Join 174 other subscribers
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde
Posted by: நாகூர் ரூமி | 11:11 PM
பாராவின் ‘குதிரைகளின்கதை’ – எனது பின்னுரை.
இந்த குதிரைக்கதைகள் எட்டும் குதிரைகளைப் பற்றிய கதைகள் அல்ல. அரேபியக் குதிரைகளைப் போல
ஒரு காலத்தில் பாய்ந்து ஓடி, பின் படுக்கவைத்து காலம் லாடமடித்தபிறகு, சரியான உணவும் பராமரிப்பும்
கிடைக்காமல் மெரீனா கடற்கரையில் பிழைப்புக்காக ஓடும் பாவப்பட்ட குதிரைகளாகிவிட்ட மனங்களைப் ப
ற்றியது.
இந்த கதைகளில் வரும் மனிதர்களுக்கும் மகாத்மா காந்திக்கும் என்ன சம்மந்தம்? ஒன்னே ஒன்னுதான்.
அதுதான் காந்தி கையில் பிடித்திருக்கும் ஊன்றுகோல். இறைத்தூதர் மோஸஸ் எனப்படும் மூஸாவுக்கு இந
றவன் ஒரு ஊன்றுகோலைக் கொடுத்திருந்தான். அதற்கு பல அற்புத சக்திகள் உண்டு. அது தேவைப்படும்பே
து பாம்பாக மாறும். இரவில் ஒளிதரும் விளக்காக மாறும். அடிமைகள் விடுதலைபெற செங்கடலைப் பிளந்து
வழி ஏற்படுத்தும் கழியாகும். மகாத்மாவின் ஆன்மாவின் கை பிடித்திருந்ததும் அப்படிப்பட்ட ஒரு அற்புத ஊ
ன்றுகோல்தான்.
கோடிக்கணக்கான மக்கள் மனத்திலே விடுதலை உணர்வை பற்றவைத்த தீயாக இருந்தது அது. அதுகாறும்
இந்த உலகம் காணாத ஒரு புது ஒளியைப் பாய்ச்சியது அது. அடக்குமுறை என்ற இருளை கடைசியில்
அதன் ஒளியே பூரணமாக விலக்கியது. அதன் சொடுக்கில் சுதந்திரம் எனும் தென்றல் வீசியது நமது நாட்டி
ல். இவ்வளவையும் இன்னமும் செய்த அந்த ஊன்றுகோல், காந்தி சும்மா கையில் பிடித்திருந்த வாக்கிங்
ஸ்டிக் அல்ல.
அப்படிப்பட்ட ஒரு ஊன்றுகோல் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில் தேவைப்படுகி
றது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பாக, பாசமாக, காதலாக, பணமாக, புகழாக, அதாக
இதாக. ஆனால் ஒரு ஊன்றுகோல் தேவை.
மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நிகழ்ச்சிகள் நடப்பது மட்டும் கதைகளுக்கும் காந்திக்கும்
உள்ள சம்மந்தம் அல்ல. இந்த ஊன்றுகோல் எனும் குறியீடுதான் ரொம்ப அழகாக இந்த எட்டு கதைகளிலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது. கதைகளுக்கும் காந்திக்கும் உள்ள நிஜமான சம்மந்தம் அதுதான்.
நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லும்போது டபிள்யூ.பி.யேட்ஸ் ஒரு கவிந
தயில் சொல்லுவான் :
If it does not seem a moment’s thought
Our stitching and unstitching has been naught
என்று. ஒரு நல்ல, பொருத்தமான, அழகான உடை, தைக்கப்படுவதற்கு முன், எப்படி தையல்காரனிடம் வே
லை வாங்குகிறதோ அதைப்போல, ஒரு நல்ல கவிதை, தான் எழுதப்படுவதற்கு முன், கவிஞனிடமும் வேலை
வாங்கிவிடுகிறது. ஆனால் அப்படி கஷ்டப்பட்டு செய்யப்பட்ட ஒன்று என்ற எண்ணத்தை finished product தர
க்கூடாது என்று சொல்கிறான். வானத்திலிருந்து ஆடையாகவே வந்து குதித்தமாதிரி இருக்க வேண்டுமாம்.
ரொம்ப அழகாகவும் சூசகமாகவும் சொல்லிவிட்டான்.
ராகவனின் எழுத்தை வாசிக்கும்போது எனக்கு யேட்ஸ் ஞாபகம் வருகிறது. தவிர்க்க முடியாமல். காரணம்
அவரது எழுத்தின் பின்னால் உள்ள உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. காந்தி பற்றி பேசுவதற்கு
முன்னால் அவர் எழுதிய 16000 பக்கங்களையும் ஒருமுறையாவது படித்துவிட வேண்டும் என்று அவர் சொல்
லும்போது அது காந்தி பற்றி மட்டுமல்லாது ராகவனைப் பற்றியும் சொல்லிவிடுகிறது.
தாகூரின் ஒரு கதையில், ஒரு ஆற்றில் ஒரு குழந்தை விழுந்து ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுவிடும்.
அதைத்தேடி ஒருவன் வருவான். வந்து ஆற்றைப் பார்ப்பான். “ஒன்றுமே தெரியாத மாதிரி ஓடிக்கொண்டிருந்
தது ஆறு” என்று கதை முடியும்! ராகவனின் கதைகளின் நீரோட்டமும் இப்படிப்பட்ட ஏமாற்றும் எளிமை கெ
ண்டதுதான்.
இந்த தொகுதியில் வரும் எட்டு கதைகளுமே மனித உறவுகளைப் பற்றியதுதான். மனைவியை இழந்த ஒரு
ஆசிரியர் அந்த மடியை ஒரு மாணவன் மூலமாகப் பெறலாம் என்ற குறிப்போடு முடிகிறது ‘இருளின் நிறம்
வெண்மை’ என்ற கதை.
அழுத்தமான ஒரு விஷயத்தை லேசாகச் சொல்லும்போது அதன் அழுத்தம் கூடிவிடுகிறது. ‘பூக்களால் கொ
லை செய்கிறேன்’ என்ற கதையில் நடப்பது அதுதான். காதலைக்கூட மதமாற்ற அரசியலுக்கு பயன்படுத்த
விழையும் ஒரு மனதைப் பற்றிய கதை அது. இந்த கதையின் அழுத்தம் அதன் தலைப்பில் இருக்கிறது.
மனித மனம் எடுக்கும் சில முடிவுகளுக்கு காரண காரியங்கள் கற்பிக்க முடியாது. துறவு நிலைக்குப் போகும்
கணமும் அப்படிப்பட்டதுதான். ஆனால் பரிபூரணத் துறவு சாத்தியமா என்ற கேள்வியை முன்வைத்து நகர்கிறது
அண்ணன் தம்பி உறவை மையமாக வைத்த, ‘கூறாமல் சந்யாசம்’ கதை.
ஒரு கோட்டை அழிக்காமல் சின்னதாக்க பக்கத்தில் ஒரு பெரிய கோடு போடலாம் என்பது நமக்குத் தெரி
யும். ஆனால் மனிதனுக்கு வரும் பிரச்சனைகளுக்கும் அந்த உத்தியைப் பயன்படுத்தலாம் அல்லவா? அதை
மையமாக வைத்து இயங்குகிறது போக்குவரத்துக் காவலரை நாயகனாகக் கொண்ட ‘மூன்று காதல்கள்’ கந
த.
பெற்றோரின் வசவு தாங்காமல் தற்கொலைக்கு முயலும் சின்னப்பயலின் கதை ‘யுவர்ஸ் ஒபீடியண்ட்லி’. வயிறு
வலிக்க வலிக்க என்னைச் சிரிக்க வைத்த கதை இது. ராகவன் ப்ராண்ட் நகைச்சுவையை இதில் முழுமைய
க ரசித்து அனுபவிக்கலாம்.
நாட்டுப்பற்று கொண்ட ஒரு நீதிபதி சுதந்திர போரட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல், சுதந்திரதி
னமன்றுகூட இந்தியாவில் இல்லாமல் போனது பற்றிய வருத்தம் பற்றிய கதையாக பரிணமிக்கிறது ‘வாசல்
வரை வந்த கனவு’ கதை. ஒரு பதவி தரும் வாய்ப்புகளுக்கும் அதன் பின்னால் இருக்கும் நேர்மையின்மைக்
கும் இடையில் மனசாட்சியுடன் போராடும் ஒரு மனிதன்தான் இந்த கதையின் நாயகன். இவன் படிக்கும் பல
பேருடைய மனசாட்சியை நிச்சயம் உலுக்குவான்.
தன் வாழ்க்கையை ஓட்ட மெரீனா கடற்கரையில் குதிரை ஓட்டும் ஒருவன், காசுக்காக தன் தந்தைக்கே வா
ழ்க்கைப்பட்ட தான் காதலித்த பெண்ணொருத்தியை குழந்தையோடு சந்திக்கிறான். இன்னும் அவள் காசுக்
காக ஓடும் குதிரையாகவே இருப்பதை அறிந்து விலகுகிறான். இது ‘குதிரைகளின் கதை’.
புகழுக்கும் பெண்ணுக்கும் ஆசைப்படும் தமிழாசிரியரின் கதைதான் ‘புலவர் ஷேக்ஸ்பியர்’.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஏதாவதொரு பிடிப்பு தேவைப்படுகிறது. அந்த பிடிப்பு எத்தனை வடிவங்கள்
எடுக்கலாம் என்று இந்த கதைகளைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. காந்தி தன் சுயசரிதையில்
I jealously guarded my character என்று கூறுவார். அதுதான் அவரது பிடிப்பு. அவரது ஊன்றுகோல் அதுதான்.
அப்படிப்பட்ட பிடிப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை என்பதை உணர்த்தும் வாழ்வின் மீதான தத்துவப்பார்
வை கொண்டதாக இக்கதைகள் விரிகின்றன.
கடைசியாக கொசுறாக ஒரு செய்தி.
ராகவனுக்கு கவிதைகள் என்றால் அலர்ஜி என்று அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவர்
மரபுப்படி விருத்தப் பாக்கள் எழுதுவார். ரம்பா பற்றியும் ரோஜா பற்றியும். போகட்டும். ஆனால் அவர் கவிதை
ஏன் எழுதவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கீழே வரும் வரிகளைப் பாருங்கள் :
“மனத்தின் வெகு ஆழப்பள்ளங்களில் இன்னும் அவன் சலிக்காமல் படகு ஓட்டிக்கொண்டிருந்தான்…குணம் ம
றியிருக்காது நிச்சயம். அலுத்துப் போகிறதென்று பூக்கள் வாசனையை மாற்றிக்கொள்ளுமா என்ன?”
இப்படி எழுதுபவர் கவிதை என்று வேறு தனியாக எழுத வேண்டுமா என்ன?
Posted by: நாகூர் ரூமி | 11:11 PM