Monthly Archives: ஜூன் 2004

திண்ணையின் Take-aways

இசை கேட்டு… : சந்திரலேகா வாமதேவா

1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளiல் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன.



சமீபத்தில் வாசித்த நூல்கள் : ஜெயமோகன்

தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் – மூவாலூர் ராமமிர்தத்தம்மாள்

இந்நாவல் ஒரு சமூக ஆவணமாக இன்றும் மிக முக்கியமானது. இதில் நாம் ஏறத்தாழ முற்றாக மறந்துபோன ஒரு காலகட்டத்தின் எளிய சித்திரம் உள்ளது. தாசிகள், அவர்களின் தாய்மார்கள், டாபர் மாமாக்கள், மைனர்கள், கிரிமினல் வக்கீல்கள் அடங்கிய ஓர் உலகம். ‘தில்லானா மோகனாம்பாள்’ [கொத்தமங்கலம் சுப்பு] போன்ற நாவல்களில் நாம் ஓரளவு கலைப்பூர்வமாகவும் விரிவாகவும் காணும் உலகம்தான் அது. அந்தக் கோணத்தின் மறுபக்கம் இந்நாவலில் உள்ளது. தாசிவாழ்க்கையில் உள்ள இழிவுகள் அனைத்தையுமே தார்மீகமான கோபத்துடன் ஆசிரியை சொல்லிச்செல்கிறார். அவ்விழிவை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக நம்பிக்கைகள், மதநம்பிக்கைகள், அதை வைத்து சுரண்டிப் பிழைக்கும் தனவந்தர் மற்றும் புரோகிதர் சோதிடர்க் கும்பல், அதன் பொருளியல் உள்ளடக்கங்கள் என ஒர் அர்ப்பணிப்புள்ள சமூக சேவகியின் சீற்றம்கொண்ட குரலை நாவல் நெடுகிலும் கேட்க முடிகிறது.

இரண்டாவதாக இந்நாவலின் சிறப்பாகச் சொல்லவேண்டியது இதில் தாசிகளின் உலகின் தந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் நுட்பமான உளவியல் அவதானிப்பு உள்ளது என்பதுதான். குணபூஷணி செய்யும் நீண்ட சொற்பொழிவில்கூட தாசிகள் செய்யும் தந்திரங்கள் விவரிக்கப்படுகையில் ஆண் பெண் உறவின் ஆழங்களும் ஜாலங்களும் வௌதவருகின்றன. உதாரணமாக பெரியமனிதர்களை நக்கல்செய்து பேசி இழிவு செய்தும், குற்றேவல்கள் செய்யவைத்தும் அவர்களுடைய உள்ளார்ந்ந்த மசோக்கிய இயல்பைத்தூண்டி விசித்திரமான இன்பங்களை அளிக்கிறார்கள்.தாசி கற்புடன் தன்னையே நினைத்து உருகி வாழ்வதாகக் கற்பனைசெய்ய விழைகிறார்கள். அதை அவர்கள் உள்மனம் நம்புவதில்லை. ஆகவே மனப்போராட்டம், அலைக்கழிப்பு. இந்த மன அலைகளே அவ்வுறவின் முக்கியக் கவர்ச்சியாக அமைந்து அவர்களை மூழ்கடிக்கின்றன.



தமிழ்ப் புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்

தமிழ் புதுக்கவிதையின் வரலாறு குறித்துப் பேசும் நூல்களில் முக்கியமாக இதுகாறும் குறிப்பிடப்பட்டது வல்லிக் கண்ணன் எழுதிய ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ [இந்நூலுக்காக அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றார்] . அக்கினிபுத்திரன் [கனல் மைந்தன்] எழுதிய புதுக்கவிதைவரலாறு மிதமிஞ்சி வானம்பாடி இயக்கப் புகழ்பாடுவதாகையால் பொது வரலாறாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. சி சு செல்லப்பாவே புதுக்கவிதை குறித்து எழுதியிருக்கிறார். அது எழுத்து இதழ் சார்பான பார்வை.

1950களில் சி சு செல்லப்பாவால் வெளியிடப்பட்ட எழுத்து இதழ் உருவாக்கிய கவிதைநோக்கின் இயல்புகளாக கீழ்க்கண்ட அம்சங்களைச் சொல்லலாம்.

  • கவிதையின் மறைபிரதிக்கு [subtext] முக்கியத்துவம் தந்து வாசகனின் கற்பனையை தூண்டும் விதமாக எழுதுவது

  • கவிதைமொழியை ஆர்ப்பாட்டமில்லாமல், அணிகளோ அலங்காரங்களோ இல்லாமல், முடிந்தவரை எளிமையாக, பேச்சுமொழிக்கு அருகேவரும்விதமாக அமைப்பது

  • கவிதைவடிவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக சொற்களை பயன்படுத்துவது

  • இசையமைதியைத் தவிர்த்துவிடுவது

  • கவிஞனின் அந்தரங்கமான குரலையே கவிதையில் வௌதப்படுத்துவது. பொதுவான கருத்துக்களையும் குரல்களையும் தவிர்த்துவிடுவது .

    இதற்கு மாறான அமைப்பாக உருவானது வானம்பாடி இயக்கம்.

  • வெளிப்படையான, நேரடியான, மறைபிரதி ஏதும் இல்லாத குரல்

  • தளர்வான கட்டுப்படில்லாத வடிவம்

  • பொதுவான அரசியல் சமூகக் கருத்துக்கள் மற்றும் அறைகூவல்கள்

  • அணிகள் சொல்விளையாட்டுக்கள் கொண்ட மேடைப்பேச்சு நடை ஆகியவை கொண்டது.



    தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா

    சுஜாதா கதைகள் நான்குவகை.

  • நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை.

  • நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல்சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.

  • மூன்றாவதாக உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள்.

  • நான்காவது வகை ஒரு வகையான பகீரடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை.

  • தோணியும் அந்தோணியும்

    சைதன்யா:

    அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன. விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்திலிருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணி போலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலி போல் சிறு படகு. கூட மைக்கேல். நாங்கள் பேசிக் கொள்ள எதுவும் இல்லாமல் கிடந்தோம். எங்கள் உள் மௌனங்கள் ஒன்றையொன்று தழுவிக் கிடந்தன. பேசி அந்தக் கணத்தைக் கொச்சைப்படுத்திவிட வேண்டாமாய் இருந்தது. உணர இயற்கை ஆயிரம் விஷயங்களை உள்ளே நிரப்பிக் கொண்டே இருக்கிறது. பிரமிப்போ, மயக்கமோ கூட சிறு வார்த்தையாடலோ கூட அதை அசக்கி விடும். குறிப்பாக, அந்தக் கணம் தன் பவித்திரத்தினை இழக்க நேர்ந்து விடும். இயறகை என்பது பூதம். வார்த்தை என்பது குப்பி. பூதம் சீசாவுக்குள் மாட்டிக் கொள்பதாவது…? என்ன குரூரம்? இருவருமே அதை விரும்பவில்லை. மனதின் அந்தரங்க வளாகங்களையும் சற்று இறுக்கம் தளர்த்திக் கொள்ள, ஆசுவாசப்பட வேண்டித்தானே இருக்கிறது? திருமணம் என்கிற அளவில், மனதுக்கினியவர்கள் பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொள்வது போல… நாங்கள் இயற்கை முன் அதை வழிபாடுணவுடன் அடிபணிந்து நிற்கிறோம். எங்கள் இருவருக்குமாய் இயற்கை தன் காருண்யத் தழுவலை நிகழ்த்துகிறது. நாங்கள் அதன்முன் ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிள்ளைகளாய் உணர்கிறோம். ஒரு தாயின் இரு தனங்களையும் பற்றி ஆளுக்கொரு பக்கம் அமுதுண்கிறோம். அவன் பெற்ற தட்பநுட்பம் எனக்கானதாகவும் என் அனுபவம் அவனுடையதுமாகவும் அமைகிறது. மொழியால் இதை விளக்க முடியுமா? கூடுமா? இணக்கமான மௌனத்திலும் ஆழங்காற்பட்டு உள்ளிறங்க வேறு ஏதாலும் இயலுமா? அன்பின் பரிமாற்றத்தினை ஒரு மௌனம் விளக்கும் அளவு, சிறு புன்னகை தெளிவிக்கும் அளவு மொழி தெரிவிக்க எந்நாளும் சாத்தியப்படாது. உணர்வுக் கடலுக்கு பாத்தி வெட்டி விடுகிறது மொழி.

    காலம் உறைந்து கிடந்தது எங்களுக்கு வெளியே. அலைக்குதிரைகள் கட்டிக் கிடக்கின்றன. நாங்கள் மல்லாக்கப் படுத்திருந்தோம். மேலே வானம் – பயமுறுத்த வேணாமோ அந்த வானத்தின் முகம். நான் தனியே இப்படி வானத்தைப் பார்த்துப் படுத்துக் கிடக்கவும் கூடுமோ? வெப்பம் வெளிக்கசிய குளுமையைத் தக்கவைத்துக் கொள்ளும் மண்பானை போல அந்த இணக்கமான நல்லமைதி, நிசப்தம் பிரம்மாண்டத்தோடு தொப்புள்கொடி சுற்றிக் கிடந்தது. ஆ… கூட அவன். நாங்கள் எங்கள் ஆத்மாக்களை இதோ, இந்தக் கடலில் வானத்தின் நீலம் போலும் அலசிக் கொண்டிருக்கிறோம் ஒருசேர. எங்கள் மௌனம் ஒருவருக்கொருவர் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதை உணர்வதில்லை. அதை உணர்த்த – உணரக்கூட யாராவது வேண்டியிருக்கிறது. அவரும் வெளிப்படையான மனதுடன், பரிமாறும் பெருவிருப்புடன் அதை வெளிப்படுத்த எந்தவிதக் கட்டாயத்தையும் நிர்ப்பந்தத்தையும் சுயநலமான எதிர்பார்ப்பையும் கொள்ளாதவராய் அமைய வேண்டியிருக்கிறது.

    எத்தனை ifs and buts, provideds – அப்படி நட்பும் சாத்தியப்பாடுகளுமே வெகு அரிதாகவே கிடைக்கின்றன. பேசி அதை இழத்தல் தகாது. விளக்கியுரைத்து அதைக் குழப்பிவிடுதல் மகாபாவம்.

    பாற்கடலில் துயில்கொண்ட பரமன். மகாலெட்சுமி. அருகே செல்லமோ செல்லமான மனைவியில்லாமல் பரந்தாமனால் அப்படிக் கண்மூடிக் கிடந்திருக்க முடியுமா என்ன? ஐயோ, நான் ஏன் இந்தக் கணங்களுக்காய் வார்த்தைகளைக் குதப்பிக் கொண்டிருக்கிறேன் எனக்குள்? அவரவர் உள்வாசனையை அவரவர் எட்டிப் பிடிக்க நான் ஒதுங்கி வழிவிட வேண்டும். அதற்கு சகமனிதனை நம்பு. நேசி. கைப்பிடித்துக் கொள். சிரி. ரசி. மனதை – நுழையீரலை விரியத் திற. ஏதாவது உள்நுழையக் காத்திரு. வசதி பண்ணிக் கொடு. வானத்தின் நீலம் இறங்க இறங்க வெளிற வேணாமோ? வானம் மேலும் அடிவண்டலாய்க் கலங்கி, கெட்டிப்பட்டு, நீலம் கருநீலமாகி, கருப்பாகிவிட்டது.

    (பழைய இந்தியா டுடேயில் வெளியான சிறுகதையில் இருந்து எனக்குப் பிடித்த சில பகுதிகள்)

    College Rankings 

    College Rankings Posted by Hello

    கேள்வியும் நானே… பதிலும் நானே!

    1. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் ப்ளீஸ்.

    அது சொன்னால் எனக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து விடுவார்கள். தனியாகக் கேளுங்க சொல்றேன். கொசுறாக நெட்டில் படித்த ஒரு ஜோக்கில் காரெக்டர்களை மாற்றிப் பார்க்கலாம்.

    வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜெயேந்திரர், ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமி மூவரும் குஜால்சாகத் தண்ணியடித்துவிட்டு எக்குத்தப்பாக சிறையில் விழிக்கிறார்கள். தாங்கள் எலெக்ட்ரிக் சேரில் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. ஏன், எதற்கு, எப்படி ஒன்றும் புரியலை.

    “நீங்கள் கடைசியாக என்ன கேட்க வேண்டுமோ சொல்லுங்கள்” என்னும் உத்தரவுடன் ஸ்விட்சில் கை வைத்திருக்கிறான் ஒருவன்.

    முதலில் ஜெயேந்திரர் “நான் தெய்வங்களை வணங்கியதும், ஸ்லோகங்கள் சொன்னதும் உண்மையானால், நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது.” என்கிறார். என்ன ஆச்சிரியம்… ஸ்விட்ச் திருகினதும் அவருக்கு ஒண்ணும் ஆகவில்லை. அவரின் கடவுள் நம்பிக்கை மெச்சப்பட்டு விடுவிக்கப் படுகிறார்.

    அடுத்து ஜெயலலிதா “நான் மதிக்கும் சட்டங்களும், மக்களுக்கு செய்த தொண்டுகளும், உண்மையானால் தர்மதேவதை காப்பாள்.”. இவரையும் எலெக்ட்ரிக் சேர் எதுவும் செய்யவில்லை. தர்மம் தலை காக்கிறது.

    கடைசியாக சுவாமி, “அந்த ரெண்டு வொயரையும் சேர்த்து கனெக்சன் கொடுங்கோ… அதுவரைக்கும் யாரும் சாக மாட்டா” என்றார்.



    2. சாயாசிங், சதா, கோபிகா, ப்ரியாமணி, அபர்ணா – யார் அடுத்த சிம்ரன்?

    சதா – ஓவர் ஆக்டிங் ஜோதிகா.

    ப்ரியாமணி – ‘பாலு’ மணம் மாறா லைலா

    அபர்ணா – அடுத்த வீட்டுப் பெண் ரோஜா

    கோபிகா – மலிவு விலை ஸ்னேஹா

    சாயாசிங் – இடுப்பு ஒடிக்கும் சிம்ரன்



    3. பின்னூட்டம் கொடுக்கும் உனக்கே, பாரா மாதிரி ஒன்பது கட்டளைகள் கொடுத்துக் கொள்ள முடியுமா?

    அ. உங்களுக்குக் காமெண்ட் கொடுத்தார் என்பதற்காக, அவருடைய பதிவில் சென்று எதிர் மரியாதை புரிய வேண்டாம்.

    ஆ. RBF, ஈஸ்வரி, ரமேஷ் கார் கொடுத்த வட்டிப் பணம் போல் மறுமொழி கொடுக்காமல், IOB, SBI, BOB போன்ற சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் ஏறும் சொல்ப தொகையாக கொடுத்தாலும், நீடித்த காலத்திற்கு, தொடர்ச்சியாக கொடுக்கவும்.

    இ. காலையில் காபியுடன் ஆபீஸ் செல்லும் அவசரத்தில் பேப்பர் புரட்டுவது போல் தலைப்புகளை மட்டும் படித்து விட்டு மறுமொழிய வேண்டாம்.

    ஈ. இதுவரை வந்திருக்கும் மறுமொழிகளை மட்டும் பார்த்துவிட்டு நீங்களும் அட்டெண்டன்ஸ் கொடுக்கக் கூடாது.

    உ. நீங்கள் ஒரு முறை சொன்னால் பத்து மில்லியன் முறை சொன்ன மாதிரி! அதற்காக ஒரே விஷயத்தை பத்து தடவை பேஸ்ட் செய்து நூறு மில்லியன் முறை சொல்லாதீர்கள்.

    ஊ. உங்கள் கிண்டல், நகைச்சுவை, வருத்தம், அங்கதம் எல்லாம் எழுத்தில் வரவேண்டும், முறையே :P, :), :(, 😉 ஸ்மைலி மூலம் வந்தால் எங்கோ மிஸ்டேக்.

    எ. ஸ்ரீராமஜெயம், 786, PTO மாதிரி அல்ல ஸ்மைலி பொம்மைகள். கொஞ்சம் கரிசனம் கொடுத்து உபயோகியுங்கள்.

    ஏ. வீட்டு வாசலில் நின்று நலம் விசாரிப்பது போன்றவை பின்னூட்டங்கள். ஷேமலாபங்கள், குசலம் விசாரிப்பன போன்றவற்றிற்குத் தனிமடல் போடுங்கள்.

    ஐ. ‘தமிங்கிலத்துக்கு மன்னிக்க’, ‘விவரமாக பிறகு என் பதிவில் எழுதுவேன்’, ‘நான் எழுத நினைத்தேன்…’, போன்றவை விஜய்காந்த் படத்தில் வரும் சண்டைக் காட்சியில் யார் ஜெயிப்பார் என்பது போல் ஊரறிந்த விஷயம். மீண்டும் மீண்டும் ரசித்துப் படிக்க முடியாது. தவிர்க்கவும்.



    4. ஒட்டக்கூத்தருக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்கிறார்களே… ஏன்?

    அது ஒரு பெரிய கதைங்க. குலோத்துங்க சோழ ராஜாவுக்குப் பெண் எடுக்க அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தர் பாண்டிய மன்னரிடம் தூது போகிறார். அங்கே தன்னுடைய அக்மார்க் குசும்பைக் கொண்டு வஞ்சப் புகழ்ச்சியில் பாண்டியனைத் தாளித்து விடுகிறார். பாண்டிய அரசவைப் புலவர் புகழேந்தியும் சளைக்காமல் எசப்பாட்டில் ஒட்டக்கூத்தரை கவுத்துடறார். ‘சமயம் வரும்போது வெச்சுக்கலாம்’ என்று சிரித்துப் பேசி நிச்சயதார்த்தம் நடந்தேறுகிறது. சோழனுடன் திருமணம் முடிந்தவுடன் பெண்ணுடன் அனுப்பும் சீராகப் புகழேந்தியைக் கேட்க சொல்கிறார். ‘ஆகா… அங்கு பெண்ணை எவ்வாறு நடத்துகிறார்கள் என்று அறிவதற்கு சரியான ஆள்’ என்று சந்தோஷத்துடன் அனுப்பி வைத்து விடுகிறார் பாண்டிய ராஜன். அந்தப்புரமே கதி என்று புது மாப்பிள்ளை சோழர் இருக்கிறார். சீதனமாக வந்த புகழேந்தியை சிறையில் தள்ளி குதூகலிக்கிறார் ஒட்டக்கூத்தர். மோகம் முப்பது நாள் கழிந்தவுடன், ராஜாவுக்கும் ராணிக்கும் நடுவில் ஊடல். ராஜாவை அந்தப்புரத்தை விட்டு வெளியேற்றி தாழ்ப்பாள் போட்டு விடுகிறார். சமயம் பார்த்துத் தோழிகளும் ஒட்டக்கூத்தரின் பழிவாங்கலை நினைவுறுத்துகிறார்கள். பாண்டிய அரசி ‘ப்ரேக்கிங் பாயிண்ட்டில்’ இருக்கும்போது ‘அம்மா… குழந்தே’ என்று வாயில் கதவை தட்டுகிறார் ஒட்டக்கூத்தர். கோபத்தின் உச்சியில், மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள் எல்லாம் சேர்த்து ‘இரட்டைத் தாழ்ப்பாள்’ போட்டு விட்டதாக வெண்பா-டுகிறாள்.

    (புகழேந்தியும் ஒட்டக்கூத்தரும் பாடிய வஞ்சப் புகழ்ச்சி பாடல்கள், சிறையில் இருந்து விடுதலையாகி பாண்டிய குமாரியை சாந்தப்படுத்திய புகழேந்தியின் பாடல் எல்லாம் மரபிலக்கியத்தில் கேளுங்க… சொல்லுவாங்க…!)



    5. குறைந்த செலவில் வித்தியாசமான குறும்படம் எடுப்பது எப்படி?

    வீட்டில் இருக்கும் உங்கள் மூன்று வயது செல்ல மகனை கூப்பிடுங்கள். ஆன் செய்யப்பட்ட ஹாண்டிகேமை கொடுத்து, ஒரு மணி நேரமாவது – ஊர் சுற்றி, விளையாட சொல்லுங்கள். படத்தொகுப்பை உங்கள் மனைவியிடம் ஒப்படையுங்கள். பிண்ணனிக்கு சிவமணியின் ஃப்யூஷன், எல். சுப்ரமணியத்தின் இசை இரண்டையும் போதிய அளவில் கலக்குங்கள். ‘அனுதினம்’, ‘தரையில் ஒரு தாமிரம்’ என்பது போல் இலக்கணமாய் பேர் சூட்டுங்கள். அருமையான ஆர்ட் ஃபிலிம் ரெடி.



    6. Virus, Adware, Spyware, Hackware, இவர்களை நிறுத்துவதற்கு நாதியே கிடையாதா?

    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் என்பது போல் இவர்களாய் நிறுத்தாவிட்டால், எதுவும் செய்யமுடியாது. இன்னும் சிலர் நாங்கள் ராபின் ஹுட் என்று வேறு பம்மாத்துகிறார்கள். ‘இராமநாராயணன் படத்தைப் போட்டால் டிவியை ஆஃப் பண்ணு’ என்பது போல் நாம் சிலவற்றை அறிவுறுத்தலாம். இப்போதைய நிலையில், கமல் ஸ்னேஹாவிடம் இதழ் பதிக்க ஆரம்பித்த பின்புதான் விழித்துக் கொண்டு, சேனல் மாற்ற ரிமோட்டைத் தேடுகிறோம். ‘உங்கள் கணினியில் ட்ரோஜன் புகுந்துள்ளார்’ என்றபின் சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினியை துவக்குகிறோம். இதற்கு பதிலாக தீநரி உலாவி, நோட்பேட், ஈ-கலப்பை தவிர வேறு எதையும் என் கணினியில் இயக்காதே என்று நாம் சொல்வதை கேட்டால் போதும். உத்தரவின்றி எதுவும் உள்ளே நுழையாது. இது போன்ற முயற்சியை பலர் ஆரம்பித்துள்ளார்கள். சாம்பிளுக்கு : Antivirus Software Turned Upside Down – Windows Developer Network



    7. ஏன் இந்த விபரீத கேள்வி-பதில் பகுதி?

    இது என்னுடைய நானூறாவது பதிவு. இது மட்டுமாவது சுத்தமான நெய்யில் வார்த்தது போல் சொந்தமாக எழுதியதாக இருக்கட்டுமே என்னும் ஆர்வக் கோளாறுதான்.

    பின்னூட்டம் (ரா.கா.கி)

    லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்: கதையை விரும்பி படிப்பதற்கு வாசகனின் ஆர்வம், மொழிப்புலமை, வயது, கிடைக்கும் ஓய்வு நேரம், ஆசிரியரின் பிரபலம், படிக்க பத்திரிக்கை கிடைக்கிற வாய்ப்பு, படித்து ஏற்பட்ட தேர்ச்சி, கதையைப் பற்றிய விளம்பரம்.

    இப்படி பல காரணங்கள் இருக்கு.

    ஆர்வம்: “அந்தப் பொண்ணை விவரிக்கறான் பாரு..சூப்பர்”

    ஆர்வமின்மை: “ஆறு பக்கம் படிக்கணுமா?”

    மொழிப்புலமைஇன்மை :”டமில் ரொம்ப படிக்கல சார்..பிரெஞ்சு படிச்சேன்.. இதுதான் ‘கா’னாவா?”

    வயது: பழம் தின்னு கொட்டை போட்டாச்சு. இந்த வயசுல எனக்கு காதல் கதை வேணுமா சார்?

    பத்திரிக்கையின் மெத்தனம்:

    இன்றைக்கு பல பத்திரிக்கைகள் போட்டியிலே இயங்கும்போது வரும் கதைகளை நன்கு பரிசீலித்து, வெட்டி ஒட்டி போட சரியான ஆசிரியர் குழு இல்லாத நிலையில், கதை போடுவது ஒரு சடங்காக ஆகிவிடுகிறது.

    “ரெண்டு பக்கத்துக்கு எதாவது மேட்டர் வேணுமில்ல, போட்டுத் தொலைங்க”

    படித்து ஏற்பட்ட தேர்ச்சி:

    வாசகன் கொஞ்சம் விசயம் தெரிஞ்சவன், இல்ல அவனே கதை எழுதறவன்னா, படிக்கறச்சே சீக்கிரம் சலிப்பு வந்திரும்.

    “கைநாடியைத் தொட்டவுடனே அவனுக்கு லிவர் கேன்சர் இருப்பது தெரிந்தது”, “சோழன் எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் வந்திருந்தது”, “கூட்டமில்லாத பேருந்தில் ஏறினான் பெரியசாமி” — இதை படிச்ச ஒடனே என்னங்கடா புரூடா விடறானுகன்னு மூடிடுவான்.

    ஆசிரியரின் பிரபலம்:

    பிரபல ஆசிரியர் சுஜாதான்னா படிச்சுரணும்னு படிப்பான். சரி ஒழிஞ்சு போறது, இரா.முருகன், லாவண்யா இப்படி சில பேரு எழுதினா படிப்பான்.. ஊர் பேர் தெரியாத ஆள்னா சந்தேகம்தான்..

    கதையைப் பற்றிய விளம்பரம்: “இந்தக் கதையில எத்தினி தடவை ரஜினின்னு வருதுன்னு சரியா சொன்னா வைரமோதிரம் தருவாங்களாம்”

    பத்திரிக்கை படிக்க வாய்ப்பு:

    “காப்பி மட்டுமில்ல, குமுதம், விகடன் எல்லாம் நிறுத்தியாச்சு”

    “இந்த கதை புத்தகமா ஒனக்கு சோறு போடும்? போய் பாடத்தை படிறா”

    ஓய்வு நேரம்: “படிக்கணுனு பாக்கறேன்..ஆபீஸ்ல ஆடிட்..”

    “புத்தகத்தை திறந்தேன்…டிவில டிஸ்கவரி சானல்ல முதலை காட்டினான்.”

    “எவ்ளொ பெரிசு…மூடிட்டேன், புத்தகத்தை..”

    “படிக்க உட்கார்ந்தா கரண்ட் போயிடுச்சு”

    படிக்கறதுக்கு இவ்வளவு இடைஞ்சல்……….

    இத்தனையும் மீறி இன்னிக்கும் படிக்கறவன் இருக்கான். ராகவன் சொன்னாப்புல ஆசிரியருக்கு கடிதம் போடறான் “சுமதியின் தியாகம் கண்ணில் நீர் வரவழைத்தது”ன்னு. தன் பேராவது பிரிண்டுல வராதான்னு..

    ஆனால் முழு கவனத்தோட வாசிக்கறவன் ரெண்டு பேர்தான்..ஒருத்தன் எழுதினவன், இரண்டாவது அதை பத்திரிகைக்கு அச்சுக் கோக்கிறவன்..



    சிஃபி ராயன்: இந்தக் கடுதாசி போடறவன் ஒருத்தன் இருக்கான் பாருங்க…. பயங்கர விசேஷமானவன். எனக்குத் தெரிஞ்சு ஒழுங்கா படிக்கற யாரும் கடுதாசியே போடுவதில்லை. படிக்கறதே பெரிசு. இதில கடுதாசி வேறயா?

    ஆனால் பத்து பாயிண்டு போல்டில் அயன்புரம் சத்தியநாராயணன், அரவக்குறிச்சி அசோக்ராஜா, ஐயாறு வாசுதேவன் என்று எந்த பத்திரிகையிலேயும் சில பிரஹஸ்பதிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    இதிலும் சில விசேஷப் பிரபுக்கள் உண்டு. தினமணியில் கடிதம் எழுதுபவர்கள் ஒருவிதம் என்றால், வாரப் பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதுபவர்கள் ஒருவிதம். இவர்கள் எழுதாத விஷயமே இருக்காது.

    1. அனைத்துப் பத்திரிகைகளிலும் கேள்வி கேட்பார்கள்

    2. ஆங்கில பத்திரிகை/நாளிதழ்களில் இருந்து சுட்டு துணுக்கு எழுதுவார்கள்

    3. காலட்சேபம், கூட்டம் என்று போய் சுவாரசியத் தகவல் என்று பிட் எழுதுவார்கள்

    4. அப்புறம் நிச்சயம் வாசகர் கடிதம் எழுதுவார்கள்

    வாசகர் கடிதம் பற்றி நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் ஒரு சுவாரசியமான தகவல் சொன்னார். ஒரு பதினைந்து பைசா (இப்போ இன்னா வெல சார்…) தபால் கார்டில் நடுவில் ஒரு போடு போட்டுவிட்டு, மேல் பகுதியில்,

    அன்புள்ள ஆசிரியருக்கு

    ………..தேதியிட்ட இதழில் வெளிவந்த எழுத்தாளர்

    …………………கதை பிரமாதம். அற்புதம். இதுபோல்

    எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள்.

    கீழ்ப் பகுதியில்

    அன்புள்ள ஆசிரியருக்கு

    ………………..தேதியிட்ட இதழில் வெளிவந்த

    எழுத்தாளர்………………..கதை படு திராபை. எப்படி

    இப்படிப்பட்ட கதையைப் பிரசுரிக்கிறீர்கள். இனியாவது நல்ல கதைகளைப்

    பிரசுரியுங்கள்.

    என்று எழுதி மறக்காமல் ஊர்பெயருடன் தன் பெயரை வேறு வண்ண பால்பேனாவில் எழுதுவாராம்.

    இதுவாவது பரவாயில்லை. வேறொரு சுவாரசியம் அப்புறம் சொல்கிறேன். மின் இதழ் வாசகர் கடிதங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?



    சொக்கன்: ஆமாம், மின் இதழ்களுக்கெல்லாம் வாசகர் கடிதங்கள் வருகிறதா என்ன ? நம் மின் வாசகர்களெல்லாம் தெய்வத்துக்கு நிகரானவர்களாயிற்றே, படிப்பதே பெரிய விஷயம், இதில மின்னஞ்சல் வேற கேட்குதா என்று கண்களை உருட்டி உறுமுகிறவர்களாயிற்றே!

    ‘தினம் ஒரு கவிதை’ அனுபவத்தில் சொல்கிறேன் … இணையத்தில் பிரசுரமான எதையாவதுபற்றி அரை பேர் கடிதம் எழுதினால், ஆயிரம்பேர் படித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்,

    அதில் எத்தனைபேர் ஊன்றிப் படித்தார்கள் என்பதை பா. ராகவரிடம்தான் கேட்கவேணும்!

    True 101% 

    True 101% Posted by Hello

    My Principle 

    My Principle Posted by Hello

    Now having seen this is Value to U? 

    Now having seen this is Value to U? Posted by Hello

    What is Money? 

    What is Money? Posted by Hello

    JJ 

    JJ Posted by Hello