1. தங்களின் தமிழ் வலை அனுபவங்கள்.
வலை அனுபவம்னா அது 94ல இருந்து. அது ரொம்பப் பழைய கதை. தமிழ் வலை அனுபவம்னா அது 2001 ல இருந்து.
தினகரன்,விகடன், குமுதம் முதலில் பார்த்த வலைதளங்கள். அப்புறம் திண்ணை, கிளப். அப்புறம் மரத்தடி, தமிழோவியம், பதிவுகள்,திசைகள்.
இவ்வளவு இணையத்தளம் / குழுக்கள் படிச்சாலும் என்னமோ எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு. விகடன் / குமுதம் ஒரே மாதிரி.
பதிவுகள்,திசைகள்,தமிழோவியம் எல்லாம் ஒரே மாதிரி. திண்ணை கொஞ்சம் வித்தியாசம்; எப்படினா அதிகமா அடிதடி இருகறதால.
2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்
விரும்பி படிக்கற ப்ளாக்கள் வந்து,
பாரா – கொஞ்சம் நக்கல், மற்றும் நிறைய விஷயங்களை பற்றி அலசுவதால்.
அருண் – எழுதுற விஷயத்தில் பின்வாங்காமல் இருந்தல். தெளிவான சிந்தனை. கார்ட்டூன்ல படத்தை விட மேட்டர் நல்லா இருக்கும்.
மூக்கு சுந்தர் – இதுதான்னு சொல்ல தெரியலை; இவரோட ஸ்டைல் நமக்கு தோதா இருக்கும்.
வெங்கடேஷ் – ஆழமா யோசிச்சு எழுதுவாரு.
ரூமி – இவரோடது மொதல்ல பின்னூட்டம் எவ்வளவு பார்ப்பேன். அது பத்துக்கு மேல போச்சுனா வில்லங்கமா எழுதியிருக்காருன்னு அர்த்தம். பாவம் ரூமி பேரு இருக்கறதாலேயே நிறைய பேரு கலாய்க்கறாங்க.
வெங்கட் – இவரு மைக்ரோசாப்ட் திட்டி எழுதுவாரு பாருங்க; அதுக்காகவே இவரோடதை படிப்பேன்.
மீனாக்ஸ் – இவரோட மார்கெட்டிங் மேட்டர் சூப்பர்.
சந்திரவதனா (மகளிர்) – நிறைய விஷயங்கள் சர்வ சாதாரணமா எழுதற ஸ்டைல்.
அப்புறம் தமிழ்மணம் சூடான பகுதியில வர்ற அயிட்டங்கள்.
3. விரும்பிப் படித்த பதிவுகள் ?
பரபரப்பா இருக்குற மேட்டர் எல்லாமே நேயர் விருப்பம்தானே.
4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை ?
பாரா – கொஞ்ச நாளா எழுதறது இல்லே
பி பி – அப்போ அப்போ தான் எழுதுவாரு
பி.கே.எஸ் – இவரு மேட்டர் ரொம்ப நீளம் அதனால சமயத்துல அப்புறம்ன்னு விட்டுவேன். அது அவ்ளோதான்.
வந்தியதேவன், சுந்தரவடிவேல் – இவங்க ப்ளாக் முன்னாடி படிச்சேன், நடுவுல ரொம்ப அடிதடி நடந்து கன்னா பின்னா எழுதினதுல
ஆர்வம் போயிடுச்சு.
5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம் ?
எனக்கு வலைப்பதிவா ? அப்புறம் எவனாவது நம்மளை இந்த மாதிரி போட்டு தாக்கவா. ஏதோ வேலைக்கு போனோமா, அரட்டை அடிச்சோமா, வலைப்பதிவுகள் படிச்சோமா இருக்கனும் 🙂
6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள் ?
பாரா சொல்லி என்ன ஆச்சு பார்த்தீங்களா. கேள்வினா அதுல எடக்கு மடக்கா ஒண்ணு கேட்கனமுன்னு என்ன சட்டம் ?










