Monthly Archives: ஜூன் 2005

உடுப்பதற்கு ஆடை கூட இல்லாதவர்கள்

Dinakaran::

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் நடிகைகள் ஜஸ்வர்யாராய், மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் யார் என்ற பட்டியலை தரும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு பீகார் அரசு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் தாமதம் செய்தது. குறிப்பிட்ட தேதிக்குள் தந்தே ஆக வேண்டும் என்று அரசு கெடுபிடி செய்தது. எனவே அவசரம் அவசரமாக அரசுக்கு மாவட்ட நிர்வாகங்கள் பட்டியல் அனுப்பியது. அதைப் படித்துப் பார்த்த போது வறுமையில் வாடுவோர் பட்டியலில் ஐஸ்வர்யாராய், மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி, மாதுரி தீட்சித், ரவீணா டாண்டன் ஆகியோர் பெயர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

முசாபர்பூர் மாவட்டத்தில் இந்த கணக்கு கொடுத்து இருந்தனர். இந்த கணக்கெடுப்புப்பணியை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிக்க சோம்பல்பட்டு மாணவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் வீடு வீடாக செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தபடி விளையாட்டாக நடிகைகளின் பெயர்களை எழுதி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிட்டனர். இப்போது இந்தப் பட்டியலை சரிபார்த்து தவறுகள் களையப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அக்கப்போர்

“அட, புள்ளிவிவரப் புலியே… விஜயகாந்த் கட்சியில கொ.ப.செ-வா சேரப் போறியா, என்ன?”
அனு… அக்கா… ஆன்ட்டி…

“மெயிலும் மெயிலும் கொள்ளையடித்தால், வைரஸ் என்று அர்த்தம்
ப்ளாகில் பின்னூட்டம் நிறைஞ்சு வழிஞ்சால் சர்ச்சை என்று அர்த்தம்
ப்ளாகில் பின்னூட்டமே வராவிட்டால் சரிச்சையானவர் என்று அர்த்தம்”
தொலைபேசியில் கேட்டது

“ஒரு வாரத்துக்கு பத்து அனானிமஸ் வலைப்பதிவு வந்தால், அதற்கு பெயர் வளர்ச்சி இல்லை; வியாதி!”
அரட்டையில் பார்த்தது

பழைய புத்தக வியாபாரி

தெருவாசகம் – யுகபாரதி::

தெருவோர நூலகன்; படிக்கத்
தெரியாத வாசகன் தேர்ந்த
வறுமைக்கு அறிவை விற்கும்
வாத்தியார் என்பேன் இவனை
படித்தவர் வேலை இன்றி
பாவமாய்த் திரிய; இவனோ
படிப்போரை கொண்டு வாழும்
பாமரப் பள்ளிக் கூடம்

வேதநூல்; வீட்டுக் குறிப்பு;
வேதியல்; கலையை பேசும்
ஆதிநூல்; அறத்தை காக்கும்
அகராதி; இத்தனை பிரிவில்
எந்த நூல் உயர்வு? இல்லை
எந்த நூல் தாழ்வு? இவனின்
சிந்தைக்கு தெரிந்ததெல்லாம்
சில நிமிட பேரம்; முடிவில்

கிழிந்த நூல் தைக்கும் ஆசை
கிழிபட்ட நாளை; யாரோ
இழந்ததை எடுத்து விற்கும்
இவனொரு காகித மேய்ப்பன்
படித்தென்ன கிழித்தாய் சொல்க
பழிபேசி திரியும் நம்மில்
படிக்கவே கிழிந்த நூலை
பரப்புவான் கிழிசல் மூட

வைத்தகண் வாங்கா வண்ணம்
வாசிக்கும் பழக்கம் கொண்டால்
புத்தகப் புழுவே என்று
புகழ்வோம்; ஆனால் இவனோ
புழுமேயும் புத்தகத்தை
புழுதியான உட்கருத்தை
கழுவாத வயிற்றுக்காக
கடைவிரிப்பான் கூவிக்கூவி

உள்ளிருக்கும் மகிமை யாது?
ஒருக்காலும் உணர்ந்தானில்லை
செல்லரித்த அழுக்கு நூலாய்
செலவழிவான் சகாய விலைக்கு
புதியநூல் வாங்கி அதிலே
பூக்கின்ற வாசம் நுகர்வோர்
விதியதன் நெடியை இவன்மேல்
வீசுதல் அறியக் கடவீர்.

Thx: Anandha Vikadan

விஜயகாந்த் அரசியல்

kumudam:: ஸ்டார் டி.வி.க்கு அவங்க (ஜெயலலிதா) பேட்டி கொடுத்தாங்க. பழைய வாழ்க்கை பற்றிய பேட்டி அது. என் மனைவி பிரேமலதா மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்ல அவ்வளவு அற்புதமாக இருந்தது. கேட்ட கேள்விகளும், அம்மாவின் அற்புதமான பதில்களும் அவ்வளவு உண்மையாக இருக்கும். பார்த்தவர்கள் எல்லோரும் உருகிப்போன பேட்டி அது. அம்மாவின் மிகச் சிறந்த பேட்டி.

எம்.ஜி.ஆர். இறந்தபோது, அவர் அமைதியாக தலைவரின் தலைமாட்டில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அவரைப் படுத்திய பாடு, அவர் பட்ட அவமானங்கள் எல்லாத்தையும் ஜீரணித்துக்கொண்டு அவர் தாங்கி நின்ற விதம், இன்னிக்கு அவர் காலூன்றி நிற்பதற்கான அச்சாரமாகத் தோன்றுகிறது.

ஆரம்பத்தில் ஆட்சியில் செய்த சிறுசிறு குற்றங்களை விடுங்கள், இன்றைக்கும் அவரது வழிமுறைகள் பெண்களால் பின்பற்றப்பட வேண்டியவை. சிறு கஷ்டத்திற்கும் அழுது துடிக்கிற பெண்களுக்கு மத்தியில் அவரின் தனித்த கலங்காத தன்மை தன்னிகரில்லாத உதாரணம்.

இதுதான் முடிவு என்றால் முடிவு, லாபமா, நஷ்டமா முடிஞ்ச பின்னாடிதான் பரிசீலிப்பார். இதை நம்ம ஆளுங்க ஆணவம், அகம்பாவம்னு சொல்வாங்க. உண்மையில் அதற்குப் பெயர் தன்னம்பிக்கை.

மத்த தலைவர்கள் வருவாங்க. போவாங்க. அவங்களுக்கான தனிப்பட்ட அடையாளங்கள் கிடையாது.

அவங்களோட பெரிய புகழுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அவங்களோட வள்ளல் தன்மை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு கொடுத்துப் பழகிய முதல்வர் அம்மா தவிர யாராவது இருக்காங்களா?

இன்றைக்கு எத்தனையோ துயரப்பட்ட பெண்கள் முன்னுக்கு வரலாம் என்பதற்கு அம்மாதான் உதாரணம். ரோல்மாடல்.

அம்மா பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருந்தால், இந்நேரம் எல்லோரும் புலம்பித் தீர்த்து இருப்பாங்க. அவங்களை முதுகில் குத்தியவர்கள் அதிகம். அதை இன்றைக்கு வரைக்கும் பேட்டியில் சொல்லிக்கிட்டதில்லை. தன்னந்தனியாக மீண்டு வந்து, சிரித்த முகமாக எல்லாத்தையும் மறைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அம்மாவோட மூன்று விஷயங்கள்தான் அவங்களோட வெற்றி. துணிச்சல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி.

புத்தகக் குறி (மீமீ)

புத்தகம் சொல்ல மீனாக்ஸ் அழைத்திருக்கிறார்.

எனது புத்தகங்கள்: இதுவரை புரட்டியது ஆயிரம் இருக்கும். பெற்றோர்கள் வாசகராகவும் நான் கடைக்குட்டியாகவும் இருப்பதால் சிறிய வயதிலேயே புத்தகங்கள் நல்ல துணையானது. விக்கிரமாதித்தன், அலிபாபா, மதனகாமராஜன், ஈசாப், திருவிளையாடற் புராணம், பக்த விஜயம், திருத்தொண்டர் புராணம் என்று ஆன்மீகமும் ராஜா-ராணிகளும் நீதிகளும் கலந்து கட்டி அடித்த காலம்.

கொஞ்ச காலம் கழித்து விகடனின் பொன் விழாவோடு கலாதர், மு. மேத்தா என்று தொடர்கதைகளில் நாட்டம் பிறந்தது. அந்தக் கால விகடன், இதயம் பேசுகிறது, போன்றவற்றில் வெளிவந்திருந்த தொடர்கள் எல்லாம் கத்தரிக்கப்பட்டு பைண்டு செய்யப்பட்டு வரிசைக்கிரமமாக பரணில் இருக்கும். லஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி என்று அலுக்க ஆரம்பித்த சமயம் தமிழ்வாணன் பரணை விட்டு இறங்கினார்.

சீன் (சான்) நதிக்கரையில் என்று ஆரம்பித்து ஜெனீவா, கத்தரிக்காய் எல்லாம் பரிச்சயமானார்கள். பாக்கெட் நாவல் குட்டி போட்டு க்ரைம், சுபா, புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர்-தான் எல்லாமே என்றாகிப் போனது.

தினமணிக் கதிரில் சில்லு எழுதி தேவ்லோகப் பிரஜையாக இருந்த கணிப்பொறியை அறிமுகம் செய்தார் சுஜாதா. ஏற்கனவே அரசல் புரசலாக அசத்தியவர் மொத்த வியாபரமாக மனதில் வியாபித்தார்.

நான்காண்டுகளாய் பிலானி வாசத்தில் ஸ்டீவன் கோவ், ஃபிலிஃப் கொட்லர், ஆண்ட்ரூ டானென்பாம், பெர்ட் ஷ்மிட் என்று கலந்து கட்டியாக குருக்கள் மாறிப் போனார்கள். குமுதத்தில் கூட கோப்மேயர் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த சுய முன்னேற்ற வெறி கொண்ட காலம். அனைத்து சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஹெரால்ட் ராபின்சன், கென் ஃபாலெட் என்று மெழுகுவர்த்தி கரைத்த காலம்.

வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் ஸ்ட்ருஸ்ட்ருப், லிப்மான், பூஷ், ரம்பா என்று அட்டை டு அட்டை உருட்டி தட்டி நோட்ஸ் எடுத்து வைத்துக் கொண்ட காலம் இன்றளவும் தொடர்கிறது. இப்பொழுது குறிப்பு எடுத்தால் வலைக்குறிப்பாவது மட்டுமே வித்தியாசம்.

அமெரிக்காவில் தனிமை – கதையல்லாத புத்தகங்களின் மேல் நாட்டம் ஏற்படுத்தியது. வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறிய பிறகு சுவைக்கும் சரித்திரம், நகைச்சுவை, இசை, கலை என்று ரசனை மாறியது.

நான்காண்டுகள் முன்பு சொக்கனின் அழைப்பில் ராயர் காபி கிளபில் ஒண்டிக் கொண்டேன். முருகன், வெங்கடேஷ், பாரா, எல்லே ராம் என்று பெருசுகள் சொல்ல சொல்ல கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காலங்கள். மீண்டும் தமிழ். அப்புறம் இலக்கியம். கடைசியாக இலக்கணம் என்று தமிழ்ப் பக்கம் திரும்பிய நேரம்.

அமெரிக்காவின் அதிவேகச் சுழலில் ஆட்பட்டதன் விளைவோ அல்லது குடும்பத்து வேலைகள் அழைப்பின் காரணமாகவோ – புத்தகங்கள் படிப்பது தொடர்வண்டிப் பயணங்களில் மட்டுமே என்று ஆகிப் போயிருக்கிறது. வாரயிறுதிகளில் நண்பர்கள், சினிமா, தூக்கம், தொலைக்காட்சி, தொலைபேசி, தமிழ்மணம் என்று தொழில்நுட்பத்திற்கும் லௌகீகங்களுக்கும் சந்தோஷமாக செல்வழிக்கும் காலம் இது.

நிறையப் புத்தகங்களைப் புரட்டுகிறேன். முன்னுரையும் முதல் சாப்டருடனும் நின்று போய் இருக்கும் புத்தகங்கள் நிறைய இருக்கிறது. நூலகத்தில் இருந்து ஆசையாக எடுத்துக் கொண்டு வந்து பத்து பக்கங்களுக்குப் பிறகு அபராதம் கட்டி திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கடைசியாக வாங்கிய புத்தகம்: மண்ணாங்கட்டி :: சிட்டி (நிவேதிதா)
கடைசியாகப் படித்த புத்தகம்: அண்ணா :: என் சொக்கன் (கிழக்கு)

சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்: (இது கொஞ்சம் பெரிய பட்டியல் என்பதால் ஜூட்)

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் புத்தக அலமாரி வரை செல்ல கண் மறுக்கும். அந்த மாதிரி கூகிள், புக்-ஷெல்ஃப் உதவியின்றி என்னைப் பெரிதும் பாதிக்கும் படைப்புகள்:

1. கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
2. கிறுக்கல்கள் – ரா பார்த்திபன்
3. குருதிப்புனல் – இந்திரா பர்த்தசாரதி
4. வெயிலைக் கொண்டு வாருங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்
5. அலகிலா விளையாட்டு – பா ராகவன்

நூலகத்தில் முன்பதிவு செய்த புத்தகங்கள்:

1. Freakonomics : A Rogue Economist Explores the Hidden Side of Everything by Steven D. Levitt, Stephen J. Dubner

2. Blink : The Power of Thinking Without Thinking — by Malcolm Gladwell

3. Dictionary Days — by Ilan Stavans

4. The End of Poverty : Economic Possibilities for Our Time — by Jeffrey Sachs

5. All the President’s Men — by Carl Bernstein, Bob Woodward

தமிழில் ஏன் இப்படி இன்னும் வருவதில்லை என்று ஏங்கும் ஆங்கிலப் புத்தகங்கள்:

1. Fooled by Randomness: The Hidden Role of Chance in Life and in the Markets by Nassim Nicholas Taleb

2. All the Dave Barry You Could Ever Want by Dave Barry

3. Passing Time in the Loo by Stevens W. Anderson

4. The Daily Show with Jon Stewart Presents America (The Book): A Citizen’s Guide to Democracy Inaction

5. The Age of Paradox by Charles Handy

நான் குறிக்கப்போகும் ஐந்து வலைப்பதிவாளர்கள்:

கறுப்பி
காஞ்சி பிலிம்ஸ்
ராம் சி
பிபி
மாது காண்பதுவே

இவர்கள் தவிர புத்தகக்கடையில் புழுவானவர்களும் குதியுங்களேன்!

ரோஜா

காதல் ரோஜாவே
எங்கே
நீ எங்கே
கண்ணீர் வழியுதடி
கண்ணே

கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ
ஏதானதோ
சொல்

தென்றல் என்னைத் தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்

சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளியோடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்

மேகமிரண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா?
சொல்!

வீசுகின்ற தென்றலே
வேளையில்லை
நின்று போ

பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை
ஓய்ந்து போ

பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை
தீர்ந்து போ

பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்து போ

பாவையில்லை
பாவை
தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்பே
சேவையென்ன சேவை?

விந்தியா

விவரணப்படம் தேவை

தமிழோவியத்தில் ரஜினி ராம்கி ஜோதிகாவின் டாகுமெண்டரி குறித்து எழுதியுள்ளார்.

சன் டிவியில் ‘நட்சத்திரம்’, கேடிவியில் சில நிகழ்ச்சிகள், ‘நடித்ததில் பிடித்தது’ என பல நிகழ்ச்சிகள் சாதாரணமாகவே இருக்கிறது. புகழ்பெற்ற நடிகரின் புகழ்பெற்ற படங்கள், அதிகம் அறிமுகமாகாதவர் என்றாலும் சிறப்பான காட்சிகள் அல்லது பெரிய இயக்குநர்களின் படத்தில் தோன்றிய காட்சிகள் என்றே நிரப்பிச் செல்கிறார்கள்.

சமீபத்தில் ‘வயசுப் பசங்க” படம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.

‘கண்ணம்மா’ படத்தில் வில்லத்தனமான நடிப்பு. ‘சங்கம’மில் வெகுளியான அறிமுகம். அப்பாவிக் களை சொட்டும் புதுமுக நாயகி. நடனமே தெரியாமல் அட்ஜஸ்ட் செய்த பாவங்கள்.

நடுவே ‘சார்லி சாப்ளின்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ படங்களில் குணச்சித்திர வேடம். கடைசியாக ‘யெஸ் மேடம்’ போன்ற படங்களில் கவர்ச்சி ஆட்ட சாயம்.

இவரை எடுத்துக் கொண்டு விவரணப் படம் கொடுத்தால் எவ்வளவு அலசல்களை முன்வைக்கலாம்?

– தமிழ் சினிமா நாயகிகளின் நிலைகள்
– மேனேஜர்க்களின் கட்டுப்பாடுகள்
– பெற்றோர் கூடவே கவனிப்பதின் பலன்கள்
– முதல் கோணல் முற்றும் கோணல்?
– ஒரு படத்தில் இரண்டாம் மனைவியாக நடித்ததால் தொடர்ந்து முத்திரை குத்தப்பட்டவர்கள்
– இரண்டாம் நிலை ஹீரோக்களுடன் நடிப்பதால் மதிப்பிழத்தல்
– ஊடகத் தொடர்பாளர்களுடன் நட்பு பாராட்டலின் அவசியங்கள்

இது போன்ற பல்முகங்களை பல சந்திப்புகளின் மூலம் கொடுக்க முடிபவர்களைத்தான் டாக்குமெண்டரிகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கோள் படி

சமீபத்திய புதுமைப் பெண்கள் நிகழ்ச்சியில் ரேவதி பேசியது:

‘இந்த நிகழ்ச்சி ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு என்றவுடன் நமக்கு உடனடியாக தோன்றுவது ஒன்றுதான். பெரியாரின் பிறந்த இடம் என்பதுதான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அவரின் கொள்கைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அவரோட புக்ஸ் நிறைய படித்திருக்கிறேன்.’

ரசனை

Tamil Sify ::

  • முற்றத்திலிருந்து…
    வாகன இரைச்சலுக்கு நடுவிலும், காதைக் கிழிக்கும் ஒலிப்பான்களின் இடையிலும் எங்கிருந்தோ கேட்கிறது குயிலோசை.
  • இன்னொரு யுகசந்தி
    ஓவியக்கலை என்பது கல்லை ஆயுதமாக மனிதன் பயன்படுத்திய காலத்திலேயே தொடங்கி விட்டது.
  • மோனகுரு சந்நிதியில்
    பொன்னி நதி தன்னுடைய பல்வேறு கிளைநதிகளுடன் பாய்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளப்படுத்திய தஞ்சாவூர் மாவட்டத்தில், சோழப் பேரரசர்களும், அவர் களுடைய குறுநில மன்னர்களும் கட்டிய திருக்கோயில்கள் அனேகம்
  • சேற்றூர் காட்சிகளும் சில மனிதர்களும்
    கிராமங்களில் இப்போது உழைக்கும் மக்களின் வீடுகளிலும் பரவலாக தொலைக்காட்சிப் பெட்டி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டதை நாமறிவோம்
  • அறங்கள் தளிர்க்கும் அந்த நாள் வருமா? – முனைவர் இரா. செல்வக்கணபதி
    நம் தாய்த்தமிழ் செம்மொழி என்ற பெருமிதத்தை எட்டிப் பிடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்
  • பின்பக்க ஜன்னலும்… மூன்றாவது கண்ணும்… – திரைச்சீலை ஓவியர் ஜீவா
    பிரெஞ்சு இயக்குனர் த்ரூஃபோ சொல்வது போல் இரண்டு வகை இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
  • புட்டா கவிதை
    ஸ்ரீசக்ரம்
  • பட்டணம் போனேன் பாட்டெழுத
    பாடலை படித்த வீரபத்ரன் என்மீது மிகுந்த பிரியம் காட்டினார்.
  • ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு
    ஜெ.சைதன்யா அவர்கள் மீன்குஞ்சு நீரில் பிறப்பதுபோல இலக்கியத்திலேயே பிறந்தார் என்று கூறலாம்
  • ரசிகமணி கடிதங்கள்
    இன்று காலை முற்றத்திýருந்துகொண்டு நண்பர்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்
  • மிதக்கும் காடு – தென்பாண்டியன்
  • கரி உரி போர்த்திய கண்ணுதற் கடவுள் – முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
    தாருகா வனத்து இருடிகள் ஆணவமலம் மிக்குற்று மீமாம்சை வழிநின்று ஆபிஜார வேள்வி புரிந்தனர்.
  • கி.ரா. கடிதங்கள்
    சுயம்புவுக்கு நலமாக இருக்கிறோம் நாங்கள்.
  • இரண்டுகால் பூச்சியும் ஆறுகால் அவளும்...
    விடுமுறை நாட்களின் மதிய நேரங்களுக்காக அந்த மரத்தடி நிழலை மானசீகமாய்க் குத்தகைக்கு எடுத்திருந்தாள் அவள்.
  • காற்றில் வாழும் கதைசொல்லிகிருபானந்த வாரியார்
    காற்றில் ஒலியலைகள் அடுக்கடுக்காகப் பதிவாகின்றன.
  • Tamil Numerics 

    Tamil Numerics Posted by Hello