சிற்றின்பம்


வெள்ளிக்கிழமை கற்பகாம்பாளைக் கும்பிடலாம். எப்பொழுதோ மனதில் பதிந்த பாடல் இது. தவறுகள் இருக்கும். எப்படியெல்லாம் பெண்பித்து ஆட்டிவைக்கிறது என்பதை கோபமாக உணர்ச்சிவேகத்தில் கொட்டியிருக்கிறார்.

பொய் வைத்த சிந்தை

மடமங்கையரின் பூங்குழலிலே நிழலிலே

பொழியம்பு போலுமிரு விழியம்பிலே

பொடிப்பூச்சிலே கைவீச்சிலே

செய்தொப்பமிட்ட செப்பெனும்

முலையிலே துடிச்சிற்றிடையிலே

உடையிலே தெட்டிலே நன்னுதற் பொட்டிலே

வெண்ணகைச் செம்பவள வாயிதழிலே

பைவைத்த விடவரவ என்னும் நிம்பதத்திலே

பாழறிவழிந்து மூழ்கி பரகதிக்கொருதுவுயுமில்லா

செய்யும் கொடும்பாதகனை ஆள்வதென்றோ

மெய்வைத்த கையான் இடத்தில் வளர் அமுதமே

விரிபொழில் திருமயிலைவாழ் விழைமலர்குழல்வல்லி

மறைமலர்பதவல்லில் விமலி கற்பகவல்லியே!

Abirami Anthaathi – With explanations:

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்

அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து

கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்

தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே
.

அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.”

2 responses to “சிற்றின்பம்

  1. வர வர குமுதம் அரசு மாதிரி ஆகிட்டிங்க போங்க. எழுதின மேட்டரை விட படம் தான் பெருசா இருக்கு.

  2. ஒரு படத்தின் மூலம் ஓராயிரம் அர்த்தம் விளங்குமா என்று ட்ரையல் செய்கிறேன் 🙂

KVR -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.