சிகிச்சை சக்ஸஸ்


ஆனால், நோயாளிதான் இன்னும் தேறவில்லை.

பரி மற்றும் இன்னும் சில நண்பர்களின் தொடர்ந்த இடித்துரைத்தலுக்குப் பிறகு ஒரு வழியாக ‘ப்ளாக்ஸ்கின்ஸ்’ வழியாக வார்ப்புருவை உருவி, மாற்றி விட்டேன். ஆனால், முன்பு இருந்த ஸ்க்ரிப்ட்கள், உரல்கள், படங்கள் எல்லாம் தொடர்ந்ததால், வலைப்பதிவு பழைய வேகத்திலேயேதான் வந்து கொண்டிருக்கிறது.

ஷங்கர் படம் வெளிவருவதற்கு காத்திருப்போம். இரண்டு வருடங்கள் ஆனால் கூட பொறுத்திருப்போம். ஆனால், ‘அன்புமணி’ போன்றவை தாமதித்து வெளிவந்தால் நஷ்டம் பார்வையாளர்களுக்கு அல்ல. நாம ‘அன்புமணி’/’ஜனனம்‘ ரேஞ்சு. எனவே, உடனடியாக கணினித் திரையில் வரவழைக்க என்ன மாயாஜாலம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னால் புண்ணியமாகப் போகும்.

டெம்பிளேட்டில் வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் சொல்லவும்.

அமெரிக்கத் தொலைகாட்சிகளில் மீண்டும் ஐஷ்வர்யா ராய் தோன்றினார். அவர் நடித்த ப்ரைட் & ப்ரெஜுடிஸ் இந்த வாரம் முதல் (பெரும்பாலான அமெரிக்க நகரங்களில்) ஆரம்பிக்கிறது. ‘மில்லியன் டாலர் பேபி’யை மக்களிடம் கொண்டு செல்ல க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் வந்திருந்தார். ஐஷ்வர்யா டேவிட் லெட்டர்மேனுடனும், க்ளிண்ட் ஜே லீனோவுடனும் அளவளாவினார்கள்.

முன்ன பின்ன பேட்டி கொடுத்து ஐஷ்வர்யாவுக்கு அனுபவம் இல்லாதது தெரிந்தது. ரொம்பவும் பரபரப்புடன் காணப்பட்டார். ‘பேட்டி முடிந்து விட்டதா’ என்று ஆயாசமாகக் கேட்டு தர்மசங்கடமான சிரிப்புடன் முடித்துக் கொண்டார். எவ்வளவு தடவைதான் ‘இன்னும் பெற்றோருடன்தான் குடித்தனமா?’ என்னும் அபத்தமான கேள்விக்கு விடையளிக்க வேண்டுமோ… தெரியவில்லை.

அந்தப் பக்கம் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அமர்த்தலாக பேசிக் கொண்டிருந்தார். “உங்க படம் ஆஸ்காருக்கு பரிந்துரைத்திருக்கிறார்களே… உங்களுக்கும் அகாடெமியில் ஓட்டு உண்டே! உங்க படத்துக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா? அல்லது வேறு யாருக்காவது வாக்களிப்பீங்களா?” போன்ற பூடகமான கேள்விக்கெல்லாம் கூட இயற்கையாக பேசினார்.

“என்னுடைய படத்துக்குத்தான் என்னுடைய ஓட்டு. என் மேலே எனக்கு நம்பிக்கை வேண்டும். மேலும், ஜெயிக்க வேண்டும் என்பதைத்தான் பலரும் விரும்புவோம். நானே எனக்கு ஓட்டுப் போடாவிட்டால், வேறு யார் போடுவார்கள்?” என்று பதிலடி கொடுத்தார்.

அப்பா அம்மாவுடன் வாழ்க்கையா என்னும் வினாவிற்கு ஐஷ்வர்யாவும் சற்றே கோபமாக இயலாமையுடன் பதில் கொடுத்தார்.

“உங்களைப் போல் பெற்றொரை நடத்த முடியாது! வருடத்துக்கு ஒரு முறை சேர்ந்து சாப்பிட — பல மாதம் முன்பே அப்பாயிண்ட்மெண்ட் செய்து வைத்துக் கொள்பவர்கள் அல்ல இந்தியர்கள்” என்று உறுமினார். பாவமாக இருந்தது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (எனக்குத்தான்… வார்ப்புரு அடுத்த தபா அமர்க்களமாக அமைய!)

6 responses to “சிகிச்சை சக்ஸஸ்

  1. Unknown's avatar மதி கந்தசாமி (Mathy)

    its much much better now. i see that you have removed all the images. keep it that way balaji.

    And pls take a look at the EMAIL section. it says – post a comment

  2. Looks very good.
    I dont think you need any help. 🙂

  3. காசி சொன்னபடி ‘வ்யூ சோர்ஸ்’ போட்டே நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. இருந்தாலும், வலப் பக்கம் இருக்கும் சுட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி வரமாட்டேன் என்று படுத்துகிறது!

  4. line-height:11pt எல்லாம் பத்தாது. நான் அதை %-ல் கொடுப்பேன். அதுவும் 150% அல்லது 175% கொடுத்துப்பாருங்க, இந்த ஊரு பார்க்கிங்க் லாட் மாதிரி விலாசமா(sic) இருக்கும்

  5. நன்றி காசி. செய்து பார்க்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.