Monthly Archives: பிப்ரவரி 2005

‘இச்’ இளகல்கள்

ஜூனியர் விகடன்: “திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன் என்றும் வீர வசனம் பேசுகிறார் ராமதாஸ். இதற்கு முன்பு பலருக்கும் இதேபோல் வீர வசனம் பேசி ‘அல்வா’ கொடுத்தவர்தான் இவர். இப்போது அவரது ‘அல்வா’ லிஸ்ட்டில் விழுந்திருக்கிறார் திருமாவளவன்!” — ‘மக்கள் தமிழ் தேசம்’ தலைவர் ராஜ கண்ணப்பன்.

அரசியல் அல்வா இருக்கட்டும். நேற்றைய குல்கந்து அல்வா தினம் இனிதே முடிந்திருக்கும் நேரம் இது. ரோஜாப் பூ வாங்கித் தராவிட்டால் காதலே இல்லை. கூடவே இரண்டு மாச சம்பளத்தைக் கொண்டு வைரக் கல் பரிசு வேண்டும். ஆதர்ச அமெரிக்க காதலன்/புருஷன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஹவாயில் வசித்தால் மீன் பிடிக்கும் வேட்கை வேண்டும் என்பது போல் அமெரிக்க வாழ் இந்தியக்குடிகளையும் இந்தப் பழக்கவழக்கங்கள் விருப்பமுடனேயே எட்டியுள்ளது. கண்மூடித்தனமான வரலஷ்மி விரதத்திற்கும், கர்வாசவுத்திற்கும், கணுப்பொடி வைத்தலுக்கும் பர்த்தியாக ‘காதலர் தினம்‘ தோன்றியதும் நன்மைக்கே.

நாள் முழுக்கப் பட்டினி இருப்பது, அதன்பின் நிலாவுக்கு காத்திருத்தலும் இல்லை. கார்போஹைட்ரேட் நிரம்பி வழியும் அடைகள் இல்லை. சீவிக்காத காக்கைகளுக்காக வெள்ளைப் பனியின் மேல் பச்சை இலை போட்டு கலர் கலராக சாதம் உருட்டுவதும் தேவையில்லையே… உருப்படியான மென்வட்டுகள், வாழ்நாள் முழுக்க கூடவே வரக்கூடிய அணிகலன்கள், வசந்த கால புத்தாடைகள், பல் கூசவைக்கும் சாக்லெட்டுகள், ஜேம்ஸ் வசந்தன் விரும்பும் உள்ளாடைகள் என்று குறிகிய கால சிற்றின்பத்துக்கும் நீண்ட நாள் பேரின்பத்துக்கும் வழிவகுக்கும் ‘அன்பர் தின’ நடைமுறைகள் வரவேற்கத்தக்கதுதான்.

தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் — விக்ரமாதித்யன்:

ஒருத்தி / இன்னொருத்தி

ஒருத்திபோல
தெரிந்தாள் இன்னொருத்தி
ஒருத்திபோல
ஆவாளோ இன்னொருத்தி
இன்னொருத்தி புதுமையாகலாம்
ஒருத்திதான் உரிமையாவாள்.
இன்னொருத்தி கைப்பையை
எடுத்துப்பார்த்ததுண்டா நீ
ஒருத்தி இடத்தை
இட்டு நிரப்பமுடியுமா இன்னொருத்தி

ஒருத்தி அருமை
இன்னொருத்தியிடம்

(வெளியீடு: காவ்யா. விலை: ரூ.100)

எங்காவது பராக்கு பார்த்துவிட்டு, இது போன்ற கவிதைகளைக் காட்டி அசத்திய காலம் (அண்ணா)மலையேறி செல்வி முடிந்து திருமதியானவுடன் ப்ராக்டிலாகி விட்டது. தற்போதைக்கு, ரயிலைத் தவறவிட்டால் கீழ்க்கண்ட இளகலை எடுத்துவிட்டு சமாளிக்கலாம்.

ஆனந்த விகடன்
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது

கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
— நா.முத்துக்குமார்

எஸ். என். நாகராஜன் – ஒரு சந்திப்பு

நன்றி: தமிழோவியம்.காம்

(1995 ஆண்டு காலச்சுவடு இதழ் எண் 10ல் இடம்பெற்ற எஸ்.என் நாகராஜன் நேர்காணல் 1993ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் இருந்து காந்தி குறித்த அவருடைய கருத்துக்கள்)

காந்தியினுடைய தர்மகர்த்தா ராஜ்யத்தை நீங்க பார்த்தீங்கன்னா அவர் மேல் சாதி ஆதிக்கத்தைத்தான் விரும்பராருன்னு தெரியும். காந்தியைப் பற்றி இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஒரு நூல் எழுதியிருக்காரு. Gandhi and his Ismன்னு சொல்லி. அதுல காந்தி சொன்னதை முக்கியமா போடறாரு.

‘ஆங்கில ஏகாதிபத்தியம் அழிந்துவிட்டால் என்னுடைய கனவு எல்லாம் அழிந்துவிடும்’.

அப்ப ஏகாதிபத்தியம் ஒழியக்கூடாதுங்கறதுதான் அவரோட அபிப்பிராயம். அதே ஏகாதிபத்தியத்தை மாவோ எப்படிப் பார்த்தாரு? ஏகாதிபத்தியத்தை ஒழிச்சாத்தான் மக்கள் வாழ முடியுங்கறது அவருடைய நிலைப்பாடு. காந்தி தாழ்த்தப்பட்டவங்கள எப்படிப் பார்க்கறாரு? அடுத்தாப்ல உடலை எப்படிப் பார்க்கறாரு? பெண்களை எப்படிப் பார்க்கறாரு? இந்திய பண்பாட்டுல ஆன்மிகவாதம் சாதாரண மக்களையும் பெண்களையும் உடலையும் ஒரே தரத்தில்தான் வைக்கின்றது. அந்த மூணுமே மயக்கத்தை உருவாக்கக்கூடியதுங்கறதுதான் நம் ஆன்மீகத்தின் ஆதிக்கக் கருத்து. காந்தியினுடைய அணுகுமுறை துறவியினுடைய அணுகுமுறை. இறுதியில் துறவிக்கோலம் போலியாகத்தான் முடியும். இதற்கு காந்தியும் விதிவிலக்கல்ல. உடலை வருத்திக்கறாரு. ஆயுதத்தை எடுக்காதேங்கறாரு. சௌரி சௌராவிலே அவர் எடுத்த முடிவு அதுதான். ஆயுதத்தை எடுத்தா ஆங்கில பூர்ஷ்வா மட்டும் ஒழியமாட்டான். நம் பூர்ஷ்வாவும் ஒழிஞ்சுடுவான். காந்தி அதற்குத் தயாராக இல்லை. ஆக காந்தி ஒரு பூர்ஷ்வா வர்க்கத்தோட பிரதிநிதி. காந்திக்கு மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கணும்னு இல்லை. அவருக்கு மேல்தட்டு ஜாதியோட நல்ல ஆட்சி அமையணும்னுதான் விருப்பம்.

Indira Gandhi in earlier Years 

Indira Gandhi in earlier Years Posted by Hello

The Many Lives of Marilyn Monroe – Sarah Churchwel…

The Many Lives of Marilyn Monroe – Sarah Churchwell Book Posted by Hello

Jamie Foxx & Alicia Keys – Grammy Music Awards 200…

Jamie Foxx & Alicia Keys – Grammy Music Awards 2005 Posted by Hello

சிகரம் – எஸ்.பி.பி – வைரமுத்து

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித் தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

கண்ணிரண்டில் பார்த்திருப்பேன்
கால்கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்துசேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)

தமிழ்பௌல்

அமெரிக்காவில் சூப்பர்பௌல் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சியின் நம்பர் 1 நிகழ்ச்சியாக இருக்கிறது. நடுவே வரும் விளம்பரங்களுக்கும் பெரிய அளவில் சிரத்தை எடுத்து காண்பிக்கிறார்கள். சூப்பர் பௌலுக்காகவே சிறப்பாக புத்தம்புதிய விளம்பரங்கள் தயாரித்து வெளியிடுகிறார்கள். கால்-செண்டர்கள் மிகுந்திருக்கும் தமிழகத்திலும் சூப்பர் பௌலை கண்டு புரிந்து கொள்ளுமாறு அமெரிக்க முதலாளிகள் கட்டளையிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் சொல்கிறது. தமிழர்களுக்காக ஸ்பெஷல் விளம்பரங்களும் ரெடி.

அந்த விளம்பரங்களில் சிலவற்றின் முன்னேட்டத்தை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

சென்னையில் ஏற்கனவே பல்லாண்டு காலமாய் கடை வைத்திருப்பதால் ‘பழம்பட்டு’ என்னும் புதிய பட்டு வகையை அறிமுகம் செய்கிறார்கள் ‘ரோத்தீஸ்’. ‘ராத்திரியிலும் ரோதனையில்லாமல் ஷாப்பிங் செய்ய வரூவீர் ரோத்தீஸ்’ என்னும் வார்த்தைகள் விளம்பரம் முழுக்க வருகிறது. இந்த விளம்பரத்தில் பழம்பட்டு வகையை அறிமுகம் செய்பவர் அஞ்சு எலி தேவி. ‘என்னுடைய காலத்தில் இந்தப் பட்டை காண்பித்தார்கள். அன்று இருந்த அதே காவியப் பட்டை பத்திரம் இல்லாமல் வைத்ததால், என்னால் கிழிக்க முடிந்தது. ஆங்காங்கே பொத்தல் எல்லாம் வந்திருக்கிறது. இது இந்தக் காலத்துக்கு ஏற்ற ·பேஷன். கிழிசல் ஜீன்ஸ் போல் இருக்கிறது. பழமை என்றாலே பெருமை! அதிலும் கிழிந்த பழம் பட்டின் பெருமை அறியாமல் வாங்கிக் கொள்வது கொடுமை’ என்று முடிக்கிறார் அஞ்சு எலி தேவி.

இதற்கு அடுத்த விளம்பரம் கார்ட்டூன் மூலமாக கார் பாட்டரியின் அருமையை காட்டுகிறது. விளம்பரத்தின் ஆரம்பத்தில் சிறுமியருத்தி ஓடி வருகிறாள். கையில் தண்டத்துடன் காவியுடையுடன் சிறுவன் அவளைத் துரத்த ஆரம்பிக்கிறான். சைக்கிளில் செல்கிறாள். குட்டி சாமியும் விடாமல் காரில் தொடர்கிறான். சைக்கிள் பன்சராகி பஜாஜ் ஸ்கூட்டிக்கு மாறுகிறாள். சாமியாரின் கார் நிற்காமல் ஓடுகிறது. ஸ்கூட்டியில் இருந்து ரயிலுக்குத் தாவுகிறாள். சாமியின் கார் அதையும் பின்தொடர்கிறது. ரயில் தடம்புரள, ஏர்-இந்தியாவில் ஏறுகிறாள். இதற்குள் நேபாளம் வந்துவிட, பெருமூச்சுடன் காரை நிறுத்தி இளைப்பாறி ‘எங்கேயும், எப்போதும், தோன்ற வைக்கும் பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும், இறவா வரம் கொண்ட பாபா பாட்டரிகள்‘ என்று முடிக்கிறார்கள்.

அடுத்ததாக செல்பேசி விளம்பரம். கிட்டத்தட்ட சென்ற விளம்பரம் விட்ட இடத்தில் தொடர்கிறது. விமானத்தின் உள்ளே இருக்கும் பாட்டி செல்பேச ஆரம்பிக்கிறாள். ‘நானும் ஐம்பது வருஷமா ட்ரை செய்கிறேன்! இப்பத்தான் லைன் கிடைக்கிறது’ என்கிறாள். ‘உங்களுக்கும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க உபயோகிப்பீர் “காக்கா செல்“. ஆசாமிகள் ஆகட்டும் சாமியார்கள் ஆகட்டும்… தப்பித்து ஓடும்போதெல்லாம் உங்களை நாங்களும் விடாது தொடர்வோம்… கா… கா… கா…’ என்று காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன.

சுமா பாரதியும் ரெட் ராம் சாவ்தானியும் காரில் வந்து இறங்குவதில் அடுத்த விளம்பரம் ஆரம்பிக்கிறது. உள்ளே போனவுடன் கை தட்டும் ஓசை கேட்கிறது. அடுத்து சுவற்றில் அடிக்கும் சத்தம். தொடர்ந்து இன்னும் கைகலப்பு குரல்கள். வெளியே இருக்கும் வாட்ச்மேனுக்கு உறக்கமே இல்லை. இந்த சத்தங்களையேக் கேட்டு வியந்து கொண்டிருக்கிறார். அவர்களின் அறைக்கு தன்னுடைய டார்டாய்ஸ் கொசுவத்திச் சுருளை எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்கும்போது ‘இந்த இரவுக்கு முடிவேயில்லை’ என்னும் உணர்ச்சிகரமான குரல் பிண்ணனியில் ஒலிக்கிறது.

கோக்கும் பெப்ஸியும் ஒருவரையருவர் தாக்கிக் கொள்வது நாம் அறிந்ததே. லிஃப்டில் அதி தத்ரூபமான குரங்கு பொம்மையுடன் சிப்பந்தி காத்திருக்கிறார். பத்தாவது மாடியில் கோக் வைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார் லல்லூ ப்ரசாத் யாதவ். பதினோராவது மாடியில் கையில் பெப்ஸியுடன் இளைய சேனாபதி சிஜய் லிஃப்டுக்குள் வருகிறார். திடீரென்று கரண்ட் போய்விட ‘கரக் முரக்’ சத்தங்கள். இரண்டே விநாடிகளில் மின்சாரம் வந்து விடுகிறது. இப்பொழுது பார்த்தால் குரங்கு பொம்மை காணோம். அதற்கு பதிலாக லல்லூவின் பொம்மை இருக்கிறது. குரங்கு உயிர் பெற்று ‘திரு திரு’ பாய்ச்சுகிறது. சிஜய் கையில் இருந்த பெப்ஸி காலி. ‘பெப்ஸி குடியுங்கள்… உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் குரங்கை எழுப்புங்கள்’ என்று ஒரு குரலும், ‘கோக் குடியுங்கள்… உங்களின் மூளையை உடல் முழுக்க பரவ விடுங்கள்’ என்று இன்னொரு குரலும் ஒலிக்கும்.

அந்த இடம் மெல்லிய விளக்குகளால் நிறைந்திருக்கிறது. ‘நான் சிரித்தால் தீபாவளி’க்கு முன்னாள் முன்னணி நடிகன் ஜின்ரம் நடனம் பயில்கிறார். அப்பொழுதுதான் காமத்திபுராவிற்கு வந்தது போன்ற இளம் மாணாக்கன்கள் குருவைப் பின்பற்றி ஆட முயற்சிக்கின்றார்கள். அங்கே காதலனை பார்க்க வரும் தொப்பை நடிகை கிளாஸுடன் உதிக்கிறார். ‘சரக்கை அடிச்சுக்கோ… சரிஞ்சு படுத்துக்கோ’ என்று திடீரென்று பாடல் மாறி தொப்புள் நடனம் ஆட ஆரம்பிக்கிறார். ஜின்ரம் வெட்கப்பட்டுக் கொண்டு கொண்டு வந்த தண்ணியை அடிக்கும் போது ‘கிங்ஃபிஷர் குடிச்சுக்கோ… ஊத்திக்கோ’ என்று மாணவர்களின் போதையுடன் முடிக்கிறார்கள்.

சூப்பர் பௌல் ஒளிபரப்பும் நிறுவனமே வலைபத்திரிகையும் நடத்தி வருகிறது. அந்த வலையிதழுக்காக மூன்று விதமான விளம்பரங்கள் காட்டப்படுகிறது. ‘மங்காத்தா கண்ணு மங்காத்தா’ என்று தொடங்கும் முதல் விளம்பரத்தில் டஹிதி முதல் தாம்பரம் வரை உள்ள பல்வேறு ஊர்கள் காட்டப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் மங்காத்தா ஆடுகிறார்கள். இணையத்தில் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டேயிருப்பதாகக் காட்டப்படுகிறது. ‘மூணுசீட்டு கண்ணா மூணுசீட்டு’ என்று இதேபோல் இன்னொரு விளம்பரமும் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கும். ‘செம்மொழியில் முதன்முறையாக மங்காத்தா’ என்று ஆரம்பிக்கும் மூன்றாவது விளம்பரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

உங்களுடைய முதலிரவைக் கொண்டாட அழைக்கும் ஜி.எம். மகிழுந்துகள், ‘சலிக்குது… சலி சலிக்குது’ என்று சல்லடையுன் அழைக்கும் புடைவைகள், புதிய சாயம் பூசியதால் வென்ச்சர் காபிடலிஸ்ட்களிடம் இருந்து பணம் கிடைத்த வித்தையை சொல்லும் அமிதாப் என்று நீங்கள் பார்த்த விளம்பரங்களையும் சொல்லுங்கள்.

-பாலாஜி / Tamiloviam

அள்ள அள்ளப் பக்கம்

“இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன.”
எஸ்.ராமகிருஷ்ணன்

வெள்ளிக்கிழமை ‘திண்ணை‘ பக்கம் அசகாயத் தீனி போடும். ஆனால், இரண்டு வாரத்துக்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்துதான் ஆறாம்திணை பக்கம் சென்று துழாவ ஆரம்பித்தேன். எதையோத் தேட, என்னென்னவோ கிடைத்தது.

இலக்கியம் :
வாய்மொழி இலக்கியம் | திட்டிவாசல் | நூல் விமர்சனம் | படைப்புலகம் | சிறுவர் இலக்கியம் | சிற்றிதழ் வரிசை

அரசியல் :
தலையங்கம் | தலைமை | தேர்தல் | தேசியம் | மாநிலம் | சர்வதேசம்

சமுகவரலாறு :
மண்வாசனை | தன்வரலாறு | கருவூலம் | சென்னை சுவடுகள் | மக்கள் தெய்வங்கள் | சிறப்புப்பார்வை

தோழி :
ஆக்கம் | சந்திப்போமா…. | கருவூலம் | சாதனையாளர் | பெண் மொழி | கட்டுரை

மொழி :
தமிழறிவோம் | பழமொழி | மொழி வரலாறு | சொல் புதிது | விடுகதை | கட்டுரை

கலை :
தூரிகை | இசை | நாடகம் | சினிமா | நாட்டார் கலைகள் | பரதம்

சினிமா :
நேருக்கு நேர் | ரெடி டேக் | கண்ணோட்டம் | தகவல் பெட்டகம் | விமர்சனம் | ஊசிப்பட்டாசு | நிகழ்வுகள் | பொம்மை

முகப்பு :
எண்ணங்கள் | சமயம் | கவிதை | சிறுகதை | கல்வி | குழந்தை | குறுக்கெழுத்து | புது வரவு | விடுகதை | பழமொழி | நேர்காணல் | சொல்லாட்டம்

சுரா, பொன்னம்பலம் என்று பலரில் தொலைந்து போக வைத்தார்கள். எஸ்.ரா. எங்கேயாவது கிடைத்தால் சொல்லுங்க.

அப்படியே வலைப்பதிவுகளையும் இவ்வாறு பட்டியலிட்டு தொகுத்து வைத்தால் சௌகரியமாக இருக்குமே!

பொறிப்புரை

ச.திருமலை: ஒரு ஹிந்துத்துவா ஆதரவாளர் ‘காதல்’ படத்தைப் பார்த்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ:

‘மதுரை என்பது ஒரு கோவில் நகரம். ஹிந்துக்களின் முக்கியமான கோவில், பிரமாணடமானக் கோவில் உள்ள நகரம். உலக அதிசயத்தில் ஒன்றா என்று வாக்கெடுப்பு நடத்தப்படும் நகரம்.

அந்த நகரத்தைக் காண்பிக்கும் பொழுது கேமரா கோணம் அங்குள்ள மசூதி ஒன்றை பிரமாண்டமாகக் காட்டி, அரபி மொழியில் ஓதப்படும் ஒலியின் பிண்ணனியில், மீனாட்சி அம்மன் கோவிலை சிறிதாகக் காண்பிக்கிறார் ஒரு போலி மதச்சார்பின்மைவாதியான பாலாஜி சக்திவேல். அந்தக் கோணம் ஏதோ மெக்கா மெதினாவைக் காண்பிப்பது போல் இருந்தது. நிச்சயம் அந்தக் கோணம் தற்செயலான ஒன்றாக இருந்திருக்காது. ஒரு பிரமாண்டமான கோவிலை சிறுமைப் படுத்தும் முயற்சியே இது.

இது போக இவர் பல காட்சிகளில் கிறிஸ்துவக் கடவுள்களுக்கும் தேவாலயங்களுக்கும் காண்பிக்கும் முக்கியத்துவம் இந்துக் கடவுள்களுக்குக் காண்பிப்பக் படுவதில்லை. மேலும் பழநிக்குப் பாதயாத்திரை போகும் பக்தர்களை கேலி செய்யும் விதத்தில் ஒரு வசனமும் வருகிறது. தி க காரர், மற்றும் கிறிஸ்துவரான தேவசகாயத்தின் கடையான எண்ணெய்ப் பலகாரக் கடைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் காண்பிக்கப் படுகிறது. திண்டுக்கல்லில் ஈ வே ரா சிலையைக் காண்பிக்கின்றார்கள்.

காதலுக்கு ஆதரவு அளிப்பவராக ஒரு கிறிஸ்துவரையும் எதிர்ப்பு தெரிவிக்கும் கொடுமனம் படைத்தவர்களாக குங்குமம் வைத்துள்ள ஒரு இந்துவும் காட்டப் படுகிறார்கள். ஆகவே இது முழுக்க முழுக்க ஒரு இந்து மத விரோதி எடுத்த படமே என்பது உறுதியாகிறது’.

Yahoo! Groups : RaayarKaapiKlub Messages : Message 10797 — அ. ராமசாமி :: தீம்தரிகிட



நிலாச்சாரல்.காம் :: “ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தர் புகழேந்தியை எக்காரணமுமின்றிச் சிறையிலடைத்துவிட்டார். இந்த விவரத்தைக் கேள்வியுற்ற ராணிக்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அவள் அரசன் அந்தப்புரத்திற்கு வரும் சமயம் அறைக்குள்ளே புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மன்னன் குரல் கொடுத்தும் கதவைத் திறக்கவில்லை. அந்த நாளில் மகாராணிகள் ஊடல் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப் புலவரை அனுப்பி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். அதன்படியே குலோத்துங்கனும் தனது அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தரை அனுப்பினான்.

நானே இனியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்

தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

வானேறனைய வாள் விரவிகுலாதிபன் வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே!

இந்தப் பாடலைக் கேட்ட அரசியின் கோபம் அதிகமாகவே அவள் கதவின் இன்னுமொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக் கொண்டாள். அப்படித்தான் ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” சொற்றொடர் உருவானது.

ஒட்டக்கூத்தரின் மீது மனைவியின் கோபத்திற்குக் காரணம் புகழேந்திப் புலவர் சிறையிலிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொண்ட அரசன் உடனே புகழேந்தியை விடுதலை செய்து அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பித் தன் மனைவியை சமாதானம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். புகழேந்தி அரசியின் வாசலுக்கு வந்து

இழையன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை யேந்தியபொற்

குழையன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந் தணி

மழையன்றிரண்டு கைப் பாணாபரண நின் வாசல் வந்தால்

பிழையன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே!

எனும் பாடலைக் கூறியதும் அரசி இரண்டு தாழ்ப்பாள்களையும் திறந்தாள்.

பாடல்களின் விரிவுரைக்கு: nilacharal.com

சிகிச்சை சக்ஸஸ்

ஆனால், நோயாளிதான் இன்னும் தேறவில்லை.

பரி மற்றும் இன்னும் சில நண்பர்களின் தொடர்ந்த இடித்துரைத்தலுக்குப் பிறகு ஒரு வழியாக ‘ப்ளாக்ஸ்கின்ஸ்’ வழியாக வார்ப்புருவை உருவி, மாற்றி விட்டேன். ஆனால், முன்பு இருந்த ஸ்க்ரிப்ட்கள், உரல்கள், படங்கள் எல்லாம் தொடர்ந்ததால், வலைப்பதிவு பழைய வேகத்திலேயேதான் வந்து கொண்டிருக்கிறது.

ஷங்கர் படம் வெளிவருவதற்கு காத்திருப்போம். இரண்டு வருடங்கள் ஆனால் கூட பொறுத்திருப்போம். ஆனால், ‘அன்புமணி’ போன்றவை தாமதித்து வெளிவந்தால் நஷ்டம் பார்வையாளர்களுக்கு அல்ல. நாம ‘அன்புமணி’/’ஜனனம்‘ ரேஞ்சு. எனவே, உடனடியாக கணினித் திரையில் வரவழைக்க என்ன மாயாஜாலம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னால் புண்ணியமாகப் போகும்.

டெம்பிளேட்டில் வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் சொல்லவும்.

அமெரிக்கத் தொலைகாட்சிகளில் மீண்டும் ஐஷ்வர்யா ராய் தோன்றினார். அவர் நடித்த ப்ரைட் & ப்ரெஜுடிஸ் இந்த வாரம் முதல் (பெரும்பாலான அமெரிக்க நகரங்களில்) ஆரம்பிக்கிறது. ‘மில்லியன் டாலர் பேபி’யை மக்களிடம் கொண்டு செல்ல க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் வந்திருந்தார். ஐஷ்வர்யா டேவிட் லெட்டர்மேனுடனும், க்ளிண்ட் ஜே லீனோவுடனும் அளவளாவினார்கள்.

முன்ன பின்ன பேட்டி கொடுத்து ஐஷ்வர்யாவுக்கு அனுபவம் இல்லாதது தெரிந்தது. ரொம்பவும் பரபரப்புடன் காணப்பட்டார். ‘பேட்டி முடிந்து விட்டதா’ என்று ஆயாசமாகக் கேட்டு தர்மசங்கடமான சிரிப்புடன் முடித்துக் கொண்டார். எவ்வளவு தடவைதான் ‘இன்னும் பெற்றோருடன்தான் குடித்தனமா?’ என்னும் அபத்தமான கேள்விக்கு விடையளிக்க வேண்டுமோ… தெரியவில்லை.

அந்தப் பக்கம் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அமர்த்தலாக பேசிக் கொண்டிருந்தார். “உங்க படம் ஆஸ்காருக்கு பரிந்துரைத்திருக்கிறார்களே… உங்களுக்கும் அகாடெமியில் ஓட்டு உண்டே! உங்க படத்துக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா? அல்லது வேறு யாருக்காவது வாக்களிப்பீங்களா?” போன்ற பூடகமான கேள்விக்கெல்லாம் கூட இயற்கையாக பேசினார்.

“என்னுடைய படத்துக்குத்தான் என்னுடைய ஓட்டு. என் மேலே எனக்கு நம்பிக்கை வேண்டும். மேலும், ஜெயிக்க வேண்டும் என்பதைத்தான் பலரும் விரும்புவோம். நானே எனக்கு ஓட்டுப் போடாவிட்டால், வேறு யார் போடுவார்கள்?” என்று பதிலடி கொடுத்தார்.

அப்பா அம்மாவுடன் வாழ்க்கையா என்னும் வினாவிற்கு ஐஷ்வர்யாவும் சற்றே கோபமாக இயலாமையுடன் பதில் கொடுத்தார்.

“உங்களைப் போல் பெற்றொரை நடத்த முடியாது! வருடத்துக்கு ஒரு முறை சேர்ந்து சாப்பிட — பல மாதம் முன்பே அப்பாயிண்ட்மெண்ட் செய்து வைத்துக் கொள்பவர்கள் அல்ல இந்தியர்கள்” என்று உறுமினார். பாவமாக இருந்தது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (எனக்குத்தான்… வார்ப்புரு அடுத்த தபா அமர்க்களமாக அமைய!)