Daily Archives: ஜூலை 26, 2004

எ(ன்)ண்ணச் சிதறல் — ஆனந்த் சங்கரன்

சூரியன் தனித்திருந்தால் எங்கும் ஒளி

சந்திரன் தனித்திருந்தாலும் ஒளி

இரண்டும் சேர்ந்திருந்தால் அன்று

அமாவாசை



கண்ணொளி தந்தேன் குருடனுக்கு

அவனுக்கு இதுவரை வராத துன்பம் வந்தது

மெட்ராஸ் ஐ



கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரிப்பதே மெய்

அதான் நாட்டில் இத்தனை விசாரனை கமிஷன்களோ ?

To The Moss

How you came to know all that you are sure of

how you discovered the darkness of green

uncurling into the daylight out of

its origins unsounded as your own

how you leraned to fashion shapes of water

into softness itself that stayed in place

and kept some secret of caves wherever

you were but with such welcome seemed to rise

that in time you became as some believe

a model for the cheek and then the breast

the wren felt she knew most of that before

there were breasts or cheeks and she made out of

living bits of you the globe of her nest

as though that was what you had grown there for

WS Merwin

(வெளியான இதழ்: தி நியு யார்க்கர்)

என்னுடைய ‘அ-மொழியாக்கம்’:

ப்ச்ச்…

——–

அடர்பாசியின் கரும் உள்ளிருப்பு

கற்றை வெயிலின் பிறப்பிடம்

சுழிநதிக்கு சலசலத்தல்

கூழாங்கல் பிஞ்சுமனசு

காற்றாடி வானத்து உச்சம்

காலவெள்ளத்தில் நம்பகம்

சிட்டுக்குருவி றெக்கையெழுப்பி

மார்தட்டி கீக்கீ இரையும்

விட்டுசென்ற உலகத்தைக்

கடக்கும் இறகுத்துளிகளை

அலட்டாத கர்வத்தோடு

நிச்சயமாக கொடுப்பது எப்படி

பச்சையாக சொல்லு

-பாஸ்டன் பாலாஜி

சன் டிவி: கல்யாண மாலை

Yahoo! Groups – RaayarKaapiKlub: போன வார நிகழ்ச்சி ஒன்றில் பெண்ணின் தாயார் ‘பையன் சூட்டிகையாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்.” என்றார். தொடர்ந்த அவரின் மகள், ‘எனக்கு வரப் போகிறவர் துறுதுறுவென்று புத்தியாலியாக அமைய ஆசை’ என்று தொடர்ந்தார். கேட்ட எனக்கு ‘பரவாயில்லை… காலம் மாறிப் போச்சு. பெண் வீட்டுவேலை செய்வாளா என்னும் காலம் போய், பையன் பம்பரமாய் செயல்படுவானா என்று கேட்கும் காலம் வந்தது நல்லதுக்கே!’ என்று நினைத்தேன்.

இன்னொரு குடும்பத்தில், ‘எங்களுக்கு யாராக இருந்தாலும் ஒகே. நாங்கள் வடமா… பிரஹ்ச்சரணம், வாத்திமா என்றாலும் எங்களுக்குப் பரவாயில்லை’ என்று தன் பரந்த மனப்பானமையை சொன்னார்.

தமிழகத்தில் இல்லாமல், வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மக்கள் மாறியிருக்கிறார்களா, காதல் திருமணம் பெருகியிருக்கிறதா, டேட்டிங் கலாசாரம் கோலோச்சுகிறதா, மதப்பிரிவினைகள் நீங்கி விடுமா, சாதி விட்டு சாதி திருமணம் அதிகரிக்கிறதா என்பதை கணக்குப் போட பயனுள்ள நிகழ்ச்சி.

நடுவே வரும் காமெடி சொற்பொழிவு இன்னும் அற்புதம். போன வாரம் வினுச் சக்கரவர்த்தி சினிமா நடிகர்களின் தியாகங்களைப் புட்டுப் புட்டு வைத்தார். ரஜினிக்குப் பின் ராகவேந்திரா பக்தி அதிகமானது ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம். எம்ஜிஆருக்கு முன் யாருமே நல்லாட்சி தரவில்லை என்பதும், சினிமாவில் சம்பந்தப்பட்டவர்களே இனி அரசாள்வார்கள் என்ற பிரகடனையும், சிரிப்பை வரவழைத்தது.

இங்குள்ள என்.ஆர்.ஐ.க்களுக்கு திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலை. அமெரிக்கர்களை டேட்டிங் செய்ய வெள்ளியிரவு, சனியிரவு பார் பாராக ஏறி இறங்கினாலும் க்ளிக் ஆகாது. இந்தியாவில் அரேஞ்ட் மாரேஜ் செய்துகொள்ளவும் மனம் விரும்பாது. கண்டதும் காதலிலும் நம்பிக்கை லேது. நண்பியிடமும் காதலை சொல்வதில் தயக்கம். காதலியிடம் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் கேட்பதிலும் தயக்கம்.

ரொம்பக் கஷ்டப்படறாங்க…

-பாஸ்டன் பாலாஜி