எழுதிய முதல் நாவல் ‘காலவெள்ளம்’, இதில் அரசியல் அரங்கில் நிகழும் சதுரங்க விளையாட்டை நாவல் களத்துக்குள் கொண்டு வந்தார். குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திரபூமி ஆகிய நாவல்களும் அரசியல் சார்பு வகைப்பட்ட படைப்புகளாகவே வெளிவந்தன.
இந்திரா பார்த்தசாரதியின் நாவல்கள் பலவும் நகர வாழ்வின் பாசாங்குகளை விமரிசிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இளம் வயதிலேயே டெல்லியில் இருக்க நேர்ந்ததால் நகரவாழ்வியல் மீதான மதிப்பீடுகள் விழுமியங்கள் குறித்த விசாரணையை தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார். டெல்லி வாழ்வில் பல கலாசார அதிர்ச்சிகளை சந்தித்தார். குறிப்பாக தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள போலித்தன்மைகள் பாசங்குகள் இவரது படைப்பில் தனித்தன்மை பெற்றது. இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் உரையாடல்கள் மிகுந்து இருக்கும். பாத்திரங்கள் பெரும்பாலும் உரையாடல்கள் வழியே உருவாகும். உளவியல் சார் அணுகுமுறை இவரது எழுத்தில் முக்கியமாக இழையோடிக் கொண்டிருக்கும்.
குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசும், இராமனுஜர் நாடகத்துக்காக சரஸ்வதி சம்மான் விருதும் பெற்றுள்ளார். 1991ல் சிறந்த இந்தியபடமாய் தேசிய விருது பெற்ற முதல் தமிழ் படமான ‘மறுபக்கம்’ படத்தின் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சிவெயில் என்ற குறுநாவலே. இ.பா. போலந்து நாட்டு வார்சா பல்கலைகழகத்திலும் சிலகாலம் பணியாற்றியவர். கணையாழி இதழின் கெளரவ ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய நாடகப்பிரதிகளில் ஒன்று ‘ஓரளங்கசீப்’. சரித்திர நாடகம் சமகால அரசியலின் ஒத்திசைவைப் பெற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.
|
படைப்புகள் |
|
|
நாவல்கள் |
தந்திரபூமி |
|
நாடகம் |
போர்வை போத்திய உடல்கள் |
|
கட்டுரை |
தமிழ் இலக்கியத்தில் வைணவம் |











பிங்குபாக்: இந்திரா பார்த்தசாரதி என்னும் புலியும் விமர்சக குடிகளும் | Snap Judgment