சில பதில்கள் – கணேஷ் சந்திரா


முன்குறிப்பு : கேள்விகளுக்கு சுருக்கமா பதில் எழுத சொன்னார் பாபா. ஆகவே ….

1. தங்களின் தமிழ் வலை அனுபவங்கள்.

தமிழ் வலைக்குள் விழுந்தது 2000ம் ஆண்டு – ஆரம்ப நாட்களில் அம்பலம், ஆறாம்திணை, குமுதம் பிடித்த இணையங்கள். இப்பொழுது நிறைய. அன்றும் இன்றும் முரசு அஞ்சலே நம்ம தோழன்.

2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்

இப்போ தமிழ்மணம் இருக்கறதால அப்படியே கடைசி பத்து மேட்டரை படிப்பேன். அதுக்கு முன்னே அரசியல், ஜனரஞ்சக சினிமா, நையாண்டி, புத்தக விமர்சனம் இது எங்கே எல்லாம் இருக்கோ தேடிப் படிப்பேன்.

3. விரும்பிப் படித்த பதிவுகள் ?

இது ரொம்ப வம்பு பிடிச்ச கேள்வி. ஒரு சிலரோட எழுத்து ஸ்டைல் நம்ம ரசனையோட ஒத்து போகும். அவங்க வலைப்பதிவை கண்டிப்பா படிப்பேன்.

4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை ?

அவங்க எழுதறது இல்லே / அவங்க பதிவே காணோம்னு அர்த்தம்.

5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம் ?

எனக்கு சொந்தமாக வலைப்பதிவில் எழுதுவதை விட சொந்தமாக வலைப்பதிவு எழுதவே அதிக விரும்பம்.

6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள் ?

கட்டளைகளா ? கிழிஞ்சுது போங்க. கட்டளைகளுக்கு பதிலா ஆலோசனை வேணா சொல்லறேன்.

  • டிஸ்கி உபயோகிக்கறவங்க யுனிகோடுக்கு வாங்க.
  • இயங்கும் எழுத்துரு உபயோகிங்க.
  • IE /ஃபயர் பாக்ஸ் ல வேலை செய்யுதா பாருங்க.
  • படங்கள் போடும் பொழுது align=left or right

    [ ]

    போடுங்க. அப்போ உங்க படம் கட்டுரையோட சேர்ந்து இருக்கும்.

  • படங்களை photoshop, paint shop pro,gimp போன்ற மென்பொருளை வைத்து சரி பண்ணுங்க. HTML ல height = width = ன்னு மத்தாதீங்க. அது படத்தோட அழகை கெடுத்துடும்.
  • வார்தைக்கு வார்த்தை லிங்க் செய்யாதீங்க. அது கட்டுரையின் கவனத்தை சிதறடிக்கும்.

  • 4 responses to “சில பதில்கள் – கணேஷ் சந்திரா

    1. வார்த்தைக்கு வார்த்தை சுட்டி கொடுப்பது பணம் கூட கொடுக்க வல்ல காரியம். எல்லா வார்த்தைகளுக்கும் கூகிள் விளம்பரம் செய்தால், நிறைய துட்டு சம்பாதிக்கலாம் 😛

    2. ஹூம்ம்..

      [ ]னப்பு [ ]ழப்ப [ ][ ]க்குது

    3. பிங்குபாக்: நிமித்தகாரன்: குறும்படம் | Snap Judgment

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.