காசேதான் காதலிடா


நன்றி: விகடன்.காம்

SMS

‘அதிகம் கேள்’

குறைவாக பேசு’னு

அடிக்கடி நீ சொல்வியே

இப்பதாண்டா புரியுது…

‘இன் கமிங் ஃப்ரீ’னா

அவுட்கோயிங் காசுதானே!

— நா.இராஜேந்திரன், அறந்தாங்கி.

மச்சான், ஒரு காலத்துல

நீ கலக்கு கலக்குனு

கலக்கினவன்!

இப்பதான் ராவா அடிக்க

ஆரம்பிச்சுட்டே!

— சிக்ஸ்முகம், ஈரோடு.

அரசன் அன்று கொல்வான்,

தெய்வம் நின்று கொல்லும்,

போலீஸ் வேன் வைத்துக் கொல்லும்,

தாதா ஆள் வைத்துக் கொல்வான்.

மொக்க… நீ எஸ்.எம்.எஸ். அனுப்பியே

என்னைக் கொல்றியேடா!

— எம்.சுனிதா கிரேஸ், சென்னை\12.

அறுத்து எடுத்தாத்தான் நெல்லு!

அடிக்கடி விளக்கினாத்தான் பல்லு!

அம்பு விட்டாத்தான் வில்லு!

நாயே – சிம்கார்டு

போட்டாத்தாண்டா செல்லு!

— தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.



மதுரைத் தமிழ்ப் பேரகராதி

மதுரைத் தமிழ்ப் பேரகராதி 1937-ஆம் ஆண்டே தனிமனித முயற்சியோடு பதிப்பிக்கப் பட்டிருப்பது வியப்பைத் தருகிறது. 1956ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதய்யரின் முன்னு ரையோடு இரண்டாவது பதிப்பாக வந்த இந்த அகராதி இப்போது இரண்டு தொகுதி களாக வெளியிடப்பட்டிருக் கிறது. ஷர்ட், பட்டன், கோட், செகண்ட், மினிட் என நடை முறையில் தமிழ் வார்த்தை களாக மாறிவிட்ட ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.

(வெளியீடு: சந்தியா பதிப்பகம் — விலை: முதல்தொகுதி ரூ.625. இரண்டாம் தொகுதி ரூ.575)



அத்தனைக்கும் ஆசைப்படு – சத்குரு ஜக்கி வாசுதேவ்

தங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளத் தெரியாத பலர் மற்றவர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கப் புறப்பட்டு விடுகிறார்கள்.

கடவுள் என்பதே உங்கள் அச்சத்தின் அடையாளமாக இருப்பதால்தான் பயபக்தி என்று ஒரு வார்த்தையை நீங்கள் ரசிக்கிறீர்கள். கடவுள் அன்பானவர் என்றால், அவரிடம் பக்தி இருந்தால் மட்டும் போதாதா? பயம் எதற்கு?

ஒரு சிறு விதை பூமிக்குள் விழுந்ததும் மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறதே, எப்படி? இந்த விதையில் இப்படிப்பட்ட மரம்தான் வளரும், இப்படிப்பட்ட பூதான் மலரும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறதே… இந்த விதிகளை அமைத்தது யார்? உங்களை மீறிய சக்தியை கடவுள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

ஆக, தொடங்கிய இடத்துக்கே வந்துவிட்டோம்.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.