52 கேள்விகள்


குமுதம் ::

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடிக்காத வார்த்தை?
ஆங்கிலம்

இப்போது 50 லிட்டர் கூவம் யார்?
நான்தான்

காதல் என்பது?
இயக்குநர்களின் கழிவு அல்லது பாடலாசிரியர்களின் அழிவு.

பிடித்த கலர்?
பொவொண்டோ

ரஜினி – கமல் ஒப்பிடுக?

அரசியலை ஜனரஞ்சகமாக்கியவர் ரஜினி;
ஜனரஞ்சகத்தை அரசியலாக்கியவர் கமல்

உங்கள் இளமையின் ரகசியம் என்ன?
முடி நரைக்காமல் பார்த்துக்கொள்வது

இளையராஜா – ரெஹ்மான்?
பண்ணைபுரத்தையும் பறங்கி மலையையும் பாஸ்டனுக்கு அறிமுகம் செய்தவர்கள்.

ரொட்டி பிடிக்காதா?
பசி பிடிக்கும்.

தம்பி…?
இல்லை மகன்தான் அரசியலுக்கு

ரஜினி?
நடிகர்களில் நடிப்பவர்

கமல்?
அறிவாளியாக நடிப்பவர்களில் ஒருவர்

மனைவி?
வீட்டுக்கு வந்த வேலைக்காரி

பெரியார்?
என்னவோ செய்தார்.

அண்ணா?
இவரும் என்னவோ செய்தார்.

சின்ன வயதில் ஹீரோ பக்தி உண்டா?
சினிமாவுக்குப் போனதுண்டு. படம் மட்டும் பார்ததில்லை.

ஜெயலலிதாவிடம் பிடித்தது?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நம்பிக்கை, துணிச்சல், தைரியம், வீரம், செல்வம், கல்வி, குணம், தானியம், அரிசி, பருப்பு, மஞ்சள் என்று ஒன்று

முதல் பாடல்?
அழுவாச்சியா நிறுத்தறியா

நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
எதைச் சொல்வது

தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?
தமிழ்நாட்டை விட அயல்நாடுகளில் தமிழுணர்வு அதிகம் என்னும் பிரக்ஞை.

உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)
50 கிலோவுக்குக் குறைவான தாஜ் மஹல்கள்

படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது?
மீண்டும் படம் எடுத்து பார்வையாளனைப் படுத்துவது

தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?
சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தீவிரவாதியாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; தலைவனாவாய்

சென்னையில் பிடித்த இடம்?
ஆளுங்கட்சியைப் பொறுத்தது

கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?
வியப்பது ஆசையை
ரசிப்பது சாதுரியத்தை

வைகோ?
மதிமுகவில் திமுக கலப்பவர்
திமுகவில் மதிமுக கலக்காதவர்

விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?
நடிப்பது எப்பொழுது என்று தீர்மானித்துக் கொள்வது – திரைப்பட வெற்றி
நடிக்காதது எப்பொழுது என்று தீர்மானித்துக்கொள்வது – அரசியல் வெற்றி.
அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.

ராஜா – ரகுமான் ஒப்பிடுங்கள்?
அவர் தமிழிசைப் பிரியர்;
இவர் ‘‘அங்ரேஸி லவ்வர்’’

துதி – காதல் எழுதுவதில் எது பிடிக்கும்?
காதலில் துதி எழுதப்பிடிக்கும்

கவிஞர்களில் கூட விரசம்தானே அதிகம் இருக்கிறது?
பக்தி உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!

ரசிக்கும் வீடியோ..?
கண்கள் மூடிய முழுஅழுக்கு குளியல்

இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்…
ஆண் : தாடி முத்தம் வேண்டுமா;
தாடி இல்லாத முத்தமா?
டாடி முத்தம் என்பது பெண்ணே
நான் உனக்குத் தருவது
தாடியில்லாத முத்தம் என்றால்
அம்மா உனக்குத் தருவது (வலைஞரின் கிளிப்பிள்ளைகள்)

நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் நடுநிலைமை இல்லாதவர்களாக இருக்கிறார்களே ஏன்?
எனதுப் பிடிமானம் கொள்கைள் அல்ல – கூப்பாடுகள்தான்.

இன்றைய தலைமுடிக்குத் தகுந்தாற்போல் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது?
முடிதிருத்தகத்தில் அதிகம் இருக்கிறேன்.

உங்களை உற்சாகப்படுத்தும் பொன்மொழி?
பணம் கூட மரத்தில் காய்க்கலாம்; அது பேப்பராவதற்கு முன்பே தட்டிப் பறித்தால்.

சந்திப்பு : திருவேங்கிமலை சரவணன்(னுக்காக பாஸ்டன் பாலாஜி)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.