வாதம் vs. விவாதம்


நான் பார்த்த இணையத்தில் இந்த நாள் மட்டும், எந்த ஒரு விவாதமும் முழுமையாக முடியவடியவில்லை. மணிக்கணக்காய் விவாதம் செய்தாலும் முடிவில் ‘என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு’; உன் மூக்கு, என் மூக்கு என்று முடிந்து விடுகிறது. இந்த விவாதத்தில் நமக்கு மிஞ்சுவது சிறிது மன உளைச்சல்தான். இப்படி பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு விஷயத்துக்கே நம்மால் ஒத்து போக முடியவில்லையென்றால் எப்படி இதையே பிழைப்பாக நடத்தும் அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் ஒத்துப் போவார்கள். ஆனால் நாம் விடாமல் பக்கம் பக்கமாக அரசியல்வாதிகள் முதல் அனைவரையும் இப்படி செய்ய வேண்டும், அவரோடு பேசி சமாதானம் ஆக வேண்டும் என்று எழுதுகிறோம். நாம் இப்படி செய்வது…

1. ஊருக்குதான் உபதேசம்.

2. நான் செய்வது சரி ஆனால் அவர்கள் அப்படி செய்யக்கூடாது (சமூகத்தின் பார்வைபடுவதால்).

3. அட போய்யா பெருசா வந்துட்டான்.

4. நான் செய்வது சும்மா பொழுது போகாமல்; ஆனால் அவர்களுக்கு இது பிழைப்பு, ஆகவே அவர்கள் ஒத்துப் போக வேண்டும்.



One response to “வாதம் vs. விவாதம்

  1. எல்லாத்துலயும் “பைசா’பிரயோஜனம் பாத்தா இப்படித்தான் அலுத்துக்கத் தோணும் பாபா. விவாதம் பண்றது , விஷயத்தை இன்னம் ஆழமாக பார்க்க உதவும். தீர்மானமான முடிவு கிடைக்கணும்ணு அவசியம் இல்லை. கிடைச்சா சந்தோஷம்தான்.:-). கேளிவி கேக்காத, விவாதம் பண்ணாத சமுகம் உருப்பட்டதா சரித்திரமே இல்லை. எனவே, கேளுங்க..கெளுங்க …கேட்டுகிட்டே இருங்க…
    கேள்வி மட்டும் இல்லை..மத்தவங்க சொல்றதை காது கொடுத்தும் கேளுங்க…காது மூடாத அவயம். ஞான வாசல் 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.