சொன்னதைச் செய்வோம்!


லாலூ பிரசாத் யாதவ்:

பிஹாரில் காட்டாட்சி நடப்பதாக சித்தரித்த ஒரு கார்ட்டூனில் என்னை புலியாக வரைந்திருந்தார்கள். ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால் அதில் நிதிஷ் குமார், எல்.கே.அத்வானி மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானை குரங்குகளாக சித்தரித்திருந்தார்கள்.

கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி சாங்கிலியானா ‘தினகரனில்’:

வீரப்பனைக் கொன்றதற்காக அதிரடிப்படை வீரர்களுக்கு பரிசு வழங்குவது சரியல்ல. அவர்கள் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள்.

ராமதாஸ் ‘தினத்தந்தியில்’:

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் மதுப்பெட்டிகள் அதிகமாக விற்பனை செய்ததுதான் தமிழக அரசின் சாதனை.

வைகோ ‘தினகரனில்’:

பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்றதில் எனது வழக்கைப் பொறுத்தவரை எந்தப் பலனும் இல்லை. இதை முன் தேதியிட்டு அமல்படுத்தியிருந்தால் எங்களுக்கு மட்டுமல்ல, சிறையில் வாடுகிற பலருக்கும் பயனளிப்பதாக இருக்கும்.

காங்கிரஸ் எம்.பி. கே.வி. தங்கபாலு ‘தினமலரில்’:

காமராஜர் ஆட்சியும் கருணாநிதி ஆட்சியும் ஒன்றுதான். இருவரும் பச்சைத் தமிழர்கள்.

விஜயகாந்த் ‘தினத்தந்தியில்’:

என் அரசியல் பிரவேசம் பற்றி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14ந் தேதி அறிவிப்பேன். அதுவரை ஊறுகாயை தொடுவது போல் என் படங்களில் அரசியல் பற்றிய வசனங்கள் தவறாமல் இடம்பெறும்.

பாரதிராஜா ‘குமுதத்தில்’:

பாடப்புத்தகங்கள், தையல் மெஷின்கள் வழங்குபவரெல்லாம் தலைவர்கள் ஆகிவிட முடியாது.

கமல்ஹாசன் ‘தினகரனில்’:

பஸ், கிஸ், பிளைட் போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைக்கு தமிழாகி விட்டது. எனது அடுத்த படத்துக்கு பாதி இங்கிலிஸ், பாதி தமிழில் பெயர் வைக்கலாம் என்று எண்ணி உள்ளேன்.

அஜீத் ‘குங்குமத்தில்’:

நம்பர் ஒன் இடத்தை பிடிச்சே தீருவேன். அதை யாரும் தாண்டக் கூடாது. மீறி தாண்டிப் போறதா இருந்தா என்னோட பிணத்தைத் தாண்டித்தான் போகணும்.

16வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதைப் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ‘தினகரனில்:

போகிற போக்கை பார்த்தால் வரும் மாதங்களில் அதிமுக அமைச்சரவை மாற்றம் வெள்ளி விழா கொண்டாடும் போல தெரிகிறது.

இந்துத்துவமும் தேசியவாதமும் ஒன்றே என்று பாஜக கூறியதற்கு சி.பி.ஐ. தலைவர் ஏ.பி. பரதன் பதில்:

தேசியவாதம் என்ற பெயரில்தான் ஹிட்லர் உலகம் முழுவதும் நாசம் விளைவித்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி:

மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை வேறு விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நான் மக்களின் எதிர்பார்ப்புகளின்படி நடந்தால் பைத்தியமாகி விடுவேன்.

பா.விஜய் ‘ஆனந்த விகடனில்’:

வைரமுத்துவை ஜெயிக்க வேண்டும் என்பதைவிட, அவருடைய சாதனையை மிஞ்ச வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருக்கிறது. அனால் வைரமுத்துவைவிட என்னை ஆச்சரியப்படுத்துவது வாலிதான். அவர் எம்.ஜி.ஆரிலிருந்து தனுஷ் வரைக்கும் ஈடு கொடுக்கிறார்.

சத்யராஜ் ‘ஆனந்த விகடனில்’:

எல்லா சாமியார்களும் காமெடியன்கள்தான். அதில் குட்டிச்சாமி பெரிய காமெடியன்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் ‘தினமணியில்’:

முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதை தற்போது எதிர்க்கும் முதல்வர், அந்த கோரிக்கையை வலியுறுத்தி நடந்த வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்றது ஏன்?

ப்ரீத்தி ஜிந்தா:

என்னை சக நடிகர்களுடன் இணைத்துப் பேசுகிறவர்களை அடிக்க வேண்டும். இதை மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன் – என்னுடன் நடிப்பவர்களை யாருடனும் நெருங்கிப் பழகமாட்டேன்.

நமீதா ‘குமுதத்தில்’:

நாடு முழுக்க வேலையில்லாத் திண்டாட்டம். அதைப் பத்தி யோசிக்காமல் என்னப் பத்தி யோசிச்சா என்ன பிரயோஜனம்?

லாலூ பிரசாத யாதவ்:

இந்திய ரயில்வே கடவுள் விஸ்வகர்மாவின் பொறுப்பில் இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பும் அவர் கையில்தான். பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவர்தான். நானில்லை.

நன்றி: இந்தியா டுடே

2 responses to “சொன்னதைச் செய்வோம்!

  1. லல்லுவை அடிச்சுக்க ஆளில்லை.

  2. பாதுகாப்பைக் கடவுள் பார்த்துக் கொள்வதாக இருந்தால் இவர் எதற்கு மந்திரியாக?!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.