியைச் சார்ந்த சகோதரர்கள் 15 நாட்களுக்கொரு முறை முறைமாற்றி பூசாரிகளாகச் செயல்படுகின்றனர்.

    பிரேசில் நாட்டிலுள்ள காமின்காங் இனக்குழுவினர், மழை வேண்டுமென்று விரும்பினால், தண்ணீருக்குள் வாயை வைத்துக் கொண்டு ஒலி எழுப்புவார்கள். பின் சிறிதளவு தண்ணீரை கையில் எடுத்துக் கொண்டு அதை உயரே வீசியவாறு இதோ பார் இதைப் போலவே செய் என்று கூக்குரலிடுவார்கள். (ஆ. சிவசுப்ரமணியன், 1988: 29).

    இந்த அடிப்படையிலேயே நீரூற்றும் சடங்கும் ஏற்பட்டிருக்கலாம்.

    நெற்றியில் சிகப்பு குங்குமம் (அ) மஞ்சள் பொட்டிடுதல் பூப்பெய்திய (அ) குழந்தைப் பேற்றின் பொழுது ஏற்படும் குருதியின் அடையாளமாகும் (சு. சண்முக சுந்தரம், 1991: 81)

    திருமணமாகவும், குழந்தைப் பேற்றுக்காகவும் வேண்டிக் கொள்ளும் நாகப்புற்றிலும், நாகத்தோடு தொடர்பு கொண்டுள்ள வேம்பு மற்றும் அரசமரங்களிலும் இவ்வாறு மஞ்சள் குங்குமம் இடுவது எதற்காக என்பது மேற்கண்ட கருத்தின் மூலம் தெளிவாகிறது.

    பாம்பு, லிங்கம் என்பனவெல்லாம் இன்று பாலியல் குறியீடுகளாகவே ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றன.

    சிவன் கதை, லிங்கக் கதை என்பது மொகஞ்சதாரோ சிந்துவெளி, நாகரீகத்தின் காலத்தில் காணப்படுகின்றன என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கு தெய்வாம்சம் கற்பிக்கப்பட்டது என்றாலும், அடிப்படை ஆபாசமான பால் உணர்ச்சியை மையமாகக் கொண்டே, புணர்ச்சி இன்பத்தை, போக ரசத்தை அடிப்படையாகக் கொண்டே அந்த தெய்வீகப் பூச்சு பூசப்பட்டிருக்கிறது.(கி. வீரமணி, 1999: 13)

    கூம்பு வடிவம் என்பது லிங்கத்தின் குறியீடு. (சு. சண்முக சுந்தரம், 1991 : 80)

    “ஊரார் உறங்கட்டண்டி பெண்ணே
    உன் புருஷன் தூங்கட்டன்டி
    நல்ல பாம்பு வேசம் கொண்டு பெண்ணே
    நான் வருவேன் சாமத்திலே
    என்ற நாட்டுபுறப் பாடலிலும்”

    அர்ச்சுனன் பாம்பு வடிவம் எடுக்க கிருஷ்ணன் பிடாரனாகி அல்லியிடம் பாம்பை அடைக்கலமாக விட்டுச் செல்கிறான். அல்லியும் அப்பாம்பை விருப்பத்துடன் வாங்கிக் கொள்கிறாள். இரவில் பாம்பு அவளைப் புணர்கிறது. இது அல்லி அரசாணி மாலையில் இடம் பெற்றுள்ளதையும்,

    ஒரு ஊர்ல ஒரு அம்படையாள் பொண்டாட்டி ரெண்டு பேரும் இருந்தாங்க. அந்தப் பொண்டாட்டி ஒரு பாம்ப கள்ளப் புருஷனா வச்சிருந்தா. அந்த ஊர்ல இருக்கிற கொளத்தாங்கரையில ஒரு அரசமரம் இருந்தது. அந்த அரச மரத்து பொந்துலதான் அந்தப் பாம்பு வாழ்ந்துகிட்டு இருந்தது… (சு. சண்முக சுந்தரம், 1991 : 65)

    தோட்டுக்காரி அம்மன் கதைப்பாடலில் குழந்தைப் பேரற்ற மந்திரப் பூமாலை காணும் கனவு பின்வருமாறு:-

    “தெய்வ லோகப் பொற்கிளிதான்
    திருமடியில் வரவுங் கண்டாள்
    பாம்வரவம் மடியேறிப் படம்
    விரித்ததாடக் கண்டாள்……”

    இதில் பாம்பரவம் மடியேறுதல் என்பது உடலுறவின் குறியீடே ஆகும்.

    ஹராப்பாவில் கிடைத்த முத்திரை ஒன்றில் தலைகீழாக நிற்கும் நிர்வாணமான பெண்ணொருத்தியின் கருப்பையிலிருந்து செடியன்று வளர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. (ஆ. சிவசுப்பிரமணியன், 1988 52)

    தாய்த்தெய்வ வழிபாட்டினடிப்படையாக, இங்கு கும்பம் என்பது பெண்ணின் பிறப்புறப்பு குறியீடாகவே அமைகிறது. மேலும், சிவசுப்ரமணியன், தாராசுரம் எனும் ஊரில் கோவிலில் உள்ள சக்ராயி எனும் தெய்வத்தைப் பற்றிக் கூறும் பொழுது,

    “இத்தெய்வத்தின் சிற்பமானது நிர்வாணமாகவே அமைந்துள்ளது. உட்கார்ந்த நிலையில் கால்களை அகலமாக விரித்துக் கொண்டு, பெண் குறியினைக் காட்டிய நிலையில் இச்சிற்பம் காட்சியளிக்கிறது. மனிதத் தலைக்குப் பதிலாக மலர்ந்த தாமரை மலர் தலையாக வடிக்கப்பட்டுள்ளது.”

    இக்கோயிலிலும் முண்டகக்கண்ணியின் உருவமாக, உடல் போன்ற தூணும், தலை இருக்க வேண்டிய இடத்தில் தாமரை மொட்டுப் போன்ற வடிவமும் காணப்படுகிறது.

    முளைப்பாரி என்பது ஒரு செழிப்புச் சடங்காகும். இது தானியச் செழிப்பை மட்டுமின்றி, மானிடச் செழிப்பையும் தூண்டுவதாகும். குழந்தை வேண்டுவோர், முளைப்பாரி வைத்து, இக்கோயிலில் நாகப் பிரதிஷ்டை செய்கின்றனர். சில கிராமங்களில் முளைப்பாரிச் சடங்கின் போது, கும்பம் வைத்து அதைச் சுற்றி நின்று பெண்கள் கும்மியடிப்பர். இங்கு கும்பம் என்பது கருப்பையின் குறியீடு. இப்பொழுது நாகவழிபாட்டின் போது (பிள்ளை வேண்டி) முளைப்பாரிச் சடங்கு ஏன் நடத்தப்படுகிறது என்பது புலனாகிறது. கும்பம் பெண்ணின் கருப்பை குறியீடாகவும், அதிலுள்ள நீர் விந்துவின் குறியீடாகவும் கொள்ளலாம். இதுவும் ஒரு பாவனைச் சடங்கே. தானியங்கள் எவ்வாறு செழித்து, முளைத்து வருகிறதோ அதுபோல குழந்தை கருப்பையில் முளைக்க வேண்டும் என்பதே ஆகும். இச்சடங்கே மாரியம்மன் கோவில்களில் மழைவேண்டிச் செய்யப்படும் சடங்காகவும் அமைகிறது.

    பலியிடுதல் சடங்கு தற்போது இங்கு தடைசெய்யப்பட்டிருப்பினும், இதற்கு முன்னர் நடைபெற்றே வந்துள்ளது. இது அச்சத்தின் காரணமாக எழுந்ததாகும். தன் உயிருக்கும், தன்னைச் சார்ந்தவர்களின் உயிருக்கும் ஈடாகப் பிற உயிரை பதிலாக அளித்து, துன்பத்தில் தீமையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியே ஆகும்.

    கிராமங்களில் உப்பும், மிளகும் கொண்டு வீட்டைச் சுற்றித் தூவுவர். ஏனென்று காரணம் கேட்டபின், இதைத் தாண்டி பாம்பு வராது. இதன் அருகில் கூட அது வராது. எனவே, பாதுகாப்புக் கருதி அவ்வாறு போடப்டுவதாகக் கூறுகின்றனர். இவ்வாறிருக்கையில் கோயிலில் பாம்பு உலவும் புற்றின் அருகே ஏன் போடப்படுகிறது? அக்காலங்களில் கோயில்கள் அடர்ந்த புதர் நடுவிலும், செடிகொடிகள் நடுவிலும் இருந்து வந்ததால் பாம்பிற்குப் பயந்து இச்செயலை மக்கள் செய்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இதற்கான காரணம் மறைந்து, வேறு காரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீட்சியாகத்தான் இச்சடங்கு இன்றும் நிறுவனமயமாக்கப்பட்டச் சமயக்கோயில்களிலும், தமிழகத்திலுள்ள கிறித்துவ மாதா கோயில்களிலும் நடைபெற்று வருகிறது.

    “ஆவியுலகக் கோட்பாடு ” என்ற அடி நிலையில் தோன்றிய சமய நம்பிக்கை, அதன்படி மலர்ச்சி நிகழ்வில் இறுதியாக ஒரு கடவுள் வழிபாடு என்ற உச்சநிலையை அடைந்தது. (சீ. பக்தவச்சல பாரதி, 1990 : 503)

    சென்னை, கலைஞர் கருணாநிதி நகரைச் சார்ந்த லட்சுமி என்ற பெண்மணி அம்மன் பற்றிக் கூறும்பொழுது, “முண்டக்கண்ணி அம்மா கூழ் குடித்துவிட்டு இங்கே படுத்தாளாம். அப்படியே குளிர்ந்து விட்டாளாம்” என்றார்.

    இன்றும் கிராமங்களில் அம்மை கண்டு இறந்தவரை, இறந்துவிட்டார் என்று கூறாமல் குளிர்ந்து விட்டார் என்றே கூறுவர். இவ்வாறு கூறுவது விலக்கு (Taboo) ஆகும்.

    “விலக்கு என்பது ஒரு எதிர்மறைத் தடுப்பாணையாகும். அதாவது சிலவற்றினைச் சொல்லக் கூடாது, செய்யக்கூடாது, தொடக்கூடாது என்பது போன்ற தடுப்பாணைகளைக் குறிப்பதாகும். இத்தடையை மீறினால் மனித (அ) இயற்கை கடந்த சக்தியினால் தண்டிக்கப்படுவர்”. (ஆ. செல்ல பெருமாள், 1998 : 1)

    “செங்கல் (அ) கல்லொன்றினை தாம்பாளத்தில் வைத்து, அதனை இறந்தவராக உருவகித்து, பால், தேன், இளநீர், எண்ணெய், தண்ணீர் ஆகியவற்றை அதன் மீது தனித்தனியாக ஊற்றி, திருநீராட்டு நிகழ்த்துவர். பின்னர் வழிபாடு செய்து நீர்நிலையில் விடுவர். இதனைக் கருமாதி (அ) கல்லெடுப்பு” என்று குறிப்பிடுவர்.
    (சு. சண்முக சுந்தரம், 1993 : 19)

    பார்வை நூல்கள்

    1. சண்முக சுந்தரம்.சு, 1991 – நாட்டுப்புறவியல் உளவியல் பார்வை.

    2. சண்முக சுந்தரம். சு, 1993 – சுடலை மாடன் வழிபாடு சமூக மானிடவியல் ஆய்வு

    3. சிவ சுப்பிரமணியன், ஆ 1988 – மந்திரமும் சடங்குகளும்

    4. செல்ல பெருமாள். ஆ., 1998 – சமூக மானிடவியல்

    5. செம்பொற் செவ்வேள் 1997 – முண்டகக்கண்ணி முப்பது

    6. பஞ்சாங்கம் . ப., 1994 – பெண்ணென்னும் படைப்பு

    7. பக்தவச்சல பாரதி 1990 – பண்பாட்டு மானிடவியல்

    8. வீரமணி. கி., 1999 – சக்தி வழிபாடு.

    திண்ணை (ஜூலை 22)

    கருணைக் கடவுள் குஆன்யின் :: ஜெயந்தி சங்கர்

    லதா ராமகிருஷ்ணன்:: கோபிகிருஷ்ணன்

    எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் மறைந்து இரண்டு வருடங்களாகின்றன.

  • ஒவ்வாத உணர்வுகள்.
  • முடியாத சமன்.
  • உணர்வுகள் உறங்குவதில்லை.
  • மானுட வாழ்வு தரும் ஆனந்தம்.
  • தூயோன்.
  • இடாகினிப் பேய்களும் – நடைப்பிணங்களும்.
  • சில உதிரி இடைத்தரகர்களும் முதலான சிறுகதைத் தொகுதிகள் (இதில் உணர்வுகள் உறங்குவதில்லை – குறுநாவல் தொகுதி).
  • உள்ளேயிருந்து சில குரல்கள் – என்ற நாவல் மற்றும் பல கட்டுரைகளும், மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும்

    எழுதியிருக்கும் கோபிகிருஷ்ணன் பல்வேறு சமூக நல நிறுவனங்களில் பணியாற்றியவர். அவற்றின் வழி எளிய மக்களுக்கு உதவிகள் கிடைப்பதில் எத்தனை இடர்ப்பாடுகள் இருக்கின்றன என்பதை அனுபவ ரிதியாகத் தெரிந்து கொண்டவர். அவர் படைப்புலகின் பிரதான இரண்டு கருப்பொருட்களாக சமூக நல நிறுவனங்களில் நிலவி வரும் பாசாங்குகளும், சீர்கேடுகளும், மற்றும் உளவியல் மருத்துவத் துறையில் நிலவி வரும் குறைபாடுகளும், மனித விரோத அணுகுமுறைகளும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

    இந்த வருடம் ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் நடந்தேறிய கோபிகிருஷ்ணன் நினைவு நாள் கூட்டத்தில் ஏறத்தாழ 30 வருடங்களாக மூளைவளர்ச்சியற்ற குழந்தைகளின் நலனுக்குப் பணியாற்றி வரும் ஜலாலுதீன் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவருக்கு ஒரு எளிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    கடந்த பதினைந்து வருடங்களாக கூத்துப் பட்டறைக் கலைஞராகவும், வீதி நாடகக் கலைஞராகவும் இயங்கி வரும் ஜெயராவ் கோபிகிருஷ்ணனின் ‘முடியாத சமன் என்ற சிறுகதையை மேடையில் உணர்ச்சிகரமாக நடித்தார். நாடகத்தை குறுகிய காலத்தில் திறம்பட இயக்கியிருந்தவர் வெளி ரங்கராஜன். எழுத்து வடிவிலான ஒரு படைப்பு நாடக வடிவம் ஏற்கும் போது அதன் வாசக வட்டம் பன்மடங்காக விரிவடைகிறது.

    கோபிகிருஷ்ணன் எழுதிய ‘சமூகப் பணி, அ – சமூகப்பணி, எதிர் – சமூகப் பணி‘ என்ற சமூகப் பணியாளர்களின் கையேடாகக் கொள்ளத்தக்க – சிறு நூலின் ஆங்கில வடிவம் அன்று எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.


    பி.கே. சிவகுமார் :: சுகுமாரனின் திசைகளும் தடங்களும்

    பட்டுப்பட்ட பலாமரம் தழைக்கப் பாடி ஒரு படி திணையைக் கொடையாகப் பெற்ற அவ்வையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே அவ்வை, நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து பங்குக்கு மூன்று பழம்தர வேண்டுமென்று பனைமரம் துளிர்க்கப் பாடியப் பாடலும் தமிழில் உண்டு. தம் குலத்தின்மேல் நூலொன்றை ஒட்டக்கூத்தர் பாடவேண்டுமென்று தம் தலைகளைப் பரிசாகக் கொடுத்தோர் தலைகள் மீதமர்ந்து அவர்கள் உயிர்பெற ஒட்டக்கூத்தன் பாடிய பாடலும் உண்டு.

    உயிர்களை உயிர்ப்பிக்கின்றனவோ இல்லையோ, மனம் என்கிற பிரபஞ்சத்தின் பல்வேறு ஆழ அகலங்களைத் தொட்டுத் துழாவி அதனுள் துயில் கொண்டிருக்கும் பல்வேறு உணர்வுகளையும் சஞ்சலங்களையும் கனவுகளையும் பலவீனங்களையும் நிராசைகளையும் வெறுமையையும் சந்தோஷத்தையும் துயரத்தையும் கண்டுணர்தலையும் இன்ன உணர்வென்று நமக்கே தெரியாத இன்னபிற உணர்வுகளையும் உயிர்ப்பிக்கிற – அடையாளம் கண்டுகொள்ள உதவுகிற – காரியத்தை ஒரு நல்ல எழுத்தால் செய்ய முடியும் என்பதைச் சொல்கிற உருவகங்களாக (metaphor) இக்கதைகள் அமைந்துள்ளன.

    சில எழுத்தாளர்களைப் படிக்கும்போது உண்டாகிற ஆனந்தம், பரவசம் இவற்றுடனேயே நம்முடைய வாசிப்பு எவ்வளவு குறுகியது என்ற குறுகுறுப்பும் எழும். அந்தக் குறுகுறுப்பு இன்னும் தீவிரமாக வாசிக்கத் தூண்டுகிற ஆர்வமாகவும் உருவெடுக்கும். இத்தொகுதியில் உள்ள கட்டுரைகளை “எழுதப்பட்ட காலத்துடனும் சூழலுடனும் ஓர் ஆர்வலன் மேற்கொண்ட எதிர்வினைகள்” என்று சுகுமாரன் அடக்கமாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார். எதிர்வினை என்ற சொல்லுக்குத் தமிழ் மனதில் ஓர் எதிர்மறையான பொருள் குடிகொண்டுவிட்டதோ என்ற கேள்வி எனக்கு உண்டு. விவாதம், சண்டை, உருப்படியாக ஒன்றும் செய்யாமல் அடுத்தவரைக் கேள்வி கேட்டல், கிண்டல் செய்தல் என்ற பொருள்களில் அல்லாமல், எதிர்வினை என்பது கிரியேடிவ்வாகவும் கவித்துவமாகவும் இருக்கமுடியுமென்பதை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன.

    தமிழ் இலக்கியம், பிற இந்தியமொழி இலக்கியங்கள், வெளிநாட்டு இலக்கியங்கள், சங்கீதம், ஓவியம், சினிமா, சமூகம் என்று ஏழுபிரிவுகளில் சுகுமாரன் எழுதிய 31 கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன. நெஞ்சின் அடிப்பரப்பில் சுடர்விட்டு எரிந்தபடி, வாழ்வின் காண்கிற காட்சிகளை இதனுடன் முடிச்சிப் போட்டொ, முரண்பட்டுப் பொருத்தியோ பார்க்கச் சொல்கிற ஆழமான சலனங்கள். தூக்கத்தில் காண்கிற கனவில்கூட இச்சலனங்கள் எழுப்புகிற காட்சிகள் இடம்பெறுகிற அளவுக்கு அவை நம்மையுமறியாமல் நம்மை பாதித்திருக்கும். அத்தகைய ஆழமான சலனங்களை ஏற்படுத்தவல்லவை இதில் உள்ள பல கட்டுரைகள்.

    நவீன கவிதை, வடிவ ரீதியான மாற்றம் மட்டுமல்ல. காலநிகழ்வுகளின் இயக்கத்தால் உணர்வில் நேர்ந்த மாறுதல்” என்று சுகுமாரன் எழுதும்போது அதுவே கவிதைமாதிரி தெரிகிறது. “பிச்சமூர்த்தியின் கவிதை மனத்தில் அடிப்படையாக நின்ற வாழ்க்கைப் பார்வை ஆன்மீகம் சார்ந்தது. வாழ்க்கை முதன்மையானது. கலை முதலிய யாவும் இரண்டாம் பட்சமானதே” என்று பிச்சமூர்த்தி கொண்டிருந்த நம்பிக்கை ஆகியவற்ற்றின்மீது வெளிச்சம் காட்டி, தமிழ்க் கவிதையின் கற்பனாவாத மரபுக்கும், புதிய போக்குக்கும் இணைப்புக் கண்ணியாக நின்றவர் பிச்சமூர்த்தி என்று அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர்.

    நவீன கவிதைக்கும் (“ஐரோப்பிய மைய வாதத்தைப் பின்புலமாகக் கொண்டது, அவை நமது மரபு சார்ந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டன” என்கிறார்), பின்நவீனத்துவக் கவிதைக்கும் (“விரிவடைந்த மொழிவட்டம், வாழ்வனுபவத்திலிருந்து நிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமல்ல என்ற நிலைப்பாடு உடையது, அகம் புறம் என்ற வேறுபாடுகளைத் தவிர்த்தது” என்கிறார்) உள்ள வேறுபாட்டைச் சுகுமாரன் விவரிக்கிற இடம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல – யோசிக்கத்தக்கதாகவும், என்னளவிலே புதுமையானதாகவும் இருந்தது.

    கலாப்ரியாவின் கவிதைகளைச் “சாதாரணனின் கலகம்“, “பார்வையாளனின் பதற்றம்” ஆகிய சூத்திரங்களின் அடிப்படையில் சுகுமாரன் விளக்குகிறார். கலாப்ரியாவின் எம்பாவாய் என்ற கவிதையை மரபின் மீறலுக்கும் மொழியின் மாற்றத்துக்கும் உதாரணம் என்று சுகுமாரன் சுட்டிக் காட்டுவதைப் படித்தபோது, நவீனக் கவிதையைப் புரிந்து கொள்ள மரபில் அறிவும் அனுபவமும் வேண்டும் என்கிற துணைப்பாடமும் வாசகர்களுக்குக் கிடைக்கிறது.

    இந்தியத்துவமும் சமகால அறிமுகமும் என்கிற கட்டுரையில் பாரதியின் இந்தியத்துவம் இரு பக்கம் கொண்ட நாணயம் என்கிறார். தமிழ்த்தன்மை ஒரு பக்கம், இந்தியத் தன்மை இன்னொரு பக்கம். இந்தியத்துவம் என்பதை ஓர் உணர்வாக – கருத்தாக அல்ல – என்று சுகுமாரன் வரையறுப்பது, இந்திய தேசியவாதிகளும் தமிழ் தேசியவாதிகளும் கவனிக்கத்தக்க ஓர் அம்சமாகும். மேலும் சுகுமாரன் சொல்கிறார்:

    “எந்த மொழியின் இலக்கியமும் அது பிறந்த மண்ணின் இயல்புகளையே பிரதானமாகக் கொண்டிருக்கும். அது சருமம். அதன்மீது படியும் வேறு இயல்போ மேலாடை. தமிழ்க் குணத்தின்மீது கவியும் இந்தியத்துவம் அல்லது பிறமொழி இயல்புகளின்மீது கவியும் இந்தியத்துவம் இது போன்றது என்று கருதுகிறேன்”.

    இந்தியத்துவம் என்ற உணர்வை நவீனமானது என்றும், தற்காலத் தன்மை கொண்டது என்றும் சுகுமாரன் குறிப்பிடும்போது, அவருள்ளே இருக்கிற விசாலமான இலக்கிய மனமும் பிரபஞ்சம் தழுவிய கவிதை நெஞ்சும் இந்த முதிர்ச்சியான பார்வைக்கு வித்திட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.

    பஷீருடனான சுகுமாரனின் அனுபவம் ரஸமாக இருக்கிறது. பஷீர் முன்னிலையில் “நான் பேச வந்தவன் அல்ல, பஷீர் பேசுவதைக் கேட்க வந்தவன்” என்று அவர் உணர்ந்தது மாதிரி இன்னோர் எழுத்தாளர் முன் நான் உணர்ந்திருக்கிறேன். எழுத்தாளர்களைச் சந்திக்கச் செல்கிற சமீபகால வாசகர்கள், தாங்கள் விரும்பிப் படிக்கிற எழுத்தாளரிடம் தங்கள் அறிவுஜீவிதத்தைக் காட்டுகிற ஆசையுடன் – பெற்றோர் முன் வித்தையைக் காட்டுகிற குழந்தை மாதிரி இது – கண்டதையும் பேசவும் கேட்கவும் செய்ய, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே இடைவெளி தேவை என்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி யாரேனும் சொல்லப் போனால், எப்படி அவர் இடைவெளி தேவை என்று சொல்லலாம் என்றும் வாசகர்கள் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்கள். ஓர் எழுத்தாளர் வாசகரிடம் இடைவெளி எதிர்பார்ப்பதற்கான காரணிகள் என்ன என்பதை வாசகர் மனம் ஆழ்ந்து சிந்திப்பதில்லை. பஷீர், தகழி ஆகியோரைச் சந்தித்த அனுபவங்களை சுகுமாரன் எழுதியிருப்பதைப் படித்தபோது, ஓர் எழுத்தாளரின் சுதந்திரத்தையும், கருத்தையும் மதித்து எழுத்தாளரை அதிகம் பேசவிட்டுக் கேட்கிற வாசகராக எப்போதும் அவர் இருந்து வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த முதிர்ச்சி அவரும் ஓர் எழுத்தாளராக இருப்பதால் வந்திருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.

    ஆனி ·ப்ராங்க்கின் டயரியைப் பற்றியும், வின்சென்ட் வான்கோவைப் பற்றியுமான விரிவான அறிமுகக் கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன.

    “நீ ஓவியர்களை மிகவும் நேசிக்கிறாய். நான் சொல்லட்டுமா, மனிதர்களை நேசிப்பதைவிட மகத்தான ஒரு கலையும் இல்லை”

    என்று வான்கோவின் ஒரு கடித மேற்கோளில் இருந்து அட்டகாசமாகத் தொடங்குகிற அந்தக் கட்டுரை ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனைப் பார்க்கிற பார்வையாகும். தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்கள் பிறமொழி அல்லது தனக்குப் பிடித்த கலைஞர்களைப் பார்க்கும்போதும் (எழுதும்போது) அவர்களைச் சுதந்திரமானவர்களாகவும், கலகக்காரர்களாகவும் மட்டும் பார்ப்பதில்லை. மனிதர்களுக்கும் கலைஞர்களுக்கும் உரிய பலவீனமும் நெகிழ்ச்சியும் உடையவர்களாகவும், கருத்தியல் ரீதியான இறுக்கங்களைச் சுமக்காதவர்களாகவும் பார்த்து அவர்களை மதிப்பிடுகின்றனர். இது சரியான வழிமுறைதான். ஆனால், இதே அளவுகோலை தமக்குப் பிடிக்காதவர்களுக்கோ அல்லது தமிழ்ச் சூழலுக்கோ அவர்கள் பொருத்திப் பார்ப்பதில்லை. ஆனால், சுகுமாரன் வான்கோவைப் பற்றி எழுதும்போதும், பசுவய்யாவைப் பற்றி எழுதும்போதும், பஷீரைப் பற்றி எழுதும்போதும், கே.எம். ஆதிமூலத்தைப் பற்றி எழுதும்போதும், ஜான் ஆப்ரஹாமைப் பற்றி எழுதும்போதும் அவர்களை நேர்மையுடனும் அதே அளவுகோல்களுடனும் அணுகுகிறார். அதற்குக் காரணம் சுகுமாரன் தன்னுடைய மதிப்பீடுகளை ரசனை, உள்ளுணர்வு, தன்னுள் தொடரும் தேடல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கிறார். .

    கொஞ்ச நாட்களுக்கு முன் ஓர் இணையக் குழுவில் “சிதம்பரம்” மலையாளத் திரைப்படம் பற்றிய ஒரு விவாதம் ஓடியது. அந்தப் படம் புரிந்தது என்று சிலரும், ஒன்றுமே புரியவில்லை, கலைப்படம் என்றால் இதுதானா என்று கிண்டலாக சிலரும் எழுதியிருந்தார்கள். இத்தொகுப்பில் அப்படத்தைப் பற்றிய ஓர் அருமையான கட்டுரை இருக்கிறது. அக்கட்டுரையைப் படித்தவுடன் சிதம்பரம் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவல் அதிகமாகி இருக்கிறது. அந்தப் படம் என் சிற்றறிவுக்குப் புரியாமல் போகாது என்ற நம்பிக்கையை அந்தக் கட்டுரை எனக்குக் கொடுத்தது.

    சமூகம் என்ற பிரிவில் பெத்தாபுரத்தில் நடக்கிற விபசார சந்தை பற்றியும், கூவாகத்தில் நடக்கிற அலிகளின் திருவிழா பற்றியும், கேரளப் பழங்குடி மக்களின் போராளி ஜானு பற்றியுமான விவரமான கட்டுரைகள் இருக்கின்றன. சுகுமாரன் என்கிற கவிஞரின், ரசனையாளரின் உள்ளிருக்கும் சமூகப் பிரக்ஞை, சக மனிதர்கள் மேலான அக்கறை ஆகியவற்றை அக்கட்டுரைகள் சிறப்பாக வெளிக்கொணர்கின்றன. இத்தொகுப்பில் இருக்கிற சில கட்டுரைகள் சுகுமாரன் குங்குமம் வார இதழில் பணிபுரிந்தபோது அதிலே வெளிவந்தவையாம்.

    (திசைகளும் தடங்களும்சுகுமாரன் – அன்னம்/அகரம்)

  • வலைப்பதிவரின் வாழ்க்கைச்சுழல்

    1. வலைப்பதிவுகளுக்குள் தடுக்கி விழுதல்

    2. தொடர்ச்சியாக ஒரு சில வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தல்

    3. பின்னூட்டமிட தொடங்குதல்

    4. வலைப்பதிவுக்கு காள்கோளிடுதல்

    5. எவ்வளவு பேர், எப்பொழுது வந்தார்கள், எத்தனை தடவை, எப்படி வரவழைத்தோம் என்று புள்ளி விவரப் புள்ளியாக மாறுதல்

    6. எதைப் பார்த்தாலும் இது வலைப்பதிவுக்குப் பொருந்துமோ என்ன்னும் சிந்தனை மேலோங்குதல்

    7. மாற்றுக் கருத்தை இடித்துரைப்பதாலும் தனி மனிதத் தாக்குதலினாலும் புலம்புதல்

    8. வலைப்பதிவுக்கு மூடுவிழா நடத்துதல்

    9. மூன்று நாளுக்குள் ரசிகர்களின் பேராதரவுக்கிணங்க சொந்த மனையில் புது அவதாரம் எடுத்தல்

    10. சுட்டி கொடுத்து நிறைய வாசகர் உள்ள வலைப்பதிவர்களின் கவனத்தை ஈர்த்தல்

    11. வலைப்பதியும் சகாக்களை கண்டம் விட்டு கண்டம் சென்று அளவளாவுதல்

    12. செய்திகளையும் சொந்த அனுபவங்களையும் எழுதுவதை நிறுத்திவிட்டு, இன்ன பிற வலைப்பதிவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் பற்றி மட்டுமே கிறுக்குதல்

    13. மீண்டும் #7 முதல் #12 சுழலுதல்

    14. #12-காக பிற பதிவுகளில் பழியாகக் கிடந்ததால், வேலையை இழத்தல்

    15. புத்தம்புதிய கொந்தி அணிந்து பிறிதொரு பதிவைத் தொடங்குதல்

    மறுப்புக்கூற்று: இந்தப் பதிவு என் சொந்த அனுபவத்தில் எழுதப்பட்டதல்ல 🙂

    நன்றி: MinJungKim.com – Braindump v 5.0 :: Lifecycle of Bloggers (வழி: எஸ் கே)

    திண்ணை

    பாவண்ணன் ::

    மானுட வாழ்வின் ஆனந்தம் (வெளி ரெங்கராஜனின் “இடிபாடுகளுக்கிடையில்”)

    குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து மனிதர்களிடையே பெருகிய பரிவையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்கிறது ஒரு கட்டுரை. தடைசெய்யப்பட்டுவிட்ட கர்பா நடனத்தின்மீது குஜராத் கிராமத்துப் பெண்களுக்கு இருந்த அளவுகடந்த ஈடுபாட்டை முன்வைக்கிறது இன்னொரு கட்டுரை. ஒரு பத்திரிகை நிரூபரின் தற்கொலைக்காகப் பரிவு காட்டாத உலகத்தின் அலட்சியம், தாய்மொழிக்கல்வியின் அவசியம், நகுலன், கோபிகிருஷ்ணன், தி.ஜானகிராமன் போன்றோரின் இலக்கியப் படைப்புகள் தந்த வாசிப்பனுவபங்கள், அவ்வப்போது நிகழ்த்தப்படுகிற கூத்துகள், நாடகங்கள், ஆய்வரங்குகள் ஆகிய நிகழ்வுகள் ஊட்டிய சிந்தனைகள் என விதம்விதமான தளம்சார்ந்தவையாக கட்டுரைகள் உள்ளன.

    முடிவின் நிச்சயமின்மைதான் விளையாட்டுக்கு ஓர் ஆர்வத்தைத் தருகிறது. பலவிதமான கணக்குகள் ஒவ்வொருவர் மனத்திலும் சுழன்றபடியிருக்க, வெற்றி தோல்விகள் மாறிமாறி இடம்பெயர்ந்தபடி இருக்கும். உண்மையில் விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களை இந்த வெற்றி தோல்விகள் அதிகம் பாதிப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் தற்செயலானவை. அவ்வளவுதான். விளையாட்டில் உண்மையான திளைப்பே ஆட்டக்காரனுக்கு அளவற்ற ஆனந்தம் தருகிறது.

    விளையாட்டு மட்டுமல்ல, இலக்கியம், நாடகம், கூத்து, இசை என கலைசார்ந்த துறைகளாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இந்தத் திளைப்பு முக்கியம். இத்திளைப்புதான் மானுட வாழ்வில் எஞ்சியிருக்கும் ஒரே ஆனந்தம். ஒன்று நம்மைக் கடந்துபோக அனுமதித்தபடி நாமே உடகமாக நின்றிருக்கும் ஆனந்தம். இக்கட்டுரைத் தொகுப்பில் எல்லா இடங்களிலும் ரெங்கராஜன் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் இந்த ஆனந்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.


    ஏ.எம். றியாஸ் அஹமட்

    புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01

    பூகோளமயவாதம் என்ற போர்வையுள் பல்தேசிய நிறுவனங்கள் நடத்துகின்ற வியாபாரம் ஒரு அழித்தொழிப்பு யுத்தமாகவே கண்ணுக்குப் புலனாகாமல் நடந்து கொண்டிருக்கிறது.

    காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு காலனியப்பட்ட நாடுகளின் பௌதிகச் சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதை விபா¤ப்பதாக சூழலியல் ஏகாதிபத்தியம் என்ற பதம் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இப்பதம் முதன் முதலில் அலபிறெட் டபிள்யு. குறொஸ்பி (Alfred W. Crosbey) என்பவரால் பயன்படுத்தப்படடிருக்கின்றது.

    நவகாலனித்துவச் சூழலியல் ஏகாதிபத்தியம், கல்வி, தொடர்புசாதனம், தகவல் தொழில்நுட்பம், சூழலியல், ஆங்கில மொழி எனப் பல்வேறு வடிவங்களில் தனது பொல்லாச் சிறகினை விரித்துக் கொண்டிருக்கிறது. “புதிய உலக ஒழுங்கு”, “பூகோளமயவாதம்” என்ற மாயப் பெயர்களையும் சூடிக்கொண்டிருக்கிறது.


    வடு – கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை ::

    தழும்புகளின் பதிவுகள் – பாவண்ணன்

    முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள் பெருமளவில் வாழும் ஊர் இளையான்குடி. அவ்வளவாக சாதி வேறுபாடு பார்க்காதவர்கள். தலித் மக்களுடன் சேர்ந்து பழகுவதில் அவர்களுக்கு எவ்விதமான மனத்தடையும் இல்லை. மற்ற ஊர்கள் சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள். மணமக்கள் ஊர்வலமாக இருந்தாலும் சரி, சவ ஊர்வலமாக இருந்தாலும் சரி, தம் ஊர்த் தெருக்கள் வழியாக செல்லக்கூடாது என்பதில் உறுதியைக் கடைப்பிடிப்பவர்கள்.

    நேர்மையைவிட சாதியுணர்வை முக்கியமாக நினைக்கப்படுவதற்கு முதல் சம்பவம் எடுத்துக்காட்டு. நன்றியுணர்ச்சியைவிட சாதியுணர்வால் மனத்தை நிறைத்துவைக்கத் தலைப்பட்ட வாழ்க்கைக்கு இரண்டாவது சம்பவம் எடுத்துக்காட்டு. சகஜமாக வெளிப்படவேண்டிய / பின்பற்றப்படவேண்டிய நேர்மை, நன்றி ஆகிய குணங்களைக்காட்டிலும் கூடுதலான அளவில் மனிதர்கள் முக்கியத்துவம் வழங்குகிற சாதியின் குரூர முகங்களின் இறுக்கத்தை இவை சுட்டிக்காட்டுகின்றன. மனிதாபிமானத்துக்கு எதிரானதாக சாதி எப்படி காலம்காலமாக மனிதர்களை தகவமைத்து வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன்மூலம் சமூகத்தின் கட்டுமானத்தை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

    நாலணா கூலிக்குக் களையெடுப்பதற்கு தன்னோடு அழைத்துச்சென்றும் தான் விறகுவெட்டிக் குவிக்கும்வரை நிழலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு தலைச்சுமையோடு வீட்டுக்குத் திரும்பும் சின்னம்மா பெரியம்மாக்களின் அன்பைக் குறிப்பிடும் விதமும் முக்கியமானவை.

    அ. ராமசாமி

    தீராநதி ::

    நோய்க் கூறுகள் நிரம்பிய சுதந்திர இந்தியாவின், குறிப்பாக, தமிழ்நாட்டின் நிகழ்காலச் சீர்கேடுகளுக்கான காரணங்களைப் பற்றிப் பேசும் அவரது படங்கள் – ஜெண்டில்மேனில் தொடங்கி இந்தியன், முதல்வன் வரை – எதிலுமே தமிழ் நாட்டுக் கிராமங்களைப் பற்றிய நினைவு வெளிப்பட்டதில்லை. அந்த வரிசையில் ஒரு புதுப்படமாக இல்லாமல் அவற்றின் தொடர்ச்சியாக வந்துள்ள அந்நியன் முற்ற முழுதாகக் கிராமத்தை மறந்த, கிராமத்தை மறுத்துள்ள ஒரு படம்.

    அய்யங்காரின் சாகசங்கள்தான் அந்நியன்.

    சோம்பேறி இளைஞன், படத்தின் தொடக்கத்தில் அம்பியின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த விட்டு, அவனது பின்கட்டுக் குடுமியைக் கேலி செய்து விட்டுப் போனவன் என்று காட்டுவது கவனித்திருக்க வேண்டிய ஒன்று. திராவிட இயக்கம் செய்த தீவிர எதிர்ப்புப் பிரசாரத்தால், பிராமணர்களின் அடையாளங்களான பூணூலும் பஞ்சகச்சமும் பின்கட்டுக் குடுமியும் கேவலமான அடையாளங்களாகப் பேசப்பட்டன என்பதும், தயிர்சாதமும் ஊறுகாயும் கேலிக்குரிய உணவுப் பொருட்களாகச் சித்திரிக்கப்பட்டன என்பதும் சென்ற நூற்றாண்டின் தமிழக வரலாற்றுக்காட்சிகள். (அடிவாங்கும் போது தன்னுடைய உடம்பு தயிர்சாதம் சாப்பிட்ட உடம்பு; அடியைத்தாங்கும் வலிமை அதற்கு இல்லை என்று அம்பி கூறுவதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்)

    இந்த வரலாற்றுச் சொல்லாடல்களின் போது, பிராமணர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள் அல்ல; வடநாட்டிலிருந்து வந்தேறிய குடிகள்; இன்னும் சொல்வதானால் இந்திய நாட்டிற்கே அந்நியர்கள்தான் என்றெல்லாம் வாதங்கள் நடந்தன.இந்தப் பின்னணியில் ஷங்கரின் படத்தைப் பார்க்கத் தொடங்கினால் அந்நியன் என்ற சாதாரண வணிக சினிமாவுக்குள் இருக்கும், அரசியல் அர்த்தங்கள் வேறுவிதமாக விரியத் தொடங்கி விடும். அப்பாவிப் பிராமணர்களை வகைமாதிரிக் கதாபாத்திரங்களாக்கி, ஒட்டுமொத்த பிராமணர்களையும் காப்பாற்ற நினைக்கும் அந்த அரசியல், நுண் அரசியல் அல்லாமல் வேறல்ல.

    அம்மாஞ்சிகளாக இருந்த அம்பிகளின் அடையாளம் மார்கழி மாதப் பஜனையாகவும் திருவையாற்று பஞ்சரத்தின கீர்த்தனையில் பங்கேற்பதாகவும் இருந்தது. அவர்கள்தான் இன்று கம்ப்யூட்டர் மென்பொருட்களைத் தயாரிக்கத் தெரிந்த புத்திசாலிகளாகவும், மேற்கத்திய அறிவையும் தொழில் நுட்பத்தையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்த சேர்த்தவர்கள் என்பது நிகழ்கால உண்மை. அத்துடன் இந்தியப் பாரம்பரிய அறிவின்மீதும், கலைகளின் மீதும் பற்றுக் கொண்ட தேசப்பற்றாளர்கள்; ஜனநாயக நடைமுறைகளின் மீது நம்பிக்கை கொண்ட பொறுப்பான இந்திய மற்றும் தமிழகப் பிரஜைகள். இந்த உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், தங்களை இந்த மண்ணில் அந்நியர்களாகக் கருதும் போக்கு தொடரும் நிலையில், அவர்களின் அடிமனம் வன்முறையை நாடுகிறது என்கிறது படம்.

    நோய்க் கூறு போல இருக்கும் இந்த அடிமன விருப்பம் வெறுக்கத்தக்கதல்ல; விரும்பத்தக்கது; தக்க வைத்துக் கொள்ள வேண்டியது என்றும் படம் பேசுகிறது. நீதிமன்ற ஆலோசனைப்படி அந்த உணர்வு வெளிப்படாமல் இருந்தால்தான் வெளிப்படையான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்பதை டாக்டரின் வழி அறிந்து கொண்ட அந்நியன், நடப்பு உண்மைகளை ஏற்றுக் கொண்டவனாக மாறி விட்டது உண்மை அல்ல; அது வெறும் நடிப்பு. அவனிடம் அந்த வன்மம் – அந்நியனாக மாறிக் கொலைகளைச் செய்து விடும் வன்முறை – இப்பொழுது இயல்பாக மாறி விட்டது என்பதுதான் படம் சொல்லும் எச்சரிக்கை.

    இந்த எச்சரிக்கை யாரை நோக்கி என்பது மட்டுமே படத்தில் தெளிவு படுத்தப்படவில்லை. எச்சரிக்கை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கலாம்; தனக்கு எதிரானவர்களுக்கும் இருக்கலாம்.

    அகப்பாடு பத்து

    Avoid blogs, they are endless ego (அகப்பாடு) trips. Be very choosy in adding to your favourites list. It becomes too big.
    – Sujatha

    எனக்குப் பிடித்த தலை பத்து வலைப்பதிவுகள் இவை. இவற்றை பட்டியலிடுவதற்கு சில குறிவைகளை (criteria) வைத்துக் கொண்டேன்.

  • வாரத்துக்கொரு முறையாவது இற்றைப்படுத்த வேண்டும்.
  • ஒரு மாதமாகவாவது வலைப்பதிந்து வர வேண்டும்.

    10. மாலன்
    9. பெயரிலி
    8. பிச்சைப்பாத்திரம்
    7. சிக்கல்
    6. பிகேஎஸ்
    5. பெட்டை
    4. எண்ணங்கள்
    3. கண்ணோட்டம்
    2. உருப்படாதது
    1. போட்டுத் தாக்கு


    பொதிவாக (+ve) பிடித்தது மட்டும் குறித்து வைக்காமல், எதிர்மறை எண்ணங்களுக்காக படிக்கும் பத்து. இவற்றை பட்டியலிடுவதற்கும் சில குறிவைகளை வைத்துக் கொண்டேன்.

  • இவற்றில் சில மசாலாப் படங்கள் போல; பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்; விசிஆரை அணைத்த பிறகு மனதில் தங்காது.
  • சிற்றிலக்கியவாதிகளுக்கு மட்டுமே புரியலாம்.
  • அதிர்ச்சியூட்டும் நடை கொண்டிருக்கலாம்; விபரீதப் புரிதல்களை உணர்த்தலாம்.
  • பதிவுகள் நாலு கிலோபைட்டைத் தாண்டி continuous partial attention தோன்றலாம்.

    10. வெங்கட்
    9. அனாதை
    8. அண்டை அயல்
    7. காஞ்சி பிலிம்ஸ்
    6. அபிதாசரண்
    5. கோயிஞ்சாமி
    4. இட்லி வடை
    3. முகமூடி
    2. நேசகுமார்
    1. ரோசா வசந்த்

  • எ.பி.சி.

    நன்றி : சித்திரங்கள்

    மறுப்புக்கூற்று: நட்சத்திர வலைப்பதிவரோடு குழப்பிக் கொள்ள வேண்டாம்

    மறுப்புக்கூற்று: இதை எழுது, அதை பின்பற்று என்று சொல்பவர்களைக் குறிக்கவில்லை

    மறுப்புக்கூற்று: எழுதுவதெல்லாம் தனக்கே வாய்க்கும் என்று சொல்லவில்லை.

    மறுப்புக்கூற்று: பெயரற்றவர்களைத் தாக்கவில்லை

    நன்றி : சித்திரங்கள்

    சின்னராசு

    இணையில்லா பாடல் ஆசிரியர்கள் ::

    தமிழ் நாடகத் தந்தையாகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தந்தையாகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களுக்காக எழுதிய பாடல்கள் பிற்காலம் திரைக்காக பயன்படுத்தப்பட்டு பெருமையடைந்திருக்கின்றன.

    ‘ஆவியே சஞ்சீவியே
    மன்மதன் எனும் பாவியே
    மலர்கணையை தூவியே’

    கலைஞர் கருணாநிதி உரையாடல் எழுதிய ‘பராசக்தி’ படத்தில் ‘வாழ்க வாழ்கவே வளமார திராவிட நாடு’ என்கிற பாரதிதாசன் பாடலை சேர்க்க கலைஞர் அனுமதி கேட்டபோது, ‘அந்த பாடலை படத்தில் சேர்த்தால் நானே அவர்களுக்கு பணம் தருவேனே’ என்றாராம்!

    1935 ஆம் வருடமே திரைப்படத்திற்காக பாடலும், திரைக்கதை உரையாடலும் எழுத பாரதிதாசன் அழைக்கப்பட்டுவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘கவி காளமேகம்’ படத்திற்கு அவர் உரையாடலும், பாடலும் எழுதினார். பாரதிதாசன் மேலும் திரைக்கதை, உரையாடல் மற்றும் பாடல் எழுதிய திரைப்படங்கள் ராமானுஜர், பாலாமணி அல்லது பக்கா திருடன், சதி சுலோச்சனா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி போன்ற படங்களாகும். பிற்காலம் அவர் சொந்தமாக தனது ‘பாண்டியன் பரிசு’ காவியத்தை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார். அந்த முயற்சி கைகூடுவதற்கு முன்பே மறைந்துவிட்டார்.

    பாபநாசம் சிவனின் பெரும்பாலான பாடல்கள் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரால் பாடப்பட்டவையாகும்! பாகவதருக்கு ‘ஹரிதாஸ்’ படத்தில் பாடுவதற்கு பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று.

    ‘கிருஷ்ணா… முகுந்தா முராரே-ஜெய
    கிருஷ்ணா… முகுந்தா முராரே
    கருணா ஸாகர கமலா நாயக
    கனகாம்பர பியாரி – கோபாலா
    காளிய நர்த்தன கம்ஸ நிர்த்தன’

    இந்தப் பாடலில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் வடமொழி வார்த்தையாகவே காணப்படுகின்றன. பாபநாசம் சிவனின் தமிழ்ப்புலமையும் சாதாரணமானது அல்ல.

    ”கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
    கணிகையர் கண்களே மதன் விடும் வலையே
    நவரஸங்களிலும் சிருங்காரமே தலையே
    நளின நடையழகிற் கீடெங்கும் இலையே
    புஜமிரண்டு மூங்கில் தளர் நடையஞ்சி
    புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
    ரஸிகத் தன்மையில் கைதேர்ந்தவள் வஞ்சி
    ராகத்தில் சிறந்தது நாட்டக்குறிஞ்சி”

    உடுமலை நாராயணகவி பி.யு.சின்னப்பாவிற்காகவும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காகவும் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். ‘மங்கையர்கரசி’ என்ற படத்தில் கலைவாணருக்காக உடுமலை நாராயணகவி எழுதிய ஒரு பாடலை இங்கே பாருங்கள்.

    ‘பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்
    பாலில்லை என்று சிசு பதறுவதைப் பார்’

    அண்ணா எழுதிய ‘சொர்க்க வாசல்’ படத்தில் உடுமலை நாராயணகவியின் பாடல்கள் மிகப்புகழ் பெற்றன. இந்தப் பாடலை நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி மிக உணர்ச்சிகரமாக அந்தப் படத்திலே பாடியிருக்கிறார்.

    ”எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க்கம்?
    என்றே தேடுறீர்! அது அங்கே இல்லை
    இங்கே உண்டு என ஒன்றாய் கூடுவீர்!
    ஆகும் நெறி எது?
    ஆகா நெறி எது?
    அறிந்து சொல்வீரே

    நன்றாய் புரிந்து கொள்வீரே!”

    திரையுலக வரலாற்றில் பெரும் புயலை கிளப்பிய ‘பராசக்தி’ திரைப்படத்தில் உடுமலை நாராயணகவியின் பாடல்களும் உண்டு. அதில் ஒரு பாடல் தான் ‘கா… கா… கா’ என்று பாடலாகும்.

    ”எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
    பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
    இளைத்தவன், வலுத்தவன்
    இனச் சண்டை பணச்சண்டை
    எத்தனையோ இந்த நாட்டிலே
    பட்சி சாதி நீங்க – எங்க
    பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க
    பட்சமாயிருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
    பழக்கத்தை மாத்தாதீங்க – எங்கே பாடுங்க”

    பிளவர்கள் ஜாக்கிரதை

    WSJ.com – Cybersecurity’s New Challenges ::

  • எரிதங்கள் அதிகரிப்பதற்கும் பிளவர்கள் பெருகியதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
  • கல்லூரி மாணவர்கள்தான் முன்பு கொந்தர்களாக ஆக்கபூர்வமாக கணினிகளை ஊடுருவினார்கள். இன்றோ கன்னக்கோல் வைக்கும் பிளவர்கள் நிறுவனங்களைக் குறி வைக்கிறார்கள்.
  • உன்னத நோக்கம் கொண்டு ராபின்ஹுட் போல் கருதப்பட்ட கொந்தர்கள் இப்போது பரிநிரலிகளை எழுதுகிறார்கள். சட்டவிரோதமாக பணத்தைக் கொள்ளையடிக்கும் பிளவர்கள் பெருகிவரும் காலம் இது.
  • ப்ளாக்மெயில் பிளவர்கள் பிறருடைய மின்மடல்களைப் படிப்பது எளிதாகி இருக்கிறது. சொந்தக் கணினி பாதுகாப்பில்லாமல் இருப்பதுதான் முதற் காரணம். யாஹூ/ஹாட்மெயில் போன்ற வழங்கிகளிடமிருந்தேப் படிப்பதும் சாத்தியம். அங்கிருந்து உங்களைச் சென்றடையும் வழியில் படிப்பது மூன்றாவது வழி.
  • என்னதான் தங்கள் கணினியைப் பாதுகாக்க முடிந்தாலும், மொத்த தொழில் நுட்ப உலகத்தையும் பாதுகாப்பது இயலாத காரியம். எளிதில் ஊகிக்கக் கூடிய கடவுச் சொற்கள், தவறுதலாக எங்கோ சுட்டி வலைக்கள்ளர்களிடம் மாட்டிக் கொள்ளுதல் போன்ற மனித இயல்புகள் இருக்கும்வரை பிளவர்கள் பிழைத்து வருவார்கள்.

    முழு செவ்வியும் கேட்க: எம் பி 3