1994-ஆகத்தான் இருக்கும். கலைஞர் ஆட்சி. புரட்சிகரமான திட்டம் அறிவித்தார். பள்ளிக்கூடம் செல்லாத பெற்றோரை உடையவர்களுக்கு பொறியியல்/மருத்துவ நுழைவுத்தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் கூட்டித் தருவதாக சொன்னார்.
எனக்கு மிகுந்த மனவேதனையை உண்டு செய்ய ஆரம்பித்த கொள்கை. அடுத்த ஆண்டு TNPCEE-யிலேயே இந்த முறை கைவிடப்பட்டாலும், நான் எழுதிய ஆண்டு மட்டும் கடைபிடிக்கப்பட்ட பழக்கம்.
முதன் முதலாக வேலையில் அமர்ந்தவுடன்தான் இந்த மாதிரி பாதிப்புகளை மிகச் சிறியதாக உணர்ந்தேன். ஐந்து மதிப்பெண் கொடுக்கப்பட்டதால் முன்னேறிய எவரும் எனக்கு அறிமுகமில்லை. மேலோட்டமாக கூகிளில் தேடினால் சார்புள்ள பக்கங்கள் கூட எதுவும் கிடைக்கவில்லை. கருணாநிதிக்கே கூட மறந்து போயிருக்கலாம்.
அதே போல், இந்த ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து நுழைவுத்தேர்வு எழுதுவோருக்கு ஐந்து மதிப்பெண்களை அண்ணா பல்கலை ‘போட்டு‘க் கொடுக்கலாமே?










