கொழுப்பாச்சி


வாரே வாரே

வாராரே

அட தள்ளு

வாரே வாரே

வாராரே

ஒத்துடா

வாரே வாரே

வாராரே

அடங்குடா

நீ எந்த ஊரு

நான் எந்த ஊரு

முகவரி தேவையில்ல

இல்ல இல்ல

நீ எந்த உறவு

நான் என்ன உறவு

சொந்தத்தில் அர்த்தம் இல்ல

இல்ல இல்ல

தொப்புள் கொடி உறவா

இல்ல இல்ல

அல்ல

கட்சிக்கொடி உறவா

இல்ல இல்ல

ஹே

மேட்டுக்குடி உறவா

இல்ல இல்ல

அட

கள்ளு கட உறவா

இல்லவே இல்ல

உன்ன யாரோ பெத்திருக்க

என்னை யாரோ பெத்திருக்க

ஆனாலும்

நீயும் நானும்

அண்ணன் தம்பிடா

—————

சாமி வரம் தந்திட்டா

கொட்டும் மழை கொட்டும்டா

ஏழை மனம் பொங்கும்டா

நான் அய்யனாரு பக்தண்டா

மண்ண நம்பி வேரு

விண்ண நம்பி ஆறு

என்ன நம்பி யாரும்

கெட்டதில்ல பாரு

உனக்கொரு பேரு

எனக்கொரு பேரு

ஒண்ணு சேர்த்து பாரு

இந்தியன்னு பேரு

பொறப்பும் இறப்பும் அவன் கையிலே

நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே

—————

அம்மை அப்பன் தானடா

ஓ…

நம்மையாளும் சாமிடா

கருவற தோழிடா

ஓ…

நம்ம உயிர் நாடிடா

கண்ணப் பொத்தி வாழு

காதப் பொத்தி வாழு

வாயப் பொத்தி வாழு

நம்ம காந்தி மொழி கேளு

ஓ…

ஆத்திகம்தான் மூச்சு

சத்தியம்தான் பேச்சு

ஆசை எல்லாம் போச்சு

நம்ம புத்த கொடி ஏத்து

ஓ…

அட பொறப்பும் இறப்பும் அவன் கையிலே

நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே

Music India OnLine – Thirupachi

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.