Monthly Archives: பிப்ரவரி 2005

ஆவி வார்த்தை

கல்லூரி காலத்தில் ஒய்ஜா போர்டில் ஆவி கூப்பிடுவது பிடித்தமான பொழுதுபோக்கு. அப்படி ஒரு முறை நடிகர் முத்துராமனை அழைத்துப் பேசிய குறிப்புகள்.

1. ஆவியுலகத்தில் எத்தனை பகுதிகள்?

நான்கு (A, B, C, D)

2. ஆவியுலகத்தில் எந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும்?

ஏ, பி

3. சி, டி பகுதியில் இருப்பவர்க்கு விமோசனம் உண்டா?

உண்டு.

4. அவர்கள் எவ்வளவு நாள் இருக்க வேண்டும்?

சுமார் 8 வருடம்

5. ஆவியுலக்த் தலைவர் யார்?

Divsdrep

6. அவர் எந்த நாட்டுக்காரர்?

துபாய்

7. உங்களுக்கு அந்தப் பதவி கிடைக்குமா?

கிடைக்காது.

8. அவர் எந்தப் பகுதியில் இருக்கிறார்/

9. நீங்கள் பி-யிலிருந்து ஏ-க்குப் போக முடியுமா? (விருந்தினராக/விசிட்)

முடியாது.

10. நீங்கள் அங்கேயே புண்ணியம் செய்து ஏ பகுதிக்கு செல்ல முடியுமா?

முடியும்

11. எந்த விதத்தில் என்று கூற முடியுமா?

முடியாது

12. காலயிலும் மாலையிலும் பூஜை செய்கிறீர்களா? அதனால் நன்மை என்ன?

போடா (மறக்கவே முடியாத பதில் 😉

13. ஆவியுலகத்தில் இருக்கிறவர்கள் உருவத்தைப் பார்க்க முடியுமா?

முடியும்

14. எதிர்காலத்தைப் பற்றி சொல்கிற சக்தி உண்டா?

இல்லை.

15. அந்த சக்தி எந்தப் பகுதியில் உள்ளவர்க்கு உண்டு?

16. இன்னும் எத்தனை நாட்களுக்கு நீங்கள் அந்தப் பகுதியில் இருக்க வேண்டும்?

10 வருடங்கள்

17. பேய்க்கும் ஆவிக்கும் வேறுபாடு உண்டா?

உண்டு

18. பேய் என்று எப்படி கண்டுபிடிப்பது?

இருள் பகுதியில் இருப்பவர்கள்

19. அங்கு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?

ஆமாம்

20. உங்களுக்கு திடமான உடம்பு உண்டா?

கிடையாது.

21. ருசி, வாசனை இவற்றைப் புரிந்துகொள்ள முடியுமா?

முடியும்

22. இறந்தவர்கள் ஆவி அந்த வீட்டின் முன் எத்தனை நாளைக்குச் சுற்றி வரும்?

15 நாட்கள்

23. முனீஸ்வரன் என்பது ஆவியா? கடவுளா?

கடவுள்

24. காட்டேரி என்பது பேயா?

ஆமாம்

25. முனீஸ்வரன் என்பதில் பாகுபாடு என்ன?

கெட்டது… நல்லது

26. ஏ பகுதியில் இருப்பவர்களைக் கூப்பிட்டால் வருவார்களா?

வர மாட்டார்கள்

27. விபத்துக்கு உள்ளானவர்கள் எந்தப் பகுதியில் இருப்பார்கள்?

எல்லாப் பகுதிகளிலும்

28. நோய்வாய்ப்பட்டவர்கள், நாள்பட இருந்தவர்கள் எந்தப் பகுதியில் இருப்பார்கள்?

பி

29. சி, டி பகுதியில் இருப்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?

கெட்டவர்கள்

30. தற்கொலை செய்தவர் எந்தப் பகுதி?

எங்கு வேண்டுமானாலும்

31. சி, டி-யில் இருப்பவர்கள் பேய்கள் மாதிரியா?

ஆம்

32. கெடுதல் செய்யாமல் தடுக்க உங்களால் முடியுமா?

முடியாது

33. கெடுதலை தடுக்க என்ன வழி

தெரியாது

34. மந்திரவாதிகளால் முடியுமா?

முடியாது

35. சாமி வந்து ஆடுகிறவர்கள் சாமியா, ஆவியா?

ஆவி

36. கடவுள் மனிதர்கள் மேல் வருவார்களா?

இல்லை

37. நீங்கள் காந்தி, நேரு எல்லாம் பார்த்து இருக்கிறீர்களா?

ஆமாம்

38. அவர்கள் எந்தப் பகுதியில் இருக்கிறார்கள்?

39. சி, டி பகுதியில் இருப்பவர்களைக் கூப்பிட்டால் வருவார்களா?

வரமாட்டார்கள்

40. நீங்கள் ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டா?

உண்டு

41. அங்கு ஜாதி, மதம் உண்டா?

இல்லை

42. மற்ற கிரகங்களைப் பார்த்ததுண்டா?

இல்லை

43. மற்ற கிரகங்களைப் பற்றி கூற முடியுமா?

இல்லை

44. அவி உலகத்தில் இருக்கின்ற ஆவிக்கு வளர்ச்சி உண்டா?

உண்டு

45. ஆவிகளுக்கு அதிவேகமாகப் போகக்கூடிய சக்தி உண்டா?

உண்டு

46. நீங்கள் இந்தக் கிண்ணத்தில் அடைபட்டு இருப்பது சந்தோஷமா? கஷ்டமா?

சந்தோஷம்

47. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம். கூப்பிடக் கூடாது என்கிறார்களே… உண்மையா?

ஆம்

48. கூப்பிட்டால் வருவீர்களா?

மாட்டேன்

49. பிராணிகளுக்கு தனி உலகம் உண்டா?

உண்டு

50. நீங்கள் அந்த உலகத்தைப் பார்த்து இருக்கிறீர்களா?

இல்லை

51. அதைப் பார்க்கக் கூடாது என்று கட்டளை உண்டா?

உண்டு

குறிப்பு:

* இதே மாதிரி வேற்று கிரகவாசி நம்மிடம் வந்து கேள்வி கேட்டால், பதில்கள் எவ்வாறு இருக்கும்?!

* பல பதில்கள் எங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.

* இன்றைய சூழலில் வேறு யாரையாவது கூப்பிட்டு இதே கேள்விகளைக் கேட்டு cross-examine செய்யவேண்டும்

MTV’s ‘Cribs’

பொழுது வேகமாகப் போய்க் கொண்டிருந்த பனி மாலைப்பொழுது. சன் டிவியில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததைப் பார்க்கப் பிடிக்காமல் கன்னல் திருகிக் கொண்டிருந்ததில் எம்.டிவியின் ‘க்ரிப்ஸ்‘ கிடைத்தது. தொலைக்காட்சியின் கன்னல் பட்டியலில் அடுத்தடுத்து வரும் எம்.டிவியும் வி.எச்.1-உம் குழந்தைகளுடன் பார்த்தால், அவர்களிடமிருந்து நிறையக் கேள்விகளை வரவழைக்கும். வி.எச்.1-இன் ‘தலை நூறு சூடான சீன்‘கள் பார்க்க நினைத்தாலும், பார்ப்பதை அப்படியே கடைபிடிக்க விரும்பும் சிறுவயதுப் பார்வையாளரை வைத்திருப்பதால் முடியாது. பெரும்பாலும் ‘ரியல் வோர்ல்ட்’ போன்ற அறுவைகளைப் போடுவதால் எம்.டிவியும் ஓடிப் போக வைக்கும் கன்னல்.

ஆனால், எம்.டிவியில் கூடைப்பந்து நட்சத்திரம் ஷக்கீல் ஓநீலைப் பார்த்தவுடன் ரிமோட் ஓட்டுவதை நிறுத்தினேன். பிரபலங்களின் வீடுகளை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். அவர்களின் வரவேற்பறை, சாப்பாட்டு அறை, சமையல் உள் என்று ஆரம்பிக்கிறார்கள். படுக்கை அறையையும் விடுவதில்லை. பிரும்மாண்டம் பிரமிக்க வைத்தாலும், அவர்களின் ‘க்ளோஸெட்‘ — துணிமணி வைத்துக் கொள்ளும் அறைகள்தான் எங்களை மிரள வைத்தது. நான் இருக்கும் அபார்ட்மெண்ட் சைஸுக்கு நீள்கிறது.

பெண்களின் காலணி அறைகளுக்குள் பார்த்தால் ‘பாட்டா’ ஷோரூமுக்குள் நுழைந்த அனுபவம் ஏற்படும். அமெரிக்க ஷூ கடைகளே நாணிக் கோணி வெட்கப்பட வைக்கும் அளவு அசத்தல் கலெக்ஷன்கள்.

வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி, திரையரங்கு என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப அமைத்துள்ளார்கள். தோட்டங்களில் செயற்கை மலைகள், அருவிகள், என்று தொடர்கிறார்கள். வீட்டை ரொம்ப ரசனையோடு தேக்குகளாலும், சலவைக் கல்லினாலும் கலைப் பொருட்களிலும் இழைத்திருக்கிறார்கள்.

Mariah Careyயின் தல தரிசனம் இன்னும் கிட்டாவிட்டாலும், புகைப்படங்களையாவது MTV Cribs அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.

ஒஸாமாவின் குகை வீடு என்று நக்கல் ஃப்ளாஷ் பதிப்பு பரவாயில்லையாக பின் லேடனை வாறுகிறது. GOYK.COM-இன் Ghetto MTV Cribs பார்ப்பது ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி‘ என்கிறது.

‘ப்ளேபாய்’ மனையகத்தையும் அரகராப் போடும் வாய்ப்பைக் கொடுத்தார்கள். தசரதருக்கு மனைவிகளை எண்ணி விடலாம். ஹ்யூக் ஹெஃப்னர் (Hugh Heffner) காதலிகளை எண்ண ஐன்ஸ்டீனால் கூட முடியாது. ‘காதலர் தின’த்தன்று பரிசு கொடுத்தே சொத்து கரைந்துவிடும் போலத் தோன்றுகிறது. இந்த மாதிரி ஜலபுலா ஜல்ஸ் வீடுகளைத் தொடர்ந்து ரஸ்ஸல் சிம்மன்ஸின் (Russell Simmons) தியானம்/யோகம் செய்ய, மனம் ஒருநிலைப்பட உள்ள அறைகளையும்; அவர்களிடம் உள்ள புத்தரில் ஆரம்பித்து கிருஷ்ணர் வரை உள்ள மினி கோவில்களையும் காட்டுவார்கள். திங்கட்கிழமைதோறும் இரவு பத்து மணிக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.

அனேகரின் வசிப்பிடங்களில் வீட்டுக்குள்ளேயே நீச்சல் குளம் (வெளியில் இருந்தால் படங்கள் சுட்டு விடுவார்களே!); சினிமாஸ்கோப் சைஸ் மீன்தொட்டிகள்; குறைந்தபட்சமாய் ஆறு கார்கள்; இளமைக்காலங்களை நினைவு கூற லாலிபாப் கொடுக்கும் மெஷின்கள்; என்று ஒரே மாதிரி இருப்பது — சுதந்திரமாக என்னைப் போல் வெளியில் உலாவி அடைய முடியாததை, வீட்டுக்குள் அடைப்பட்டு சாதிக்கிறார்களோ என்னும் பச்சாதபத்தையும் கொடுத்தது.

இசைஞர்களின் வீடுகளில் அவர்கள் வாங்கிக் குவித்த இசைத்தட்டுகளையும், திரைப்பட வட்டுக்களையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பாத்ரூமில் கூட ஐம்பது இன்ச் டிவி வைத்திருக்கிறார்கள். நான் பார்த்த வரைக்கும் ஒருவரின் வீட்டில் கூட புத்தக அலமாரி இல்லாதது ஆச்சரியப்படவைக்கவில்லை.

ஆனால், எம்டிவி. பார்த்தால் சிறார்களிடமிருந்து விவகாரமான கேள்வி வரும் என்று சொன்னேன் அல்லவா… அன்றும் கேட்கப்பட்டேன்.

“நாம எப்ப இந்த மாதிரி வீடு வாங்கப் போறோம்?”

Official Site: MTV Cribs

தமிழ் – ஹிந்தி – தெலுங்கு

சுஜாதா: “ஒரு தெலுங்குப் படத்துக்கான அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்திருப்பதுடன், இந்திப் படம் போல ரிச்-சாக எடுத்திருக்கிறார் பிரபுதேவா!”

வழக்கம் போல் போகிற போக்கில் ‘அசால்ட்’டாக சொல்லியிருக்கிறார். அவரை ‘மென்டல்’ என்றாலும் ‘டென்ஷன்’ ஆகாமல் கவனிக்கவேண்டிய பதிவு. தெலுங்குப் படங்கள் கூட பேரை ‘ரிப்பேர்’ ஆக்காமல் காப்பாற்றுகிறது என்பது ‘ஃபீலிங்’ ஆகவேண்டிய சமாசாரம்.

சமீபத்தில் இரண்டு ஆக்ஷன் மசாலாக்களைப் பார்த்தேன். முதலில் ‘சத்ரபதி’. இரண்டாவது ஹிந்தி ‘முஸாஃபிர்’.

தமிழோவியம் எல்லாம் போதிய அளவு எச்சரித்தாலும் பார்த்த படம். ‘இது ஒரு மனிதனின் கதை’யில் வந்த காட்சி நினைவுக்கு வந்து போனது. தியாகு (தானே?) கிட்டத்தட்ட பூரணமாக தேறியபின் “நீங்கள் இனிமே மதுவே அருந்தக் கூடாது… எனினும், ஒரு ‘பெக்’ அடிக்கறீங்களா?” என்று டாக்டர் ஆசை காட்டுவார். நோயாளி ஹீரோவும் “சரி’ என்பார்.

உடனே, ஐ.சி.யூவிற்குத் தேவையான ஐ.வி. திரவங்கள், ஈ.சி.ஜி. என்று லாகிரி அயிட்டங்கள் அறைக்குள் வந்து சேரும். தியாகுவும் ட்ரின்க்ஸ் (அப்பாடா…. சுஜாதா உபயோகித்த இன்னொரு வார்த்தையும் கொண்டு வந்தாச்சு ;-)) எடுக்க…. நிலைமை படு மோசமாகும்.

இவ்வாறு தலைவலி, திருகுவலி சித்திரவதைக்கப் போகும் படத்தைப் பார்த்தவுடன் antidote வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ‘முஸாஃபிர்‘ அமைந்தது.

‘நம்ம ஊர் படம்தானே…. இப்படித்தானே போகும்’ என்னும் முன்னெச்சரிக்கையுடன் கையில் இந்தியா டுடேவை வைத்துக் கொண்டு ஓட விட்டேன். ஆங்கிலப் படங்களுக்கு நிகரான காமிரா கோணங்கள் புத்தகத்தை மூட வைத்தது. சஞ்சய் தத்தின் சத்யராஜ் போன்ற நக்கல்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையை ஏற்படுத்தியது.

Musafir படத்தின் கதை எல்லாம் சொல்லி உங்களின் அனுபவத்தைக் கெடுக்க விரும்பவில்லை. ஃப்ளாஷ்பேக் சொல்லும் வித்தையில் வெறுமனே ‘கறுப்பு-வெள்ளை’/கலர் என்று எல்லாம் வித்தியாசம் காட்டுகிறேன் என்று பந்தா இல்லை. இரண்டு பேரின் பார்வையை இத்தாலிய படம் போல் காட்டுகிறேன் என்று எல்லாம் சிரமப்படாமல் மினுக்கிறார்கள்.

ஹீரோயிஸத்தைக் கூட அதற்குத் தேவையான கிண்டலுடன் காட்டுகிறார்கள். பாடல்கள் எல்லாம் இடையூறாக இருந்தாலும், படத்துடன் பொருந்திப் போக வெகுவாக சிரத்தையெடுத்திருக்கிறது. காட்சி மாற்றங்களில் பார்வையாளனின் புத்திசாலித்தனத்தை சோதிக்காமல் நகர்த்தல். உரையாடல்களில் வளவளா இல்லாத கூர்மை.

கிழட்டு கோவாகாரராக முன்னாள் விமர்சகர் — இன்னாள் இயக்குநர் மஹேஷ் மஞ்சரேகர். தீர்க்கமாக கொள்ளையடிக்கும் உள்ளூர் போலீஸாக ஆதித்யா பன்சோலி. பாவம் வரவைக்கும் வில்லனாக அனில் கபூர். அப்புறம் அப்பிராணி போல் இருக்கும் பெயர் நினைவில் இல்லாத இரண்டு அரைகுறை நாயகிகள்.

தமிழ்ப் படங்களுக்கும் ஹிந்திப் படங்களுக்கும் வித்தியாசம் நிறைய என்பதை உணர முடிகிறது. ஹீரோ எப்பொழுதுமே ஜெயிப்பதில்லை. கதாபாத்திரத்துக்கு நாற்பது வயதானால் அதற்கேற்ற தோற்றம் உள்ளவர்தான் கதாநாயகர். இமேஜுக்காக பதினெட்டாக்கிக் கொள்வதில்லை. நூறு சதவீதம் கெட்டவன் என்று யாருமே இல்லை. வில்லன் உட்பட அனைவரும் தேவைக்கேற்ப அவ்வப்போது காமெடி உதிர்க்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாயகிகளுக்கு ஹிந்தியில் ஃபேஷன் சென்ஸ் அதிகம். கச்சிதமாக வருகிறார்கள். எசகு பிசகாக ஆடுகிறார்கள். ஆங்கிலப் படங்களில் ‘R’ முத்திரைக்கு இணையாக பாலுறவு காட்சிகள் வருகிறது.

இதற்கும் மேலாக நவநாகரிக ஆண்களும் பெண்களும் அழகாக சுத்தமான ஹிந்தியில் பேசிக் கொள்கிறார்கள். தலைப்பையும் ஆங்கிலத்தில்தான் வைப்பேன் என்று வறட்டு ஜம்பம் எதுவும் செய்வதில்லை. ஆனால், தயாரிப்பில் ஹாலிவுட்டை சர்வசாதாரணமாக தொடுகிறார்கள்.

ஹிந்திக்கும் தமிழுக்கும் ‘உருப்படியான’ சினிமாவில் டயானாவுக்கும் சார்லஸுக்கும் உள்ள தூரம்! Probably so close… yet, verrrry farrrr!

Pooja – Jay Jay & Attagasam 

Pooja – Jay Jay & Attagasam Posted by Hello

Madurai Thamizh Peragarathi – Dictionary in Tamil …

Madurai Thamizh Peragarathi – Dictionary in Tamil Posted by Hello

Don’t Worry Be Happy! 

Don’t Worry Be Happy! Posted by Hello

Tamarin Monkey 

Tamarin Monkey Posted by Hello

Daily Thanthi – Word Games 

Daily Thanthi – Word Games Posted by Hello

Kanji Mutt – Police 

Kanji Mutt – Police Posted by Hello

பதினைந்து – இராணுவ வீரன் – குறும்படம்

கல்கி: ஜவான்கள் சிலர் பயணம் செய்த ரயில் பெட்டியில் ஐந்து பேர் ரிசர்வேஷன் இல்லாமல் ஏறியிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரையும் ரயிலிலிருந்து பலவந்தமாக வெளியே தள்ளியிருக்கிறார்கள் அந்த ஜவான்கள். பக்கத்தில் ஓடிய தண்டவாளத்தில் அவர்கள் விழ, விரைந்து வந்துகொண்டிருந்த மற்றொரு ரயில் அவர்களை அரைத்துக் கொன்றுவிட்டது!

குடிமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ராணுவ வீரர்கள்தான் இவ்வாறு அரக்கத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பிளாட்ஃபாரத்திலாவது அந்தப் பயணிகளை இறக்கி விட்டிருக்கக் கூடாதா? மனித உயிர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது!

ஆந்திராவில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் முதல்வர், காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தமது மகனின் பெயர் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிந்ததும் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற சம்மதித்திருக்கிறார்.



ஆறாம்திணை — ஏகலைவன்: சமீப காலங்களாக குறும்படத்திற்கான வீச்சு தமிழ்சூழலில் அதிகமாகக் காணப்படுகின்றன. சூல் குறும்பட அமைப்பும், இண்டர்நேஷ்னல் சினி அப்ரிசியேஷன் ஃபாரமும் இணைந்து நடத்திய குறும்பட திரையிடலில் அந்த வீச்சை கண்கூடாகக் காண முடிந்தது. திரைப்படச் சங்கங்கள் தமிழ்ச் சூழலில் முதன் முதலாக குறும்படத்தை மட்டும் திரையிடத் துவங்கியிருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கமாக அமைந்திருக்கிறது. இந்த குறும்பட விழாவில் அடையாளம் (அம்ஜத் மீரா அகிலன்), பரமபதம் (பிரபு ராதாகிருஷ்ணன்), பஞ்ச(ம்)பூதம் (முத்துக் குமார்), நானும் (மாமல்லன்), கலர்ஸ் (விஜய் சங்கர்) என்கிற ஐந்து குறும்படங்கள் திரையிடப்பட்டன.

பரமபதம் ஒரு இளைஞனது தேடலைச் சொல்கிறது. ஒரு அறிவு ஜீவிக்கான தோற்றத்துடன் இருக்கிற அந்த நபரின் தேடல் இறுதியில் காமத்தில் அடங்கி விடுகிறது. அவனது தேடல் எதுவென்று தெளிவாகச் சொல்லாமல் காமத்திலேயே அடங்கிப் போவதாக காட்டியிருக்கிறது. பஞ்ச பூதத்தில் தண்ணீர் வருவதற்கான குறியீடாக பிரசவ வேதனையைக் காட்டுகிறது. இந்த ஐந்து படங்களில் பிந்தைய இரண்டு படங்கள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. ஒன்று பார்வையற்ற குழந்தையின் நிறத்திற்கான தேடல். கலர்ஸ் என்கிற இந்தக் குறும்படம் தமிழ்ச் சூழலில் ஒரு மிகச்சிறந்த முயற்சியாகவே எனக்குப் படுகிறது

இந்த விழாவில் பெரிதும் ஈர்த்த, பாராட்டுப் பெற்ற மாமல்லனின் ‘நானும்’ என்கிற குறும்படம் மிக அதிக கரகோஷம் பெற்றது.

உதவி இயக்குநராக சேர வந்து இரண்டு வருஷம் கோடம்பாக்கத்தில் இருந்து மோதிவிட்டு சொந்த ஊருக்கு போய் விடுகிறான். பின்னர் மீண்டும் அசோக் நகரில் இருக்கும் தன் சக உதவி இயக்குனர் நண்பனை தேடி வருவதில் படம் தொடங்குகிறது. மீண்டும் தன் பழைய இயக்குனரை தேடிப்போய் வாய்ப்பு கேட்கிறான். காத்திருக்கும் நேரத்தில் வயிற்று வலி எடுத்து மலம் கழிக்க முடியாமல் அவதியுறுகிறான். மீண்டும் சென்று இயக்குனரை பார்க்கும்போது, அவர் திட்டி அனுப்பிவிடுகிறார். சோர்வுற்றிருக்கும்போது அறை நண்பன் அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்து, தீர்த்தமும் நடக்கிறது. அறை நண்பன் ‘மப்பில்’ சினிமாவின் யதார்த்தத்தை விவரிக்கிறான். ‘நல்லபடம்’ என்பது இங்கு முக்கியமல்ல. வியாபாரம் தான், ஜெயித்துக் காட்டுவதுதான் முக்கியம். இன்றைய சினிமா உலகத்துடன் சமரசம் செய்து கொள்’ என்கிறான். இவனும் அவனைப் போலவே மாறி எப்படி சினிமாவில் கரைகிறான் என்பதோடு படம் முடிகிறது.



தினத்தந்தி: அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் குறைந்தது 15 தமிழ் வார்த்தைகளையாவது கண்டுபிடிக்க வேண்டும்.

(உதாரணமாக :கூட்டணி, ஆடு…) அதிக வார்த்தைகளை கண்டுபிடித்து எழுதுபவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ. 500 வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் சரியான விëடை எழுதி இருந்தால் அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்படும். விடைகளை எழுதி தபால் கவரில் வைத்து ஒரு வார காலத்துக்குள் அனுப்ப வேண்டும்.