Monthly Archives: மே 2004

கல்கி : மே-2-2004

நேரமிது..!

அப்பனே!

பிள்ளையாரப்பா,

அவசரமாய் ஒரு பிரார்த்தனை!

தும்பிக்கையைச் சுருட்டி,

தொந்தியையும் சுருக்கி,

காதுகளை மடக்கி,

அர்ஜெண்ட்டாய் நீ ஓர்

அண்டங் காக்கையாக வேணும்!

அகத்தியன் பிறந்து வந்து

அரசியல்வாதி ஆகிவிட்டான்!

இன்னுமொரு முறை நீ – அவன்

கமண்டலத்தைக் கண்டுபிடித்து

காவிரியைக் கவிழ்த்துவிடு!

-வி



வைகோ பேட்டி

கே: தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசாமல் ஈழத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டால், இப்படிப்பட்ட அரசியல் பழிவாங்கலைத் தவிர்க்கலாமே?

வைகோ: பழிவாங்குவார்கள் என்று பயந்து கொண்டு கருத்துச் சொல்லாமல் இருந்தால், அதைவிடக் கோழைத்தனம் எதுவும் கிடையாது. பெரியார், ராஜாஜி போன்ற தலைவர்கள் மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, தங்கள் கருத்துக்களை சொல்லி வந்தார்கள்.

ஈழத் தமிழர்கள் பக்கம் நியாயமிருக்கிறது என்று சொல்வது தவறா? தமிழர் இனப் பிரச்னை இவ்வாறுதான் உலகத்தின் கவனத்துக்கு வந்திருக்கிறது. கிளிநொச்சியில் புலிகள் தலைவர் பிரபாகரன், இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதை தொலைக்காட்சிகள் காட்டுகின்றன, பத்திரிகைகளில் போட்டோக்கள் வருகின்றன. இப்படி லட்சக்கணக்கான மக்கள் படிப்பதையும், பார்ப்பதையும் நான் மேடையில் சொன்னால் என்ன தவறு? கருத்துச் சுதந்திரத்துக்காக நீதி கேட்டு, நான் சூப்ரீம் கோர்ட்டில் வைத்த வாதம் இதுதான். என் மனுவில் இருந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டு, தீவிரவாத இயக்கத்தை ஆதரித்து கருத்துச் சொல்வது தவறில்லை; அதற்கு நிதி கொடுப்பது, ஆயுதம் கொடுப்பது, ஆள் சேர்ப்பது ஆகியவைதான் குற்றங்கள், என்று சொல்லியிருக்கிறது. இது கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி.

எனவே எந்த அச்சுறுத்தல், பயமுறுத்தல், பழிவாங்கல் இருந்தாலும், என் கருத்துக்களைத் தொடர்ந்து சொல்வேன். ஏழு வருடங்கள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டு சிறைக்குச் செல்வேன்.


சிரித்து வாழ வேண்டும் – நாகேஷ்

எனக்கு (‘திருவிளையாடல்’ நூறாவது நாள்) விழா அழைப்பிதழே அனுப்பப்படவில்லை! மனசு நொந்து போனேன்.

எனக்கு விழாவில் பெரிய கௌரவம் செய்ய வேண்டாம். விழாவுக்கு அழைக்கப்படும் குறைந்த பட்ச மரியாதை கூடத் தரப்படவில்லை. ம்… தருமிக்கு பொற்கிழி கிடைக்காமல் போனது மாதிரி, அந்தக் கதாபத்திரமாய் நடித்த எனக்கு, படத்தின் நூறாவது நாள் விழா அழைப்பிதழ் கூடக் கிடைக்காமல் இப்படி ஓர் அவமானம்! இதுவும் ஒரு திருவிளையாடல்தானோ?

தருமிபட்ட அவமானம்


முதல் மழை – ஆர். வெங்கடேஷ்

‘காதலுக்காகவும், கல்யாணத்துக்காகவும், ஒருத்தியின் இயல்பைக் கைவிடச் சொல்வது அதர்மம்’ – என்று காதலின் சமத்துவத்தையும், கதொரொளியே அறியாத விடியலை நோக்கி காலத்தை அழித்துக் கொள்ளும் போராளிகளையும், லட்சியப் படிப்பை முடித்து கம்ப்யூட்டர்களுடன் குடித்தனம் நடத்தும் யந்திர இளைய சமுதாயத்தையும், தேர்ந்த, சுருக்கமான வார்த்தை வடிவங்களில் கண்முன் நிறுத்தும் கதைகள். பழைய திரைப்படங்களைப் பார்த்த திருப்தி தரும் தொகுப்பு.

‘புக்பேங்க்’ பகுதியில் விஷ்வக்

நன்றி: கல்கி – மே-2-2004

தாய் – கண்ணன் இரா.



தவமிருந்து

தவித்து

உயிர்மெய்த்

துடித்துத்

தாழாது

துவண்டு- மனம்

தளராது

தாங்கி எனை

தாரணியில்

ஈன்றெடுததாய்!



தன்னலம்

சிறிதளவும்

சிந்தையில் இல்லாது

தனிப்பெரும்

அன்போடு

கண்ணே!

கண்மணியே!

கரும்பே!

கற்பகமே!



முத்தே!

முக்கனியே!

முதலே!

முத்தமிழே!

சித்தே!

சிந்தையே!

சிலையே!

சீரழகே!

சிங்கார மொழிப்

பேசும் என்

கண் நிறைந்த

ஓவியமே!

ஆருயிர்ச்

செல்வமே!



என்றெம்மை

சீராட்டி

வள்ர்த்தாய்!

நல்லறம்!

நற்க்கல்வி!

நற்பண்பு!

நன்நெறி!

நற்ச்செயல்!

நல்லறிவு!

நற்பெயர்!

நல்கிட

நலம் பல

அளித்தாய்!



ஆன்றோரும்

சான்றோரும்

ஆயகலை

பயின்றோரும்

பெருஞ்செல்வம்

கொண்டோ ரும்

அன்பில்

நண்பரும் – எனைப்

போற்றிப்

புகழ்ந்துள்ளம்

மகிழும் வகை

செய்தாய்!



சின்னஞ்சிறு

தவறுகள்

சிறியேன் நான்

செய்தாலும்

சில பல

தவறுகள்

அறிந்தே நான்

செய்தாலும்

இம்மியும்

இதயத்தில்

இறக்கம்

குன்றாது

பாசத்தால்

பரிவோடு

பாவியெனை

நேசித்தாய்.



ஈதனைத்தும்

ஈந்திட்ட நின்றன்

பதமலர்

தொழுது

பணிசெய்து

கிடந்தாலும்

ஏழெழு

சென்மங்கள்

எடுத்தடுத்து

தீர்ந்தாலும்

பட்டகடன்

தீருமோ? – என்றன்

ஆவிதனை



அயராது

காத்தக்கடன்

முடியுமோ?

Dedicated to all Mothers!

என்றும் அன்புடன்,

கண்ணன் இரா.

Fight Club! What movie Do you Belong in? வழங்குப…

CWINDOWSDesktopFightclub.jpg
Fight Club!

What movie Do you Belong in?
வழங்குபவர்கள் க்விசில்லா

ஈ.டி., மாட்ரிக்ஸ், பாரெஸ்ட் கம்ப் என்று ஏதாவது ஏடாகூடமாக வரப்போகிறது என்று எண்ணிதான் இந்த க்விஸை எடுக்க ஆரம்பித்தேன். இது எனக்குப் பொருத்தமா… தெரியவில்லை! உங்களுக்கு என்ன வருகிறது என்றும் சொல்லுங்களேன் 🙂

அமுதசுரபி – சிஃபி.காம்

புனை கதை – நீல. பத்மநாபன்: முழுக்க முழுக்க ஒரு விமர்சகன், அல்லது ஒரு திறனாய்வாளன், புனைகதை உட்பட்ட படைப்புத்துறையை எடைபோடு வதற்கும் கதை, நாவல் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி அணுகுவதற்கும் சற்று வேறுபாடு உண்டு. முன்னவருக்கு தன் மன வார்ப்புக்கு-ரசனைக்குத் தகுந்தமாதிரி தன்னிச்சையாகச் சொல்லிச்செல்ல இயலுமென்றால், பின்னவருக்கு – படைப்பாளிக்கு ஒரு விமர்சகனை அதிகமாக அலட்டாத ஓரிரு பிரச்சினைகள், தர்ம சங்கடங்கள் உண்டென்று தோன்றுகிறது.

1) கதைக்கரு தேர்வு, 2) கையாளும் பாணி – இவ்விரண்டில் சோதனையாகவும், சுயம்புவாகவும் நேர்ந்த மாற்றங்கள் – குறிப்பாக இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டி ருப்பதால் வந்த மாற்றம் – உருவத்தில் (form) நிகழ்ந்த மாற்றங்கள், நடையில் (style), கட்டமைப்பில் (structure), கைத்திறத்தில் (Craft) செய்முறை நுணுக்கம் (technique), தொன்மங்களை பயன்படுத் தல்கள் இவற்றில் எல்லாம் நேர்ந்து கொண்டிருக்கும் பரிணாமங்கள் தான் எத்தனை எத்தனை….!

(10-1-2004 -இல் சென்னையில் நிகழ்ந்த தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில் புனைகதை அமர்வில் ஆற்றிய தலைமையுரையிலிருந்து)



நூல் நயம்:

முதல் மழை : ஆர். வெங்கடேஷ்.

ஆசிரியரின் விறுவிறுப்பான ஒன்பது சிறுகதைகள் இம்மூன்றாவது தொகுப்பில் இடம் பெறுகின்றன. கணவனுடன் இருமுறை முயன்றும் சேர்ந்து வாழமுடியாமல் விலகி வரும் மீராவுக்கு உதவ முன்வரும் சுந்தர் அவன் தங்கை ஜெயந்தியின் காதலை ஏற்க முன் வருவதுடன் நூலின் தலைப்புக் கதை சுபமாக முடிகிறது. திருவல்லிக்கேணி மணம் கமழும் இதர கதைகளில் மாறுபட்ட குணநலன்கள் கொண்ட பல பாத்திரங்கள் வாசகரை எதிர் கொள் கின்றனர். இவர்களில் அரையாடை கட்டி அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் சுதந்திர உணர்ச்சிகளை வழிநடத்திய காந்தி உண்டு. பத்திற்குப் பத்து கூடத்தை விட்டு வெளியே போகாமல் முப்பதாண்டு குடும்பம் நடத்தும் அம்மாவின் திருப்தியான வாழ்க்கையால் தெளிவு பெறும் மகள் ரம்யாவும் உண்டு; ஏன், சகுந்தலா ஜெயராமன் வீட்டில் தன் திருவடி பதித்த ஸ்ரீராமன் உண்டு. சுற்றி நடப்பதை சுவாரஸ்ய மாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அவரது தூதர் ஆஞ்சநேயரும் கூட உண்டு.

பக் : 128 ரூ.45/- மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், 32/9, ஆற்காடு சாலை, சென்னை-24.

இந்த வார கல்கியிலும் சிஃபிராயரின் புத்தகத்திற்கு அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள்.



வெங்கடேஷின் ஐரோப்பா பயணதிட்டம் குறித்த கட்டுரையும், மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள் புத்தகம் குறித்த சா.கந்தசாமியின் பதிவும், சில நிகழ்வுகளும் சலனங்களும் என்று சல்மாவில் ஆரம்பித்து பல நிகழ்வுகளை பார்க்கும் ரவி சுப்ரமணியனின் விமர்சனமும், வெங்கட் சாமிநாதன் ‘அணங்கு’ என்னும் ஒரு பெண்ணிய இலக்கிய அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பிரீதம் சக்கரவர்த்தி, தனிநபராக நிகழ்த்திய கண்ணாடி நாடகத்தை மட்டும் பாராட்டிய அலசலும் படிக்க வேண்டியவை.

மன்னிப்பு மட்டும் கேட்டால் போதுமா?

ஈராக் போரில் மாட்டிக் கொண்ட கைதிகள் படும் பாடு அமெரிக்க ஊடகங்களில் பெரும்பாடுபடுகிறது. சதாமைத் தவிர மற்ற அனைத்து ஈராக்கிய வீரர்களுமே எவ்வாறாவது கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்பதைப் புகைப்படங்கள் மூலம் காண்கிறோம்.

தமிழ் சினிமா அதிகம் பார்க்கும் தமிழன் என்னும் முறையில் இந்தப் படங்கள் எனக்கு பெரிய பாதிப்பையோ, அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ தரவில்லை. ‘காதலன்’ படத்தில் கவர்னர் மகளைக் காதலித்ததற்காக துன்புறுத்தல், ‘குருதிப்புனலில்’ கோட்பாடுக்காக எதையும் செய்யத் துணிந்த புரட்சிக்கார நாசரும், நாசரிடமிருந்து உண்மைகளை வெளிக் கொணருவதற்காக போலீஸ¤ம் மாற்றி மாற்றி அரங்கேற்றும் காட்சிகள், என ஒரு சிலதை சொல்லலாம். எனினும், நம்மில் அனேகர் தமிழக/இந்திய சிறைகளில் நடக்கும் அட்டூழியங்களையும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் அக்கிரமங்களையும், செல்வாக்கு உள்ளவர்கள் பயன்படுத்தும் அடக்குமுறையையும் நிஜ வாழ்விலும் கண்டிருப்போம்.

சித்திரவதை செய்தால்தான் ஈராக்கின் அடுத்த கட்ட சதி நடவடிக்கைகள் தெரியும் என்னும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் படைவீரர்களுக்கு ஆபத்து என்னும்போது இவர்களை அடித்து துவைப்பது பெரிய விஷயமாகத் தோன்றியிருக்காது. மேலும், அவர்களில் சிலர், 9/11-இல் சொந்தபந்தங்களை இழந்தவர்களாக இருந்திருக்கலாம். நண்பர்களை இழந்த ஆற்றாமையினால், இவ்வாறு மனிதத்தனமையை மறக்கத் தள்ளப்பட்டிருக்கலாம். சக வீரர்களின் கால், கை உறுப்புகளை இழந்ததினாலும், ஒரு வருடத்துக்கு மேல் சுற்றங்களை மறந்து போரில் ஈடுபட்டிருப்பதாலும் அரக்ககுணம் குடி வந்திருக்கலாம். சதாமிடமும் ஒஸாமிடவும் செய்ய நினைத்ததை, அவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை, வடிகாலாக போர்க்கைதிகளிடம் கொட்டிருக்கலாம்.

ஆனாலும், அவர்களில் மிகச் சிலரே இது போன்ற காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கூட இருந்து கண்டித்தவர்கள், வெகுண்டு போய், இந்த நடவடிக்கையை அம்பலபடுத்தியுள்ளார்கள்.

இது போன்ற துன்புறுத்தல்களுக்காக புஷ் இப்போது மன்னிப்பு கோரி விட்டார். சண்டைக்குப் போவார்; அதில் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்வார்; எண்ணெய்க் கிணறுகளையும் காண்ட்ராக்ட்களையும் வைத்து சுயலாபம் அடைவார்; தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டு செய்வதறியாது விழிப்பார்.

சிறையில் நடந்த சில சில்லறை விஷயங்களுக்காக ‘சாரி’ கேட்டு விட்டார். மற்ற சம்பவங்களுக்கு?

சித்திரவதைப் புகைப்படங்கள் / வாஷிங்டன் போஸ்ட் செய்தி

அன்னையர் தினம் எமக்குத் தேவையா? – தோழியர் வலைப்பதிவு

நளாயினி தாமரைச்செல்வன்: “தாய்மையின் வாழ்வு அலங்கோலமாகி சீழ் ஒழுகி நாறுகிறது. எமக்கெதற்கு அன்னையர் தினம்? தங்கமுலாம் பூசி தாய்மையை போற்றித் துதிக்கிறோம் என மினுக்க நினைக்கிறோம். வேண்டாம் எமக்கு அன்னையர் தினம். ஒரு பெண் திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்து விட்டால் அவளை தள்ளி வைக்கிறோம். நெல்மணிகளை தொண்டைக்குள் செருகி சிசுக்கொலை. அச்சிசுவை கொலை செய்யத்தூண்டியது எது?

இது ஆணாதிக்க உலகம் அப்படித்தான் செய்யும். எங்கே தாய்மைக்கு மதிப்பளிக்கிறீர்கள்? அன்னை தாய்மை எல்லாம் வெறும் ஏட்டளவில் தான். ”

தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. கைதட்டுவதோடு நிற்காமல், ஏதாவது செய்யத் தோன்றுகிறது. பார்ப்போம்.

சந்திரலேகா: “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததால் தாயைப் படைத்தார் என்று ஒரு யூதப் பழமொழி கூறுகிறது. கடவுள் எவ்வாறு வேறுபாடின்றி உயிர்களை இடைவிடாது என்றும் ஒரே மாதிரி நேசிக்கிறாரோ அப்படியே தாயும் தனது பிள்ளைகளை என்றும் ஒரே மாதிரி நேசிக்கிறாள். இருவரின் அன்பிலும் ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, பிரதி பலனை எதிர்பார்க்கும் தன்னலமும் இல்லை.

எமது தமிழ்ப் பண்பாட்டில் தாய்க்குரிய மதிப்பைக் கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் தேவையற்றது. மற்றைய பல பண்பாட்டினர் போலன்றி எமது பண்பாட்டில் தாய்மாரின் பங்களிப்பு அளவற்றது. தமது இன்பங்களை முற்றாகப் புறக்கணித்து பிள்ளைகளின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது. ”

தமிழ் இந்துக்களின் வழக்கம், சரித்திர தகவல்கள், தாய் குறித்த கவிதைகள், தற்போதைய நடைமுறை என்று பல விஷயங்களையும் கோர்வையாகத் தந்திருக்கிறார். பயனுள்ள பதிவு. சிந்தனையைத் தூண்டும் கட்டுரை.

கில்லி – படத்தின் மெஸேஜ் என்ன?

1. கோக் நிறைந்த பாட்டிலை எவ்வளவு வேகமாக வீசினாலும் காட்ச் பிடிக்கலாம்; கோக் காலியான பாட்டிலை பிடிக்க எத்தனித்தால் மணடை உடைய வாய்ப்புண்டு.

2. யாராவது கொம்பு சீவி விட்டாலும், சாந்தமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்; அவர்கள் உங்களை ஏத்தி விடுவது, அவர்களின் நன்மைக்காகவே.

3. தமிழகத்தில் மதுரையில் இருந்து சென்னை வரும் சாலைகளில் போக்குவரத்து அதிகம் கிடையாது; வேகமே விவேகம்.

4. மனதுக்கு விருப்பமானவள் பார்த்தால் மட்டுமே, விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிக்க முடியும்; அப்பா, அம்மா, தங்கச்சி, ரசிகன், நண்பர்கள் ஆகியோரை விடக் காதலியோ அல்லது நண்பனின் காதலியோ (இது ‘பர்தேஸ்’ பார்த்ததால் ஏற்கனவே பதிந்து போன மெஸேஜ்) பார்வையாளராக இருந்தாலே கபடியில் ஜெயிக்க முடியும்.

5. வெளிநாடு டூர் செல்லும்போது, சவுரவ் கங்குலி, டெண்டுல்கர் தவிர புது மாப்பிள்ளை சேவாக் போன்றோரும் தங்கள் மனைவியையோ, காதலியையோ அவசியம் அழைத்துச் சென்றால், பலன் நிச்சயம்.

6. Caller-ID இல்லாத செல்பேசிகளை வைத்துக் கொண்டு நண்பர்களோடுப் பேசவேண்டும்; காதலியை காப்பாற்றத் தோழர்கள் உதவும்போது இது வில்லன்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

7. பெண்களுக்குப் பாதுகாப்பான அமெரிக்க வாழ்க்கையை விட, திறந்த வெளியில், குளிரடிக்கும் இரவில், போர்வை கூட இல்லாமல், கலங்கரை விளக்கத்தில் நாடோடியாக இருப்பதே பிடிக்கிறது.

8. போலீஸ் க்வார்ட்டசில் கூட ரவுடிகள் அதிகம்; காவலர்கள் நிறைந்த குடியிருப்பில் கூட இரவில் தனியாக பொதுத் தொலைபேசி பயன்படுத்த முடியாது.

9. கபடி ஆடுபவர்கள் அனேகமாக வேலை இல்லாத வெட்டிப்பசங்க.

10. மந்திரியாக இருந்தால் மகனுக்கு உதவ முடியாது.

அப்புசாமி.காம்

ஜோக் போட்டி:

உங்களால் சிரிக்க முடியும். ஆனால் பிறத்தியாரைச் சிரிக்க வைக்க முடியுமா? உதடு ஒரு அரை இன்ச் அகன்றால் கூடப் போதும்.

அப்புசாமி டாட் காம் நடத்தும் ஜோக் போட்டியில் உடனே கலந்து கொள்ளுங்கள். உங்கள் ஜோக் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஒரு அருமையான வாட்ச் பரிசாகக் கிடைக்கும். மூன்று பரிசுகள் தருவதாக உள்ளது. குலுக்கல் சமாசாரமே கிடையாது. மிகச் சிறந்த மூன்று ஜோக் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு வாட்ச் பரிசாக வழங்கப்படும்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பரிசு கிடைத்தால் ஐயோ நமக்கு எப்படி வாட்ச் வந்து சேரும் என்று கவலைப்பட வேண்டாம். இந்தியாவிலுள்ள உங்கள் உறவினர் அல்லது நண்பர் முகவரி தெரிவித்தால் அவரிடம் ஒப்படைக்கப்படும். அடுத்தாற்போல் இந்தியா வரும் போது நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். (அதுவரையும் அப்புறமும்கூட கடியாரம் ஓடிக் கொண்டுதானிருக்கும்.) ஒருத்தரே நிறைய ஜோக் அனுப்பலாம்.

ஜோக் அனுப்ப வேண்டிய முகவரி : e-mail : editorappusami@yahoo.co.in


புளுகு – எஸ்.வி.வி.:

சாதாரணமாய் மனித சுபாவம், ஏழ்மைத் தனம் வாஸ்தவமாயிருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் பணக்காரன் போல நடிக்கும். கடன் கேட்க வருபவனிடத்தில் மாத்திரம் இல்லாத ஏழ்மைத்தனத்தையும் சிருஷ்டி பண்ணிக்கொண்டு சொல்லும். கவர்ன்மெண்டு பணத்தை ஏமாற்றுகிற விஷயத்தில் எதுவும் புளுகு ஆகாது. யாரும் நம்மைப் புளுகன் என்று சொல்லவே மாட்டார்கள். இந்தப் புளுகெல்லாம் கிடக்கட்டும். இவை ஏதோ ஓர் அனுகூலத்தை உத்தேசித்துச் சொல்லுகிறவை. ஒரு காரிய சாதகமுமில்லாமல் புளுகுகிறார்களே அதை என்னவென்று சொல்லுகிறது ”மூற துட்டை மூட்டையாய் அளக்கிறானடா அப்பா” என்றார்களே அவற்றை. ….


முதுமை என்பது லாபமா, நஷ்டமா? – ரா.கி. ரங்கராஜன்:

‘அண்ணாநகர் டைம்ஸ் பத்திரிகையில் நீங்கள் எழுதும் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன். ரொம்ப நகைச்சுவையாக, சுவாரஸ்யமாக எழுதி வருகிறீர்கள்….’ என்று எனக்கு வரும் ஒரு கடிதம் ஆரம்பிக்குமானால் நான் போச்சுடா சாமி என்று எண்ணிக் கொள்வேன். காரணம், அடுத்து என்ன வரிகள் வரும் என்று புரிந்துவிடும்.

காலம் சென்ற டாக்டர் டி. ஞானசம்பந்தன் ‘Future Scenarios’ என்ற தன் புத்தகத்தில், மனிதன் முதுமை அடையாமல் இளமையுடனும் சக்தியுடனும் நீண்ட காலம் வாழ்வதற்கு வகை செய்யும் மாத்திரைகள் எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம் என்றும், அப்படி நேர்ந்தால் ஜனத்தொகை பெருகி, சமுதாயம் பெரும் அபாயங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்து, ஜான் நிதாம் என்பவர் எழுதியுள்ள ஒரு நாவலையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அந்த நாவலில் ஒரு விஞ்ஞானி, மனிதன் முன்னூறு வருடம் உயிர் வாழ்வதற்கு ஒரு மருந்து கண்டுபிடித்து, அதைத் தன மகளுக்கும் மகனுக்கும் மட்டும் அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாகக் கொடுத்திருக்கிறார். அதன்படி மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் ஒரு வயது ஏறும். ஒரு நாள் அவர்களிடம் அந்த உண்மையை உடைக்கிறார்.

தொடர்ந்து படிக்க அப்புசாமி.காம்

பிகு: நம்ம உஷாவின் கதையை இங்கே படிக்கலாம்.

நினைவுச் சின்னமா? நினைவூட்டும் படலமா?

சியாட்டில் டைம்ஸ் தினசரியின் முகப்பில் வெளிவந்த புகைப்படம் இது. அமெரிக்க அரசு எதிரான தோற்றத்தைத் தரக்கூடிய இந்த புகைப்படத்தை ஏன் வெளியிட்டோம் என்பதையும் விளக்கியுள்ளார்கள். போரில் இழந்தவர்களை அமெரிக்க அரசு எவ்வளவு மரியாதையாகத் திரும்ப கொண்டு வருகிறது எனபதை காட்டுவதற்காக இதைப் புகைப்படமாக்கியவர் பெயர் டாமி சிலிசியோ. இதை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை அடக்க இடஞ்சுட்டி பொருளும் சொல்லியுள்ளார்கள்.

மேலும் படங்களைப் பார்க்க மூளையில் ஓட்டை இணையத்தளத்திற்கு செல்லலாம்.

கவிதைத் தொகுதி அறிமுகம் – காளான் பூக்கும் காலம் : எஸ்.பாபு

எனக்கும் ரயிலுக்குமான உறவு பெற்றோர்-பிள்ளை உறவு போன்றது. பல சமயம் ரொம்ப அன்னியோன்மாய் இருப்போம். சில சமயம் கடனே என்று கடமையை முடிப்போம். ஆனால், எப்பொழுதும் ஆவலாய் ஒருவரையருவர் கவனித்துக் கொண்டேதான் இருப்போம்.

முதன் முதலில் தண்டவாளத்தில் கால் வைத்தது திருப்பதி பாலாஜிக்காக. ரேணிகுண்டா வரை முன்னேறும் ட்ரெயின், அதன் பின் தன் பயணத்தை பின்னோக்கி செல்வது போல் தோன்றும். நம் வாழ்க்கை எதற்காக நம்மை தூக்கி சிம்மாசனத்தில் வைத்து விட்டு கீழே தள்ளிவிடுகிறது என்று எனக்கு தெரியாது. ரயில் வண்டியும் ரேணிகுண்டா போனபின், வந்த வழியே மீண்டும் பயணித்தது ஏன் என்பதும், ஏன் நேரடியாக திருப்பதியை அடையக்கூடாது என்பதும்தான்.

அடுத்ததாக ஆறு மாதத்துக்கு ஒரு முறை புது தில்லியில் இருந்து சென்னை. பதினைந்து நாட்களோ, கோடை விடுமுறையோ அனுபவித்து உறவினர் சலித்த பின் தனிமையான ஹாஸ்டலை நோக்கி மீண்டும் புது தில்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரசில் முப்பத்தாறு மணி நேர தவம். ஆரம்ப காலங்களில் நட்புப் பிடிபடாத நாட்களில் கூட ரயில் பயணம் போரடித்ததில்லை.

சென்னை வாசமும் கல்லூரி ஹாஸ்டல் இருப்பும் கூட அவ்வப்போது தனிமையை உணரச்செய்திருக்கிறது. ஆனால், ட்ரெயின் எப்பவுமே கலகல. சில நேரத்தில் பிரிந்து விடப் போகும் நட்பின் ஏக்கமாக இருக்கலாம். அல்லது நீண்ட நாள் பார்க்காதவர்களை மீண்டும் சந்தித்த சந்தோஷமாக இருக்கலாம். இரயில்வேயில் வேலை பார்க்கும் அப்பாவின் தயவால், ஏஸி ஸ்லீப்பரில் இருக்கும் சக மாணவனின் இருக்கையின் எதிரில், அந்தக்கால ஆயிஷா ஜூல்கா மாதிரி இருக்கும் சுடிதார் பெண்மணியாக இருக்கலாம். ரயில் பயணங்கள் சந்தோஷமானவை.

தெரியாத பாஷை பேசும் ஊர்களில் இறங்கி, ஸ்டேஷனை அளந்து, ஆராய்ந்து, ஒன்றும் வாங்காமல், கடைகளில் ஹிந்தியில் பேரம் பேசி, ட்ரெயின் ஓட்டம் எடுக்கும் வரை ப்ளாட்·பாரத்தில் அசால்ட்டாக நின்று கொண்டு, எஸ்-12 கோச்சில் ஏறி, என்னுடைய எஸ்-1 வரும் வரை, ஒவ்வொரு பெட்டியிலும், ஒவ்வொரு இருக்கையிலும் இருப்பவர்களை கண் மேய்ந்து, மனதின் நினைவுகளில் இருக்கிறார்களா என்று தேடி, கேள்வி கேட்கும் வயதானோர்க்கு கல்லூரி பெயர் சொல்லி, இருக்கைக்கு வருவதற்கு முன், அடுத்த நிறுத்தம் வந்துவிட, மீண்டும் முதலில் இருந்து செய்ய ஆரம்பிக்கலாம்.

‘காளான் பூக்கும் காலம்’ படித்தபோது எனக்கு என்னுடைய ரயில் சுகங்கள் நினைவில் வந்தது. என் மனதில் தங்கிய வழிகுறிப்புகளை யாரோ கவிதையாக்கினது போல் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு நிகழ்வுகளைக் கிளறியது. பேசின் ப்ரிட்ஜ் வருவதற்கு முன் வரும் குடிசைகளும், காலைக் கடனை முடித்துக் கொண்டிருக்கும் காண முடியாதவற்றையும், போபாலின் அருகே அடர்ந்த காடுகளில் சம்பல் கொள்ளைகாரர்கள் இருப்பார்களோ என்னும் பய உணர்வுகளுடன் உத்தர பிரதேசத்தின் பசுமை நிறைந்த புல் வெளியையும், ஆக்ராவும் இங்கேயிருந்து தெரிந்துவிடுமோ என்னும் கற்பனையையும் கொண்டு வந்து நிறுத்துகிறது.

ஓரிருவரின் அணிந்துரை, பின் இலக்கியப் பெரியவர்களின் மதிப்புரை, படைப்பாளியின் முன்னுரை என்று பத்திருபது பக்கங்களை ஒதுக்கமால், முதல் பக்கத்திலிருந்தே கவிதை ஆரம்பிக்கிறது. காலச்சுவடு, தாமரை, புதிய பார்வை, கணையாழி, கதை சொல்லி, அம்பலம்.காம், ஆனந்த விகடன், தாமரை, சொல் புதிது, தினமணிக் கதிர், தமிழ் அமிழ்தம், சுந்தர சுகன், செம்மலர் ஆகியவற்றில் ஆகஸ்ட் 89 முதல் நவம்பர் 2001 வரை பாபு எழுதியதில் இருந்து 65-ஐத் தொகுத்திருக்கிறார்கள்.

நாம் கடற்கரையில் உட்கார்ந்தால் கூட இயற்கையை முழுக்க ரசிக்க முடிவதில்லை. அங்கு வரும் மனிதர்களும், அவர்களின் செய்கைகளும் சில சமயம் சுவாரசியபடுத்தினாலும் நமக்கும் கடலுக்கும் இடைவெளி விடுவதற்குப் போதுமானதாக இருக்கிறது. காடுகளுக்குப் பயணம் செல்லும்போது கூட திரும்பி செல்லும் பாதை, வழி மற்றும் நேரம் தவறாமை என சிந்தனைத் தடங்கல்கள் வருகிறது. இங்கும் ரயில் பயணம் நமக்குக் கை கொடுக்கும். வெறுமனே வேடிக்கை பார்ப்பதை யாரும் தடை செய்யமாட்டார்கள். சுதந்திரம் வேண்டும் என் போன்றவர்கள் நுழைவாயிலின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் கம்பிகளின் இடையூறு கூட இல்லாமல் அவசரப்படும் ரயிலின் பார்வையில் இயற்கையை விழுங்கலாம். இந்தக் கவிதைகள் நமக்கு அவசரப்படாமல் அவற்றை காட்சிபடுத்துகின்றன.

கால வரிசைப்படி இல்லாமல், ஒரு தொடர்கைதையைப் போன்ற அமைப்போடு நம்மோடு ஒட்டி உறவாடும் அமைப்பு. எதிர்மறை எண்ணங்களையும் நம்பிக்கையின்மையையும் தவிர்க்கும் தொகுதி இது. ஜாதி மத பேத நல்லிணக்கத்தைத் தாண்டி உயர்திணை அ·றிணை ஒற்றுமையை வலியுறுத்தும் படைப்புகள் (அமீபாவின் அழுகை), விடைபெறும் விருந்தாளியாக/ஓர் உயிருள்ள பிணமாக/ஏறக்குறைய கடவுளாக என்னும் அச்சுறுத்தும் பார்வைகள், போன்ற எண்ணங்கள் மனதை விட்டு நீங்காது.

தனிமை என்னை அச்சுறுத்தியது உண்டு. திரைப்பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டாலும், நண்பர்களை அழைக்க எத்தனித்தாலும், கதவைத் திறந்து வைத்தாலும் தனிமை தொடர்வது போன்ற பிரமை. ‘அறைக்குள் இருக்கும் எதிரி’ அதைப் படம் பிடித்து காட்டுகிறது. அறைக்குள் நுழையக் காத்திருந்து/தாவியேறி கழுத்தைக்/கட்டிக்கொண்டது தனிமை/… உச்ச சப்தத்தை மீறிக் குரலெடுக்கிறது/தனிமையின் பெருத்த ஓலம்/… /தலைக்குப் பின்புறமிருந்து/தானும் எட்டி பார்க்கிறது இந்தக் கஷ்டத்தை தீர்க்க கொடூரத்தனிமைக்கு எதிரான/கொலை ஆயுதமாக/இக்கவிதையை என முடிக்கிறார்.

இன்றைய தேதியில் பலருக்கு மதிப்பில்லாதது நம் இணைய நண்பர்களின் மின்னஞ்சலும், பின்னூட்டங்களும்தான். ‘நாளைக்கு’ சொல்கிறது, அடிக்கடி வருவதால்/அலுத்துவிட்டது/நண்பனின் கடிதவரிகள்… இடைவெளிகள் அவசியம்/அன்பையும் ஆர்வத்தையும்/அதிகப்படுத்த… என்னும்போது நமக்குள் மின்னல் வெட்டலாம். பெரிய விஷயங்களுக்குக் கலங்காமல், சிறு சங்கதிகள் நம்மைப் புரட்டிப் போடுவதை அருகே இருந்த குளத்தின்/…/பூ உதிர்ந்ததில்/நடுநடுங்குகிறது அதன்/நீர் பிம்பம் என்று பெரிய கட்டிடத்தைப் பதியும்போது சின்னச் சின்ன நிகழ்வுகள் எவ்வாறு உலக வர்த்தக மையத்தைத் தகர்க்க அடிகோலியது என்னும் சிந்தனைகள் எழுகிறது.

தொலைந்த நட்புகளையும் நினைவுகளையும் அசைபோடும் ‘அடையாளம்’ பருத்த தொந்தியும் நரைத்த மீசையுமாய்/பாய்லர் முன் நின்றிருந்த/ பள்ளித்தோழன் கேட்கிறான்:/டீ தரட்டுமா சார்?, ‘நிலை’யின் வட்டிக்குக் கொடுத்தவன்/கொட்டிவிட்டுப் போன/வசவுகள் சிதறி/வாசலெங்கும் கிடக்கிறது என்று கடன் பட்டு நிற்கும் நடுத்தர வர்க்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம், ‘கம்பிகளறுந்த கிதார்’ குறித்து எப்போதாவது/அறையைச் சுத்தம் செய்ய/ நகர்த்தப்படும் வேளையில் மட்டும்/அறுபட்ட கம்பிகளில்/அபஸ்வரமாய் ஒலியதிர/தன்னிருப்பை உணர்த்திக் காட்டுகிறது என்று மறக்கப்பட்டவர்களின் நிலையை விவரிப்பது, ‘மெழுகுவர்த்தி’ குறித்து தீராத இருட்கடலில்/ மெல்லக்கரையத் துவங்கிற்று, ‘பருந்துக்கு’ வட்டமிட்டு வட்டமிட்டு/ வானளக்க வலுவிருந்தும்/தரையிறங்கத்தான் வேண்டியிருக்கிறது/இரை கொள்ள, ‘நீளும் மாலைப்பொழுதை’ அடிவானத்தில் அலைந்தபடியிருந்தன/ குழப்பங்களின் நிறமாற்றம் போன்ற கவனிப்புகள் என்னை மிகவும் கவர்ந்தது.

விசுவின் குழப்பல் வசனம் போன்ற ‘விசாரிப்புகள்’ (கணையாழி), லிஸ்ட் போடும் ‘உரியவர்’ (அம்பலம்), நவீன சாயலில் ஆங்கில வார்த்தை தெளித்த ‘நிலா சானல்’ (ஆனந்த விகடன்), என்னுடைய வாசிப்புக்கு எட்டாத ‘கலைந்துவிட முற்படும் பெருங்கனவு’, குணாதிசயங்களைக் கவர்ச்சியாக சொல்லும் ‘நீர்ப்பிறவி’ மட்டுமே எனக்கு ஏமாற்றம் கொடுத்தது.

தொகுதியின் பல கவிதைகள் நேரடியான அர்த்தம் தந்தாலும், அடிநாதமாக விளங்கும் குறியீட்டையும் சத்தமில்லாமல் விதைக்கிறது. தொகுப்பின் தலைப்புக் கவிதையும், ‘விலங்கு’ம் இதற்கு நல்ல உதாரணம். யானையை மையமாக வைத்து அடக்கப்படுபவர்களும், தாத்தாவோடு போன பாசத்தின் ருசியைக் காளானிலும் பார்க்கலாம்.

எந்த வருடத்தில் எழுதியது என்று எல்லாக் கவிதைகளுக்கும் தேதி கொடுத்திருக்கலாம். ஆசிரியரை குறித்து பின்னட்டையில் கூட சிறு குறிப்பில்லாதது தன்னடக்கத்தின் உச்சம் என்றாலும், தவிர்க்கலாம். ஆங்காங்கே சில கோட்டோவியங்கள், அனைத்து கவிதைக்கும் தலைப்பு (இந்த மாதிரி எங்காவது மேற்கோள் காட்டும்போது பயன்படும்!) போன்றவை அடுத்த பதிப்பில் கவனிக்கப் படவேண்டும்.

‘கோடை விடுமுறை’, ‘வழிகாட்டிகள்’, ‘ஓட்டம்’, ‘மாற்றம்’ போன்றவை காட்டப்படும் இடங்களில் வலம் வந்தும், அவை சொல்லியதை செய்தும் இருப்போம். கவிதைத் தொகுப்பின் முத்திரைக் கவிதைகள் என்று ‘மறைந்து வாழும் முகம்’, ‘ஆற்றுப்பாலத்தில் போகும் ரயில்’, ‘கோடை மழை’ மற்றும் ‘புறக்கணிப்பு’ ஆகியவற்றை சொல்வேன். பற்களைக் காயப்படுத்தாத எளிய வார்த்தைப் பிரயோகத்தின் மூலமே பல அர்த்தங்களை புலப்படுத்தி உள்ளத்தில் அழமாகப் பதிந்துவிடுகிறார்.

காளான் பூக்கும் காலம் – எஸ்.பாபு தமிழினி ரூ. 25/-


திண்ணையில் எஸ். பாபு எழுதும் ‘கவிதை உருவான கதை’யில் இருந்து சில பகுதிகள். கவிதைகளும் மற்ற பத்திகளும் சுட்டிகளின் உள்ளே கிடைக்கும். வலி

நிறமாற்றம்:



கவிதை உருவாவது கணங்களில் நிகழ்வது. அதன் பிறகு கவிதை செப்பனிடப்படலாம். எனினும் உருவாவது கணங்களில்தான் என்று தோன்றுகிறது. ஒரு வருடம் முழுவதும் ஒரு கவிதை கூட எழுத முடியாமல் போகலாம். ஒரே நாளில் எண்ணற்ற கவிதைகள் எழுதிக்குவிக்கலாம். எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது மட்டுமல்ல புற உலகின் நெருக்கடிகளும் சார்ந்தது.


சிதைவு:



காரணமே இல்லாமல் (அல்லது காரணம் தெரியாமல்) மனம் உற்சாகமடைவதும் பிறிதொரு சமயம் வறண்டு வடிந்து போவதும் எனக்கு அடிக்கடி நிகழ்வது. சிறுவயதில் சிலோன் ரேடியாவில் கேட்ட ஒரு நல்ல பாடல் போதும் என்னை உற்சாகப்படுத்த. மனம் லேசாகி அந்தரத்தில் மிதக்கும். மேகம் திரண்டு இருட்டிக்கொண்டுவரும் மாலை நேரம் போதும், மனம் பாரமாகிப் போக. இவற்றுக்கெல்லாம் இதுவரை காரணம் புரிந்ததில்லை.

அன்றைய தினம் வேறு நண்பர்களைக் காணமுடியாததால் நான் தனியாக தேநீர் அருந்தப் போனேன். தேநீர் அருந்துவது பத்து நிமிடம் தான் என்றாலும் அது தரும் தெம்பும் உத்வேகமும் அலாதியானது. தேநீர் அருந்தச் சென்ற போது, ஆர்டர் செய்த போது, அருந்திய போது மனம் லேசாகவும் உற்சாகமாகவும் இருந்தது. என்னுடைய கெட்ட பழக்கம், என்னைச் சுற்றிலும் நடப்பவற்றை அங்குலம் அங்குலமாக கவனிப்பது. தேநீர் குடித்து முடித்து கிளம்பும்போது மனம் வற்றிப் போயிருந்தது. காரணமே அறிய முடியாமல் உற்சாகம் வடிந்து போயிருந்தது. காத்திருக்கும் ஆராய்ச்சிக்கூடப் பணி காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆராய்ச்சிக்கூடத்திற்கு திருப்பியபோது யோசித்ததுதான் கிழ்க்காணும் கவிதை.