நீங்கள் இன்னும் இந்தியரா?


இந்த மாதிரி பட்டியல்கள் அவ்வப்போது மின்மடலில் வரும். நான் செய்து, நடுவில் மாற்றிக் கொண்டு, மீண்டும் அவ்வப்போது செய்கின்ற சில பிறவி குணங்கள்:

* மீசையை இன்னும் மழிக்காதது

* கட்டம் போட்ட ‘ஒன்லி விமல்’களுடன், Flying Machine போட்டுச் செல்வது.

* மவுண்ட் ரஷ்மோர், வாஷிங்டன் நினைவுச் சின்னம் என்று எங்கு சென்றாலும் தேவைக்கேற்ப ஜூம் (வார்த்தை உபயம்: ‘கஜேந்திரா’ விஜய்காந்த்) செய்து குடும்பத்துடன் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது.

* அரைக்கால் சட்டை போடும்போது காலுறைகளை மடக்கி விட்டுக் கொள்ளாதது; கறுப்புக் காலணிக்கு வெள்ளை வெளேர் காலுறை போட்டுக் கொள்வது.

* இயந்திரகதியில் ‘தாங்க்ஸும்’, ‘யூ ஆர் வெல்கமு’ம் சொல்ல மறப்பது.

(கொஞ்சம் outdated என்றாலும்) முழுப் பட்டியலுக்கு இங்கு செல்லவும். #44 முக்கியமானது ;-))

5 responses to “நீங்கள் இன்னும் இந்தியரா?

  1. Unknown's avatar காஞ்சி பிலிம்ஸ்

    ஆம் நான் இன்னும் இந்தியன் தான்.என் தாய் நாட்டை விட்டு வந்து வருடங்கள் பதினைந்து ஆன பின்னும் என் தாய்மொழியிலேயே கையொப்பம் இட்டு, இந்திய கடவுசீட்டு(passport)வைத்திருக்கும் நான் இந்தியன் தான்.

  2. தாய்மொழியில் (தமிழ்தானே ;-)கையெழுத்திட (அந்த சமயத்தில்) தோன்றியதை வியக்கிறேன்! அதனால் எங்காவது வினாக்கள் வந்ததா? விரிவான பதிவாக ஒன்று போடுங்களேன்….

  3. கையெழுத்து தானே அதை தமிழில் வைப்பதால் ஒரு சிக்கலும் இல்லை. எத்தனை தடவை வைத்தாலும் ஒரே மாதிரி வைத்தால் சரி. தமிழில் கையெழுத்து வைக்காத தமிழர்களின் நானும் ஒருவன்

  4. Unknown's avatar காஞ்சி பிலிம்ஸ்

    //எங்காவது வினாக்கள் வந்ததா?//
    வரக்கூடாத இடத்தில் பிரச்சனை வந்தது; வரவேண்டிய இடத்தில் பாராட்டு வந்தது.
    தமிழ்நாட்டில் என்னை காட்டானாக பார்த்தார்கள்.
    பிரான்சில், என்ன ஒரு மொழிப்பற்று? என்று பாராட்டினார்கள்.
    புதுவையில் உள்ள ஒரு பிரபல “Travel agency”யில், என்னை பார்த்து, “தமிழ்ல கையெழுத்துப் போட்டா விசா தரமாட்டாங்க சார்” ன்னு சொன்னாங்க. அதான் பெரிய சிரிப்பு.

  5. >>”தமிழ்ல கையெழுத்துப் போட்டா விசா தரமாட்டாங்க சார்”

    அமெரிக்க ஓட்டுனர் உரிமத்தில் கூட தாய்மொழியில் கையெழுத்தைப் போடுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழகத்தில் கையெழுத்து என்றாலே ஆங்கிலத்தில் போடுவதுதான் உகந்தது என்று ஊறிப் போய் விட்டது. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.