பாஸ்டன் முப்பெரும் விழா


பாஸ்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை முப்பெரும் விழாவாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

  • ‘கலக்கல்’ காசிக்கு பாராட்டு விழா

  • கேள்வி நாயகர் கார்த்திக் ராமஸுக்கு வேள்வி விழா

  • கஞ்சி ஊற்று சுந்தருக்கு கஞ்சி வழங்கு விழா

    நிகழ்ச்சி நிரல்

    தேதி: டிசம்பர் 25, 2004

    கிழமை: சனி

    நேரம்: 4:00

    இடம்: மெய்யப்பனாரின் திராட்சைரசம் சேமிக்கும் நிலவறை



    தமிழ்த்தாய் வாழ்த்து: நித்திலன்

    வரவேற்புரை: நியு இங்கிலாந்து தமிழ் வலைப்பதிவோர் சங்கம் (வடக்கு வட்டம்) தலைவர் மெய்யப்பன்

    தலைமையுரை: பெயரிலி பேரவை

    விருந்தினர் உரை: கனெக்டிகட் சிங்கம் சுந்தர வடிவேலு

    சிறப்புரை: வாஷிங்டன் பெருநகர செயலாளர் கார்த்திக் ராமஸ்

    ஏற்புரை: ‘கலக்கல்’ காசி

    முடிந்தால் உரை: வலைப்பூலி பாலாஜி

    தேசிய கீதம்: கதிர்

    ஒளிப்பதிவு: ‘காண்பதுவே’ மாது

    வட அமெரிக்கத் தோழர்களை அட்லாண்டிக் கடலென திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

    வெள்ளி மாலையன்று (டிச.24) — விருந்தினர்களுக்கு சிறப்பு வரவேற்பு!!

    முகமூடிகளுடன் வருபவர்களுக்கு ஜெட்-பிரிவு பாதுகாப்பு உத்தரவாதம்!!!

    மேலும் விபரங்களுக்கு bsubra @ யாஹூ.காம் அல்லது meyps@ஹாட்மெயில்.காம் தொடர்பு கொள்ளவும். நியு ஜெர்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் 🙂

  • 8 responses to “பாஸ்டன் முப்பெரும் விழா

    1. பாலாஜி,

      இதெல்லாம் ரொம்ப ஓவராத்தெரியலை? சந்திப்பு மட்டும்தானே பேசினோம்? என்னமோ போங்க….

    2. அப்பொழுது சாப்பாடு இல்லையா 🙂

      (மிகைப்படுத்தல் அதிகமாகிவிட்டதோ!?)

    3. edhu eppadiyo…sappadu parcel onnu indha pakkam anuppi veinga…hehe!! 😉

      – Mayavarathaan (http://mayavarathaan.blogspot.com)

    4. எல்லாஞ்சரீ….. பசியோட இருக்கவிய இந்த பதிவ பார்க்க வேணாம்னு ஒரு disclaimer போட்டிருக்கப்டாதா? 😦

      விருந்துக்கு செல்லும் அத்துனை பேருக்கும் வயிரு வலித்தால் நான் ஜவாப்தாரி அல்ல 😉

      பாண்டி

    5. பாலாஜி,
      இப்பொழுதுதான் பார்த்தேன். நல்லது. வழி தொலையாமல் வந்து சேர்கிறேன். 🙂
      படங்களெல்லாம் பெயரிலிப் பேரவையை கிளறி எடுத்ததா? அது யார் அந்தப் பெண்? சந்திப்புக்கு வருகிறாரா? 😉

    6. Unknown's avatar சுந்தரவடிவேல்

      //சிங்கம்//
      மிருகமாறாட்டம்:)
      கார்த்திக்கு அந்த நாற்காலி உமக்குத்தான் போலிருக்கு!

    7. Christmas leava eppadi kazhikirathunnu theriyamaa, Oru naalanju per sernthu, engavathu utkaarnthu kathai pesa poreenga…Ithukku ippadi oru get up…Nadathunga raasaa nadathungaa….

      Naan inge intha pani palai-yil ulavum oru thani otagamaagi Grrr..Grrr…-nnu sound vittu kittu irukken, neenga meet panna pora vayitherichal kaaranamaa…

      Nalla enjoy pannunga….Happy holidays…

    8. பாண்டி/மா.வ.,
      பிரபஞ்சனை பொய்ப்பிப்பதற்க்காகவாவது பார்சல் அனுப்புகிறோம் :))

      கார்த்திக்,
      நீங்க கூட இன்னொருவரை அழைத்து வரப் போவதாக கேள்விப்பட்டேன்… அதுதான் ;;-)

      கண்டுபிடிச்சிட்டீரே பாலாஜி… எங்கே இருந்து சவுண்ட் விடறீங்க?!

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.