Daily Archives: ஜூன் 4, 2004

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கிழக்கு வாசல்

இன்று (ஜூன் 4) பிறந்த நாள் கொண்டாடும் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜூன் 2 பிறந்த இளையராஜாவின் கூட்டணி கோலோச்சும் ஒரு பாடல்:

பச்ச மலப் பூவு

நீ உச்சி மலத் தேனு

குத்தங்குறையேது

நீ நந்தவனத்தேரு

அழகேப் பொன்னுமணி

சிரிச்சா வெள்ளிமணி

கிளியேக் கண்ணுறங்கு

தூரி… டூரி…

காற்றோடு மலராட

கார்குழலாட

காதோரம் லோலாக்கு

சங்கதி பாட

பஞ்சணை நேரம் (‘தரவும் தெரவும் உதவட்டுமே’ மாதிரி உறுதியில்லை)

கொஞ்ச வரும் மேகம்

அஞ்சுகம் தூங்க

கொண்டு வரும் ராகம்

நிலவ வான் நிலவை நான் புடிச்சுத் வாரேன்

குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்

பூநாற்று முகம் பார்த்து

வெண்ணிலா நாண

காணாமல் தடம் பார்த்து

வந்தவழி போக

சித்திரத்து சோலை

முத்து மணி மாலை

மொத்தத்திலே தாரேன்

துக்கம் என்ன மானே

வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்

விண்ணிலே மீன் பிடிச்சு சேலை தெச்சு தாரேன்

(‘மன்றம் வந்த தென்றலுக்கு’ மற்றுமொரு ரசனையான பாடல். எஸ்.பி.பி+இளையராஜா என்றவுடன் உங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும் பாடல் எது?)

இந்தியா டுடே – ஜூன், 2, 2004

ஆசிரியரிடமிருந்து….

  • இது தியாகமா இல்லை காங்கிரசின் ஒரே பிரச்சாரகரான சோனியா காந்தி மக்களின் தீர்ப்புக்குச் செய்த துரோகமா?

  • இது உணர்ச்சிமேலீட்டால் எடுத்த முடிவா அல்லது சாதுர்யமான முடிவா?

  • இது யதார்த்தத்தைப் புரிந்து கொண்டதன் விளைவா அல்லது பதவி பயமா?

  • தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்தாரா அல்லது தனது வரம்பைப் புரிந்து கொண்டு விலகினாரா?

இதற்கான விடை புதிரான சோனியாவுக்கு மட்டுமே தெரியும்.



போஸ்டரில் தொடரும் தேர்தல் ரகளை – இந்து தமிழர் முண்ணனி

  • தமிழன் என்று சொல்லடா

    தலை நிமிர்ந்து நில்லடா

    கன்னட கோமாளி ரஜினியை தூக்கி எறிந்த தமிழ் மக்களுக்கு

    நன்றி! நன்றி! நன்றி!

  • பாசிச பார்ப்பணவெறி பிடித்த

    பா.ஜ.க. அ.தி.மு.க. ஒழிந்தது

    இனி இந்தியா ஒளிர்கிறது

    ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு

    நன்றி! நன்றி! நன்றி!



பிரமிள் படைப்புகள்

தொகுப்பாசிரியர்: கால. சுப்ரமணியம்; வெளியீடு: அடையாளம்; பக்கங்கள்: 472; விலை: ரூ. 210/-

வெங்கட் சாமிநாதன்: “60களில் ‘கோடரி’ என்ற தொடக்கம் ஒரு தீர்க்கமான பார்வையையும் தேச, இன, மொழி வரம்புகள் கடந்த மனிதாயத்தையும் காட்டியது. ‘சந்திப்பு’, ‘லங்காபுரி’ போன்றவை பொதுவாக எழுதிய நல்ல எழுத்துக்கள். பெரிதும் உவந்து பேசப்படுபவை ‘ஆயி’, ‘பிரஸன்னம்’, ‘காடன் கண்டது’ போன்றவை. நிறைய சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள், விமர்சனம் என அவர் எழுத்து பலவாறாக இருந்த போதிலும், அதிகம் கவிஞனாகவும் அதை அடுத்து விமர்சகராகவுமே அவர் அறியப்பட்டார்.



அம்பானி: ஒரு வெற்றிக் கதை – என் சொக்கன்

ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புபவராக தன் வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் மாபெரும் தொழிலதிபராக உயர்ந்த அம்பானி, வெற்றிக்காக பின்பற்றிய வழிமுறைகள் ஒரு சினிமாவுக்கே உரிய விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கொண்டவை. அந்த விறுவிறுப்பு குறையாமல் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் சொக்கன்.