தந்தையர் தினம்


ஞாயிற்றுக்கிழமை ‘அப்பாக்களின் தினம்’.

ஆதர்ச அப்பா என்றல் கண் முன் நிழலாடுபவர் ரேமண்ட் விளம்பரங்களில் வருபவர்தான். ஆபீஸில் இருந்து சோர்ந்து வந்தாலும் ‘ரீ-வைடால்’ மாத்திரை விளம்பரத்தில் வருபவர் போல் ‘முடியலே’ என்று புலம்பாமல், செல்ல மகளுடன் விளையாடுபவர். காலில் வைத்துத் தூக்கிப் போடுவது, தோளில் உப்பு மூட்டை தூக்குபவது, ஓடிப்பிடித்து விளையாடுபவது, கண்ணாமூச்சி ஆடுவது, குழந்தையைத் தூக்கிப் போட்டு பிடிப்பது என்று உற்சாகமாக வளைய வருபவர்.

இன்னொரு (பழைய) ரேமண்ட் விளம்பரத்தில் மகனை காடு, மலைக்குக் கூட்டி சென்று கதை பேசுவார். ஒரு டிபிகல் அப்பா என்றால், வனத்துக்கு சுற்றுலா கூட்டிச் சென்றாலும், அம்மாவிடம் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, பெட்டி மட்டும் தூக்குபவர் என்னும் பிம்பத்தை உடைத்த விளம்பரம். திரைப்படங்களில் காட்டப்படும் எஸ்.வி.ரெங்காராவ் முதல் ‘பிரமிட்’ நடராஜன் வரையினாலான (இதை வைத்து கூட தந்தையர் தின ஸ்பெஷல் கட்டுரை ஒன்று செய்யலாம் போல் இருக்கிறதே… 🙂 அப்பாக்களிடம் இருந்து வித்தியாசப்படும் சித்தரிப்புக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால், என்னதான் குழந்தைகள் விரும்பினாலும் வேர்வைகளின் தலைநகரம் சென்னையில் இருந்து கொண்டு கோட்-சூட் எல்லாம் மாட்டிக் கொண்டு திரிய முடியாது. நமக்கு சௌகரியம் காட்டன் பனியன்+ஜீன் ஷார்ட்ஸ் மட்டுமே. விளம்பரத்தில் மட்டுமே கோட் போட்ட மாடல் அப்பாவை ரசிக்கலாம்?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.