கேள்வி: “இளைய தலைமுறையினருக்கு ஏதாவது கருத்துச் சொல்லுங்களேன்…?”
“கருத்து சொல்ல நான் கந்தசாமி இல்ல. நம்ம ஒவ்வொருத் தருக்கும் ஏதாவது ஒரு திறமையை இறைவன் எழுதி வைத்திருப்பான். அதை எப்படியாவது வெளிப்படுத்தி நாம முன்னேறிக் காட்டணும், அவ்வளவுதான்” என்றார்
கேள்வி: “அரசியல் ஆசையில்லாவிட்டால், அப்புறமேன் இப்படியான திருமணங்களை எல்லாம் நடத்தி வைத்து ஸ்டன்ட் அடிக்கிறீர்கள்?”
“நீங்கள் நினைப்பது போல் பாலிடிக்ஸுக்காகவோ, பப்ளிசிட்டிக்காகவோ நான் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கவில்லை. எனக்கு வித்யா என்றொரு தங்கை இருந்தாள். மூன்றரை வயதிலேயே எதிர்பாராதவிதமாக அவள் இறந்து போய் விட்டாள். உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் அவளுக்கு திருமணப் பருவம் வந்திருக்கும். ராஜா வீட்டுக் கல்யாணம் போல் அவளுடைய மணவிழாவை நடத்தி இருப்போம். ஆனால், அதற்கு எங்களுக்கு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது. எங்களின் மனக்குறைக்கு மருந்து போடுவதற்காகவே ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தோம். அதன்படியே என் தங்கைகளாக எண்ணித்தான் 18 பெண்களுக்கும் திருமணங்களை நடத்தி வைத்தேன். மற்றபடி இதற்கு வேறேதும் காரணமில்லை”










