வீட்டில் இருந்தால் சன் டிவியில் பார்க்க நினைக்கும் சில நிகழ்ச்சிகள்:
1. சென்ற வார உலகம் – சனி இரவு
2. சிதம்பர ரகசியம் – புதன் இரவு
3. மெட்டி ஒலி – வாரநாள் இரவுகள் (வாரத்தில் ஒரு நாள்)
4. நீங்கள் கேட்ட பாடல் – ஞாயிறு மதியம்
5. சன் செய்திகள்
6. சூப்பர் டென் பாடல்கள் – செவ்வாய் இரவு
7. டாப் டென் மூவீஸ் – ஞாயிறு காலை
8. நம்ம நேரம் – சனி மதியம்
9. திரை விமர்சனம் – வெள்ளி மாலை
10. புத்தம் புதுசு – வாரநாள் இரவுகள் (மாதத்தில் ஒரு நாள்)
11. நடித்ததில் பிடித்தது – சனி மாலை
12. வணக்கம் தமிழகம் – தினசரி காலை
13. ஆடுகிறான் கண்ணன் – வாரநாள் மதியம் (முடிந்துவிட்டது)
14. கல்யாண மாலை – ஞாயிறு காலை
15. நினைவுகள் – சனி மாலை
16 நட்சத்திரம் – சனி காலை











எனக்கு சன் டிவியில் காமெடி டைம் நிகழ்ச்சியும் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியுமே மிக பிடித்தவை. காமெடி டைம் அந்த அரை மணித்தியாலமும் சிரிக்க வைக்கின்றது. அதுவும் சிட்டிபாபு போன் பண்ணி பேசும் போது அது சன் டிவி போன் என்று தெரியாமல் பேசுவார்களே அது வேடிக்கையாக இருக்கும். அது தவிர சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் குழந்தைகள கூட அருமையாக பாடுவார்கள். எனக்கு ராகம் தாளம் எதுவும் தெரியாத போதிலும் அந்த குரல் வளத்தில் லயித்திருக்கின்றேன்.
‘சப்தஸ்வரங்கள்’ இனிமையான நிகழ்ச்சி. நிறையவே சுய தம்பட்டம் தெரிவதால் அவ்வப்போது ‘கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே…’ என்று சொல்ல வைக்கலாம். தற்போதைய கல்லூரிகளுக்கு இடையேயான சுற்றுகள், வித்தியாசமான (அதிகம் பிரபலம் அடையாத) நடுவர்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் என்று கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
வீட்டில் சாப்பாடு கிடைக்குதா? இல்லை இல்லியா?
சன் டிவியற்ற எல்லா டிவிகளையும் உள்ளடக்கிய வார இறுதி அட்டவணை வேண்டுமென்றால் தருகிறேன்.
ஞாயிறு காலை
1. 9.00 – சன் – மீண்டும் மீண்டும் சிரிப்பு
2. 9.30 – சன் – டாப் 10 மூவிஸ்
3. 10.00 – பிபிசி – அடிவர்டிசிங் வெர்ல்டு
4. 10.30 – விஜய் – மதன்’ஸ் திரைப்பார்வை
5. 11.30 – சன் – நல்ல படமாயிருந்தால் படம்
11.30 – என்.டி.டிவி – நியுஸ்
6. 12.00 – பிபிசி – இந்தியா பிஸின்ஸ் லஞ்ச்
12.00 – சஹாரா டிவி – ஷோடைம் வித் ஷோபா டே
7. 12.30 – என்.டி.டிவி – பிக் பைட்
9. 1.30 – ஜெயா டிவி – காமெடி தர்பார்
இதுக்கப்புறம் போய் குளிக்கலாம், பல் தேய்க்கலாம், சாப்பிடலாம்.
இரவு சொல்லிக்கிறமாதிரி எதுமில்லை. ஏதாவது புது ஹிந்திப் படம் சஹாரா ஒன் – ல போடுவாங்க (இரண்டு நாளைக்கு முன்னாடி, ஹிரித்திக் ரோஷனின் “ல்க்ஷ்யா”) இல்லைன்னா என்.டி.டிவியில் “வீ தி பீபிள்” பார்த்துட்டு ஜூட்ஸ்ஸ்….
இந்த ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ என்கிற நிகழ்ச்சியைவிட ஒரு மோசமான, வெ.ஆ.மூர்த்தியின் அசிங்க சேஷ்டைகள், சில சமயம் இரட்டை அர்த்த வசனங்கள், பெரும்பாலும் கக்கூஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள், மூதேவி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் செம கடுப்பு. ஜெயாடிவியின் ‘ராகமாலிகா’ தற்போதைய (ரமணன் இல்லா) சப்தஸ்வரங்களை விட எவ்வளவோ மேல்.
குமார்.வி
>>வீட்டில் சாப்பாடு கிடைக்குதா? இல்லை இல்லியா?
உங்க காமெண்ட்டைப் பார்த்ததுக்கப்புறம் மிச்சம் மீதி கூட கிடைக்காது போல… அபார்ட்மெண்ட்டில் இருப்பதால் வசதியாக ‘அம்மா… இராப்பிச்சை வந்திருக்கேன்!’ என்று கிளம்பிவிடலாம் :P)
>>>இதுக்கப்புறம் போய் குளிக்கலாம், பல் தேய்க்கலாம், சாப்பிடலாம்.
காலை ஒன்பது மணிக்கு எழுந்துக்கறீங்களே!!! :ஓ