டாப் 5


முற்போக்கான வலைப்பதிவு என்றால் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை கிண்டலடிக்க வேண்டும் என்பது முதற்கண் தேவை. ‘மெட்டி ஒலி’ முடிந்து போன இந்த நேரத்தில் வலைவாசகர்களுக்கு எந்த சீரியல் பார்ப்பது, எப்படி விமர்சிப்பது என்று சந்தேகங்கள் இருக்கும். அவர்களுக்கு ஒரு க்விக் கையேடு:

5. எங்கிருந்தோ வந்தாள்ஜெயா டிவி

கே. பாலச்சந்தர் இயக்குகிறார். வழக்கம் போல் புரட்சி, புதுமை என்னும் பெயரில் ஒவ்வொரு மனைவியும் வேறொருவருடன் உறவு வைத்திருப்பதை பட்டியலிடுகிறார். கூர் மழுங்கிய கதையை ஷார்ப் வசனங்கள் தூக்கி விடுகிறது. கதாநாயகி ரொம்ப லட்சணம் + தேர்ந்த நடிப்பு.

4. முகூர்த்தம் சன் டிவி

‘மெட்டி ஒலி’ டீம். இயக்குநர் மட்டும் மாற்றம். மூதாதையர்களைப் போலவே நிறைய கதாபாத்திரங்கள். பல்லாண்டு நீடூழி ஒளிபரப்பாகும்.

3. கெட்டி மேளம் ஜெயா டிவி

இன்னும் சூடு பிடிக்கவில்லை. யதார்த்தாம் நிறைய இடங்களில் வழுக்குகிறது. என்னதான் அவசரம் என்றாலும் வீட்டை தாழ்ப்பாள் கூட போடாமல் ஓடும் சென்னைவாசிகளை நான் பார்த்ததில்லை.

2. முடிச்சு ராஜ் டிவி

கெட்டி மேளத்துக்கு சரியான போட்டி. ரசிகர்களைக் கட்டிப் போடும் வித்தையை நன்றாக செய்கிறார்கள்.

1. செல்வி சன் டிவி

மீண்டும் ராதிகாதான் #1. தேர்ந்த வில்லி; இயல்பான ஹீரோ; தியாகச் செம்மல் செல்வி. ஒவ்வொரு முடிவிலும் குட்டி க்ளைமாக்ஸ். எப்பொழுது பார்த்தாலும் சீக்கிரமே பதிந்து போகும் சித்தரிப்புகள். கொஞ்ச நாளுக்கு அசைக்க முடியாது.

7 responses to “டாப் 5

  1. Unknown's avatar மாயவரத்தான்...

    எல்லாம் சரி… நம்பர் 1-ல் இருக்கும் கோலங்கள் சீரியலை விட்டுடீங்களே!

  2. கோலங்கள்… அதையும் தாண்டி புனிதமானது!

    உங்க படம் டக்கர் ஜிங்கா இருக்குங்க ;-))

  3. Unknown's avatar மாயவரத்தான்...

    //உங்க படம் டக்கர் ஜிங்கா இருக்குங்க//

    ஹிஹி… ரொம்ப தேங்க்ஸுங்க சாரே!

  4. Naan solla vanthathai ‘Maayavarathan’ sollitaaru…

  5. சார் என் ஓட்டு “மனைவி”க்குத்தான்

  6. Unknown's avatar Agent 8860336 ஞான்ஸ்


    5. எங்கிருந்தோ வந்தாள்
    4. முகூர்த்தம்
    3. கெட்டி மேளம்
    2. முடிச்சு
    1. செல்வி

    நம்ம லிஸ்ட்டு பாருங்க…

    செல்விஎங்கிருந்தோ வந்தாள்முகூர்த்தம் குறித்து… கெட்டிமேளம் முழங்க… முடிச்சு ஏற்று… கணவருக்காகமனைவி ஆகி கோலங்கள் போட்டாள்!

    ஞானபீடம்.

  7. >> என் ஓட்டு “மனைவி”க்குத்தான்

    என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்களே 😉 என்னுடைய எல்லா ஓட்டும் மனைவிகளுக்கு மட்டுமே; அவர்கள்தானே (நம்மை) சீரியல் எல்லாம் பார்க்க விடுகிறார்கள் 😛

    >>Naan solla vanthathai ‘Maayavarathan’ sollitaaru…

    எல்லாரும் அபி பக்கம் சாயறீங்க.. ஹ்ம்ம்!

    >> Agent 8860336 ஞானபீடம்

    ரகசிய போலீஸ் 007 மாதிரி ஏஜண்ட் ஞானபீடமா :))

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.