போபால் நோ-பால்


To ‘protect’ Hindu girls, BJP govt orders 2 colleges to swap buildings – Indian Express :: ROHIT BHAN :

மத்திய பிரதேசத்தில் ஐம்பது வருடமாக இயங்கி வரும் கல்லூரிகளை இடம் மாற்ற பா.ஜ.க அரசாணை இட்டிருக்கிறது.

எம்.எல்.பி (மஹாராணி லஷ்மிபாய்) கல்லூரி

  • பெண்கள் மட்டுமே பயில்கிறார்கள்.
  • பெருவாரியான முஸ்லீம் குடியிருப்பின் நடுவே அமைந்திருக்கிறது.
  • மாணாக்கரிகளில் ஐம்பது சதவீதம் இஸ்லாமியர்கள்; ஐம்பது சதவீதம் இந்துக்கள்.

    ஹமீதியா கலைக் கல்லூரி

  • ஆண், பெண், இருபாலாரும் பயில்கிறார்கள்.
  • எம்.எல்.பி கல்லூரியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.

    முகாந்தரம்

  • எம்.எல்.பி கல்லூரியின் ஹிந்து பெண்கள் மதம் மாற்றப்படுகிறார்கள்.

    கருத்துக்கள்

  • ‘பல முஸ்லீம் பெண்களுக்கு ஊருக்கு வெளியே இருக்கும் கல்லூரிக்கு போக முடியாமல் படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டிவரும் நிலை வரும்’ என்கிறார் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஃபர்ஹத்.
  • ‘மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத கையாலாகாத அரசுதான் இத்தகைய ஆணைகளைப் பிறப்பிக்கும்’ என்கிறார் சமூக சேவகர் அப்துல் ஜப்பார்.
  • காங்கிரஸை ஆதரிக்கும் தேசிய மாணவர் அமைப்பும் (National Students Union of India) இந்த உத்தரவை எதிர்க்கிறது. ‘ஏற்கனவே பேஷன் ஷோக்களை தடை செய்தவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இது’ என்கிறார் NSUI-இன் அகிலேஷ் ஜெயின்.
  • கலைக் கல்லூரியான ஹமீதியாவில் அறிவியல் சோதனைக் கூடங்கள் கிடையாது. ஜூன் முப்பதுக்குள் பரிசோதனைக் கூடங்களை அமைத்து முடிக்க வேண்டும்.
  • One response to “போபால் நோ-பால்

    1. பாலா,

      முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மிகவும் ஆழமானது.. பா ஜ க வின் வளர்ச்சி இது போன்ற இடஙளில் உடனடியாக இருந்தது. இதைப்போலவெ ஆங்கிலத்தின் மீதான வெறுப்பும் இந்தி பெல்ட் எனப்படும் மாநிலஙளில் பரவலாக இருக்கும். ஒரு விதமான பயமே ஆங்கிலம் மற்றும் முஸ்லிம்களின் மீதான வெறுப்புக்குக் காரணம். பல நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டதால் வந்த பயம்.. இந்திய பாகிஸ்தான் பிரிவு இதற்கு ஊட்டம் அளித்தது.

      இந்த பயம் தான் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம். 92ல் நடந்த கலவரங்களில் இது தான் நான் பார்த்துப் புரிந்து கொண்டது.

      என் பதிவு http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_29.html

      இது போன்ற துக்ளக் தனமான செயல்களால் மத மாற்றத்தை தடுக்க முடியாது என்பது புரிந்தால், நிறைய பேர் திருந்துவார்கள்.

      anbudan vichchu

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.