சின்னராசு


இணையில்லா பாடல் ஆசிரியர்கள் ::

தமிழ் நாடகத் தந்தையாகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தந்தையாகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களுக்காக எழுதிய பாடல்கள் பிற்காலம் திரைக்காக பயன்படுத்தப்பட்டு பெருமையடைந்திருக்கின்றன.

‘ஆவியே சஞ்சீவியே
மன்மதன் எனும் பாவியே
மலர்கணையை தூவியே’

கலைஞர் கருணாநிதி உரையாடல் எழுதிய ‘பராசக்தி’ படத்தில் ‘வாழ்க வாழ்கவே வளமார திராவிட நாடு’ என்கிற பாரதிதாசன் பாடலை சேர்க்க கலைஞர் அனுமதி கேட்டபோது, ‘அந்த பாடலை படத்தில் சேர்த்தால் நானே அவர்களுக்கு பணம் தருவேனே’ என்றாராம்!

1935 ஆம் வருடமே திரைப்படத்திற்காக பாடலும், திரைக்கதை உரையாடலும் எழுத பாரதிதாசன் அழைக்கப்பட்டுவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘கவி காளமேகம்’ படத்திற்கு அவர் உரையாடலும், பாடலும் எழுதினார். பாரதிதாசன் மேலும் திரைக்கதை, உரையாடல் மற்றும் பாடல் எழுதிய திரைப்படங்கள் ராமானுஜர், பாலாமணி அல்லது பக்கா திருடன், சதி சுலோச்சனா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி போன்ற படங்களாகும். பிற்காலம் அவர் சொந்தமாக தனது ‘பாண்டியன் பரிசு’ காவியத்தை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார். அந்த முயற்சி கைகூடுவதற்கு முன்பே மறைந்துவிட்டார்.

பாபநாசம் சிவனின் பெரும்பாலான பாடல்கள் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரால் பாடப்பட்டவையாகும்! பாகவதருக்கு ‘ஹரிதாஸ்’ படத்தில் பாடுவதற்கு பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று.

‘கிருஷ்ணா… முகுந்தா முராரே-ஜெய
கிருஷ்ணா… முகுந்தா முராரே
கருணா ஸாகர கமலா நாயக
கனகாம்பர பியாரி – கோபாலா
காளிய நர்த்தன கம்ஸ நிர்த்தன’

இந்தப் பாடலில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் வடமொழி வார்த்தையாகவே காணப்படுகின்றன. பாபநாசம் சிவனின் தமிழ்ப்புலமையும் சாதாரணமானது அல்ல.

”கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே
நவரஸங்களிலும் சிருங்காரமே தலையே
நளின நடையழகிற் கீடெங்கும் இலையே
புஜமிரண்டு மூங்கில் தளர் நடையஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரஸிகத் தன்மையில் கைதேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக்குறிஞ்சி”

உடுமலை நாராயணகவி பி.யு.சின்னப்பாவிற்காகவும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காகவும் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். ‘மங்கையர்கரசி’ என்ற படத்தில் கலைவாணருக்காக உடுமலை நாராயணகவி எழுதிய ஒரு பாடலை இங்கே பாருங்கள்.

‘பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்
பாலில்லை என்று சிசு பதறுவதைப் பார்’

அண்ணா எழுதிய ‘சொர்க்க வாசல்’ படத்தில் உடுமலை நாராயணகவியின் பாடல்கள் மிகப்புகழ் பெற்றன. இந்தப் பாடலை நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி மிக உணர்ச்சிகரமாக அந்தப் படத்திலே பாடியிருக்கிறார்.

”எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க்கம்?
என்றே தேடுறீர்! அது அங்கே இல்லை
இங்கே உண்டு என ஒன்றாய் கூடுவீர்!
ஆகும் நெறி எது?
ஆகா நெறி எது?
அறிந்து சொல்வீரே

நன்றாய் புரிந்து கொள்வீரே!”

திரையுலக வரலாற்றில் பெரும் புயலை கிளப்பிய ‘பராசக்தி’ திரைப்படத்தில் உடுமலை நாராயணகவியின் பாடல்களும் உண்டு. அதில் ஒரு பாடல் தான் ‘கா… கா… கா’ என்று பாடலாகும்.

”எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன், வலுத்தவன்
இனச் சண்டை பணச்சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி சாதி நீங்க – எங்க
பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க
பட்சமாயிருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க – எங்கே பாடுங்க”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.